Thursday, November 24, 2016

காவேரி எனும்பொழுது வராத ஒற்றுமை...




Stanley Rajan's photo.


காவேரி எனும்பொழுது வராத ஒற்றுமை,


அணுவுலை எனும்பொழுது வராத ஒற்றுமை


மீத்தேனுக்கு வராத ஒற்றுமை,





கங்கை கரை திருவள்ளுவர் சிலை பிரச்சினைக்கு வராத ஒற்றுமை,

முல்லை பெரியாருக்கு வராத ஒற்றுமை

ஜல்லிகட்டுக்கு வராத ஒற்றுமை

மீணவன் சுட்டுகொலை என்றால் வராத ஒற்றுமை,

சேது சமுத்திர திட்டத்தில் வராத ஒற்றுமை

தமிழக பெரும் தொழிற்சாலைகள் முடங்கும் போது வராத ஒற்றுமை

மின்சாரமோ, குடிநீரோ, சாலை பிரச்சினைகளில் வராத ஒற்றுமை

கேரளா, கன்னடம் போன்ற மாநிலங்கள் அழிச்சாட்டியம் செய்யும் பொழுது வராத ஒற்றுமை

கனிம மணல், கிரானைட், ஆற்றுமணல் என எதற்கும் வராத ஒற்றுமை
....
..
சுருக்கமாக தமிழக, தமிழ் மக்களின் நலன் எதற்கும் வராத ஒற்றுமை
...
...
..
...

கருப்பு பணத்திற்கு எதிராக மட்டும் தமிழக கட்சிகளின் எம்பிகளிடையே டெல்லியில் வந்ததாம்

கருப்பு பண சரண்டர் இவர்களின் வயிற்றேரிச்சலை எந்த அளவிற்கு கிளறியிருக்கின்றது என்பதற்கு இதனை விட என்ன ஆதாரம் வேண்டும்?

அதாவது தமிழர் தொழிலும் வாழ்வும் அழியும்பொழுதெல்லாம் இணையாத இவர்கள், தங்கள் வாழ்வும் வளமும் சிக்கலில் வந்தபொழுது இணைந்துகொண்டார்கள்.

ஆனால் இவர்கள் கட்சி நடத்துவதும், உழைப்பதும் தமிழர்களுக்காகவாம்

எங்களிடம் கருப்பு பணம் இருக்கின்றது, அதற்கு ஆபத்து என்றால் ஒன்றுசேர்வோம் என எப்படி பகிரங்கமாக ஒப்புகொள்கின்றார்கள்

ஒன்று இந்திய தேசியம் தமிழருக்கு எதிரானது என அரசியல் செய்ய வேண்டும் அல்லது இம்மாதிரி நேரங்களில் இந்திய மக்கள் பாவம் என இந்திய கட்சிகளை திரட்டி அவர்கள் பின் ஒளிந்துகொள்ள வேண்டும்

இதுதான் தமிழக கட்சிகளின் பிசினஸ்..சூப்பர் பிசினஸ்

மொத்த கும்பலையும் அப்படியே பிடித்து ஏதோ ஒரு தீவில் பாம்பு மட்டும் இருக்குமாம் அங்கு கப்பலேற்ற வேண்டும்.

 








Stanley Rajan's photo.















பணம் மாற்றும் பிரச்சினைக்கே இந்த அரசியல் கட்சிகளும், அவற்றின் தலைவர்களும் வரிந்து கட்டுகின்றார்களே, நாளை இக்கட்சிகளின் சொத்துக்கள் எல்லாம் அரசுடமை என்றால் என்ன செய்வார்கள்?

கட்சி நடத்துவது மக்களுக்காக என்றால், மக்களுக்கு அந்த சொத்துக்களை கொடுங்கள் என அரசு பறிமுதல் செய்தால் எப்படி இருக்கும்?

கட்சி அலுவலகம் முதல் டிவி வரை அரசு எடுத்துகொண்டால் எப்படி இருக்கும்?


ஒருவேளை அப்படி ஒரு அறிவிப்பு வந்தால், நிச்சயம் நமது அரசியல் கட்சி தலைவர்கள் எங்கு நிற்பார்கள்?

