Sunday, July 24, 2016

கபாலி :மலேசிய தமிழர் கருத்து

இன்று ஒரு மலேசிய தமிழர் பேசினார், மனிதர் உலகம் அறிந்தவர். மலேசிய நாட்டுபற்று அவரிடம் எப்பொதும் சக தமிழர்களை போல ஓங்கி தெரியும்

என்ன படம் இது, சரியாக புரிந்துகொள்ளாமல் ஒரு தலைபட்சமாக எதனையோ வலுகட்டாயமாக திணிக்கபட்ட படம்போல் தெரிகின்றதே தவிர, உண்மை இது அல்ல‌

இதோ எங்கள் நாட்டில் 15 லட்சம் வெளிநாட்டு தொழிலாளர்கள் உள்ளனர், இன்னும் அனுமதித்தால் குவிந்து விட வங்க, பிலிப்பைனிய, இந்தோணிசிய, பர்மீய, வியட்நாம் நாட்டவர்கள் ரெடி, அத்தனை வேலைவாய்ப்பு கொட்டி கிடக்கின்றது

இதனையும் காட்டி இருக்கவேண்டுமல்லவா? அதனை சொல்லிவிட்டு,, இத்தனை வசதிகள் இருக்கும் தேசத்தில் இப்படியும் ஒரு பக்கம் உண்டு என்றல்லவா வெறும் போதை பழக்கத்தையும், மற்ற இருண்டபகுதிகளையும், சில சர்ச்சைகளையும் காட்டியிருக்க வேண்டும்? என்றார்

எனக்கு பதில் சொல்ல தெரியவில்லை, டைரக்டரிடம் கேட்க வேண்டிய கேள்வி அல்லவா?, என்னிடம் ஏன் என்றேன்

இல்லை வாய்பிருந்தால் நிச்சயம் கேட்பேன் என்றார், அவர் சொன்னதிலும் ஒரு நியாயம் இருக்கலாம்.

ஹே ராம் ... கமல்

சீன ஜப்பானிய உறவுகள் மகா மோசமடைகின்றன, எந்நேரமும் யுத்தம் வெடிக்கும் நிலைதான், மெதுவாக வெடிக்கலாம்

காரணம் இரண்டாம் உலகப்போரில் ஜப்பான் செய்திருக்கும் அட்டகாசம் அப்படி, சீனாவினை குதறியிருக்கின்றது. நான்சிங் கொடூரங்கள் எல்லாம் நினைத்தால் சப்தநாடியும் அடங்குகின்றது, இன்றுவரை அதற்கு ஜப்பான் மன்னிப்பும் கோரவில்லை, ஒரு நாளாவது அடிக்காமல் விடமாட்டோம் என்ற சீன சபதமும் அப்படியே இருக்கின்றது

ஜப்பானியர் கிழக்காசியாவில் செய்திருக்கும் அட்டகாசம் அப்படி, தாய்லாந்து பர்மா ரயில் பாதை அமைப்பில் எத்தனை ஆயிரம் தமிழர் கொடூரமாக அவர்களால் கொல்லபட்டிருக்கின்றனர் என்பதை படித்துகொண்டிருக்கின்றேன், மகா கொடூரமான ராணுவம் அது


இப்பொழுது என் சிந்தனையில் உதிப்பது ஒன்றுதான்

ஒருவேளை ஹிட்லர் வீழாமல், நேதாஜி திட்டபடி வென்று ஜப்பானிய படைகள் இந்தியாவில் நுழைந்தால் எப்படி இருக்கும்? ஒப்பந்தம் மீறி அமெரிக்க பேர்ல் ஹார்பரை நொறுக்கிய ஜப்பானியருக்கு, போஸை விரட்டிவிட்டு இந்தியாவில் ஒரு காட்டாட்சி நடத்த எவ்வளவு நேரம் ஆகியிருக்கும்?

நினைத்தாலே சித்தம் கலங்குகின்றது, செய்திருப்பார்கள். காந்தி அக்காரியத்தை விலக்கி வைத்ததிலும் அர்த்தம் இருந்திருக்கின்றது.

காந்தி நினைவுக்கு வருகின்றார், வன்முறை ஏன் வேண்டாம் என அவர் சொன்னார் என புரிகின்றது, ஜூலை கொழும்பு கலவரங்களை நினைக்கும்பொழுதும் அதுதான் புரிகின்றது

அவர் நிச்சயமாக நிறைய யோசித்திருக்கின்றார், புதுபாதையினை வகுத்திருக்கின்றார், அதனால்தான் அன்று பிரிட்டனின் எதிர்கட்சியே அவரை அங்கீகரித்திருக்கின்றது, இன்நாட்டை வன்முறையின் பிடியிலிருந்து நிச்சயம் காப்பாற்றி இருக்கின்றார்

அதனால் மகா நிச்சயமாக சொல்லலாம், ஆயிரம் பாஷா, ரோபோ இன்னபிற அழிச்சாட்டியம், வர்க்க போராட்டம், தலித் அரசியல் எனும் பெயரில் கபாலிகள் வரலாம்

ஆனால் காந்தி என்பவர் எப்படிபட்டவர் என்பதற்கு கமலஹாசனின் ஹேராம் படமே சால சிறந்தது, என்னை பொறுத்தவரை தமிழில் வந்த மிக சிறந்த படங்களில் அதுவும் ஒன்று

வணிகரீதியாக அப்படம் தோற்றிருக்கலாம், ஆனால் கமலஹாசனின் பெரும் முத்திரை அது, இன்று காந்தியின் அருமை தெரிவது போலவே பின்னாளில் கமலஹாசனின் அருமையினை வருங்கால சந்ததி அப்படம் மூலம் தெரிந்துகொள்ளும்.

அவனை பெற்றதில் பெருமை கொள்ளுது நாடு.

கருப்பு ஜூலை 02



அந்த கலவரம் பெரும் கொடியவன்முறை, நாட்டின் குடிமக்களை அரசே கொன்றுகுவித்த பயங்கரம். அதுதான் உண்மையில் "இனபடுகொலை", நடந்த கொடூரங்கள் அப்படி.

தமிழர்களின் வீடுகள், அரசின் வாக்காளர் அடையாள பட்டியலின் நகலாக எல்லா ரவுடிகளின் கையிலும் கொடுக்கபட்டது, பெட்ரோல்கள் ரகசிய இடங்களில் சேமிக்கபட்டது. பாதாள உலக குண்டர் தலைவர்கள் எல்லாம் சிங்கள அமைச்சர்களோடு பேசிகொண்டே இருந்தார்கள்.

