Sunday, June 25, 2017

ஆசீர்வாதமான, மகிழ்வான ரமலான் வாழ்த்துக்கள்...











Image may contain: 1 person, smiling, text









ரமலான் பண்டிகை கொண்டாடும் அனைவருக்கும், "தமிழகத்தின் தங்க மங்கை" குஷ்பூவின் ரசிகர்களான "தங்கத்தின் தங்கங்கள்" சார்பாக‌ மனமார்ந்த வாழ்துக்களை தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகின்றோம்.


அன்பும், அமைதியும் எல்லோருக்கும் உரித்தாகட்டும். சாந்தியும் சமாதானமும் உலகெல்லாம் நிலவட்டும்


ஆசீர்வாதமான, மகிழ்வான ரமலான் வாழ்த்துக்கள்...





(ஓய்வு நேரமும், விடுமுறைகளும் குஷ்பூ படங்களின்றி அமையகூடாது என்பது வாழ்வின் விதி..

இந்த விடுமுறையில் குறைந்தது 25 குஷ்பூ படங்களை பார்த்துவிடுவது என முடிவு செய்திருக்கின்றேன், சீரியல்களும், அரசியல் பேட்டிகளும் தனி கணக்கு)













 


 

கலைஞர் மேல் இவர்களுக்கு என்ன கோபம்?

ஒரு சில அறிவு ஜீவிகள் அலைகின்றன, எங்காவது மோடி அரசு மத நல்லிணக்கத்திற்கு எதிராக சில காரியங்களை செய்கின்றது என்றால்,

ஏய்... கலைஞர் என்ன விநாயர் சதுர்த்திக்கு கொழுக்கட்டை செய்தாரா? கார்த்திகை தீபம் அன்று சொக்கபனை கொளுத்தினாரா? தீபாவளிக்கு அச்சுமுறுக்கு சுட்டாரா? ஓலைபட்டாசு கொளுத்தினாரா? என பதிலுக்கு கேட்கின்றார்கள்

கலைஞர் என்பவர் இந்நாட்டு பிரதமராகவா இருந்தார்? ஒரு மாநிலத்தின் முதல்வர் அவர். சில மூட பழக்கங்களில் அதாவது தீ மிதித்தல், மண்சோறு உண்ணுதல் , தீண்டாமை இவற்றை எதிர்த்தாரே அன்றி அவரால் என்ன மதகலவரம் வந்தது?


கோயில்களை எல்லாம் இடித்தாரா? ஆறுகால பூஜையினை தடுத்தாரா?

சிறுவயதில் இருந்தே சாதிகொடுமையினை உணர்ந்து வளர்ந்ததால் அவருக்கு ஆலய‌ நம்பிக்கை இல்லை, கரப்பானும், பூரானும் போகும் கருவறைக்குள் தாழ்த்தபட்ட மனிதன் செல்ல கூடாது என்பதில் அவருக்கு ஒப்புதல் இல்லை

ஆனால் அந்த நம்பிக்கையினை தன்னோடு வைத்துகொண்டார். மக்களின் அல்லது தொண்டர்களின் மத நம்பிக்கைக்கு என்றாவது அவர் இடைஞ்சல் செய்தாரா?

கட்டாய மதமாற்ற சட்டம், ஆலயங்களில் ஆடு கோழி வெட்ட கூடாது இன்னபிற சர்ச்சை சட்டங்களை எல்லாம் அவரா கொண்டுவந்தார்?

மதத்தின் பெயரால் தமிழகத்தில் ஒரு சிறு கலவரம் அவரால் ஏற்பட்டிருக்கும்? ஏதும் ஆலயம், மசூதி, தேவாலயம் உடைக்கபட்டிருக்கும்?

ஏதும் மத போதகர்கள் அவரால் கொழுத்தபட்டிருப்பார்கள்?

எத்தனையோ ஆலய தேர்கள் அவராட்சியில் புதுப்பிக்கபட்டன, எத்தனையோ ஆலய கும்பாபிஷேகம் அவர் ஆட்சியில் நடந்தது

மகாமகம் போன்ற குளங்களில் குளிக்க சென்று 50 பேரை கொல்லாவிட்டால் அவர் இந்துக்களுக்கு எதிரானவரா?

