Wednesday, April 26, 2017

தமிழகத்து ஐன்ஸ்டீன் ராமானுஜம்




[caption id="" align="alignnone" width="876"]Image may contain: 1 person, sitting and suit தோற்றம் : 22-12-1887  :: மறைவு : 26-04-1920[/caption]

தமிழகத்து ஐன்ஸ்டீன்


கணிதம் எல்லோருக்கும் புரியாது, அதற்கொரு ஞானமும் வரமும் வேண்டும், இன்னும் சாதிக்க வேண்டுமென்றால் தனி திறமை வேண்டும், இவை எல்லாம் அமைந்து உலகில் ஆரியபட்டர், பாஸ்கரருக்கு பின் இந்தியரின் மதிப்பினை உயர்த்தியவர் ராமானுஜம்.


அவர் காலத்தில் கணித உலகில் சிலர் தத்தி நடை பழகி கொண்டிருந்த பொழுது, அவர் ஒலிம்பிக்கில் ஓடி கொண்டிருந்தார், சில நடிகர்கள் வாய்ப்பு தேடிக்கொண்டிருக்கும் பொழுதே அவர் ஆஸ்கார் அவார்டுகளை குவித்தது போன்றது ராமானுஜரின் சாதனைகள்.


ஏழை குடும்பம், கணிதம் தவிர வேறு எல்லா பாடமும் தமிழக பாஜக‌ நிலை, குறிப்பாக ஆங்கிலத்தில் "டெப்பாசிட்" காலி. ஆனால் கணிதத்தில் அபார திறமை. பாவம் கண்டுகொள்ள யாருமில்லை," பிழைப்பிற்கு வேண்டியதை படி, வேண்டாததை விடு" எனும் தமிழக கொள்கை அவருக்கும் போதிக்கபட்டது,


ஆனால் அவர் 10 வயதில் கல்லூரி மாணவர்களுக்கு கணிதம் போதித்தார்.


"கொடிது கொடிது இளமையில் வறுமை" என்பதற்கு பெரும் எடுத்துகாட்டு ராமானுஜம், ஆனால் அவர் போராடினார், தத்தி போராடி, கும்பகோனம் மற்றும் பச்சையப்பா வரை கல்லூரியில் படித்தாலும், அவரின் கணித அறிவு மெச்சபட்டதே தவிர அவரின் நிலை மகாமோசம். பட்டம் கூட கிடைக்கவில்லை


எண்களோடு வாழுவார், கனவில் அவரின் குல தெய்வத்தோடு கணக்கில்தான் விவாதிப்பார், நோட்டு வாங்க பணமில்லை, ஒரே பக்கத்தில் முதலில் ஊதா மையிலும், அடுத்த பக்கம் எழுத வேண்டியதை இடைஇடையே சிகப்பு மையிலும் எழுதும் அளவிற்கு வறுமை.


யூதர்களை தவிர எல்லோருக்கும் லட்சுமியும், சரஸ்வதியும் ஜென்ம எதிரிகள், அதிலும் ராமானுஜம் வாழ்வில் சரஸ்வதி மார்கழி கச்சேரியே நடத்திகொண்டிருந்தார், லட்சுமியோ பிய்ந்து போன செருப்பினை கூட விட்டு செல்லவில்லை.


எண்களின் விளையாட்டில் வெற்றி பெற்ற ராமானுஜம், வறுமையுடன் தோல்வி அடைந்தார், விளைவு சென்னை துறைமுகத்தில் எழுத்தர் பணி.  ஆனாலும் கணித ஆராய்ச்சி தொடர்ந்தது,


திறமை சூரிய ஓளியினை போல அடக்கமுடியாதது. ஒரு அய்யரின் சிபாரிசில் ஒரு வெள்ளையர் அவரை அடையாளம் காண்கிறார், தான் கண்டது ஒரு கணித வைடூரியம் என்பது புரிகிறது, என்ன உதவி வேண்டும் என்கிறான் அந்த ஆங்கில‌ கணித ஆசிரியர்.