அடுத்த தேர்தலிலா? ம்ஹூம்

மாறாக‌, ஐரோப்பாவில் அகதிகள் வரிசையில் நிற்பார்கள்.















கரன்சி பிரச்சினையினை கண்டித்து பல கட்சிகள் ஆர்ப்பாட்டம்





Stanley Rajan's photo.  Stanley Rajan's photo.

மத்திய அரசின் கரன்சி பிரச்சினையினை கண்டித்து பல கட்சிகள் ஆர்ப்பாட்டம்

இன்று திமுகவும் ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்தபோகின்றதாம்

அவர்கள் பெரும் போராட்ட குணம் படைத்தவர்கள். இந்தி ஆட்சிமொழி என்றால் அதன் ஆணை நகலை எரிப்பார்கள், இந்தியில் தார் பூசுவார்கள்.


மிசா காலத்திலே பெரும் போராட்டம் நடத்தியவர்கள்

முன்பு ஈழ ஆதரவு போராட்டமென்றால் (1991க்கு முன்பு) மத்திய அரசு கொடும்பாவி கொளுத்துவார்கள், இன்னும் என்னவெல்லாமோ செய்வார்கள்

ஆயிரம் கட்சிகள் தமிழகத்தில் போராடினாலும், திமுகவினரின் போராட்ட வரலாறே தனி

இப்பொழுதும் அப்படி ரூபாய் நோட்டை எரித்தல், ஆயிரம் ஐநூறு கரன்சியினை கடலில் போடுதல், கரன்சி கிழித்தல், ரூபாயினை எரித்து சோறுபொங்குதல் என படுபயங்கரமாக போராடுவார்கள் என எதிர்பார்த்தால்...

குறைந்தபடம் கரன்சியில் கருப்பு மை வைப்பார்கள் என்றும் கூட எதிர்பார்த்தால்...

அவர்கள் மனித சங்கிலி மட்டும் நடத்தபோகின்றார்களாம்,

ஒருவர் கையினை ஒருவர் பிடித்திருப்பார்களாம், உள்ளங்கையில் பணம் பத்திரமாக இருக்குமாம்

மத்திய அரசு ஏதும் சட்டம் கொண்டுவந்தால் நகல் எரிப்பார்கள், அது தமிழர் இழிவு, ஆரிய அடக்குமுறை என பயங்கர அழிச்சாட்டியம் நடக்கும்

ஆனால் அதுவே மத்திய அரசின் கரன்சி என்றால் பத்திரமாக வைத்துகொள்கின்றார்கள், அது ஆரிய கரன்சி என்றோ, தமிழனை அடிமையாக்கும் காகிதம் என்றோ சொல்லமாட்டார்கள்,

சொல்ல மனம் வராது.

"ஆரிய கூத்தாடினாலும் தாண்டவ கோனே
காசு காரியத்தில் கண் வையடா தாண்டவ கோனே"

((எவ்வளவு இருக்கின்றது, ஒரு சாம்பிளுக்கு ஒன்றிரண்டையாவது கொளுத்தலாம் அல்லவா?)











கொசுறு



அஜீத் தான் அ.தி.மு.க-வின் அடுத்த வாரிசுங்கிற விஷயத்தை யாரு ஆரம்பிச்சு வெச்சதுனு தெரியலை, கொஞ்சம் அதிமுக வரலாற்றினை படித்துவிட்டு சொல்லலாம்

நிறுவணர் எம்ஜிஆர் மிகுந்த நோய்வாய்பட்டு பொம்மையாக இருந்து அவஸ்தையுடன் இறந்தார், அடுத்த வாரிசு ஜெயலலிதாவின் நிலை என்னவென்று அப்பல்லோ இன்னும் உறுதியாக சொல்லவில்லை.

அதனால்.......


அதிமுகவின் அடுதத வாரிசு அஜித் என கிளப்பிவிட்டவன் நிச்சயம் விஜய் வெறியனாகத்தான் இருக்கவேண்டும்.













Wednesday, November 23, 2016

ஜெய மோகன் கேள்வி பதில்...