நமது கொள்கை என்பது வேறு, ஆட்சி என்பது வேறு. து, ஆட்சி என்பது மக்களுக்கானது அதில் நம் கொள்கை திணிக்கபட கூடாது என்பதில் மிக கருத்தாக இருந்தவர் அண்ணா

கலைஞரும் அதில் மிக கருத்தாக இருந்தார், மூட நம்பிக்கைகளை சாடினாரே அன்றி மக்களின் அடிப்படை நம்பிக்கையினை அல்ல‌

இந்தியாவின் ஒரு மாநில முதல்வரை , பாரத பிரதமர் எனும் பெரும் பொறுப்பான பதவியில் இருக்கும் மோடி செய்யும் அழிச்சாட்டியங்களுடன் ஒப்பிடுவது எப்படி சரியாகும்?

கலைஞர் என்ன பாரத பிரதமராகவா இருந்தார்?

பின்னும் ஏன் கலைஞரை திட்டுகின்றார்கள்?

அவர்கள் அப்படித்தான், 1991ல் ராஜிவ் கொல்லபட்டவுடன் கொன்றது யாரென்றே தெரியாத மே 21 நள்ளிரவில் கலைஞர்தான் காரணம், அவர் வளர்த்த புலிகள்தான் காரணம் என சொல்லி பெரும் கலவரத்தை வளர்த்தவர்கள் அல்லவா?

விசாரணை நடந்து 1 மாதம் கழித்து புலிகள்தான் கொலைகாரர்கள் என சொல்லுமுன், கொலை நடந்த 10 நிமிடத்திலே கலைஞர் மீது பழிபோட்ட கும்பல் அது

இப்படி ஏராள சம்பவங்களை சொல்லலாம்

கலைஞர் மேல் இவர்களுக்கு என்ன கோபம்?

கலைஞர் பிரதமர் பதவியில் இருந்திருந்தால் எப்படி எல்லாம் நல்லிணக்க கட்டுரை எழுதியிருப்பார் , எத்தனை அர்த்தமுள்ள விஷயங்களை மிக உருக்கமாக சொல்லியிருப்பார்.

அந்த வித்தை மோடிக்கு வராது, சுட்டுபோட்டாலும் வராது அந்த கோபம் தான் அவர்களுக்கு..

"இந்திய வங்கிகள் பாதுகாப்பனது அல்ல..." : ரிசர்வ் வங்கி




No automatic alt text available."இந்திய வங்கிகள் பாதுகாப்பனது அல்ல, இன்று பொருட்களுக்கு நாங்கள் பொறுப்பில்லை என்போம், நாளை மக்களின் டெப்பாசிட் பணத்திற்கே பொறுப்பில்லை என்போம் அதனால் மக்கள் வெளிநாட்டு வங்கிகளை நாடலாம்" என சொல்லாமல் சொல்கின்றது ரிசர்வ் வங்கி.


மொத்த இந்திய மக்களையும் வெளிநாட்டு வங்கிகள் பக்கமும் தனியார் செக்கியூரிட்டிகள் பக்கமும் திருப்பும் காரியம் இது.


ஆக இந்திய மக்களின் பொருட்களுக்கு இந்திய வங்கியிலே பாதுகாப்பு இல்லையாம், இந்த கொடுமையினை எங்கு போய் சொல்வது?





விரைவில் சுவிஸ் வங்கி இந்தியாவில் கிளை திறந்து, நாங்கள் உங்களுக்கும் உங்கள் பணத்திற்கும் பாதுகாப்பானவர்கள் என சொல்லும் நிலை நிச்சயம் வரும்.

சுவிட்சர்லாந்து சென்று வங்கிகணக்கில் டெப்பாசிட் செய்வதை விட, சுவிஸ் வங்கியினையே இங்கு வரவழைத்தால் அரசியல்வாதிகளுக்கு எவ்வளவு எளிது?