மனம் கலங்காதீர்கள், இளகிய மனமுள்ளவர்கள் இதற்கு மேல் படிக்கவேண்டாம், ராமானுஜம் சொன்னது இதுதான்


"எனது மூளை சோர்வடைகிறது, ஒரு நாளைக்கு ஒரு முறையாவது எனக்கு உணவு வேண்டும், அதுதான் எனக்கு பெரும் சவால், வயிற்றிற்கு மட்டும் ஒரு வழி கிடைத்தால் உற்சாகமாக ஆராய்ச்சி செய்யலாம்", கண் கலங்கினான் அந்த அதிகாரி. அவன் என்ன? கல்வியின் அருமை தெரிந்த அனைவரும் கலங்கத்தான் செய்வார்கள்.


சொந்த இனம் செய்யா உதவியினை அந்நியன் வெள்ளையன் செய்தான், ராமானுஜத்தின் முடிக்காத கல்வி தகுதியும் பொருட்படுத்தாமல், கணித கழகத்தில் அவரை இணைத்து ரூ75 சம்பளம் கொடுத்தார்.


காவரி கரையின் கணிதநட்சத்திரம் ஜொலிக்க தொடங்கியது.


நம்பர் தியரி (Number theory),காம்பிளக்ஸ் நம்பர் (Complex number), அனாலிசிஸ் (Analysis) ,இன்ஃபைனட் சீரியஸ், (infinite serious), இன்னும் ஏராளமாக‌ என நீங்கள் கற்ற அல்லது அன்று ஐன்ஸ்டீனாகவும், ராமானுஜனமாகவும் காட்சியளித்த ஆசிரியர்கள் எல்லாம் காதை திருகி கற்பித்த அந்த அதிசய கணிதங்கள் எல்லாம் ராமானுஜம் கொடுத்தது.


சில கட்டுரைகளை லண்டனுக்கு அனுப்ப, இது 24 வயது கணிதக்காரரின் கட்டுரை என்பதை ஏற்க மறுத்து, பின்னர் அது உண்மை என கண்டபின் சொன்னார்கள், இவர் இருக்கவேண்டிய இடம் லண்டன், தூக்கி சென்றார்கள், தலைக்கு மேல் வைத்து கொண்டாடினார்கள்.


படிக்க லாயக்கில்லாதவன், பைத்தியக்காரன், பிழைக்க தெரியாத பித்தன் என கும்பகோணத்திலும், சென்னையிலும் ஓடஓட விரட்டப்ட்டு தள்ளபட்ட ஒரு மாபெரும் அறிவாளிக்கு லண்டனில் கொடுக்கபட்ட கௌரவம் "Fellow of the Royal Society"


உலகில் அந்த அங்கீகாரத்தினை பெற்ற முதல் தமிழன், முதல் இந்தியன். சொந்த மக்களுக்கு உதாவாக்கரை, முதல்தர கேம்பிரிட்ஜ் கல்லூரிக்கு அறிவுகடல்.


அவரது லண்டன் வாசம் 5 ஆண்டுகளுக்குள்ளேதான் ஆனால் உலகின் கணித மும்மூர்த்திகளில் இவரும் ஒருவர்,என அவரை ஏற்றுகொண்டனர். (மற்ற இரு கணக்கியலர்கள் லியோனார்டு ஆய்லர் (1707-1783) மற்றும் கார்ல் குஸ்டாவ் ஜாகோபி (1804-1851) ), ராமனுஜம் 3 நோட்டுகள் முழுக்க எழுதினார், பின்னாளில் அவற்றை வரிசை படுத்தி புத்தகமிட்டார்கள்.


அதில் 3542 தேற்றம் அவர் நிறுவினார், 2000 உலகிற்கு அவர் புதிதாய் சொன்னது, இன்னும் பல தேற்றங்களுக்கு கேள்விகளை விட்டு சென்றிருக்கிறார், இன்னொரு ராமானுஜம் வந்தால் மட்டுமே அதற்கு தீர்வு கிடைக்கும் என கணித உலகம் காத்திருக்கின்றது.