அதாவது கொஞ்சகாலமாகவே முன் தயாரிப்புகள் மிக கடுமையாக நடத்தபட்டிருந்தது. முதல் ஆயுதபோராளியான குட்டிமணிகுழு சிறையில் இருந்தது, அவர்களையும் கும்பல் மனதில் வைத்திருந்தது.

ஜூலை 23 அன்று, கிட்டதட்ட 50 வருடங்களாக அனாரிகா தர்மபால ஊட்டிய அந்த ஈழதமிழர் வெறுப்பு, அன்று மொத்தமாக கொழும்பில் தீயாக இறங்கியது. பாதிக்கபடாத தமிழர் இல்லை. எரியாத தமிழர் சொத்துக்கள் இல்லை.

y

தமிழர் எரிந்துகொண்டிருக்கும் பொழுது வழியில் சென்ற சிங்கள்ருக்கு எல்லாம், தமிழரின் பணமும்,நகையும் அள்ளிகொடுக்கபட்டன. அந்த உற்சாகத்தில் அவர்கள் 2 லிட்டர் பெட்ரோலை கூடுதலாக ஊற்றிவிட்டு சென்றார்கள்.

வெலிக்கட சிறையில் குட்டிமணி குழு கொடூரமாக சிதைக்கபட்டு கொல்லபட்டது, இன்னும் ஏராள படுகொலைகள். இந்திய தூதரே கொழும்பில் அபூர்வமாக உயிர்தப்பிய பின் சொல்வதற்கு என்ன இருக்கின்றது?

ஆயினும் ஏராளமான சிங்கள மக்கள் அப்பாவி தமிழர்களை தங்கள் வீடுகளில் வைத்து காப்பாறியதையும் மறக்கமுடியாது, உண்மையான பவுத்தர்கள்.

கிட்டதட்ட 10,000 தமிழர்களுக்கு மேல் இறந்திருக்கலாம், ஆனால் அவர்களின் சொத்துக்கள் முழுமையாக அழிக்கபட்டன, தமிழ்பெண்களின் நிலை, இரண்டாம் உலகபோரில் ஜப்பானியரிடம் சிக்கிய சீனபெண்களின் நிலையில் இருந்தது.

உலகம் கொந்தளித்தது, ஜெயவர்த்தனே அமைதியாக சொன்னார் "புலிகள் வடக்கில் எமது மக்களை கொன்றதன் சிங்கள எழுச்சி இது, அரசு என்ன செய்யமுடியும்?"

உண்மையில் ஜெயவர்த்தனேவும் கைதியாக்கபட்டுதான் இருந்தார், காரணம் அரசியல், அடுத்த சிங்களமக்களின் நம்பிக்கையை பெறுவது யார்? எனும் இரண்டாம் தலைவர்களின் அரசியல் விளையாட்டு.

மனிதாபிமான அடிப்படையில் இந்தியா களமிறங்கியது, களமிறக்கபட்டவர் அந்நாளைய வெளியுறவுதுறை அமைச்சர் நரசிம்மராவ். ஆனாலும் கிட்டதட்ட அவமானபடுத்தபட்ட நிலையில் திரும்பினார். கொழும்பு எரிவதை நேரில் கண்டவர் அவர், காரணம் கலவரம் 1 வாரம் நீடித்தது.

இனி அழிக்க ஒன்றுமில்லை என்பதால் கொழும்பில் கலவரம் ஒய்ந்தது அல்லது கொன்று கொன்று சிங்களர் களைத்துவிட்டார்கள், ஆனாலும் பின்னர் உயிர்தப்பிய தமிழர்களை வடக்கே அனுப்ப அரசு தயாரானாது.

நரசிம்மராவிற்கு நடந்த அவமானத்தை, தனக்கே நடந்ததாக பொறுமினார் இந்திரா,
இந்தியா இலங்கையில் நுழைய ஆரம்பித்த தருணமிது, ஒருபடிமேலே சென்று "இனியும் தமிழருக்கு எதிரான‌ தாக்குதல்களை இந்தியா பொறுக்காது" என மிரட்டியவர் இந்திரா,
அதன்பின் கலவரங்களை நடத்த சிங்களம் அஞ்சியது.

போராளிகளுக்கு இந்திய பயிற்சியும், புலிகளின் முணுமுணுப்பும் ஆனாலும் இந்திரா காலம்வரை அவர்கள் அமைதியும் ரகசியம் அல்ல. அதன்பின் இந்திரா மிரட்டிய மிரட்டலில் அவர்காலம் வரை எந்த கலவரமும் இல்லை

ஆனால் இந்திரா அகாலமரணமடைந்தபின் பெருமூச்சுவிட்ட ஜெயவர்த்தனே, ஆட்டத்தை மாற்றினார், இம்முறை கொழும்பு அல்ல வடமராட்சி.

புலிகளை ஒடுக்குகிறேன் என யாழ்பாண பகுதியை முற்றுகையிட்டு 3 லட்சம் தமிழரை கொல்ல தயாரான பொழுதுதான், ராஜிவ் காந்தி இலங்கை அனுமதியே இல்லாமல் போர்விமானங்களை அனுப்பி உணவுகளை வீசி இலங்கையை மிரட்டினார்.

இது இந்தியாவின் இரண்டாம் இன்னிங்ஸ், இல்லாவிட்டால் ஜூலை கலவரம் போல அடுத்த கலவரம் யாழ்பாணத்தில் நடந்திருக்கும்.
சிங்களன் திருந்தமாட்டான் ஒவ்வொருமுறையும் இந்தியா காப்பாற்ற வரமுடியாது என்றுதான், இந்திய இலங்கை அமைதி ஒப்பந்தம் ஏற்படுத்தபட்டது.

ஜூலை பெரும் கலவரத்தினை தொடங்கிவைத்த அந்த குண்டுவெடிப்பினை நடத்தியபுலிகள் இதனை காதில் வாங்கவில்லை, எமது மக்கள் எமது மண்ணிற்காய் சாவதில் என்ன தவறு? என்றார்கள். அகதியாய் ஓடுவதுபற்றி எல்லாம் அவர்களுக்கு கவலை இல்லை. ஆனால் அகதிகளை பராமரித்துகொண்டிருந்த இந்தியாவிற்கு தார்மீக கடமை இருந்ததை யார் மறுக்கமுடியும்?