அதன் முதல்படிதான் இப்பொழுது நடக்கின்றது

 













 


ரஜினி பாஜகவிற்கு வராத கோபம் ......





ரஜினி பாஜகவிற்கு வராத கோபம் அக்கட்சியினரிடையே நன்றாக தெரிகின்றது, உச்சமாக சு.சாமி ரஜினிக்கு படிப்பறிவில்லை என கொந்தளித்திருக்கின்றார்


மிஸ்டர் சு.சாமி மோடி என்ன அமெரிக்க பல்கலைகழகத்தில் கோல்டு மெடல் வாங்கியவரா?


மோடியினை விடுங்கள், தமிழக முன்னாள் முதலமைச்சர்களில் பலர் பள்ளியினையே தாண்டாதவர்கள்





கலைஞர், எம்ஜிஆர், ஜெயா, பன்னீர் எல்லோரும் பள்ளியினை தாண்டி கல்லூரியில் கால் வைக்காதவர்கள்

படிப்பு என்று தமிழக அரசியலுக்கு தகுதியாயிருந்தது?

விரைவில் வெறுப்பில், ரஜினி கருப்பாக இருக்கின்றார் அதனால் அரசியலுக்கு தகுதி இல்லை, ரஜினி தாடி சரியில்லை என்றேல்லாம் சொல்வார்கள்..









 பாஜகவை ஆதரிப்பதை தவிர அதிமுகவுக்கு வேறுவழியில்லை: பொன்னார் விளக்கம்

இவர்களுக்கு மட்டும் சிக்கலாகியிருக்கும் அதிமுகவினை விட்டால் தமிழகத்தில் என்ன வழி இருக்கின்றது?

உன்னை விட்டால் எனக்கு யாருமில்லை, என்னை விட்டால் எனக்கு யாருமில்லை என்ற நிலையில், பொன்னார் வீரவசனம் பேசிகொண்டிருக்கின்றார்.





ஜனநாயகத்தை நேசிப்பவர்களால் அவசரநிலைப் பிரகடனத்தை மறக்க முடியாது: வானொலி உரையில் பிரதமர் மோடி






அந்த‌ ஜனநாயகத்தை நேசிப்பவர்களால் பாபர் மசூதி இடிப்பும் அதனால் ஏற்பட்ட கலவரங்களையும், அதன் தொடர்ச்சியாக குஜராத்தில் ஓடிய ரத்த ஆறினையும் மறக்கவே முடியாது மிஸ்டர் மோடி




 

இந்துமக்களுக்கான புனித யாத்திரைக்கான அனுமதியினை சீனா ரத்து : செய்தி

இந்துமக்களுக்கான புனித யாத்திரைக்கான அனுமதியினை சீனா ரத்து : செய்தி


அதாவது கைலாச மலை உடபட இன்னும் பல புனித ஸ்தலங்கள் திபெத்தில் உண்டு, சீனா திபெத்தினை விழுங்கிய பின் அந்த இடங்களுக்கு இந்தியர்கள் விசா பெற்றுதான் செல்ல வேண்டும்


சீனா இனி இந்துக்கள் வர கூடாது என சொல்கின்றது, இதற்கு மேலும் கேட்டால் எங்கள் பூமியான அருணாசல் பிரதேசத்தில் இந்தியர்கள் வசிக்க விசாவா கொடுத்தோம்? அவ்வ்வளவில் நாங்கள் நல்லவர்கள் என்பார்கள்




எவ்வளவு பெரும் கொடுமை இது?


இந்துக்களின் புனித ஸ்தலத்தை சீனா அவமதிக்கின்றது, வழிபட விடவுமில்லை


ஆனால் இந்த சங் பரிவார், பாஜக, ஆர்.எஸ்.எஸ் எல்லாம் இதில் ஏதாவது பேசுமா? என்றால் பேசாது


சிவன் வாழும் கைலாய மலைக்கு எங்களை தடுப்பது யார் என கிளம்புவார்களா என்றால் ம்ஹூம்


மாறாக இங்கே மசூதி இடித்தல், தேவாலயங்களை எரித்தல் என செய்து தங்கள் மதத்தை புனித இடத்தை காப்பாற்றுவதாக சொல்லிகொள்வார்கள்


