Sunday, June 4, 2017

ஞாயிறு சிதறல்கள்....




Image may contain: 1 person, sunglasses, selfie and close-upசென்னையில் தீ விபத்துக்கள் நடக்க தொடங்கிவிட்டன, ஆனால் குஷ்பூ அங்கு இல்லாததால் மன்றத்திற்கு கொஞ்சம் ஆறுதல் , , ஒரு வேளை குஷ்பூ இல்லா கோபத்தில் சென்னை எரியுமோ?? தெரியவில்லை


ஆனால் சில தீவிரவாத தாக்குதல்கள் நடந்துகொண்டிருக்கும் வேளை இது, குஷ்பூ வேறு வெளிநாட்டுக்கு சென்றுவிட்டார்


அதனால் நாங்கள் சீனாவிற்கு கோரிக்கை விடுக்கின்றோம், "ஏய் சீனமே அந்த பட்டுசிலையினை பத்திரமாக அனுப்பி வை" என சங்க நாதம் எழுப்புகின்றோம்





"எங்கள் மூச்சும், எங்கள் மகிழ்வும்
மங்கா குஷ்பென்று சங்கே முழங்கு"








ஸ்டாலினும், ராகுலும் ஆட்சி பொறுப்புக்கு வர முடியாது :தமிழிசை


ராகுலை பிரமராக்கும் முயற்சியில்தான் மோடி உட்பட எல்லோரும் அதி தீவிரமாக உழைத்துகொண்டிருப்பது அம்மணிக்கு தெரியவில்லை


ஸ்டாலினின் திமுக பலமுறை ஆண்ட கட்சி, இன்னும் வலுவான எதிர்கட்சி, ஆனால் பாஜவின் தமிழக கணக்கு என்ன??




ஆனாலும் அம்மணி நாங்களும் இருக்கின்றோம் என தமிழகத்தில் காட்ட படாதபாடுபடுகின்றது






உலகின் எல்லா தீவிரவாதிகளுக்கும் அடைக்கலம் கொடுத்துவிட்டு பெரும் மனிதாபிமான நாடுபோல தன்னை காட்டிகொண்ட பிரிட்டன் மறுபடியும் தீவிரவாத தாக்குதலில் சிக்கியிருக்கின்றது


அதிமுகவில் சசிகலா குடும்பத்தினர் போல, சகட்டு மேனிக்கு எல்லா உலக தீவிரவாதிகளும் அங்குதான் அடைக்கலாமானர்கள், பெரும் ஆபிசர் போல , வெளிநாட்டு தூதர் போல அமர்ந்து கட்டளையிட்டார்கள்.


காலிஸ்தான் , புலிகள், இன்னும் பலர் அங்கு இருந்து செய்த அழிச்சாட்டியம் கொஞ்சமல்ல, புலிகளின் பாலசிங்கமும், கிட்டுவும் ஏதோ வல்லரசு நாட்டு தலைவர்கள் போல அங்கிருந்து அறிக்கைவிட்ட காலம் எல்லாம் உண்டு, இன்றும் சிலர் உண்டு




நடக்கும் தாக்குதல்களை கட்டுபடுத்துவது அங்கு சாதரண விஷயம் அல்ல, அவ்வளவு சிக்கலான விஷயம் அது


விதைக்க ஒரு காலம் உண்டென்றால், அறுக்கவும் ஒரு காலம் உண்டல்லவா?


அது அறுவடை காலம்..






ஆட்டுகுடலில் ஆயிரம் கோடி சுவை வைத்திருக்கின்றான் சர்வெஸ்வரன்,


ஆய கலைகளில் 65ம் கலை ஆட்டு குடல் சமைப்பது


மானிட பிறவியின் பேரின்பங்களில் ஒன்று அதனை அப்படி ரசித்து உள்ளே தள்ளுவது







 


No comments:

Post a Comment