Saturday, December 24, 2016

பெரியார் , எம்ஜியார் , வாஸ்கோடகாமா: மறைந்த நாள்



[gallery ids="6873,6874,6875" type="slideshow" orderby="rand"]

இன்று பெரியார் மறைந்த நாள், 96 வயதுவரை தன் மூத்திர சட்டியினை தூக்கிகொண்டு இந்த‌ சமூகத்தினை திருந்த அரும்பாடுபட்டு மறைந்த நாள்.


ஒரு காலத்தில் பெரியார் சீடன் என சொல்லிகொண்டு, திரையிலே புரட்சி செய்து பின் அதனை அரசியலிலும் செய்து, இன்று பன்னீர்செல்வம் கைகூப்பி வணங்கும் ம.கோ ராமச்சந்திரனும் மறைந்த நாள்


ராமச்சந்திரனை விட்டுவிடலாம், தமிழகத்திற்கு தீரா தலைவலியினை உருவாக்கியதை தவிர அவர் ஒரு புரட்சியும் செய்யவில்லை


ஆனால் இன்றைய நாளில் ஒருவன் வரலாற்று புரட்சியாளன் மறைந்தான், அவன் தான் உலகத்தை திருப்பியவன், குறிப்பாக இந்திய வரலாற்றை புரட்டி போட புள்ளி வைத்தவன்


வாஸ்கோடகாமா


ஐரோப்பியர்கள் குளிர்தேசத்தினர், ஆசிய தொடர்போ அல்லது இன்னொரு நாட்டிலிருந்து ஏதும் கிடைக்காமலோ அவர்கள் வாழ முடியாது, சீனாவிலிருந்து பட்டும் இந்தியாவிலிருந்து மிளமும் இன்னும் பலவும் இரு வழியாக ஐரோப்பா சென்று கொண்டிருந்தது


ஒன்று பட்டுசாலை என துருக்கி வழியாக செல்லும் சாலை, இன்னொன்று கேரளாவிலிருந்து அரேபியாவுக்கு கப்பலில் சென்று அங்கிருந்து பட்டுசாலை மூலமாக ஐரோப்பா நுழைவது


இரண்டாவது வழிதான் சாலமோன் அரசரும், ரோமானியரும் தமிழகத்தோடு தொடர்பு கொண்ட வழி, கிறிஸ்தவமும் இஸ்லாமும் கேரளாவில் தொன்று தொட்டு வளர காரணமான வழி


நமக்கும் இலங்கைக்கும் போல, இருக்கட்டும்


ஐரோப்பியர் ஏன் இப்படி கிழக்கு வெறி கொண்டு அலைந்தனர்??


அதாவது ஆசியா இன்றி அவர்களால் வாழமுடியாது, பெரும் பொருட்கள் இங்கிருந்தே அவர்களுக்கு சென்றன, இதனை நோக்கில் வைத்துதான் மேற்கே பாயாமல் கிழக்கே பாய்ந்தான் அலெக்ஸாண்டர்


ஐரோப்பியாவிற்கு தாராள வியாபாரத்தை தொடங்கி வைத்தவன் அவனே பின் ரோமானியர் அதனைத்தான் தொடர்ந்தனர்.


எல்லாம் நன்றாக சென்று கொண்டிருந்த பொழுதுதான் இஸ்லாமிய புரட்சியும், பெரும் இஸ்லாமிய வல்லரசுகளும் எழும்பின‌


அவற்றில் குறிப்பிட தக்கது ஆட்டோமன் துருக்கி சாம்ராஜ்யம், அவர்கள் பட்டுசாலைக்கு வரி இன்ன பிற கட்டுபாடுகளை விதிக்க ஐரோப்பா பாதிக்கபட்டது


அன்று ஐரோப்பாவிலும் அரசன் போப்பாண்டவர், அவர் வைத்ததுதான் சட்டம், சாசனம் எல்லாம். அவரிடம் வியாபாரிகள் வேறு மாதிரி கொளுத்தி போட்டார்கள்


