Sunday, June 11, 2017

ஒரு புண்ணாக்கும் புரியாத உனக்கு எவன் சொன்னான்???

ஒரு புண்ணாக்கும் புரியாத பு...கி ஒன்று வந்து நாடாரை இழிவுபடுத்தாதே என போதித்துகொண்டிருகின்றது


அது வருணாசிரம தர்மம் என்னவென்றால் என்னவென்றோ. தலித் எனும் வடமொழி வார்த்தையின் அர்த்தம் என்னவென்றோ தெரியாத ஒன்றாகத்தான் இருக்க முடியும்


தலித் என்பது கடைநிலை சாதி மக்களை மட்டும் குறிக்கும் சொல் அல்ல, தாழகிடக்கும் எல்லா சாதியினையுமே குறிக்கும் சொல்




நாடார் இனமும் அப்படித்தான் வர்ணாசிர தர்மத்தில் ஒடுக்கபட்டிருந்தது, பெரியாரின் புரட்சி காலத்தில் அவர் பின்னால் சென்ற நாடார்கள் ஏராளம் உண்டு


நீதிகட்சியில் சேர்ந்து போராடிய பன்னீர் செல்வம் போன்ற நாடார்களும் உண்டு


நாடார் என்னமோ உயர்ந்த சாதி என மதிக்கபட்ட சாதி என ஒருவன் உள்டப்பியில் வந்து குதித்துகொண்டிருக்கின்றான், அவனின் பின்னூட்டத்திற்கு நான் பதிலளிக்கவில்லையாம்


என்றோ எழுதிய பதிவுக்கு அவன் பின்னூட்டம் இடுவானாம், அவனுக்கு பதில் சொல்லவில்லை என்றால் கோழைத்தனமாம்


அவனுக்கு சொல்வது ஒன்றுதான், சாதி கொடுமை என்ன என தெரியாவிட்டாலோ, வருணாசிரமும் வரலாறும் நாடாரை என்ன இடத்தில் வைத்திருந்தது என தெரியாவிட்டாலோ சும்மா இரு


அல்லது பெரியார் முதல் பலர் எழுதிய ஏராளமான சமூக சிந்தனை புத்தகம் உண்டு அதனை படித்துவிட்டு வா


உன் சாதி சங்க பிரமுகர் எவனாவது கடலுள் கிடக்கும் லெமூரியாவினை ஆண்டது நாடார், கடலுக்குள் மூழ்கிய பூம்புகாரை காக்கும் பூதம் நாடார் இப்படி இல்லாத கட்டுகதைகளை அள்ளிவிட்டிருப்பான்


அவன் சொன்னதை எல்லாம் நம்பி என்னிடம் விவாதிக்க வந்தால் உன்னிடம் என்ன சொல்ல முடியும்?


உனக்கு பதில் சொல்லாதது கோழைதனம் அல்ல, மாறாக மடையர்களிடமும், சாதி வெறியர்களிடமும் பதிலுரைப்பது அதிமுகவினருக்கு திராவிட கொள்கை விவாதிப்பது போன்ற விஷயம்


உனக்கு ஒன்று சொல்கின்றேன், தலித் என்பது தமிழ்மொழி அல்ல, அவ்வளவு ஏன் விவசாயி என்பதும் தமிழ்வார்த்தை அல்ல‌


நீ விவசாயி என்பதின் வடக்கத்திய வார்த்தைக்கு தமிழ் வார்த்தை கண்டுபிடிக்க முடியுமா? முதலில் தலித்திற்கு என்ன என படித்துவிட்டு வா


நானும் நாடார் சாதி என்றுதான் சாதி சான்றிதழ் சொல்கின்றது, நானும் தலித் எனும் வடமொழி வார்த்தையின் அர்த்தமான தாழ்த்தபட்ட, ஒடுக்கபட்ட, தீண்டதகாத சாதி என சொன்ன முன்னோர்களின் வாரிசுதான்


நானும் தலித்தான், நீயும் தலித்துதான், தலித் என்பது அம்மக்களை மட்டும் குறிக்கும் சொல் என உனக்கு எவன் சொன்னான்???



No comments:

Post a Comment