Image may contain: 1 person , close-up



தானே கேள்விகேட்டு தானே பதில் எழுதும் வித்தையினை கலைஞருக்கு பின் ஜெயமோகன் சத்தமின்றி செய்துகொண்டிருக்கின்றார்


ஒருவர் கேட்கின்றாராம், " அய்யனே இந்த ஆத்திக நாத்திகம் பற்றி விளக்குவீராக‌..ஏபிநாகராஜன் படத்திற்கு பதில் சொல்லியே திராவிடம் வளர்ந்ததா?."


(இப்படி ஒரு அபத்தமான கேள்வியினை திராவிட கழக வரலாறு அறிந்தவன், பெரியாரின் போராட்டத்தை அறிந்தவன் கேட்கவே மாட்டான்


கேட்டவன் ஒரு பைத்தியம் என்றால் அதற்கு பதிலளித்திருக்கும் ஜெயமோகன் என்ன ரகம் என நீங்களே முடிவு செய்யுங்கள்


நிச்சயமாக இம்மாதிரி கேள்விகள் ஜெயமோகனை தவிர யார் சிந்தனையிலும் உதிக்க வாய்ப்பே இல்லை..)


உடனே ஜெயமோகன் தன் வழக்கமானா நீண்ட அறிக்கையில் ஆத்திகம் அப்படி, நாத்திகம் இப்படி, மூடர்கள் கேள்வி கேட்பார்கள், ஆத்திகத்தை புரிந்துகொள்ளாத முட்டாள்கள் கேள்வி கேட்பது நாத்திகம், திராவிடர் கழகம் அப்படித்தான் வளர்ந்தது என சுமார் 1 கிமி நீளத்திற்கு எழுதி தள்ளியிருக்கின்றார்


தொழிலாளர்களின் கஷ்டம் பாராத கடவுள் என்றொருவர் இருக்க முடியாது என்றான் மார்க்ஸ்


சாதி வாரியாக படைத்து, பிராமணனை உயர்ந்தவனாகவும் சூத்திரனை தாழ்ந்தவனாகவும் கடவுள் எப்படி படைத்திருப்பான் என கேட்டார் பெரியார்


ஆம் அப்படித்தான் கடவுள் படைத்தார், நாங்கள் உயர்ந்த இனம் என மார்தட்டி நின்றது உயர்சாதி


அப்படியானால் நீங்கள் சொல்லும் கடவுள் பொய், மதம் பொய். மனிதனை மனிதனாக மதிக்காத தன்மையினை ஒரு கடவுளும் சொல்லியிருக்காது என மோதினார் பெரியார்


இந்தியாவில் நாத்திகம் தலையெடுக்க முதல் காரணம் சாதி, அந்த‌ சாதிக்கு காரணம் மதம்


அதனால்தான் சாதி ஒழிக்க மதத்தையே எதிர்த்து களமிறங்கினார் பெரியார், மதம் இருக்கும் வரை சாதி ஒழியாது என காந்தியிடமே வாதிட்டவர், காந்தியாலும் பதில் சொல்ல முடியவில்லை


ஆக இங்கே சாதியும் அதன் கொடுமையுமே நாத்திகவாதம் பேச சொன்னதே தவிர வேறு ஒன்றுமல்ல. சாதியினை சொல்லும் நீ பிராடு, மதம் சொன்னால் அதுவும் பொய். கடவுள் சொன்னதாக சொன்னால் கடவுளே பொய் என முழங்கியது தமிழக நாத்திகம்


இந்த உண்மையினை, இந்த வரலாற்றினை, இந்த பெரியாரின் புரட்சியினை எப்படி மறைத்து, 1 கிமீ எங்கெல்லாமோ சுற்றி வந்து ஏபி நாகராஜன் படம் அது இது என வருகின்றார் ஜெயமோகன்


அப்பனே ஜெயமோகா


தமிழ் திரைப்பட காலம் பிறந்திருக்கும்பொழுதே போராட கிளம்பியவர் பெரியார், அப்பொழுது இந்த ஏபி    நாகராஜனின் தாத்தா கூட பிறந்திருக்கமாட்டார்


பெரியாரின் போராட்டத்தினையே இப்படி திசை திருப்பு உங்களுக்கு பணபிரச்சினையில் மோடிக்கு ஆதரவாக உங்கள் பார்ப்பண பேனா அல்லது கீபோர்ட் ஏன் எழுதாது?


