Wednesday, July 5, 2017

தியேட்டர்கள் மூடபட்டால் குற்றங்கள் அதிகரிக்கும் : டி.ராஜேந்தர்

தியேட்டர்கள் மூடபட்டால் குற்றங்கள்  அதிகரிக்கும் : டி.ராஜேந்தர்


உண்மையினை சொன்ன இவரை வாழ்த்ததான் வேண்டும், மனிதர் அவ்வளவு வெள்ளந்தியானவர்


அதாவது தியேட்டர்கள் மூடியபின‌ இரு நாளாக கிட்டதட்ட 50 கோடி வருமானம் இழப்பாம்




பார்க்கிங், டிக்கெட், பாப்கார்ன் என எப்படியெல்லாம் கொள்ளையடித்த பணம், எவ்வளவு வருமானம்? இதனை இழந்தால் அவர்கள் சும்மா இருப்பார்களா?


அதனால் தியேட்டர்காரர்களும் ஊழியர்களும் வழிப்பறி, கத்தி காட்டி மிரட்டுதல், வீடு புகுந்து கொள்ளையடித்தல், காரினை மறித்து புடுங்குதல் போன்ற காரியங்களில் ஈடுபடலாம் என்பதை மறைமுகமாக தெரிவிக்கின்றார்


சினிமாக்காரர்களில் யாராவது இதனை தைரியமாக சொன்னார்களா?


இப்படி தியேட்டர் கொள்ளை தடுக்கபட்டால், அது அடிதடி கொள்ளையாக மாறி தமிழக அமைதியினை குலைக்கும் என மிக தைரியமாக சொன்ன டி.ஆருக்கு வாழ்த்துக்கள்


"தல யாரு
தைரியமான டியாரு..."



No comments:

Post a Comment