Tuesday, July 4, 2017

மோடியினை இஸ்ரேல் வரவேற்று கொண்டிருக்கின்றது

ஊரை விட்டு ஒருவனை நாட்டாமை பட பாணியில் ஒதுக்கி வைத்திருக்கின்றார்கள், அவனோடு யாரும் பேசுவதுமில்லை, உறவாடுவதுமில்லை


"கொலைகாரப்பயலோடு என்ன உறவு, இவன் சவகாசமே ஆகாது" என சொல்லிவிட்டு பார்த்த இடத்தில் சிரித்துவிட்டு நகர்ந்துவிடுவார்கள்


அப்படி விலக்கி வைக்கபட்டிருக்கும் ஒருவன் வீட்டுக்கு வழிபயணி ஒருவன் "ஹாய் கவ் ஆர் யூ, மே ஐ கம் இன்" என ஒருவன் வந்தால் அவனுக்கு எப்படி இருக்கும்?




என்னையும் மதித்து என் வீட்டிற்கு வந்தீர்களா? என ஆனந்த கண்ணீர் விட மாட்டானா?


அப்படித்தான் மோடியினை இஸ்ரேல் வரவேற்று கொண்டிருக்கின்றது


மற்ற நாடுகள் இதனை ஒரு மாதிரியாக பார்த்துகொண்டிருக்கின்றன, இந்த ஆளுக்கு என்னாயிற்று என்பது போல் தலையிலடிக்கின்றன‌


இஸ்ரேலோ ஆடு சிக்கிரிச்சி டோய் என மாலைபோட்டு கொண்டிருக்கின்றது


இப்படி தேடி சென்று வலையில் சிக்கி இருக்கும் மோடிக்கு, இஸ்ரேலில் எங்களுக்கு வரவேற்பை பார்த்தீர்களா என பலர் சிலிரிக்கின்றனர்


அவர்கள் மோடி என்ன? யார் சென்றாலும் விழுந்தடித்து வரவேற்க ரெடி


மற்ற நாடுகள் அந்த சிகப்பு கம்பளம் பாலஸ்தீனியரின் ரத்தத்தில நனைந்து சிவப்பானது என அச்சபட்டு ஒதுங்குகின்றன‌


ஆனால் மோடி அதற்கெல்லாம் அசைபவரா? அவர் போக்கில் நடந்து செல்கின்றார்


தினமலர் போன்ற ஏடுகள் இது ஏதோ பெரும் சாதனை என எழுதுகின்றன, சில ஒரு மாதிரியான நாடுகளில் இருக்கும் இந்திய தூதர்களின் மனநிலை இப்பொழுது எப்படி இருக்கும் என்பதை சொல்ல வார்த்தைகள் இல்லை


மிக மிக‌ படபடப்பாக இருப்பார்கள் என்பது மட்டும் நிச்சயம்,


அவர்கள் மட்டும் இந்த இந்திய கொண்டாட்ட செய்திகளை கண்டால் அவர்கள் மனம் எப்படி இருக்கும் என்பது அவர்களுக்குதான் தெரியும்



No comments:

Post a Comment