ஆனால் புலிகள் சிங்கள ராணுவத்தை தாக்க தாக்க, ராணுவம் திரும்ப தாக்க, மற்ற அப்பாவி தமிழர் கலவரங்களில் கொல்லபடுவர் என்பதை தடுக்கத்தான் இந்திய அமைதிபடை அனுப்பபட்டது.

அதுவும் கண்ணியில் சிக்கவைக்கபட, அவமானத்தோடு திரும்பியது இந்தியா 1500 வீரர்களையும் இழந்து. அங்கே தந்திரசாலி பிரேமதாசாவும் புலிகளின் பெரும் பலமான ஆண்டன் பாலசிங்கமும் சிரித்துகொண்டிருந்தார்கள். உச்சமாக ராஜிவும் கொல்லபட்டார்.

ஆனால் அதுலத்முதலியும், ஜெயவர்த்தனேயும் 1983ல் ஜூலையில் சொல்லிகொடுத்த அந்த பாடத்தை சிங்களம் மறக்கவே இல்லை. வாய்ப்புகிடைத்தால் மொத்தமாக நொறுக்குங்கள்.

1983க்கு பின் சர்வதேச அழுத்தத்தால் கொழும்பிலோ அல்லது மற்ற பகுதிகளிலோ பெரும் கலவரம் இல்லை. ஆனால் புலிகள் ராணுவம் மோதிகொண்டே இருந்தனர்.

வாய்ப்புக்காக காத்திருந்த சிங்களம், முள்ளிவாய்க்காலில் சுத்திகொண்டது.

காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என குரலொலிகள் எழுப்பபட்டன, யாரை காப்பாற்ற குரலொலி எழுப்பபட்டது என்பது இந்தியாவிற்கு புரிந்தது. சென்னை பாண்டிபஜாரில் காப்பாற்றி, வடமராட்சியில் காப்பாற்றி, இன்னும் எங்கெல்லாமோ இந்திய அரசு காப்பாற்றிய "அவரை" காப்பாற்றத்தான், அவர் படத்தோடு லண்டனில் ஊர்வலம் சென்றதை உலகமும் புரிந்துகொண்டது.
ஜூலை கலவரத்தில் வெகுண்டெழுந்த இந்தியா, வடமராட்சியில் இலங்கையை மிரட்டிய இந்தியா இம்முறை அமைதியானது,

காரணம் எல்லோருக்கும் புரியும்.

ஜூலை 23 கலவரத்திற்கு பின்னால்தான், ஈழத்தில் இந்தியா நுழைய தமிழகம் ஈழ எதிர்பினை தீவிரமாக்கியது, அகதிகள் தமிழகம் வந்தனர். பிரச்சினை கூடியது, உச்சமாக அமிர்தலிங்கம் சென்னை வந்தார். அவரை வரவேற்பதில் கருணாநிதிக்கும் எம்ஜிஆருக்கும் பலத்தபோட்டி, வழக்கம்போல எம்ஜிஆர் ஜெயித்தார்.

அதுவரை திராவிடம்,அண்ணாயிசம், தமிழ், வெண்ணிற ஆடை நிர்மலாவிற்கு மேல்சபை, மதுக்கடை, என சண்டைபோட்டுகொண்டிருந்த இருவரும் மிகவும் விரும்பியது இந்திரா காந்தியுடனான நல்லுறவு.

அதற்காக இருவரும் தீவிர ஈழ ஆதரவை எடுத்து அவரை மகிழ்ச்சிபடுத்திகொண்டனர். எம்ஜிஆர் ஒருபடிமேலே சென்று பிரபாகரனை இந்திய பயிற்சியில் சேர்த்து இந்திராவின் "குட்புக்"கில் இடம்பிடித்தார்.

ஆனால் இந்திரா மறைவும், பின் அமைதிபடை காலத்தில் எம்.ஜி.ஆரும், ராஜிவ் மரணம் தொடர்ந்து கலைஞரும் அமைதியாயினர். அதன்பின் வை.கோவும் , நெடுமாறனும், ஆரம்பகால புலிகள் அமைப்பின் ஆதரவான திராவிட அமைப்புக்களும் ஈழபிரச்சினையை ஒரே வார்த்தைக்குள் அடக்கின‌

"ஈழம் ‍அதாவது பிரபாகரன்"

2005க்கு பின் கொழும்பில் நடந்த மனிதவெடிகுண்டில் பள்ளிகுழந்தைகள் கொல்லபட, ஐரோப்பிய அமைப்பு புலிகளை தடை செய்தது, தாக்குதலில் உயிர்தப்பிய பொன்சேகா, அமெரிக்கா அனுப்பிய கோத்தபக்சே என சகலரும் சேர்ந்து முள்ளிவாய்க்காலில் கொள்ளி வைத்தாகிற்று.

அப்படியாக ஜூலை 23 இதேநாளில் 1983ல் தொடங்கிய கலவரம் மூலம் தமிழகத்தில் வலுவான ஈழ அரசியல், இந்திராவிற்கு பயந்த இரு தலைவர்களால் பெரும் தீயாக பற்றவைக்கபட்டு பின் அணைந்தும் விட்டது.

சேகுவாராவோடு சேர்ந்து உலகெல்லாம் தமிழருக்காக உழைத்துவிட்டு, துரதிருஷ்டமாக மிக தாமதமாக தமிழகம் வந்த ஒரு செந்தமிழன் சீமான் அணைந்துவிட்ட அந்தபெரும் காட்டின் கரிகட்டையை ஊதி தீ வரும் என சொல்லிகொண்டிருக்கின்றார்.

அது கரிகட்டை என்றாலும் பரவாயில்லை அது கல், அட அது தீ பிடித்தாலும் பரவாயில்லை, அந்த தீயை கொண்டு இந்துமாக்கடலை எரித்து கொழும்பை பிடிப்பேன் என்கின்றார் பார்த்தீர்களா? அதுதான் விஷயம்.