5 ஆண்டுகள் கழித்து சென்னை பல்கலைகழகம் அவருக்கு பேராசியரகாக பணி செய்ய வேண்டுகோள் விடுத்தது, மனைவியை காண ஓடோடி வந்த ராமானுஜத்திடம் வறுமை ஒழிந்தது,ஆனால் அது முன்பு விட்டு சென்ற நோய் வளர்ந்து ராமானுஜம் உயிர்கேட்டது.


அன்றைய தமிழ் பிராமண சமூகம் கடல்கடந்து மிலேச்ச நாட்டுக்கு சென்றுவந்தவனை ஏற்காது, அப்படி ராமானுஜமும் புறக்கணிக்கபட்டார், எப்படிபட்ட கொடுமை இது? பிறகு ஏன் காவேரி வற்றாது?


நோயுடனும் போராடி 32 வயதில் அவர் இறப்பதற்கு 1 மாதம் முன்னால் உலகிற்கு கொடுத்தது, புகழ்பெற்ற‌ "மாக் தீட்டா பங்க்சன்ஸ்",


32 வயதில் அவர் இறந்த பின்னால்தான் உலகில் நுண்கணிதம் எல்லாம் அறிமுகமாயின, முழு வாழ்நாளும் ராமனுஜம் வாழ்ந்திருப்பாராயின் மிக நிச்சயமாக ஐன்ஸ்டீனுக்கு நிகரகாக சாதனைகள் புரிந்திருப்பார் என்பது அறிஞர்கள் ஒத்துகொண்ட உண்மை, ஐன்ஸ்டீனும் இறுதிகாலத்தில் சில கணித முடிவுகள் தெரியாமல் வருத்தபட்டு இறந்திருக்கமாட்டார்.


புகழுக்குரியவர்களை வாழும் பொழுது ஓடவிரட்டி, தெருப்புழுதிக்கும், சொறிநாய்க்கும் இணையாக வறுமையாலும்,அவமானத்தாலும் வதைத்து, அவன் இறந்த பின் லட்சகணக்கில் செலவு செய்து சிலை வைத்து கொண்டாடும் அறிவார்ந்த சமூகம் இது.


அவன் ஓடி ஓடி கணிதம் போதித்து 16 வயதிலே மாபெரும் மேதையாய் உருவெடுத்த கும்பகோணத்தில் அவன் வாழ்ந்த வீட்டிற்கு வழி சொல்ல கூட யாருக்கும் தெரியவில்லை, அங்கு அவனுக்கோர் அடையாளமில்லை (அன்னை சத்யபாமாவிற்கு அங்கு கோயிலே உண்டு), ஆனால் அவனின் கையெழுத்து நோட்டு புத்தகம் லண்டன் கணித கழகத்திற்கு இன்றும் மூல பைபிள்.


பிராமணர் என்பதால் தமிழகத்தில் புகழ் மறைக்கபட்ட பெரும் அநீதிக்கு ராமானுஜமும் தப்பவில்லை. அண்ணாவிற்கும், பெரியாருக்கும் ஊரெங்கும் சிலைகள், சாலைகள் உள்ள தமிழகத்தில் ராமானுஜன் பெயரில் ஒரு கல்லூரி அல்லது பல்கலைகழகம் காணப்படும்?, கிடையாது.


உண்மையில் சென்னை பல்கலைகழகத்திற்கு ராமானுஜம் பெயர்தான் சூட்டபட்டிருக்க வேண்டும், ஆனால் அண்ணா பெயர் சூட்டபட்டது, அண்ணாவிற்கும் விஞ்ஞானத்திற்கும் என்ன சம்பந்தம்?


இதுதான் தமிழக யதார்த்தம், சாதித்தவன் ஆயினும் பிராமணன் என்றால் மூச்.


இப்படி எல்லாம் அழிக்கமுடியாத வரலாறான ராமானுஜத்தின் வாழ்வினை கொஞ்சநாளைக்கு முன் படமாக எடுத்தார்கள். அதன் வரவேற்பு ராமானுஜத்திற்கு ஏற்பட்ட பெரும் அவமானம்.