எவ்வளவு பொய் சொல்லியிருப்பீர்


மல்லையா தோற்றுபோன தொழில்முனைவர் என்றால், வங்கி கடன் வாங்கி பயிரிட்டு நொடிந்துபோன விவசாயி என்ன கொள்ளைகாரனா? அவன் தொழில் முனைவன் இல்லையா?


மல்லையா வசதியானவன் தப்பிவிட்டான், என் பக்கத்துவீட்டு விவசாய கிழவனுக்கு வசதி இல்லை மாட்டிகொள்கின்றான்.


அப்பட்டமான பார்பானிய ஆதரவினை, ஆம் நான் பார்பானிய எழுத்தாளன் என சொல்லிவிட்டு போகலாமே இதற்கு ஏன் இவ்வளவு வேடம்?


இவரையும் ஒரு எழுத்தாளன், இவன் சொல்வதும் உண்மை என சிலர் சொல்லிகொண்டிருக்கின்றார்கள்


பொதுவாக பைத்தியங்களால் சமூகத்திற்கு ஆபத்தில்லை, அதன் பாட்டுக்கு அலையும்.


ஆனால் அரைபைத்தியமாக‌ எழுதும் இம்மாதிரி எழுத்தாளர்கள் பெரும் ஆபத்தானவர்கள்.


ஆனால் மாற்றமுடியாதது அல்லது திருத்தமுடியாதது ஜெயமோகனை போலவே வரலாறு


பெரியாரும் அதன் போராட்டமும் வரலாற்றில் இடம்பெற்றவை


ஆயிரம் ஜெயமோகன் அர்த்தமில்லாமல் 1000 கிமி எழுதினாலும் அதனை மாற்ற முடியாது


பெரியார் பாஷையில் சொல்வதென்றால் இவர் என்ன வெங்காயம்..





















அம்பானி மளிகை கடையில் ரூபாய் நோட்டுக்களை மாற்றலாமாம்





ஏதோ அம்பானி மளிகை கடையில் ரூபாய் நோட்டுக்களை மாற்றலாமாம்

மண்டையினை மறைத்தாலும் கொண்டையினை மறைக்க தெரியாத இந்த மோடியின் கொள்கைகளை என்ன சொல்வது

இனி வங்கிகள் எதற்கும்? ரிசர்வ் வங்கி எதற்கு?


எல்லா பண பரிவர்த்தனைகளையும் அம்பானியே பார்த்துகொள்வாரா? நிதி அமைச்சகம் எதற்கு?

இதற்கு மேலும் மோடிக்கு வக்கலாத்து வாங்க முடியாது, எப்படியும் ஒழியட்டும்

மோடி தேசத்தை காப்பாரோ இல்லையோ, இனி அவரை யாரும் காப்பாற்ற முடியாது

டாலருக்கு நிகரான மதிப்பு 70ஐ நெருங்கிற்று

மோடியும் இந்தியாவும் மூழ்கிகொண்டிருக்கின்றது

வந்தே மாதரம் ..ஒரு தரம்.

இரண்டு தரம்...

விரைவில் மூன்று தரம்










கொசுறு

போலீஸிடம் சிக்கிய மதன், பணம் தொடர்பாக எஸ்.ஆர்.எம் கல்வி குழுமத்தை குறித்து திடுக்கிடும் தகவல்களை தெரிவித்துள்ளதாக போலீஸ் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

சரி மிஸ்டர் பச்சைமுத்து தயாராகுங்கள், மறக்காமல் அந்த டோப்பாவினை எடுத்துகொள்ளுங்கள்.

நாங்கள் பாரி வள்ளல் பரம்பரையில் வந்தவர்கள் என மார்தட்டி கொள்பவர்கள் இவர்கள் தான்.