அதாவது இயேசு வாழ்ந்த எருசலேமும் இன்னற பிற நகர்களும் இஸ்லாமியிர் ஆட்சியில் அழிந்து கிடப்பதாகவும் அதனை மீட்க வேண்டும் எனவும் பற்ற வைத்தனர்


உண்மையில் அவர்கள் நோக்கம் எருசலேமும் அல்ல எருக்கலையும் அல்ல, பட்டுசாலை குறிப்பாக துருக்கியினை பிளக்க வேண்டும் ஆசியாவில் நுழைய வேண்டும்


போர் ஆரம்பமாயிற்று, பட்டுசாலைக்கான போர் சிலுவை போர் என அழைக்கபட்டது, நெடுங்காலம் நடந்தது, இருவர் கையும் மாறி மாறி எழும்பினாலும் உண்மையில் வென்றது ஆட்டோமானியரே


கிட்டதட்ட 400 ஆண்டுகாலம் அவர்கள் கை ஓங்கி இருந்தது, வரலாற்றில் பெரும் முத்திரை ஆட்டோமான் துருக்கியரோடது


அதன் பின் ஐரோப்பியரால் ஆசியாவிற்குள் நுழையமுடியவில்லை, வியாபார உலகம் துருக்கியர் கையில் சிக்கியது, மார்ட்டின் லூதர் திருச்சபையினை பிளக்க ஐரோப்பா ஏக குழப்பத்தில் இருந்தது


இனி கடல் வழியாக இந்தியா நுழைவோமா என ஸ்பெயினும் போர்சுகலும் களமிறங்கின‌


கொலம்பஸ் அமெரிக்கா பக்கம் சென்று வளமான நாட்டை பார்த்தான், முன்ன பின்ன இந்தியா பார்த்தவனா? இதுதான் இந்தியா என மகிழ்ந்தான், அதனை ஐரோப்பாவிற்கு அறிவிக்கவும் செய்தான்


இந்தியா என்றால் தரமான மிளகு வேண்டுமல்லவா? அது இல்லை, பின் அது என்ன இந்தியா? என சந்தேகம் கொண்டு கிளம்பியவர்கள் அது இந்தியா அல்ல என சொன்னார்கள், அதற்கென்ன அது மேற்கிந்தியா என பெயரிட்டார் கொலம்பஸ், பின் அமெரிக்கோ எனும் மாலுமி அமெரிக்கா அடைந்தார், ஸ்பெயின் தென் அமெரிக்காவினை விழுங்கியது


இதில் போர்ச்சுக்கல் ஒதுக்கபட சண்டை சீரியசானது, அவர்களுக்குள் மோதிகொள்ளும் நிலையில்தான் மேற்கே ஸ்பெயினுக்கு கிழக்கே போர்ச்சுகல்லுக்கு என துண்டை உதறி தீர்ப்பு சொன்னார் போப்


இன்றுவரை ஸ்பானிய தாக்கம் ஆசியாவில் இல்லை என்பதற்கு அடிப்படை இதுதான்


இனி இந்தியாவினை கடல்வழி அடைவேன் என கப்பல் ஏறினான் வாஸ்கோடமாமா, சுற்றினான் மேற்கே செல்லாமல் தேற்கே சுற்றினான் 3 ஆண்டுகள் அவன் எங்கெங்கோ சுற்றி இருக்கின்றான், பல இடங்களில் கரை ஒதுங்கினாலும் அவன் மிளகினை தேடியிருக்கின்றான், கிடைக்கா இடம் இந்தியா அல்ல என முடிவு செய்தான்


எப்படியோ ஆப்ரிக்காவின் தெற்கு முனையினை அடைந்தான், அங்கேயும் இது இந்தியா அல்ல என அவனுக்கு புரிந்தது, ஏதோ ஒரு மேப்பினை கையில் வைத்திருந்த அவனுக்கு ஒரு நம்பிக்கை உண்டாயிற்று, இது நல்ல நம்பிக்கை முனை என பெயரிட்டான்


