Monday, July 10, 2017

பிக் பாஸ் வகையறா....

தினமும் இந்தியாவினை விட 2.5 மணநேரம் சூரியன் முன்னால் சூரியன் உதிக்கும் மலேசியாவில் இப்பொழுதுதான் கஞ்சா கருப்பினை வெளியே தள்ளுகின்றார்கள்


ஏதோ அணுகுண்டு வீசிய அமெரிக்காவின் அதிகாரபீடத்தை கண்டித்து ஐன்ஸ்டீன் வெளிவந்த காட்சிகள் போல கஞ்சா கருப்பு வெளியேறும் அழிச்சாட்டியம்.


சீனாவும் இந்திய எதிர்ப்பு பாகிஸ்தானும் சந்தித்து ஒரு மாதிரி பேசிகொள்வது போல இந்த காயத்திரியின் இம்சை




அரசியலில் வைகோ போல இந்த பரணி ஒரு மாதிரி தனியாக அலைகின்றார்..


ஏதோ ஒரு பாக்யராஜ் படத்தில் பைத்தியகார ஆஸ்பத்திரியில் பைத்தியமாக வரும் பானுப்பிரியா போல அந்த ஜூலி


அமெரிக்க ஏவுகனைகளை நொடியும் எதிர்பார்க்கும் வடகொரியர்கள் போல சிநேகனுக்கு அதே முக இறுக்கம் என இந்த பிக்பாஸ் தொடர்கின்றது


என்ன செய்ய? பாகம் பிரியாள் பார்க்கும் பொழுது நாமும் பார்த்துவிட வேண்டும் இல்லையென்றால் மகா சிக்கல்








கதிராமங்கலத்தில் வைகோவிற்கு நெஞ்சுவலி


காமராஜர், இந்திரா, ராஜிவ், எம்ஜிஆர், சோனியா, மன்மோகன், பின்னாளில் கலைஞர் என எத்தனை பெரும் அடையாளங்களை எதிர்த்தவர் வைகோ


அப்படிபட்ட வைகோ இந்த எடப்பாடி, தமிழிசையினை எதிர்தெல்லாம் அரசியல் செய்கின்றாரே எனும்பொழுது நமக்கே நெஞ்சுவலி வருகின்றது




அவருக்கு வராமல் எப்படி இருக்கும்? பரிதாபம்








பாடலாசிரியர் சினேகனின் கார் கண்ணாடி உடைப்பு


அவனவன் இவர் பிக்பாஸில் செய்யும் இம்சையால் வெறுப்படைந்து டிவியினை உடைக்கும் பொழுது , அப்பொழுதும் கோபம் தீராத எவனோ அவரின் கார் கண்ணாடியினையும் உடைத்துவிட்டான்..


இது நிச்சயம் அந்த பிக்பாஸ் பார்த்த விளைவாகத்தான் இருக்க முடியும்





காரை உடைத்துவிட்டார்கள், வீட்டையும் உடைக்கு முன் சிநேகன் வெளியேறிவிடுவது நல்லது





ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி இலங்கையினை போட்டு துவைத்து அடிக்கின்றது, எப்படி இந்த திடீர் எழுச்சி என தெரியவில்லை, ஆனால் அசத்துகின்றார்கள்


நம்மவர்கள் விவரமானவர்கள் அல்லவா? அதனை எல்லாம் இனி அழைக்கமாட்டார்கள்


மீறி அழைத்தால் பாகிஸ்தானிடம் பறிபோன மானம், இன்னொருமுறை பறிபோகும் அபாயம் இருக்கின்றது 






ரஜினியுடன் நடித்தது வாழ்நாள் சாதனை: சமுத்திரக்கனி பெருமிதம்


அதாவது சமுத்திரகனி தன் வாழ்நாள் கனவினை நிறைவேற்றிவிட்டாராம், இனி நிறைவேற்ற ஒன்றுமில்லையாம்


புதிதாக வந்திருக்கும் அவரின் அடிப்பொடிகள் கவனித்துகொள்வது நல்லது






தமிழகத்தில் ஆட்சியை கலைக்க மாட்டோம்: வெங்கய்ய நாயுடு


எங்கே ஜனாதிபதி தேர்தல் முடிந்தபின்னும் கலைக்க மாட்டோம் என சொல்லிபாருங்கள்,


சொல்ல மாட்டீர்கள் அல்லவா ஏன்?






பட்டியலினத்திலிருந்து தேவேந்திரகுல வேளாளரை நீக்க வேண்டும் : கிருஷ்ணசாமி


நீக்கிவிட்டால் மட்டும் நாளையே அவர்களை ஆலய அர்ச்சகராக்கி விடுவார்களா?






No comments:

Post a Comment