Friday, June 2, 2017

1961ல் இன்றுதான் அந்த விபரீதம் நிகழ்ந்திருக்கின்றது









Image may contain: 1 person, smiling









1961ல் இன்றுதான் அந்த விபரீதம் நிகழ்ந்திருக்கின்றது


சென்னை ஜார்ஜ்கோட்டையில் காவி கொடியேற்றுவோம் என சொன்ன வா.வே.சு அய்யர், நீலகண்ட பிரம்மச்சாரி போன்றோரின் வரிசையில் முழங்கும் அந்த "காவி புயல்" இந்நாளில்தான் பிறந்திருக்கின்றது.


அன்று ஏதும் அசரீரீயோ ஆசாரியோ அன்று அவர் தந்தையின் காதில் "இக்குழந்தை பின்னாளில் உன் பெயரை துடைத்ததொழிக்கும்" என சொன்னதாகவும் தகவல் இல்லை, ஆனால் பின்னாளில் அது நடந்திருக்கின்றது





பிரகலாதனின் பெண் அவதாரம் அவர், இவரை முன்னிறுத்திதான் நரசிம்ம அல்ல அல்ல, "நரமாட்டு" அவதாரம் தமிழகத்தில் தோன்றியிருக்கின்றது..

இன்றெல்லாம் நமக்கு பெரும் காமெடிகளை மகா சீரியசாக சொல்லும் அக்கா தமிழிசையின் அவதார தினவிழா இன்றுதான்

அந்த "கருப்பு தாமரைக்கு" பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

(குஷ்பூவிற்கும் இவருக்கும் அரசியல் ரீதியாக‌ சண்டைதான், ஆனால் குஷ்பூவின் அதி தீவிர‌ ரசிகர்கள் அவரை போலவே நாகரிகம் அறிந்தவர்கள் என்பது உலகிற்கே தெரியும்..)




 

No comments:

Post a Comment