அவன் நல்ல நேரமோ என்னமோ ஒரு குஜராத்தி அவனுக்கு வழிகாட்டினான் என்கின்றது வரலாறு, அவன் வழிகாட்டலில் கள்ளிகோட்டையினை அடைந்தான் வாஸ்கோடகாமா


அவன் தேடிய மிளகு அவனுக்கு கிடைத்தது, கேரள மிளகு. அதன் பின் நம்பினான் இதுதான் இந்தியா


அதன் பின் சரக்குகளை ஏற்றுவதும் போர்ச்சுகலில் இறக்குவதுமாக காலம் மாறிற்று, இந்திய மிளகு ஐரோப்பாவில் அப்படி கொண்டாடபட்டது.


இதனை தொடங்கி வைத்த அந்த வாஸ்கோடகாமா அதன் பின் இருமுறை ஐரோப்பா சென்றுவந்தான், பின் இங்கு வந்து கேரளாவில் நடந்த ஒரு கலவரத்தில் கொல்லபட்டான் என்கின்றார்கள்.


அதன் பின் போர்த்துகீசியர் தங்கள் தளத்தினை கோவா பக்கம் வாங்கினார்கள்.


அவன் கல்லறை கள்ளிகோட்டை அல்லது கோழிக்கோடு என அழைக்கபடும் அந்த கேரள நகரில் இன்றும் உண்டு


எத்தனை வரலாற்றாளர்கள் வந்தாலும், வாஸ்கோடகாமாவின் சாதனை பெரும் முத்திரை


வெறும் பாய்மர கப்பலை வைத்துகொண்டு அவன் எந்த நம்பிக்கையில் கடலாடினான், யாரும் செல்லா பாதையில் எப்படி என்றான்? எப்படி உணவு சேகரித்தான்? எந்த உள்ளுணர்வில் கப்பலை செலுத்தினான் என்பதெல்லாம் பெரும் ஆச்சரியமான விஷயங்கள்


எப்படியோ ஐரோப்ப கடல்வழி இணைப்பினை அவனே தொடங்கி வைத்தான், நெடுங்காலம் மிக ரகசியாக வைக்கபட்ட இந்த வரைபடம் பின் மற்ற நாட்டுக்காரர்களிடம் சிக்க, பிரான்ஸ், டச்சு, பிரிட்டன் என பலரும் வந்தனர்.


வரலாற்றை மாற்றியவன் வாஸ்கோடகாமா, மிளகினை காணும்பொழுதெல்லாம் அவனும் அவனின் சாகசமான கடற்பயணமுமே நினைவுக்கு வரும்


இன்று இந்தியரெல்லாம் ஐரோப்பா விசா கிடைக்காதா? என ஏங்கி கொண்டிருக்க, அன்றைய ஐரோப்பா இந்தியாவிற்கு வழி கிடைக்காதா? என ஏங்கி இருக்கின்றது


காலம் எப்படி எல்லாம் மாறுகின்றது


இன்றைய நாளில் இரு தாடிகளை மறக்க முடியாது, ஒன்று சமூகத்தை மாற்றியது


இன்னொன்று வரலாற்றை மாற்றியது


இன்னொருவர் உண்டு அவருக்கு தாடி கிடையாது அது போலவே கொள்கையோ, வரலாறோ, சாதனையோ ஒரு மண்ணும் கிடையாது, தலையில் தொப்பி மட்டும் உண்டு


பெரும் தமிழக தலை வலியினை உண்டாக்கிவிட்ட அவரைபற்றி சொல்ல ஒன்றுமில்லை


ஆனால் ஒரு பெரும் விசித்திரம் உண்டு




[caption id="" align="aligncenter" width="374"]Image may contain: 1 person, standing வாஸ்கோடகாமா[/caption]