மே 17 பெயரில் ஒரு டஜன் இயக்கங்கள் சுற்றும் தமிழகம் இது, திருமுருகன் காந்தி எனும் பெரும் புரட்டுகாரரும் உண்டு, உண்மையில் மிக கொடூரமான ஈழ இழப்புக்கள் இரண்டு. ஒன்று யாழ்பாண நூலக எரிப்பு, இன்னொன்று ஆடிமாத அதாவது ஜூலை 23 இனபடுகொலை

இதனை எல்லாம் பற்றி ஏன் இவர்கள் நினைவுகூறபோகின்றார்கள்? அவர்களுக்கு தெரிந்ததெல்லாம் அவர் மட்டுமே, அவர் கொல்லபட்ட முள்ளிவாய்க்கால் மட்டுமே. அதில் கொல்லபட்டவர்தான் தமிழர் என்றல்ல,

இம்மாதிரியான ஜீலை கலவரங்களை சொன்னால் அதனை நிறுத்திய இந்தியா பற்றியும் சொல்லவேண்டும் என்பதால் கப்சிப், எல்லாம் அரசியல்.

இதனை விட எல்லாம் விஷமான விஷயம் உண்டு, 2002 முதல் 2005 வரை பலர் காவடி எடுத்து சென்று பிரபாகரனை தரிசித்தனர். அதில் உலக அரசியலை பேசும் ஜெகத் கஸ்பர் எனும் கிறிஸ்தவ கள்ள துறவியும் உண்டு, அவரிடம் பிரபாகரன் சொன்னாராம்
"1983க்கு பின் கொழும்பில் கலவரம் இல்லை பார்த்தீர்களா? காரணம் எம்மேல் உள்ள பயம்"

அப்பாவியல்ல "பாவி" துறவியும் அதனை சொல்லி வியக்கின்றார் " அதன்பின் இந்திய தலையீட்டில் கலவரம் இல்லையா? அல்லது புலிகளுக்கு பயந்தா? புலிகளுக்கு பயந்தால் ஏன் உங்களை வடமராட்சியில் சுற்றிகொள்ள போகின்றார்கள்??" என இவர் கேட்கவுமில்லை, கேட்டால் இவரை அங்கேயே சிலுவையில் அறைந்திருப்பார்கள் என்பது வேறுவிஷயம்.

அவ்வளவு பயந்திருந்தால் ஏன் முள்ளிவாய்க்காலில் கொள்ளிகுடம் உடைக்கபோகிறான் சிங்களன்?

இதோ புலிகள் இல்லை, கொழும்பு எரிகின்றதா? இல்லை அல்லவா? காரணம் என்ன? இனி தமிழரை தொட்டால் இந்தியா தொலைத்துவிடும், முன்பு புலிகள் என்ற காரணம் இருந்தது, இனி அது இல்லை. அவ்வளவுதான்.

ஆனால் ஜெகத் போன்றவர்களால் இங்கு பரப்பபட்ட பிம்பம் ஏராளம்,பரப்பபட்ட பொய்கள் அப்படி, தமிழக பத்திரிகைகளும் இதனை கொட்டை எழுத்தில் வெளியிட்டன, இப்படியாக இவர்கள் உருவாக்கும் பிம்பம் இப்படி பொய்யானது, மகா ஆபத்தானது.
முள்ளிவாய்க்காலை விட ஆயிரம் மடங்கு கொடூரமானது ஜூலை 23 கலவரம். அந்த மக்களுக்காக அன்னை இந்திரா விட்ட கண்ணீர்போல நாமும் கண்ணீர் விடுவோம்.

தர்மங்கள் தோற்பதில்லை, காலம் மாறும்.

அன்று இந்த கொடூரத்தை நடத்தியவன் ஜெயவர்த்தனே, பின்னாளில் வடமராட்சியில் நடத்த முயன்றவனும் அவனே, அவனிடமிருந்து தமிழரை காப்பாற்றியது இந்தியா, ஆனால் ராஜிவ் கொல்லபட்டார், ஜெயவர்த்தனே வாழ்வாங்கு வாழ்ந்து வானம் சென்றார், எப்படி? இதுதான் அரசியல்

ஈழ அரசியலில் இந்திய நிலையும், அதன் முயற்சிகளும் தெரியவேண்டுமால் இதனிலிருந்தே படியுங்கள், உலகின் எல்லா தேசமும் முகத்தை திருப்பிகொண்டபின் ஓடிவந்து ஈழதமிழரை காத்த ஒரே நாடு இந்தியா

முள்ளிவாய்காலில் நடந்தது இந்தியா ஒதுங்கியபின் நடந்த முடிவுரை, அதனை மட்டும் படித்துவிட்டு இந்தியா துரோகி என சீமான், வைகோ, திருமுருகன் காந்தி என போலி புரட்டர்கள் சொலவதை நம்புவீனிர்களானால், அந்த வரலாற்றின் கடைசி பக்கம் மட்டும் படித்தவர்கள் நீங்கள்.

அந்த ஜெயவர்த்தனெவை விட ஆயிரம் மடங்கு கொடூரமானது இந்த புலிவேஷம் போடும் இந்த சீமான், திருமுருகன் காந்தி கும்பல், காரணம் இவர்கள் ஈழதமிழருக்கோ, இந்தியாவிற்கோ, தமிழருக்கோ ஏன் தனக்கே நண்பர்கள் இல்லா பெரும் ஆபத்தானவர்கள், யாருக்கும் இவர்களால் ஒரு நன்மையும் விளையா

( முற்றும்)


Saturday, July 23, 2016

கருப்பு ஜூலை 01



சுதந்திரம் அடைந்த காலத்திலிருந்தே ஏன் அதற்கு முன்பே சிலோன் என அழைக்கபட்ட பிரிட்டிஷ் காலத்திலிருந்தே இலங்கைக்கும் இந்தியாவிற்கும் அவ்வளவு சுமூக உறவு என சொல்லமுடியாது.

ஒரு கட்டத்தில் சிலோனின் தலமையகத்தை சென்னைக்கு பிரிட்டிசார் மாற்றிய பொழுதே, "ஐயகோ இது இந்திய இணைப்பின் முன்னோட்டம்" என வரிந்துகட்டி பிரித்து சென்றவர்கள் இலங்கையர், உபயம் அனாரிகா தர்மபாலா எனும் அவர்களின் புத்தனின் தூதுவன் + யாழ்பாணதமிழர்கள்.

Stanley Rajan's photo.

u

நேருகாலத்தில் 5 லட்சம் இந்தியா வம்சாவழி தமிழரை திரும்ப அனுப்பியதிலிருந்து இலங்கை இந்தியா உரசல் தொடங்கியது, அதாவது இந்திய தரப்பில் முணுமுணுப்பு,இலங்கை தரப்பில் மாபெரும் வெற்றி. யாழ்பாணர் தரப்பில் ஒரு திருப்தி.