ராமானுஜத்திற்கு மட்டும் இந்த அவமரியாதை இல்லை, மருது பாண்டியரின் வரலாறை சொல்லபோகிறேன் என படமெடுத்த கண்ணதாசன் அதன்பிறகு கடனாளியானார்,


சிவாஜி கணேசனின் "கர்ணன்" போன்ற படங்கள் தோல்வி கண்ட பொழுது, நம்பியார் "மதம் கொண்ட யானை என்ன செய்யும் தெரியுமா?" என சீற எம்.ஜி.ஆர் "சினம் கொண்ட சிங்கத்திடம் தோற்று ஓடும்" என்ற அழியாத காவியங்களுக்கு தமிழர் கை தட்டிகொண்டிருந்தனர்.கர்ணனை விடுங்கள்,


தமிழனின் தனிப்பெரும் அரசனான ராஜராஜசோழனின் வரலாற்றை தனிதிரைப்படமாக எடுத்தபொழுது பெரும் வரவேற்பில்லை, ஆனால் "பஞ்சாயி..." என மக்கள் திலகம் பாடிய "உலகம் சுற்றும் வாலிபன்" மாஸ்டர் பிளாஸ்டர் ஹிட்.


அவற்றை எல்லாம் விடுங்கள், இந்தியா பாகிஸ்தான் பிரிவினையும், கொந்தளிப்பான காலகட்டத்தினையும், அந்த ரத்த சரித்திரத்தினையும், காந்தியின் சில கொள்கைகளின் அர்தத்தினையும் அற்புதமாக முடிந்த அளவு விளக்கியபடம் "ஹேராம்", படம் கமலஹாசனை பொருளாதாரத்தில் "சப்பாணி" கேரக்டர் போல கோவணத்துடன் நிறுத்தியது,


ஆனால் அதே காலத்தில், இன்று புரட்ட்சிபடை எல்லாம் வைத்திருக்கும் ஒரு தலைவர் "காதல் வெண்ணிலா...." என பாட மொத்த தியேட்டரும் 100 நாள் நிரம்பியது. இங்கேதான் தமிழன் நிற்கிறான் இன்னும் நிற்பான்.


பாரதி,பெரியார்,காமராஜர் போல ராமானுஜத்தின் கதையும் எடுத்திருக்கின்றார்கள்,


ஆனால் பாரதி போல தேச சமூக அக்கறையும், காமராஜர் போல தேசியவாதியும், அல்லது பெரியாரை போல பெரும் போராட்டவாதியாகவோ அல்லது பெரும் சொத்துக்களை விட்டு சென்றவரோ அல்ல ராமானுஜம். அவரின் வாழ்க்கை வேறு, சாதனை வேறு,


கணிதத்தில் சுயம்பாக அவர் வளர்ந்து விஸ்வரூபம் எடுத்த சாதனை வேறு.


ஒரு தமிழனாக பிறந்து,தமிழனாக வளர்ந்து ஒட்டுமொத்த உலகினையே திரும்பிபார்க்க வைத்த ஒரு சாதனை தமிழனின் வாழ்க்கையை திரைப்படமாக கூட கண்டுகளிக்க தமிழர்களுக்கு மனமில்லை.


அவரது கணிதத்தினை கற்ற பேராசிரியர்கள், இன்றும் படிக்கும் கணித,இயற்பியல் மாணவர்கள், பொறியில் துறை வல்லுனர்கள் என எத்தனைபேருக்கு கணித உண்மைகளை சொல்லி சென்ற அறிஞன் அவன், அவன் கதையை கேட்க கூட ஆளில்லை.


ஒருவேளை மாபெரும் நட்சத்திரங்கள் நடித்திருந்தால் "ராமானுஜம்" படம் மெகாஹிட் ஆகியிருக்கும் என்றும் சொல்வதற்கில்லை, யார் நடித்தாலும் ராமானுஜம் வாழ்வைத்தான் சொல்ல முடியும், இந்திய அரசர்களில் தனித்துவம் மிக்கவர் அக்பர், அவரது மிக துணிச்சலான முடிவு ஜோதிபாயை மணந்தது. மிக மிக அழ்காக உருவாக்கப்ட்ட ஜோதா அக்பர் என்ன ஆனது, தியேட்டர் காலி, தயாரிப்பாளரும் காலி.