அதாவது வாஸ்கோடகாமா தேற்கே கேரளாவில் கால் வைக்க, சம காலத்தில் வடக்கே உள்ளே நுழைந்திருக்கின்றான் பாபர்


அவன் மசூதியும் கட்டி, முகலாய‌ சாம்ராஜ்யமும் கட்டி எழுப்பப்ப ஐரோப்பியர் கொஞ்சம் கொஞ்சமாக உள்ளே வந்திருக்கின்றனர், பாபரின் 7ம் தலைமுறையில் மொத்த இந்தியாவும் ஐரோப்பியர் ஆட்சிக்கு வந்திருக்கின்றது


ஆக நுழைபவன் இப்படி தனியாகத்தான் நுழைவான் பின் ஆட்சிக்கு வரும்பொழுது அறிய படுகின்றான், விதி அவனை இழுத்து வந்து கோஷ்டிகளுடன் அரியணையில் அமர்த்துகின்றது


பெரியார் முன் கலைஞர் அப்படித்தான் வந்து நின்றார். அண்ணா முன் எம்ஜிஆர் அப்படித்தான் நுழைந்தார்,


1980களில் ஜெயா அப்படி நுழைந்தார், 1990களில் சசிகலா அப்படித்தான் நுழைந்திருக்கின்றார், அதன் பின் பன்னீர் செல்வவமும் அப்படித்தான் நுழைந்திருக்கின்றார்கள்


இனி அடுத்த சின்னம்மாவும், அடுத்த பன்னீர் செல்வமும் இப்பொழுது கட்சிக்குள் சத்தமில்லாமல் நுழைந்திருக்கலாம் அவர்கள் என்ன செய்து கொண்டிருப்பார்கள் என்பது யாருக்கும் தெரியாது


போயஸ் கார்டனில் புல்வெட்டலாம் அல்லது மன்னார்குடியிலோ தேனி பக்கமோ சைக்கிள் துடைக்கலாம்


எப்படி ஆயினும் இந்திய வரலாற்றை தலைகீழாக புரட்டி போட்டதில் வாஸ்கோடகாவிற்கு பெரும் புங்கு உண்டு


அவனும், அவனின் மன தைரியமும் வரலாற்றில் நிலைபெற்று விட்டவை.





2016 ஆண்டில் சிறந்தவர் யாரோ?

இதோ இந்த வருடம் முடியபோகின்றது, இந்த வருடத்தின் பெஸ்ட் எது என ஆளாளுக்கு லிஸ்ட் போட்டுகொண்டிருக்கின்றார்கள்


சிறந்த திரைப்படம் எது? நடிகர் யார்? நடிகை யார்? அறிமுகம் யார்? டைரக்டர் யார்? காமெடி எது? இசை எது? பல வகை பட்டமளிப்புகள்


அல்லது சிறந்த கிரிக்கெட்டர் யார் என அடுத்த இம்சை..




பத்திரிகையும் அதனைத்தான் செய்கின்றன, டிவிக்கள் செய்கின்றன, எதனை திறந்தாலும் இந்த் வருடத்தின் சிறந்த வகையில் திரையில் கிழித்தது எது? என்றே பெட் கட்டிகொண்டிருக்கின்றார்கள்


ஒருவராவது, ஒரு பத்திரிகையாவது , ஒரு மீடியாவது இந்த வருடத்தின் சிறந்த தமிழ் புத்தகம் எது? இந்த வருடத்தின் சிறந்த எழுத்தாளர் யார்? என்றோ?


இந்த வருடத்தின் அரசின் சாதனை எது? யார் சிறந்த அமைச்சர் என்றோ ஒரு பட்டியலும் இல்லை.


(அட சிறந்த சமையல் எது? சமையல்காரர் யார் என்றாவது சொல்லலாம் )


பின் எப்படி தமிழகம் உருப்படும்


அதே தான் நடக்கும்


"வாராயோ சின்னம்மா வாராயோ, நடராஜனோடு வாராயோ....."