படிப்பறிவில்லை,நாகரீகமில்லை பஞ்சம் பிழைக்கவந்த பரதேசி வம்சம் விட்டால் மக்கள்தொகை கூடி வோட்டுவங்கிக்கு வந்து நமக்கு சரிக்கு சரியாக அமர்ந்தால் எப்படி? சீ சீ விரட்டியாயிற்று. நாகரீகம் முக்கியம், கல்வி முக்கியம் தமிழரவாது?

தொப்புள்கொடியாவது? வெட்டிவிட்டாயிற்று.

நேரு அப்போது இந்தியபிரதமர், ஆசிய ஓற்றுமை, பஞ்சசீலம் என என்னவெல்லாமோ சொல்லிகொண்டிருந்தார். சீனா பின்மண்டையில் அடிக்கும்வரை அவருக்கு உரைக்கவில்லை, அடிபட்டதும் அப்படியே கோமா நிலை.

அதன்பின் இந்திய தலையீடு இலங்கையில் இல்லை, ஆனால் வாய்ப்பு கம்யூனிஸ்டுகள் வடிவில் வந்தது.
உலகெல்லாம் கம்யூனிசதாக்கம், இலங்கையிலும் வந்தது. கட்சியின் பெயர் சிங்களத்தில் ஜனதா விக்தி பிரமுணா சுருக்கமாக ஜேவிபி , தமிழில் மக்கள் விடுதலை கட்சி. கட்சி 1971ல் திடீர் புரட்சி செய்து கொழும்பை முடக்கியது. பெயருக்கு ஒரு ராணுவம் இருந்த இலங்கை கையை பிசைந்து நின்றது, உலகநாடுகளுக்கு உதவிகரம் கேட்டது.

இந்தியபடைகள் அனுப்பபட்டன, முதல் முறையாக இந்தியராணுவம் இலங்கைக்குள் கால்பதித்து, கிளர்ச்சியை அடக்கி மறுபடியும் பண்டாரநாயகாவினை ஆட்சியாளராக்கிவிட்டு திரும்பியது, எந்த இலங்கையரும் அப்போது அதனை ஆக்கிரமிப்புபடை அல்லது கற்பழிப்புபடை என சொல்லவே இல்லை.

கலவரம் ஓய்ந்ததும் வாழ்த்தி அனுப்பினர் இந்தியபடைகளை.இந்தியா நேரடியாக இலங்கையில் தலையிட்ட முதல் நடவடிக்கை இதுதான், ஆனாலும் அந்த கிளர்ச்சி அடக்குவதில் பாகிஸ்தானும் படைகளை அனுப்பியிருந்ததால் லங்கா பாகிஸ்தான் உறவும் வலுத்தது.

சிங்களம் பாகிஸ்தானுடனேதான் உறவாடியாது. இந்தியா கச்சதீவை கொடுத்து வேறுமாதிரி உறவினை வளர்க்க நினைத்த காலமிது.

அதன் பின் இலங்கையில் மாணவர்களுக்கான இடஒதுக்கீட்டில் சிங்களருக்கு சலுகைகள் அள்ளிகொடுக்கபட ( அதேதான் நமது ஊரில் தாழ்த்தபட்ட மாணவனுக்கும் பிராமண மாணவனுக்கும் இட ஒதுக்கீடு உண்டல்லவா? அப்படித்தான் புரியவில்லை என்றால் மருத்துவகல்லூரி அட்மிசனை சென்றுபார்க்கவும்) தமிழ் மாணவர்கள் போராட கிளம்பினர்.

அதுவரை சாத்வீகமாக நடந்த எதிர்ப்புகள் அதன்பின் வன்முறையாக மாறின, அதனை ஈழதமிழ் அரசியல்வாதிகளும் பயன்படுத்திகொள்ள அதுபெருநெருப்பாக வளர்ந்தது.
போராளிகுழுக்கள் தோன்றின, 30க்கும் மேற்பட்ட குழுக்கள் தொடக்கத்தில் இருந்தது. போராளிகள் என்றால் பகலில் ஒழுங்காக வேலைக்கு சென்றுவிட்டு வார இறுதியிலோ அல்லது நள்ளிரவிலோ போராடமுடியாது. அவர்களுக்கு பணம் வேண்டும், ஆயுதம் வாங்க, பதுக்க,உண்ண, உறங்க,அறிக்கை விட, பேப்பர்வாங்க என ஏராளமான‌ பணம்வேண்டும்.

அதற்காக அரசுவங்கிகளை குறிவைத்தார்கள். அக்கால வசதியான பகுதி யாழ்பாண பகுதி, வங்கிகள் எல்லாம் கொள்ளைஅடிக்கபட்டன, அரசு கருவூலம் கொள்ளையடிக்கபட்டது இன்னும் ஏராளம்.

அடகுகடைகளும் தப்பவில்லை. இதில் பெரியகொடுமை என்னவென்றால் திருடர்களும் தாதாக்களும் திடீர்போராளிகளாகி கொள்ளையடித்துவிட்டு, அப்பணத்தில் பென்ஸ்காரில் போய்கொண்டிருந்தார்கள்.

அன்று வெள்ளையர் விட்டுசென்ற ஆட்சிமுறைபடி சிங்களர்பகுதியில் தமிழ் போலிசாரும், தமிழ்பகுதியில் சிங்களபோலிசாரும் அதிகம். வங்கிகொள்ளை என்றால் போலீஸ்தானே காவலுக்கு வரும். போராளிகளின் அடுத்தகுறி காவல்நிலையம் மீது திரும்பிற்று, சிங்கள போலிசார் பலியாக ஆரம்பித்தனர்.

இது சிங்களர் அதிகம்வாழும் பகுதிகளில் ஆத்திரத்தை கிளப்பிற்று, கொஞ்சம் கொஞ்சமாக பதற்றம் கூடிற்று. ஆனால் போராளிகளோ காவல்துறையினர கிட்டதட்ட முடக்கும் நிலைக்கு வந்தாயிற்று. போலீஸ் என்றால் எத்தனை திருடர்களுக்கு, கடத்தல்காரர்,சாராயவியாபாரிகளுக்கு கசக்கும், அவர்களும் போலீசாரை தீர்த்துகட்டிவிட்டு நாங்கள் போராளி என சொல்லிகொண்டனர்.