கிறிஸ்துவ ஆலயமோ, மசூதியோ இருந்தால் எங்கள் இடம் என சொல்லி அடம்பிடிப்பார்கள், அதனை மீட்டுவிட்டதாக வேறு மார்தட்டுவார்கள்


இதுதான் எங்கள் கடவுள் மனிதனாக பிறந்த இடம் என சொல்லி மசூதியினை எல்லாம் இடிப்பார்கள், ஆனால் சிவன் வாழும் மலையினை மறந்தே விடுவார்கள்


மற்றபடி கைலாசமலை எல்லாம் மீட்பு எல்லாம் பற்றி பேச்சே இல்லை, அட மீட்க கூட வேண்டாம், விசா தாருங்கள் என்று கேட்க கூடவா ஆளில்லை?


எல்லா வீரமும் இங்கிருக்கும் அப்பாவி மாற்றுமதத்தினர் மீதெல்லாம், இதுதான் இந்திய அரசியல்.,


வாக்கிற்காக மதத்தை வைத்து செய்யும் அயோக்கிய அரசியல்



மூன்றுநாடுகளுக்கு சுற்றுபயணமாக சென்றார் மோடி

[caption id="" align="alignnone" width="728"] அமெரிக்காவில் மோடியை வரவேற்கும்  அங்கு வாழும்  இந்தியர்கள்[/caption]

மூன்றுநாடுகளுக்கு சுற்றுபயணமாக புறப்பட்டு சென்றார் மோடி : செய்தி


மிக சரியாக இஸ்லாமியரின் விழாகாலங்களில் மட்டும் டெல்லியில் இருக்காமல் இவர் ஓடிவிடும் மர்மம் என்ன?


அவருக்கு இஸ்லாமியர் மீது அபிமானம் இல்லாமல் இருக்கலாம், தனிபட்ட முறையிலும் கட்சி நிலையிலும் இஸ்லாமியர்களை அவர் தவிர்க்கலாம்




ஆனால் பொறுப்பான பிரதமர் என்ற நிலையில், இந்நாட்டின் சட்ட திட்டங்களுக்கு உச்சமான தலைவர் எனும் நிலையில் மோடி இப்படி செய்வது சரியே அல்ல, இது பொறுப்பற்ற தனம்


அவர் இந்துக்களின் பிரதமர் அல்ல, இந்தியாவின் பிரதமர் என்பதை அவர் உணர்ந்துகொள்ள வேண்டும்


இந்நாட்டு இஸ்லாமியர் இந்நாட்டு குடிமக்கள், அந்த வகையில் அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டியது ஒரு பிரதமரின் பொறுப்பு


தன்னாட்டு குறிப்பிட்ட‌ குடிகளின் மீது வெறுப்பு காட்டும் எந்த நாடும் உறுப்படாது, இலங்கை பர்மா என எல்லா நாடுகளும் அப்படி நாசமாயின‌


இப்படி அம்மக்களை பிரதமர் ஒரு மாதிரி நடத்துவாரானால் இந்நாட்டில் எப்படி அமைதி திரும்பும்? எப்படி இந்நாடு செழிக்கும்? அவர்கள் எப்படி இந்தியராக உணர்வார்கள்?


இங்கு அம்மக்களை ஒதுக்கிவிட்டு இவர் உலகின் மற்ற இஸ்லாமிய நாடுகளுக்கு எப்படி செல்லமுடியும்? இஸ்லாமிய நாடுகள் எப்படி இங்கு முதலீடு செய்யும்?


இந்நாட்டினை உலகிலிருந்து துண்டித்து நாசமாக்கும் செயலில் மோடி இறங்கியிருக்கின்றார்.


மகாத்மா ஒரு இந்து, இந்துவாக வாழ்ந்தவர் ஆனால் மற்ற எல்லா மதத்து மனிதர்களையும் அவர்கள் உணர்வுகளையும் மதித்து நடந்தார், அப்படிபட்ட தலைவனே இந்நாட்டிற்கு தேவை.