சரி ஊரோடு ஒத்துவாழ வேண்டும், இல்லை என்றால் ஊழலில் திளைக்கவெண்டிய அரசியலில் மிக சுத்தமாக‌ வாழ்ந்த கக்கனை விரட்டியது போல நம்மையும் விரட்டிவிடுவார்கள்


அது என்ன இந்த வருடத்தின் சிறந்த படம்? இந்த வருடத்து சிறந்த நடிகை?


எல்லா வருடத்திற்கும் சிறந்த படம் குஷ்பூ நடித்த படங்கள், எல்லா வருடத்திற்கும் சிறந்த நடிகை குஷ்பூ






கொசுறு


ஜல்லிகட்டு நடத்த எல்லா ஏற்பாடுகளையும் மத்திய அரசு செய்கின்றது : தமிழிசை


ஆமாம், 300 காளைகளை வளர்த்து, சண்டைக்கு தயார்படுத்தி, கொம்புக்கு வர்ணம் தீட்டிகொண்டிருக்கின்றது, இனி வாடிவாசல் திறக்க வேண்டியதுதான் பாக்கி






காந்தி மிக எளிமையான வாழ்க்கை வாழ்ந்தார், ஆனால் அவரை எளிமையாக வாழவைக்க மிகுந்த செலவு செய்ய வேண்டி இருநது என அவர் ஆசிரமத்தின் பணியாள் சொன்னதாக ஒரு செய்தி உண்டு


இயேசுகிறிஸ்துவும் மிக எளிமையான வாழ்க்கையினை வாழ்ந்தவர், ஆனால அவரின் பிறந்தநாளை கொண்டாட ஆகும் செலவு கண்ணை கட்டுகின்றது


ஏன் பிறந்தார்? போதிக்க சட்டென்று வானத்தில் இருந்து வந்தால்தான் என்ன?








Friday, December 23, 2016

கன்னடர்கள் செய்யும் அழிச்சாட்டியம் தாங்கவில்லை

கர்நாடக தனியார் நிறுவனங்களில் 100 சதவீதம் கன்னடர்களுக்கே வேலை புதிய சட்டத் திருத்தம் கொண்டுவருகிறது கர்நாடக அரசு


அட பரிதாப கர்நாடகமே எத்தனை பன்னாட்டு கம்பெனிகள் அங்கு உண்டு, தொழில் தொடங்க யாரும் வரலாம் ஆனால் வேலையினை மட்டும் கன்னடன் செய்யவேண்டுமா?


இது கன்னடம் அதனால் இந்த அமெரிக்க நிறுவண கிளையில் வாட்டாள் நாகராஜ் நான் தான் சி.இ.ஓ என அமர்ந்தால் என்னாகும்?


நீங்களே வேலைதொடங்கி நீங்களே வேலைகொடுங்கள் என எல்லோரும் கிளம்பிவிட மாட்டார்களா?, டிரம்ப் வேறு மகா சீரியசானவர்


வரவர இந்த கன்னடர்கள் செய்யும் அழிச்சாட்டியம் தாங்கவில்லை


அது இருக்கட்டும்.


அய்யகோ அங்கு எத்தனை தமிழர்கள் உண்டு, இனி அவர்கள் எல்லாம் பாதிக்கபடுவார்கள் அல்லவா?


அதற்கென்ன தமிழன் முதல்வராக இருக்கும் போது தமிழனுக்கு என்ன கவலை, விரைவில் பன்னீர் கன்னடனுக்கு வெந்நீர் ஊற்றியது போல விரைவில் அறிவிப்பார் பாருங்கள்


ஒகே, ரஜினிகாந் உட்பட எல்லா கன்னட நடிகர்களையும் திரும்ப அனுப்பிவிடுகின்றோம் நீங்களே வேலை கொடுத்துகொள்ளுங்கள்

இன்று அதிமுக மாநில செயலாளர்கள் கூட்டம்..