தமிழகத்தில் வெகு அபூர்வமாகத்தான் பெரும் அறிவாளிகள் தோன்றுவார்கள், அப்படி தோன்றியவர்களை நினைவில் நிறுத்தி வெகு வெகு அபூர்வமாகத்தான் சில திரைப்படங்கள் வெளிவரும் அவற்றில் ஒன்றுதான் "சீனிவாச ராமானுஜம்" திரைப்படம்,


வாழ்க நற்றமிழர் வாழிய வாழியவே....


ஆனால் மிக சரியாக 3 காட்சி மட்டும்தான் ஓடியதாம், 4வது காட்சிக்கு முறுக்கு விற்பவரும், வாயில் காப்பாளர் மட்டும்தானான் இருந்தார்களாம்.


இவ்வளவுதான் ஒரு அறிவாளிக்கு தமிழகம் கொடுக்கும் மரியாதை. இன்று அவரின் நினைவுநாள். பொதுவாக தமிழனின் பெருமை தமிழக அரசினை தவிர மத்திய அரசிற்கு நன்கு புரியும்.


அப்படித்தான் அவர் பிறந்த நாளை தேசிய கணித தினமாக அறிவித்திருக்கின்றார்கள், அக்கணித மேதையினை நாமும் நினைவு கூர்வோம்.


இன்றும் வான்கோள்களின் சுற்றுபாதை, செயற்கைகோள் சுற்றுபாதை முதல் ஏடிஎம் மெஷின்களின் செயல்பாடுவரை அவனது தியரியே துல்லியமாக செயல்பட்டுகொண்டிருக்கின்றது


கெப்ளர், கோப்பர்நிக்கஸ், நியூட்டன், ஐன்ஸ்டீன், ஆய்லர் வரிசையில் இடம்பிடித்த அந்த அறிவாளி தமிழனின் பிறந்தநாளில் அவனுக்கு பெரும் அஞ்சலிகள்









 அவரைப் பற்றிய திரைப்படத்தைப் பார்க்கவும்



 

https://youtu.be/HLBady1RBlY




 

நிலக்கரி ஊழல் வழக்கினை பதிந்த சிபிஐ இயக்குனர் ரஞ்சித் சின்ஹா மீது வழக்குபதிவு

நிலக்கரி ஊழல் வழக்கினை பதிந்த சிபிஐ இயக்குனர் ரஞ்சித் சின்ஹா மீது வழக்குபதிவு


ஆக சிபிஐ அதிகாரிகள் மீதே பெரும் குற்றசாட்டுகள் உள்ள நிலையில், அவர்கள் தொடுத்த வழக்கு எப்படி உண்மையாயிருக்கும் என கேள்விகள் எழ தொடங்கியாயிற்று..


இன்று வரை நீதிபதி ஷைனி கேட்டுகொண்டிருக்கும் ஆதாரத்தை இந்நநொடி வரை சிபிஐயினால் கொடுக்கமுடியவில்லை




அடிப்படை ஆதாரம் இல்லாமலா வழக்கு தொடுத்தீர்கள் என நேரடியாகவே சீறியவர் நீதிபதி ஷைனி, அவர் குமாரசாமி ரகமல்ல, குன்ஹா ரகம், மிக நேர்மையாளர்


அன்றே இந்த ரஞ்சித் சின்ஹா மீது பல புகார்கள் குவிந்துகொண்டே இருந்தன, இன்று பல சிக்கல்களில் அவரையே தூக்கியிருக்கின்றார்கள்


ராசாவின் வாதமும் நீதிமன்றத்தில் நேற்று முடிந்தது


சூழ்நிலைகளை கவனிக்கும்பொழுது ஸ்பெக்ட்ரம் வழக்கின் அடிப்படை வலுவாக இல்லை, பத்திரிகைகள் எழுப்பிய பிம்பமே அப்படி இருந்திருக்கின்றன என்பது எல்லோருக்கும் புரிகின்றது


காங்கிரஸ் ஆட்சியில் 1 லட்சத்து 75 ஆயிரம் கோடி வரவேண்டிய இடத்தில் 50 ஆயிரம் கோடி வந்ததுதான் சிக்கல் என்றார்கள், இப்பொழுது பாஜக் ஆட்சியில் அடுத்த 4ம் தலைமுறை ஏலத்தில் 4லட்சம் கோடி வரவேண்டிய இடத்தில் 60 ஆயிரம் கோடி கூட வரவில்லை என்கின்றார்கள்


பாஜக ஊழல் செய்ததா என்றால் நாங்கள் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவர்கள், நிலமை இதுதான் போலிருக்கின்றது என நமுட்டு சிரிப்போடு நிறுத்திகொள்கின்றார்கள்..