அரசியலில் ஒன்று நேரு போல நாத்திகனாகவோ அல்லது மன்மோகன் சிங் போல எல்லா இந்திய மதங்களுக்கும் பொதுவான மனிதராக ஒரு பிரதமர் இருக்க வேண்டும்


பல இனங்களும், மொழிகளும், மதங்களும் வாழும் நாட்டில் அப்படி எல்லோரையும் அணைத்து செல்லும் பிரதமரே வேண்டும்


அன்று காந்திதலமையில் வெள்ளையனே வெளியேறு, இந்தியா இந்தியருக்கே என சொன்னதன் பெயர் நாட்டுபற்று


இன்று இந்தியா இந்துக்களுக்கே , மற்றவர்கள் எல்லாம் வெளியேறுங்கள் என சொல்வதன் பெயர் நாட்டுபற்று


ஏதும் சொன்னால் நம்மை தேசதுரோகி என்பார்கள்.


உண்மையில் மோடி செய்வதுதான் இந்த பல்லின மக்கள் கலந்து வாழும் இந்திய திருநாட்டிற்கு செய்யும் பெரும் துரோகம்...


ரம்ஜானுக்கு அமெரிக்கா ஓடிவிட்டார் மோடி, அடுத்து பக்ரீத்திற்கு சீனாவோ ரஷ்யாவோ இப்பொழுதே முன்பதிவு செய்து வைத்திருப்பார்...



அ. அ. அ பெட்டிக்குள் முடங்கிவிட்டது




Image may contain: 1 person, close-upசிம்புவின் "அன்பானவன், அடங்காதவன், அசராதவன்" என வந்த படம் இனி "இவன் திருந்தாதவன்" என சொல்லி பெட்டிக்குள் முடங்கிவிட்டது.







Image may contain: 3 people, people smiling






தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பனுக்கு பெரும் நஷ்டம் இருக்கலாம் என்கின்றது செய்திகள்.


சிம்பு வாழ்க, ஆதிக் ரவிசந்திரன் வாழ்க என துள்ளி சொல்லும் ஒரே நபர் விஜயகாந்த்தாக இருக்க முடியும்.





நீண்ட நாளைக்கு பின்னார் விஜயகாந்த் வாய்விட்டு சிரிக்கலாம், அவர் மனதிற்கு இது பெரும் ஆறுதலாக அமையலாம்.

"கடவுள் இருக்கான் புள்ள" என கண்ணீரை அவர் துடைத்துகொள்ளலாம்.

மைக்கேல் ராயப்பனுக்கும், விஜயகாந்திற்கும் என்ன தொடர்பு என யோசிப்பீர்களானால் நீங்கள் நமது பதிவுகளை படிப்பவராக இருக்க முடியாது

இனி நயந்தாராவும் மைக்கேல் ராயப்பனும் விழாக்களில் சந்தித்துகொண்டால் இருவருமே அர்த்தத்தோடு சிரிக்கலாம்..





 


 
















சிம்புவின் படம் இணையத்தில் வந்துவிட்டது, இணையத்தில் விட்டது விநியோகிஸ்தர்கள் தரப்பாக கூட இருக்கலாம், தியேட்டருக்குத்தான் வரமாட்டார்கள், அப்படி வராத மக்களை இணையத்தில் போட்டு தண்டிப்போம் என இறங்கியிருக்கலாம்


கொஞ்ச நேரம் படம் பார்ப்பதற்குள்ளே முடியவில்லை, அப்படி ஒரு இம்சை


ஐ.எஸ், அல்கய்தா, லஷ்கர் போன்ற‌ கொடூர தீவிரவாதிகளுக்கு மரண தண்டனை கொடுப்பதை விட இந்த படத்தை 10 முறை பார்க்க வைக்கலாம், அது மரண தண்டனையினை விட கொடுர தண்டனை.




பெங்களூர் சிறை சின்னம்மாயினை இரு முறை பார்க்க வைத்து தண்டித்தால் போதும், அவர் அரசியலை விட்டே ஓடிவிடுவார்.