இன்று மாலை அதிமுக மா.செ. கூட்டம் என தகவல்


என்ன கூட்டம்? ஜெயா டிவியில் வரும் அதே பல்லவியினை கோரசாக பாட போகின்றார்கள், அதற்கொரு கூட்டம்


ஜெயா டிவியில் தினமும் மக்கள் சசிகலாவினை சந்தித்து பொதுசெயலாளர் ஆக்குங்கள் என கதறுகின்றார்கள், திரும்ப திரும்ப ஜெயா டிவி ஒளிபரப்புகின்றது


ஆனால் எல்லா காட்சியிலும் சசிகலா அதே உடைதான் உடுத்தியிருக்கின்றார், அழைக்கும் மக்களும் அதே மக்களாகத்தான் இருக்கின்றார்கள்


இவ்வாறாக ஜெயா டிவியின் காமெடி இம்சை பல ரகம், இன்றைய தேதியில் மிகுந்த சிரமபட்டு சிரிப்பினை ஒருவர் அடக்கவேண்டிய துர்பாக்கிய நிலை ஒருவருக்கு உண்டென்றால் அது ஜெயா டிவி நியூஸ் ரீடருக்கே


அவரும், அந்த செய்தியினை தொகுப்பவரும், கேமரா மேனும் பரிதாபத்திற்குரியவர்கள், சிரிக்க கூட முடியாது, ஆனால் மனதிற்குள் கிச் கிச்சென்று அந்த காட்சிகள் சிரிப்பு மூட்டும்


மாவட்ட செயலாளர்கள் இன்று கூடுவார்களாம்


சரி இவர்கள் இங்கு கூடும்போது அவர்கள் வீட்டில் வருமானவரிதுறையினர் கூடிவிட்டால் என்ன செய்வார்கள்?


சொல்லமுடியாது வருமான வரிதுறை கூட்டம் நடக்கும் இடத்திலே புகுந்துவிடலாம்


யார் என்ன செய்ய முடியும்?

கிறிஸ்தவ மதம் ஐரோப்பாவில் பரவ முதல் காரணம் பால் அல்லது பவுல் என்பவர்...

கிறிஸ்தவ மதம் ஐரோப்பாவில் பரவ முதல் காரணம் பால் அல்லது பவுல் என்பவர்.


இப்பொழுது இருக்கும் சின்னம்மா அபிமானிகளை விட, மோடி வெறியர்களை விட, ஐஎஸ் இயக்கத்தாரை விட பெரும் வலுவான நம்பிக்கையினை தொடக்கத்தில் யூத மதத்தில் வைத்திருந்தார். அவர் யூதர், சாதரண யூதர் அல்ல யூத மதத்தின் 4000 மேற்பட்ட சட்டங்களை கரைத்து குடித்து குளித்து அடுத்த தலமைகுரு எனும் தகுதியில் இருந்தவர்


அப்பொழுது கிறிஸ்தவ மதம் யூதரில் பெரும் பிளவினை ஏற்படுத்த, அந்த கிறிஸ்தவர்களை ஒழிக்க இவர் சிரியாவிற்கு செல்லும் வழியில் எம்பெருமான் இயேசுவினால் ஆட்கொள்ளபட்டார், அதாவது பாதிவழியில் கண் குருடானது, இனி நீ கிறிஸ்துவிற்காய் வாழவேண்டும் என்ற நிபந்தனையுடன் அவர் கண் திறக்கபட்டது, பின் அவர் பெரும் போதகர் ஆனார்




அதுவும் இந்த பிரிவினை அல்லேலூயா கும்பல் வாயிலிருந்து வரும் பெரும்பான்மையான வசனங்கள் இவர் எழுதியதே


ஒரு கட்டுபாடும் இல்லா மதமாக கிறிஸ்துவத்தை காட்ட விரும்புவர்கள் காட்டும் வார்த்தைகளும் இவருடையதே