முல்லைக்கு தேர் கொடுத்தான் பாரி, வாய்ப்பு கிடைத்தால் முல்லையினை வேரோடு புடுங்குபவர்கள் இவர்கள்

நல்ல நேரத்தில் சிக்கி இருகின்றார், கதை எப்படி செல்கிறது என பார்க்கலாம்

(அந்த வர்ஷா என்பவரை கேமரக்கள் காட்டவே இல்லை, புதிய தலைமுறையிலாது அவரை காட்டுவார்கள் என நம்புவோம்)




கொசுறு

இன்றைய பள்ளி மாணவ, மாணவியர் தான் நாட்டை காப்பாற்ற போகும் வீரர்கள், ஆட்சியாளர்கள்: விஜயகாந்த்

அதாவது இவர் கட்சியினை காப்பாற்ற வருங்காலத்தில் யாருமில்லை என்பதை இப்படி சொல்கின்றார், ஒரு பயலும் தன் கட்சிக்கு இனி வரமாட்டான் என்பதை இப்படித்தான் சொல்லமுடியும்

நல்லது அவர்கள் நாட்டையே காப்பாற்றட்டும்




 

சிம்பு இங்குள்ள சல்மான் கான், சல்மான் அங்குள்ள சிம்பு





Image may contain: 4 people , text


மும்பை ரஜினி விழாவில் அழைக்கபடாமல் வந்து மொத்த நிகழ்ச்சியினையும் குழப்பிய சல்மான்கான் மீது பெரும் சந்தேக பார்வைகள் விழுகின்றன‌


அவ்வளவு பெரும் நடிகர், அழைக்காமல் எப்படி வந்தார். வந்து என்ன சொல்ல நினைக்கின்றார்? மும்பை நடிகர்களின் மறைமுக சதியா? தெற்கத்திய நடிகர்கள் அந்நாள்முதல் அவர்களுக்கு மும்பையில் வெறுப்பானவர்களா என ஏக சர்ச்சை


கமலும், சிரஞ்சீவியும் மும்பையில் ஜொலிக்கமுடியாமல் திருப்பி அனுப்பபட்ட அக்கால காட்சிகளும் நினைவுக்கு வந்து தொலைக்கின்றன, ஹேமமாலினி, ஸீரிதேவி என நடிகைகள் மின்னிய மும்பை உலகில், ஒரு தெற்கத்தி நடிகன் ஜெயிப்பது இன்று வரை முடியாத விஷயம்





சும்மாவே சர்ச்சையில் சிக்கும் சல்மான்கான், வாலிண்டியராக‌ வந்து குழப்பி சென்றதும் பல விஷயங்கள் கிளம்புகின்றன.

வந்தவர் எல்லோருடனும் நின்று படமெல்லாம் சிரித்த முகத்தோடு எடுத்திருக்கின்றார், மறக்காமல் எமிஜாக்சன் பக்கத்திலே நின்றுகொண்டிருக்கின்றார்.

அவர் ஏன் வந்தார்? முதல்படத்தில் ஐஸ்வர்யாராய் நடித்த கோபமாக இருக்கலாமோ, ஆனால் மனிதர் ஏதோ சொல்ல வந்திருக்கின்றார். அதாவது எங்களை மீறி இங்கு எந்த அந்நிய சினிமா விழாவும் சாத்தியமில்லை என சொல்ல வந்திருக்கலாம்.

ரஜினி விரைவில் மோடியுடன் டிபன், சிவசேனா தலைவருடன் லன்ச், மும்பை முதல்வருடன் டின்னர் சாப்பிடும் நாள் தொலைவில் இல்லை

சல்மானுக்கு எப்படி பதிலடி கொடுக்கலாம்?

இதற்கெல்லாம் ஒரே ஒரு நடிகர்தான் தமிழகத்தில் பதில் சொல்லமுடியும், விரைவில் அவர் திரைப்பட விழா மும்பையில் நடக்காமல் இதற்கொரு பதிலடி கொடுக்கமுடியாது

அவர் யார்?

நிச்சயமாக நமது சிம்பு

சிம்பு இங்குள்ள சல்மான் கான், சல்மான் அங்குள்ள சிம்பு.

இருவரையும் சந்திக்கவிட்டால் சூப்பர் ஹிட் கதை அங்குதான் கிடைக்கும்.