போலீஸ் முடியாவிட்டால் ராணுவம்தான் வரும், வந்தது. அங்கொன்றும் இங்கொன்றுமாய் ராணுவம் மேல் தாக்குதல் நடந்தது. ஒன்றும் உருப்படியில்லை. கண்ணிவெடி ராணுவத்திற்கு வைத்தால் செம்மறிஆட்டு கூட்டம் சிதறும், என்னசெய்ய உப்புகண்டம் போடவேண்டியதுதான்.

இந்நிலையில் புலிகள் அமைப்பு பெரும் தாக்குதலுக்கு திட்டமிட்டது, பெரும் அதிகாரி பஸ்தியாம்பிள்ளை கொலைவழக்கில் தப்பிசென்ற செல்லகிளி பம்பாயிலிருந்து யாழ்பாணம் திரும்பியிருந்தார், அவர்தான் தாக்குதலுக்கு தலமை பொறுப்பு.

கொழும்பில் அமைச்சர்கள்,சிங்கள ரவுடிகள் எல்லாம் ஒரு கூட்டம்போட்டு முடிவெடுத்தனர். அதாவது இனி வடக்கில் சிங்கள் மீது தாக்குதல் நடந்தால் கொழும்பிலும் தென்னிலங்கையிலும் பெரும் தாக்குதலை நடத்தவேண்டும், அது தமிழரின் வாழ்வில் மறக்கமுடியாத அடியாக அமையவேண்டும். ஆனால் முந்தகூடாது ஆனால் வாய்ப்பு வரும்பொழுது விடவும்கூடாது.

ஒரே நாடான இலங்கையில் கொழும்பில் எத்தனை ஆயிரம் தமிழர்கள் வாழ்கின்றனர், யாழ்பாணத்தில் சிங்களனை அவர்கள் அடித்தால் கொழும்பில் நாம் தமிழ்ர்களை அடிப்போம். வடக்கே சிங்களன் சாக தெற்கே தமிழன் நிம்மதியாக வாழ்வதா? எப்படி விட முடியும்? அடிப்போம்.

அப்படி அடிக்காவிட்டால் சிங்கள மக்களின் அபிமானத்தை இழந்துவிடுவோம், பெரும்பான்மை இனம் சிறுபான்மையினரிடம் அடிவாங்கினால் அது தற்கொலைக்கு சமம் அல்லவா? என்றெல்லாம் வெறியேற்றிகொண்டார்கள்.

இருபக்கமும் அடிப்பதில் தீர்மானமானமானர்கள், புலிகளுக்கோ ஏராளமான ராணுவத்தினரை கொன்று கவனத்தை திருப்பும் நோக்கம். சிங்களருக்கோ கொழும்புவாழ் தமிழரை மொத்தமாக கொல்லும் பயங்கரதிட்டம், காரணம் போலீஸ் பிணங்களாக சிங்களபகுதிக்கு வந்துகொண்டிருந்தன.

போராளிகுழுக்களில் ஒன்றான டெலோ அமைப்போ வெலிக்கடை சிறையில் இருந்த குட்டிமணி குழுவை எப்படி தப்பவைப்பது என திட்டமிட்டு மேப் வரைந்துகொண்டிருந்தது.

தமிழகத்திலோ ஈழ அரசியல் அப்போது அறவே இல்லை, கச்சதீவு பிரச்சினை இல்லை. எம்.ஜி.ஆர் முதல்வர், கலைஞர் எதிர்கட்சி. காங்கிரஸ் இந்திரா புண்ணியத்தில் உயிரோடு இருந்தது. கலைஞரும் எம்ஜிஆரும் அறிக்கையில் மோதுவார்கள், மக்கள் பார்த்துகொண்டு எம்ஜிஆருக்கு வோட்டளிப்பார்கள், கருணாநிதி கடுப்பில் "தமிழன் சோற்றுபாணை", "பிண்டம்" என முரசொலியில் தீட்டிகொண்டிருப்பார்.

மொத்த இந்தியகவனமும் பஞ்சாபில் இருந்தது, பிந்திரன்வாலே குழு அப்படி அட்டகாசம் செய்துகொண்டிருந்தது.
இந்திராகாந்திக்கோ இலங்கைமேல் திரிகோணமலை விவகாரம் தொடர்பாக கடுப்பு இருந்தது, வாய்ப்பு கிடைத்தால் ஆட்டம் ஆட தயாராக இருந்தார்.

புலிகள் தாக்குதலுக்கு நாள்குறித்தனர் ஜீலை 23 என முடிவெடுத்தனர் (தயாராக பாறைகளை உடைக்கும் வெடிமருந்தை சிங்கள சிமெண்ட் ஆலையிலிருந்து கடத்தினர்). தலமை செல்லகிளி, கிட்டு,மாத்தையா,விக்டர்,பிரபாகரன் என ஆரம்பகால புலிகளின் டீம் களத்தில் இறங்கியது.

ராணுவதாக்குதலில் நேரடியாக பிரபாகரன் பங்கெடுத்த ஒரே தாக்குதல் இதுமட்டுமே. அதுவும் தூர நின்றுகொண்டார்.

யாழ்பாணம் திருநெல்வேலி சந்திப்பில் டெலிபோன் டிபார்ட்மெண்ட் வெட்டிவைத்த குழியில் கன்னிவெடி வைத்து காத்திருந்தார்கள். இரவில் இரு ராணுவ வாகனங்கள் ரோந்துவந்தன, எல்லா புலிகளும் பொசிஷனில் தயாராக இருந்தார்கள், கையில் இருந்த விசையை ( நமது ஊரில் கிணறுதோண்ட வெடி வைப்பார்கள் அல்லவா? அதே கருவி) செல்லகிளி இயக்க முதல்வாகனம் தப்பி இரண்டாம் வாகனம் சிக்கியது.

குறிவைத்தது முதல்வாகனத்திற்கு, சிக்கியதோ இரண்டாம் வாகனம், ராணுவத்தார் சுதாரிப்பதற்குள் புலிகள் தாக்கினர், 13 பேர் பலி இருவர் ஓடிவிட்டனர்.