அப்படிபட்ட பவுலினை கிறிஸ்து குருடனாக்கி தடுத்தாண்ட இடம் இன்றைய சிரிய இஸ்ரேலிய எல்லையில் உள்ளது, பெரும் வெளிச்சத்தில் கிறிஸ்து தரிசனமானதும் அவர் கண் குருடான இடம் அது


அங்கு முன்பொரு தேவாலயம் இருந்தது, பின் இஸ்ரேல் சிரியாவினை ஆக்கிரமிக்கும் பொழுது அது இஸ்ரேலுக்கு வந்தது


சும்மாவே அவர்களுக்கு இயேசுவினை பிடிக்காது, பவுலையும் பிடிக்காது இருவரும் இன துரோகிகள்


இப்பொழுது நொறுக்கபட்ட அந்த ஆலயம், கிட்டதட்ட சீர்ழிந்து சிறுநீர் கழிப்பிடம் அளவுக்கு சென்றுவிட்டது


இதுதான் இஸ்ரேல் கிறிஸ்துவத்தை மட்டம் தட்டும் முறை, யாரும் செல்ல முயன்றால் அது பாதுகாப்பு தடுப்பு பகுதி என தடுத்தும் விடுகின்றது.


இங்கே வங்ககடல் ஓரம் நின்று இந்த பிரிவினை கிறிஸ்தவர்கள் "கடவுளே இஸ்ரேலை பாதுகாத்துகொள்ளும், அதற்கு வெற்றிகொடும்.." என கதறிகொண்டிருக்கின்றார்கள்


செம்மறி மந்தையினை விட மோசமான கூட்டம் இது.



Thursday, December 22, 2016

ஒன்று பெரியம்மை இன்னொன்று சின்னம்மை.








பலவிதமான நோய்கள் தமிழகத்தில் முன்பு இருந்திருக்கின்றன, காலரா, பேதி, பிளேக் என பல இருந்திருக்கின்றன‌

ஆனால் வெள்ளையர் வருமுன் தமிழகத்தை இரு நோய்கள் ஆட்டி படைத்தன‌

ஒன்று பெரியம்மை இன்னொன்று சின்னம்மை.


இரண்டும் வந்துவிட்டால் அம்மன் அருள் என மக்கள் ஆடி தீர்ப்பார்களாம், பெரியம்மை என்றால் பெரிய அம்மனாம், சின்னமை என்றால் சின்ன அம்மனாம்

அப்படித்தான் நம்பி வேப்பிலை அடித்து, கரகம் ஆடி விரட்டபார்த்திருக்கின்றார்கள்

ஆனாலும் பெரும் இழப்பு ஏற்பட்டிருக்கின்றது

நோயில் "அம்மா..பெரிய அம்மா.. சின்ன அம்மா" என முணுமுணுத்துகொண்டே இருப்பார்களாம்

படுத்தே இருக்கவேண்டுமாம், ஆனால் அம்மையினை நோக்கி கரங்கள் குவிந்திருக்குமாம்

"பெரியம்மா..சின்னம்மா" என அவர்கள் புலம்புவது நோயின் தாக்கம்.

பெரியம்மையினை எப்படி ஒழித்தார்களாம் என்றால், அந்த கிருமியினை வேறு விலங்குகளில் பெருக செய்து அவற்றின் நோய் எதிர்ப்பு சக்தியினை பெருக்கி , பின் என்னவெல்லாமோ செய்து மருந்து தயாரித்தார்களாம்

அந்த மருந்து மனித உடலில் செலுத்தபடும்பொழுது முதலில் காய்ச்சல் வருமாம், பின் பிதற்றல் வருமாம், கொஞ்ச நாளில்

பின் அதுவாக குணமடைந்துவிடுமாம்

பின் பெரியம்மை நோய் வரவே வராதாம்.

பெரியம்மை வந்து சென்றாலும் அதன் வடு இருக்கும், அதற்கு எதிர்ப்பு மருந்து கொடுத்தாலும் அந்த வடுவும் இருக்கும்

வடுக்கள் இல்லாமல் அம்மைகள் மறைவதில்லை.