ஆக உண்மை வெளிவர வெளிவர எல்லா இடமும் அமைதி நிலவுகின்றது


விரைவில் எந்த செய்தியும் வரலாம்


அன்று கலைஞர் வானில் ஊழல் செய்தார், எண்ண முடியாத ஊழல் செய்தார் என சொன்ன, 1 லட்சத்திற்கு எத்தனை சைபர் என சொல்ல தெரியாதவன் எல்லாம், ஸ்பெக்ட்ரம் என்றால் என்ன என கூட தெரியாதவன் எல்லாம் முகத்தை எங்கு வைப்பான் என தெரியவில்லை



குஷ்பூ காலம் தந்த தலைவி




Image may contain: 2 people, close-up


கொஞ்சம் தீவிர அரசியலுக்கு திரும்பியிருக்கின்றார் குஷ்பூ, ராகுல் காந்தியினை சந்தித்திருக்கின்றார் , வழக்கமான அதிரடியில் பேச ஆரம்பித்துவிட்டார்


மன்னார்குடி கும்பலை விரட்டிவிட்டு அதிமுகவினை தன் கைபாவையாக்க பாஜக களமிறங்குவது யாருக்கும் தெரியாததல்ல, இனி அதிமுகவின் கட்டளை கமெண்டராக தமிழிசை கூட செயல்படலாம் எனும் நிலை


இந்நிலையில் வலுவான எதிர்குரலாக குஷ்பூவினை காங்கிரஸ் முன்னிறுத்துவது தெரிகின்றது, அவரும் பல அதிரடி கருத்துக்களை சொல்ல தொடங்கிவிட்டார்





பாஜகவினை தைரியமாக கிழித்தெறிய தொடங்கிவிட்டார் குஷ்பூ, பாஜகவின் கனவு பலிக்காது என அவர் சொல்லும்பொழுது கோடி கைதட்டல்களை பெறுகின்றார்,

தவசீலர் Babu Rao அவர்களின் கனவே பலிக்காமல் நயனின் படங்கள் குப்பை தொட்டிக்கு போகும் பொழுது பாஜகவின், தமிழிசையின் கனவுகள் பலித்துவிடுமா?

பலிக்கவே பலிக்காது

ஒன்று நிச்சயம் சொல்லியாக வேண்டும்,அது மகா உண்மையும் கூட‌

"குஷ்பூ காலம் தந்த தலைவி"













 


 

பண்ருட்டியார் என்று மறுபடி இணைந்தாரோ அன்று தொடங்கியது சிக்கல்





பலர் அதிமுகவில் இணையும் பொழுதும் சிக்கல் இல்லை, ஆனால் பண்ருட்டியார் என்று மறுபடி இணைந்தாரோ அன்று தொடங்கியது சிக்கல்


மனிதர் ஒரு மாதிரியானவர், வைகோவின் அட்டகாசம் வெளியில் தெரியும் ஆனால் பண்ருட்டி அமைதியான சாகசக்காரர்


இதனை முதன் முதலில் சொன்னவர் கலைஞர், பல இடங்களில் எம்ஜிஆருக்கே சொன்னவர்





இன்று பண்ருட்டியார் அமைதியாக இருப்பதாக தோன்றலாம், ஆனால் என்ன செய்து கொண்டிருக்கின்றார் என்பது அவரை தவிர ஆண்டவனுக்கும் தெரியாது

இன்றைய அதிமுக சீனியர் அவர்தான், மகா சீனியர். மனிதர் ஏதும் செய்துகொண்டிருப்பது மட்டும் உண்மை.