(ஆச்சரியமாக ராணுவம் எதிர்தாக்குதல் நடத்தா நிலையிலும் செல்லகிளி குண்டுபாய்ந்து இறந்திருந்தார். எப்படி சாத்தியமானது என இன்றுவரை தெரியவில்லை. பெரும் மர்மம் அவர் சாவு, ஆனால் பிரபாகரன் தனது ஒரு உரையில் கூட தைரியம் மிக்க இவரைபற்றியோ அவரது மர்ம மரணம் பற்றியோ சொல்லாதது கூடுதல் மர்மம். இவரது சடலமும் மிக அவசரமாக எரியூட்டபட்டது, மாவீரர் கல்லறை எல்லாம் இவருக்கு இல்லை, ஏன் என்று கேட்டால் கேட்டவர் "இனதுரோகி" ஆகிவிடுவார்.)

இன்னொன்று குட்டிமணி குழுவினை சிறை உடைத்து தூக்க டெலோ திட்டமிட்டது, ஆனால் தான் காட்டிகொடுக்கபட்ட விவகாரத்தில் பிரபாகரன் மீது கடும் வெறுப்பில் இருந்தால் குட்டிமணி, அவர் வெளிவந்தால் எதுவும் நடக்கலாம், அதனால் புலிகள் முந்திகொண்டனர் என்பதும் ஒரு தியரி

புலிகளின் பெரும் தவறு இது, கொஞ்சம் தாமதித்திருக்கலாம், கைதிகளை நினைத்திருக்கலாம், புலிகள் ஒருநாளும் பரந்து யோசிப்பவர்கள் அல்ல‌

வாய்பினை எதிர்பார்த்திருந்த சிங்கள குழு நெட்டிமுறித்து கிளம்பினர், சும்மா அல்ல 13 பேர் உடலும் ரத்தம் வடிய வடிய மேலும் சிதைக்கபட்டு மக்களின் பார்வைக்கு வைத்தனர், இன்னும் சிங்கள் உடல்கள் வருவதாக பிரச்சாரமும் நடந்தது, ஜெயவர்த்தனே சிக்னல் கொடுத்துவிட்டு அமைதியானர், சிங்கள வெறிகூட்டம் கிளம்பிற்று

உலகின் அனைத்து தெய்வங்களும் கண்களை மூடிகொள்ள, அந்த பயங்கரம் தொடங்கியது, யூதர்களுக்கு நாசிகள் செய்ததற்கும், பிரிவினை காலத்தில் இந்திய எல்லையில் நடந்த ரத்தகளறிக்கும் கொஞ்சமும் குறையில்லா கொடுமை அங்கு தொடங்கிற்று.

இலங்கை தமிழருக்கு கருப்பு நாட்கள் அவை. அந்த கருப்பு ஜூலை நெருப்பாய் எரிய ஆரம்பித்தது.

(தொடரும்)










எது பாதிக்கின்றதோ அதனைத்தான் எழுத முடியும்

24-07-2016

மேட்டுகுடி கூப்பாடு என சிலர் வந்திருக்கின்றார்கள், பாரதியும் மேட்டுகுடிதான், அம்பேத்கரை படிக்க வைத்த பரோடா மன்னரும் மேட்டுகுடிதான் என்பதை மறந்துவிடுகின்றார்கள், நல்லவர்கள் எல்லா இடத்திலும் உண்டு

கொஞ்சம் பேர் தலித் அரசியல் பேச ரஞ்சித்தை விட்டால் ஆளில்லை என எனக்கே அறிவுரை சொல்கின்றார்கள். பாரதி கண்ணம்மா என்ன கருத்து சொன்னது,

பருத்தி வீரனின் ஒன் லைன் கதை என்ன?


அவை நிச்சயமாக தலித் வகை படங்கள்தான், தமிழகமே அப்படம் பார்த்து அழவில்லையா? எல்லொர் மனதையும் பாதிக்கவில்லைய்யா? கவனித்து பார்த்தால் இன்னும் ஏராளமான அவ்வகை படங்கள் தமிழகத்தில் உண்டு,,

பாரதி கண்ணம்மா முதலிடம்

அதனை விடவா கபாலியில் ரஞ்சித் கிழித்துவிட்டார்





22-07-2016

ஒழுங்காக புலிகளை பற்றி மட்டும் எழுது என ஆணையே இடுகின்றார்கள், காரணம் தாழ்த்தபட்டவன் வலி தெரியாதாம்?

யாருக்கு? ஒரு காலத்தில் சட்டை கூட அணியகூடாது, செருப்பு போட கூடாது, பெண்கள் மேலாடை அணிய கூடாது என பாடாய் படுத்தபட்ட் இனத்தில் இருந்து வந்தவனுக்கா தாழ்த்தபட்ட வலி தெரியாது?

நீங்கள்தான் அடக்கபட்ட சாதியா, உரிமை மறுக்கபட்ட சாதியா, நாங்கள் இல்லையா? எல்லாம் சூத்திர பிரிவே

இன்று கல்வியில் யாருக்கு உரிமை மறுக்கபடுகின்றது, அல்லது அடக்கி வைக்கபடுகின்றது என்றால் நிச்சயம் நமக்கல்ல, கத்த வேண்டியது நாம் அல்ல.

இது மாறிவிட்ட காலங்கள், எல்லோருக்கும் எல்லாம் வாய்க்கின்றது, எல்லொருக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கின்றது, பழைய ஆண்டான் அடிமை இம்சைகள் எங்கே இருக்கின்றது? ஜமீந்தார் நிலத்தில் களை எடுத்தால்தான் சாப்பாடு என்று யார் இருக்கின்றார்கள்? சொல்லபொனால் நிலம் வைத்திருப்பவன் எல்லாம் ஆப்ரிக்காவில் இருந்து தொழிலாளர் கிடைப்பார்களா எனும் அளவிற்கு நிலை மோசம்.