அப்படி பெரியம்மை தமிழகத்தை ஒரு காலத்தில் ஆட்டிவிட்டு ஓய்ந்திருக்கின்றது, சும்மா சொல்ல கூடாது பெரும் வியாதியாகத்தான் இருந்திருக்கின்றது

இப்பொழுது சின்னமையினை எப்படி ஓழித்தார்கள் என படித்துகொண்டிருக்கின்றேன்..









சசிகலாவுடன் பல்கலைகழக துணைவேந்தர்கள் சந்திப்பு இன்னும் பல...



சசிகலாவுடன் பல்கலைகழக துணைவேந்தர்கள் சந்திப்பு


எதற்கு? சசிகலா பெயரில் ஆய்வரிக்கைகள் எழுதி அவருக்கு டாக்டர் பட்டம் கொடுக்கவா?


அல்லது மன்னார்குடியில் "சின்னம்மா" பல்கலைகழகம் தொடங்கவா?





இவர்களே இப்படி என்றால், அந்த பல்கலைகழகங்கள் உருப்படும்??

விட்டால் சின்னம்மா அரசியல் என ஒரு பாடபிரிவினையே தொடங்கிவிடுவார்கள் போல‌

இந்த துணைவேர்ந்தர்களுக்கும் அந்த பேனர் வைக்கும் ஸ்டிக்கர் பாய்ஸுக்கும் என்ன வித்தியாசம்?

இந்த துணைவேந்தர்களுக்கு செக் வைப்பதற்காகவே தமிழக ஆளுநராக அந்த சுப்பிரமணியன் சாமியினை நியமித்து தொலையுங்கள்.















 கொசுறு






சசிகலாவை பல மொழிகள் கற்றுக்கொள்ள வைத்தார் ஜெயலலிதா @ தந்தி டிவி.

சரி ஏதாவது ஒரு மொழியில் முதலில் அவரை பேச வையுங்கள் பார்க்கலாம்.

ஜெயா அஞ்சலி அன்று மத்திய அமைச்சர்களுடன் அவர் "சொல்லாமலே" லிவிங்ஸ்டன் ஸ்டைலில் சைகை மொழியில் தான் பேசிகொண்டிருந்தார்








வீரப்பனின் கூட்டாளி ஏழு வருடத்திற்கு பின் கைதுஎல்லைச்சாமி வீரப்பனின் கூட்டாளி ஒரு தமிழ்முதல்வர் ஆட்சியில் கைதுசெய்யபடுவதா? இது எவ்வளவு பெரிய தமிழின துரோகம்?


தமிழக எல்லையினை காக்க வீரப்பனோடு போரிட்ட, காவேரி காத்த‌ இந்த தியாகியினை கைது செய்ய, இந்த பன்னீர்செல்வம் அரசுக்கு எவ்வளவு தைரியம்?




இப்படி எல்லாம் இந்த அங்கிள் கோஷ்டி முஷ்டி முழக்கும் என்றால் ஒன்றுமே இல்லை


ஏன் அங்கிள் பாய்ஸ்?


சின்னம்மா என ஒருவர் கிளம்பும் போது நீங்கள் ஏன் வீரப்பனின் மனைவி முத்துலெட்சுமியினை "சந்தண அம்மா" அல்லது "வனத்து அம்மா" என சொல்லி அரசியலுக்கு அழைத்து வர கூடாது?






ராமமோகன ராவ் விவகாரத்தில் ஓ.பி.எஸ். கருத்து தெரிவிக்காதது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது: ஸ்டாலின்


வாய்யா வா..இப்பொழுதுதான் நீர் கலைஞரின் மகன், இப்படித்தான் கேட்கவேண்டும்


வாய் திறந்தாலும் திறக்காவிட்டாலும் பன்னீர் சிக்கிகொள்வார்