தினகரன் கைதால் அதிர்ச்சியடையவில்லை': நாஞ்சில் சம்பத்


அதானே, ஜெயா குற்றவாளி எனும்பொழுது வராத அதிர்ச்சி, சசிகலா சிறைக்கு செல்லும் பொழுது வராத அதிர்ச்சி இப்பொழுது மட்டும் வந்துவிடுமா என்ன?


எதிர்பார்த்தது நடக்கும்பொழுது யாருக்கு அதிர்ச்சி வரும்?







 

 



 

9 மணிநேர விசாரணைக்கு பின் டிடிவி தினகரன் கைது

9 மணிநேர விசாரணைக்கு பின் டிடிவி தினகரன் கைது


நமது தமிழக காவல் நிலையத்தில்தான் "சும்மா" விசாரணை என அழைத்துசென்று பின் பட்டாபட்டி டவுசரோடு அமர வைப்பார்கள் என்றால், டில்லி போலிசும் அப்படித்தான் போலிருக்கின்றது


ஏதோ ஒரு படத்தில் வடிவேலு சொல்வது போல "நம்பி போனேன்" அங்க 4 பேர் மொத்துனாங்க, அப்புறம் மீன்பாடி வண்டில போட்டு அனுப்புனாங்க, அப்புறம் இன்னொருத்தனிடம் அனுப்புனாங்க" எனும் வகையில் வறுத்திருக்கின்றார்கள்




ஏதோ கடும் கோபத்தில் டெல்லி களமிரங்கியிருப்பது தெரிகின்றது, மன்னார்குடி குடும்பத்த்தை ஓட அடிப்பது என எங்கோ முடிவெடுத்திருக்கின்றார்கள்


"இனி உங்கள் குடும்பத்திலிருந்து ஏன் ஊரிலிருந்து கூட எவனாவது அரசியலுக்கு வந்தீர்கள் என்றால் தொலைத்தே விடுவோம், வருவீர்களா? வருவீர்களா?.." என போட்டு அடிப்பது தெரிகின்றது..


முற்பகல் விதைத்தால், பிற்பகல் விளையும், விதைத்ததை அறுக்கின்றார்கள்...


ஆனால் ஒரு விஷயம் ஒப்புகொள்ளவேண்டும், வல்லவனுக்கு மேல் வல்லவன் வையகத்தில் உண்டு, ஒருவனின் அட்டகாசம் எல்லை மீறி செல்லும்பொழுது அதனை அடக்க இன்னொருவன் வந்தே தீருவான் என்பது இயற்கை விதி


இப்படி தர்மத்தின் சக்கரம் சுழன்றுகொண்டேதான் இருக்கும்..


அப்படித்தான் இன்று தமிழகத்திற்கு டெல்லி ஏதோ செய்கின்றது, டெல்லியின் இந்த அதிரடி கோலமும் இல்லையென்றால் தமிழகத்தில் மன்னார்குடி குடும்பத்தை எதிர்க்கபோவது யார்? ஒருவரும் இல்லை


தெய்வம் நின்று கேட்கும், அது டெல்லியிலிருந்து வந்தும் அடிக்கும்.., டெல்லிக்கு அழைத்து வைத்தும் அடிக்கும்.



Tuesday, April 25, 2017

கலைஞர் கரையேறிவிட்டார், ஸ்டாலின் நீந்திகொண்டிருக்கின்றார்




Image may contain: 1 person, outdoor and water


கலைஞர் அடிக்கடி அந்த சம்பவத்தை சொல்வார், அதாவது அவரும் அவர் நண்பர் தென்னனும் அந்த திருவாரூர் கோயில் குளத்தில் குளிக்க சென்றார்களாம், நடுவில் இருக்கும் மண்டபத்தை தொட நீந்தினார்களாம்


பாதியில் திணறிய தென்னன், திரும்பி விடுவோம் என்றாராம், கலைஞரோ நாம் திரும்பினாலும் பாதி தூரம் நீந்தவேண்டும், அதற்கு பதிலாக மண்டபம் நோக்கி நீந்தினால் அதனை அடைந்துவிடலாம் என சொல்லி , அயராது நீந்தி மண்டபத்தை அடைந்தாராம்


