Wednesday, July 12, 2017

தமிழகம் மிக விழிப்பாய் கவனிக்கபட வேண்டிய காலமிது

எல்லோரும் அமர்ந்தாத் தாக்குதலையே கவனித்துகொண்டிருக்கின்றோம், கண்டிக்கின்றோம்


அது நிச்சயம் மகா கொடூரமானதும், கொஞ்சமேனும் மனிதாபிமானமில்லாத, அருவருக்கதக்க கோழைதனமான செயல் என்பதில் மாற்று கருத்தே இல்லை, கொலையாளிகள் மனித ஜென்மமே இல்லை


அந்த கண்டனத்தில் ஒன்றை மறந்துவிடுகின்றோம்




சென்னையில் ஐஎஸ் இயக்க ஆதரவாளன் கைது செய்யபட்டிருக்கின்றான், ஐஎஸ் இயக்கம் தொடங்கபட்ட காலத்தில் தமிழகத்தில் கூட சிலர் ஐஎஸ் இயக்க டிசர்ட் அணிந்து கொண்டு செல்பி எடுத்து ஆதரவு தெரிவித்த காட்சிகள் எல்லாம் முன்பு கண்டது


தமிழகம் ஒன்றும் 100% தீவிரவாத நடவடிக்கையற்ற மாநிலம் அல்ல‌


ராஜிவ் கொல்லபட்டதும் இங்குதான், அத்வாணி மயிரிழையில் உயிர்தப்பியதும் இங்குதான்


சிவராசன், இமாம் அலி போன்ற கொடூர தீவிரவாதிகள் எல்லாம் உலாவந்ததும் இதே தமிழகத்தில்தான்


சென்னை ஆர்எஸ்எஸ் அலுவலக குண்டுவெடிப்பு, மணிரத்னம் வீட்டின் குண்டுவீச்சு, கோவை கலவரமும் அதனை தொடர்ந்த குண்டுவெடிப்பு, சில மதுரை சர்ச்சைகள் எல்லாம் சாதாரணம் அல்ல‌


எத்தனையோ கொடூர தீவிரவாத‌ தாக்குதல்கள் தெய்வாதீனமாய் இங்கு தடுக்கபட்ட வரலாறுகள் உண்டு.


புனிதமும் பெரும் வரலாறுமான மதுரை மீனாட்சியம்மன் ஆலயத்திற்கே மிரட்டல்கள் உண்டு


ஆக எங்கோ தாக்கிவிட்டார்கள் என நாம் கண்டனமும் அஞ்சலியும் செலுத்துகொண்டு நம் காலடியில் இருக்கும் அபாயத்தை கண்டு கொள்ளாமல் இருப்பது நல்லதல்ல‌


தமிழகம் மிக விழிப்பாய் கவனிக்கபட வேண்டிய காலமிது



No comments:

Post a Comment