Tuesday, July 11, 2017

மறுபடியும் சுஜாதாவினை சீண்டுகின்றார் ஜெயமோகன்

மறுபடியும் சுஜாதாவினை சீண்டுகின்றார் ஜெயமோகன், சுந்தர ராமசாமி என்பவர் சுஜாதா இலக்கியவாதி அல்ல, அவரிடம் சரக்கு இல்லை என என்னமோ சொல்லிவிட்டு செத்தாராம்


சுஜாதா சுந்தர ராமசாமியிடம் மதிப்பு பெறவே இல்லையாம் , அதனால் செல்லாதாம்


சுஜாதா சுந்தர ராமசாமி நடத்திய ஏதோ ஒரு அறிவான இதழில் எழுத முயன்றாராம், ஆனால் சு.ராமசாமி அவரை எழுத அனுமதிக்கவில்லையாம், ஆம் தரம் கெட்டுவிடுமாம்




சிந்து சமவெளி படத்தில் ஜெயமோகனின் வசனத்தால் கெடாத தரம், சு.ராமசாமி பத்திரிகையில் சுஜாதா எழுதினால் கெட்டுவிடுமாம்


தவ்நோஸ்கி, கார்க்கி, டால்ஸ்டாய் எல்லாம் சு.ராமசாமியும் ஜெயமோகனும் அங்கீகரித்துதான் உலகபுகழ் அடைந்தார்களாம்


ஆக இலக்கியம் என்றால் என்ன என்பதை வகைபடுத்த முதலில் சுந்தரா ராமசாமியும் அதன் பின் ஜெயமோகனும் உலகில் பிறந்திருக்கின்றார்கள்.


இவர்கள் இருவர்தான் அறிவாளிகள், இலக்கியவாதிகள். இந்த பரந்த உலகிற்கு இவர்களை விட்டால் யாருமே இல்லை


இனி ஜெயமோகனையும் விட்டால் இலக்கிய உலகமும் மொத்த உலகமும் செத்துவிடும் என நம்பிகொள்வோம்


நாட்டில் இந்த இலக்கியவாதிகள் தொல்லை தாங்க முடியவில்லை, இவர்களால் காலணா இந்த தேசத்திற்கு உபயோகம் இல்லை எனினும் , இவர்கள் செய்யும் அலப்பறை மிக அதிகம்


மக்களை கவரும் எல்லா இலக்கியமும் நல்ல இலக்கியமே, மக்களை கவராத அல்லது குழப்பும் எதுவும் குப்பை தான்.



No comments:

Post a Comment