தான் சோர்வுற்ற நேரமெல்லாம் இச்சம்பவத்தை சொல்லி, இன்னும் நான் எதிர்நீச்சல் போடவேண்டிய தொலைவு உண்டு என அடிக்கடி சொல்வார் ,





கலைஞரும் அந்த குளமும் பிரிக்க முடியாதவை, சிறுவயதில் கலைஞர் கல்வியில் தோற்று அழுததாகட்டும், கையெழுத்து பத்திரிகைக்கு எழுதியதாகட்டும், தாங்கொணா புறக்கணிப்பில் கலங்கியதாகட்டும், எல்லாம் அந்த கரையிலேதான்....

நான் யாரென உலகிற்கு காட்டுகின்றேன் என அவர் கிளம்பியதும் இக்குளத்துகரையில் இருந்துதான்..

அந்த குளத்தருகே அமர்ந்திருக்கின்றார் ஸ்டாலின், தந்தையின் அந்த உத்வேக வார்த்தைகள் மனதில் ஒலிக்கலாம்,

கலைஞர் கரையேறிவிட்டார், ஸ்டாலின் நீந்திகொண்டிருக்கின்றார்

சும்மா டுவிட்டரில் சொல்லவில்லை ஸ்டாலின்.,

ஆயிரம் அர்த்தங்களை சொல்லும் படம் இது,
கலைஞரை புரிந்தோருக்கு புரியும்













 


 

விரைவில் இப்படி செய்திகள் வரலாம்

Image may contain: 1 person, close-up







விரைவில் இப்படி செய்திகள் வரலாம்

யோகியினை அவசரமாக அழைத்தார் மோடி, உடனே யோகி இப்படி சொன்னார்

"அய்யா என்னிடம் இருப்பது இருபது ரூபாய்தான், அதில்தான் இன்றைய சப்பாத்தி சாப்பிடவேண்டும்


அதனால் உடனடியாக வர பணமில்லை, ஏதும் உருளைகிழங்கு லாரி டெல்லிக்கு வந்தால் அதில் வந்துவிடுகின்றேன்,

திரும்பி வருவதற்கு இன்னொரு டீசல் லாரியில் என்னை திருப்பி அனுப்ப நீங்கள் உத்திரவாதம் கொடுக்க வேண்டும்"

இப்படி எல்லாம் விரைவில் அவிழ்த்துவிடுவார்கள்,வர வர இவர்கள் அழிச்சாட்டியம் தாங்கமுடியவில்லை

இப்பொழுதெல்லாம் ரசிக்க கூடிய காமெடி இதுதான், அந்த காமெடியில் முதலிடத்தில் தினமலர் இருக்கின்றது.

உருகுவே முன்னாள் அதிபர், சீனாவின் டெங் ஜியோ பிங், தமிழக‌ காமராஜர், போன்ற அளவிற்கு பில்டப் கொடுத்து கொண்டிருக்கின்றார்கள்

ஒன்றின் தொடக்கம் அல்ல, அதன் முடிவே கவனிக்கதக்கது, அப்படி இன்னும் 5 ஆண்டுகள் கழித்துதான் யோகியினை சொல்லவேண்டும்

ஆனால் இவர்களோ அவர் சாணக்கியன் + குப்தனின் கலவை என்ற அளவிற்கு போட்டு அடித்துவிடுகின்றார்கள்..

நாளை சொல்வார்கள் பாருங்கள், உபியில் அதிரடி புதுவழி காட்டினார் யோகி

அப்படி என்ன செய்தார்?

பட்ஜெட் தயாரிக்க பெரும் செலவு என்றார்கள் அதிகாரிகள், உடனே " ஏன் பட்ஜெட் அறிக்கையினை எல்லா எம் எல் ஏக்களுக்கும் கொடுக்க வேண்டும்?

கரும்பலகையில் எழுதுவேன், எல்லோரும் பார்த்துகொள்ளட்டும், முடிந்தால் துண்டு சீட்டில் குறிபெழுதிகொள்ளட்டும்" என்றார் யோகி,

இப்படி ஒரு தலைவன் வரவேண்டும் என்று எல்லா மாநிலங்களும் விரும்புகின்றன...