சில்லரைச் செய்திகள்....

ரூபாய் நோட்டு கட்டுப்பாடு அறிவிக்கப்பட்ட நாள் முதலே காய்கறிகள் வாங்க பணமில்லை: ஜெயா பச்சன்

ஆமாம், கொஞ்சநாளைக்கு முன்பு அமித்தபச்சன் ஒரு விவசாயி என உத்திர பிரதேசத்தில் ஒரு அறிக்கை கொடுத்தார்கள், அப்படிபட்ட ஏழை விவசாயியின் மனைவி சொன்னால் நிச்சயம் அர்த்தம் இருக்கும்




மருத்துவமனையில் உடல் நலம் தேறிவரும் எனக்கு நீங்கள் வழங்கியிருக்கும் தேர்தல் வெற்றி எல்லையில்லா மகிழ்ச்சி மற்றும் உற்சாகத்தை அளித்துள்ளது என முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

இன்னும் உடல்நலம் தேறி, பணிக்கு வர இன்னும் ஏராளமான வெற்றிகளை மக்கள் அளிக்கவேண்டும் என மறைமுகமாக கேட்டிருக்கின்றார்

அடுத்தது உள்ளாட்சி தேர்தலோ?




மத்திய அரசு ரூபாய் நோட்டுக்களை மாற்றி விளையாடுகின்றது, 2 ஆயிரம் ரூபாய் நோட்டும் விரைவில் மாறுமாம்

மாநில முதல்வரை அப்பல்லோ வார்டு மாற்றி விளையாடுகின்றது, அவர்களின் அறிக்கைபடி பார்த்தால் தினமும் பல வார்டுகளுக்கு மாற்றபடுகின்றார் முதல்வர்

இன்னும் என்னென்ன விளையாட்டுக்கள் நாட்டில் நடைபெற்று கொண்டிருக்கின்றதோ தெரியவில்லை




 

மேட்டூர் நகராட்சி ஆணையாளரை பார்த்து குரைத்த நாய் அடித்துக்கொலை

மேட்டூர் நகராட்சி ஆணையாளரை பார்த்து குரைத்த நாய் அடித்துக்கொலை


அதாகபட்டது அன்னார் வாக்கிங் செல்லும் பொழுது அவரை பார்த்து நாய் குரைத்துவிட்டதாம், அது ஐந்தறிவு விலங்கல்லவா? சாட்சாத் டிரம்ப் வந்தாலும் குரைக்கும், மோடி வந்தாலும் குரைக்கும்




அப்படி இவரை பார்த்து குரைத்துவிட்டதாம், நான் ஆணையாளர் என அவர் குரைத்து சொன்னாலும் நாய்க்கு எப்படி புரியும்?


மனிதர் உடனே நகராட்சி ஊழியர்களை அழைத்து கை காட்டியிருக்கின்றார், அடித்து கொன்றுவிட்டார்கள்


விஷயம் பற்றி எரிகின்றது, நமது பத்திரிகைகள் புள்ளி கிடைத்தால் ரங்கோலி வரைவார்கள்,


ஏன்? எப்படி? என எழுதி ரசித்து,ரசித்து நாயினை கொன்ற நகராட்சி நரகாசுரன் என எழுதி தள்ளுகின்றன‌


விரைவில் திரிஷா தலமையிலான புளு கிராஸ் போன்றவை களமிறங்கலாம், கொடி போன்ற நடிப்பு குறையினை மறைக்க திரிஷாவே களமிறங்கலாம்


முன்பு சிலர் மொட்டை மாடியிலிருந்து நாயினை போட்டு விளையாடியது விஸ்வரூபமெடுத்த தமிழகம் இது


இப்பொழுதெல்லாம் மனிதனை விட மரங்கள், விலங்குகள் மீது மக்களுக்கு கடும் ஆர்வம் அதனால் அவருக்கு சிக்கலே


குரைத்த நாயினையே இப்படி செய்திருக்கின்றாரே, அவர் அலுவலக ஊழியர்கள் என்ன பாடுபட்டிருப்பார்கள் :)