சிற்சில சம்பங்கள் எங்காவது நடக்கலாம், இது உலகமுழுக்க உள்ள பிரச்சினை, பிரச்சினை இல்லா சமுதாயம் என ஒரு இனத்தை காட்டுங்கள், யூத இனம் வரை உண்டு

பிரச்சினைகள் குறைவான சமூகம் உண்டே தவிர, இல்லாத சமுகம் என்று எது உண்டு

ரஜினி படத்தின் கதை இப்படி இருந்தது, இப்படியான கதைக்கு ஏன் சம்பந்தம் இல்லா வசனங்கள்? மனக்கோளாறா என சொன்னால், உனக்கு ரஞ்சித் வளர்ச்சி பிடிக்கவில்லை தலித் வளர்வது பிடிக்கவில்லை ஏய் மேட்டுகுடி என பொங்கி, ஒழுங்காக ஈழம் எழுது என்கின்றார்கள்

நான் ஈழம் மட்டும்தான் எழுதவேண்டுமா? எனக்கு தொன்றுவதை எழுதமுடியுமா? இல்லை ஒவ்வொருவருக்குமாக எழுத முடியுமா? இன்று ஒரு அறிவுசூரியன் கத்துகின்றது, உனக்கு தேவை பணம்தானே

அட மானிட கல்லே, எனக்கென்ன மார்க் படியளக்கின்றானா? ஒரு பைசா தேறும், ஏன் பதிகிறேன் என சிலநேரம் எனக்கே தெரியவில்லை, என்ன கிடைக்கின்றது ஒன்றுமில்லை

ஆகவே நண்பர் குழாமே, உங்கள் ஒவ்வொருவருக்கும் பிடித்தது போல எழுத என்னால் முடியாது, என்னால் மட்டுமல்ல ஆண்டவானலும் முடியாது

இந்த சமூகத்தை கவனியுங்கள், தாழ்த்தபட்ட மக்கள் மேலெழுந்துதான் வருகின்றார்கள், தலைமுறை மாறிகொண்டிருக்கின்றது அம்பேத்கர், காந்தி ஆசைபட்டது எல்லாம் இதுதான், நடக்கின்றது

இது நடக்கவேண்டும் என அப்பெரியவர்கள் கனவு கண்டது எல்லாம் அபப்டி வளர்ந்தால் இம்மக்கள் வளர்வார்கள், இந்நாட்டுக்கு பெரும் உதவியாக இருப்பார்கள் என்ற நாட்டுபற்றே அன்றி வேறல்ல,

அந்த நாட்டுபற்றும், சமூக அமைதியும்தான் தேவையே தவிர , இந்நாடு கொடுக்கும் வாய்ப்பில் அதனைத்தான் செய்யவேண்டுமே தவிர, பழம் கால சம்பவங்களை கொண்டு அரசியல் அல்ல.

அப்படி எல்லோரும் சொல்லிகொண்டிருந்தால் இந்நாடு நாடாக இருக்காது

அப்படி சிந்திப்பவர்கள் மட்டும் என்னிடம் பேசுங்கள், நான் பதிலளிக்கின்றேன்

மாறாக பிரிவினை வாதம், புலி பூச்சாண்டி, திராவிட பிரிவினை, தலித்தியம், காஷ்மீர் ராணுவ அடக்குமுறை என்று பித்ற்றுபவனெல்லாம் செல்லலாம்.

அப்படியே காஷ்மீர் மக்களுக்கு அநீதி, ராணுவ அடக்குமுறை தவறு என சொல்லி அம்மாநிலம் விடுதலை பெற்றால், தமிழகமும் அப்படி விடுதலைபெறும் என சிலர் மனப்பால் குடிக்கின்றனர், நடக்காது எனினும் கனவு, அதாவது ராணுவ அடக்குமுறை தவறாம்

சரி, அப்படி தமிழகம் தனிநாடானாலும் என் பாண்டிய நாட்டு விடுதலையினை நான் கோரினால் உடனே தமிழகம் ராணுவத்தை வைத்து எம்மை அடக்குவீர்களா மாட்டீர்களா?

ஆனால் நாங்களும் தமிழர் கட்சி நிச்சயம் கேட்கும்

அப்படியானால் என்ன? காஷ்மீரில் நடந்தால் தவறு தமிழகத்தில் நடந்தால் சரி என்பீர்களா?

அதனால் சொல்கிறேன், இம்மாதிரியானவர்கள் ஓடிவிடலாம் , அதனை விட்டு ஒழுங்காக ஈழம் எழுது என சொல்ல நீங்கள் யார்?

நீங்கள் சொல்லித்தான் நான் எழுதினேனா? அல்லது நீங்கள் சொன்னவுடன் நிறுத்திவிடுவேனா

எது பாதிக்கின்றதோ அதனைத்தான் எழுத முடியும், நீங்கள் சொல்லி அல்ல.




"நான் பெரியாரை ஒன்றும் சொன்னதில்லை, வந்தேறி என யாரையும் சொன்னதில்லை, நீங்கள் எல்லாம் கண்டதை பேசி கட்சி பெயரை கெடுத்துவிட்டீர்கள், இனி என் அனுமதியின்றி யாரும் பேசகூடாது எழுத கூடாது.மாற்று மொழிபேசும் மக்களை பரிவோடு அணுகவேண்டும்" : உள்ளாட்சி தேர்தல் குறித்து சீமான் கட்சிக்குள் உருக்கம்

இவர் என்னவெல்லாம் பேசினார், எப்படியெல்லாம் சீன் உருவாக்கினார் என்பதெல்லாம் வீடியோ முதல் எல்லா ஆதாரங்களும் உண்டு, ஆனாலும் எப்படி எல்லாம் சீறிய அக்கினி குஞ்சி இப்படி ஐஸ்கட்டியாக வோட்டுக்கு குளிர்ந்துவிட்டது பார்த்தீர்களா


குறித்து வைத்துகொள்ளுங்கள் இன்னும் கொஞ்சநாளில் பிரபாகரன் படத்தை தூர எறியும் திட்டம் இப்பொழுதே தெரிகின்றது, அதன் பின் என்ன? காங்கிரசுடன் கூட்டணிதான்

இவரை எல்லாம்............ வேண்டாம் நீங்களே முடிவு செய்துகொளுங்கள்

கபாலி : திரை விமர்சனம்



ஊரில் பொதுவிருந்து நடக்கும்பொழுது சாப்பாடு எப்படி இருந்தாலும் பந்தியில் அமரவேண்டும் என்பார்கள், அப்படி கபாலி பார்த்தாகிவிட்டது

மலேசிய காப்பியில் பல இடங்களில் கத்தரி விளையாடி இருக்கின்றது, சகட்டு மேனிக்கு வெட்டி தள்ளி இருக்கின்றார்கள், காட்சிகளை பாதிக்கின்றது, அந்த காட்சிகளை அப்படித்தான் செய்வார்கள் எதிர்பார்த்ததுதான்.

ஆனால் எதிர்பாரா விஷயம் மலேசிய சீனர்களை சடையன் என கொச்சைபடுத்துவது( அந்நாளைய சீனர்கள் சடைமுடி வளர்ப்பார்களாம்) சர்ச்சை வருகின்றது, இனி சீன படங்களில் தமிழரை கோவணம் என சொல்வ்வார்கள், பக்கத்து வீட்டு சீன அங்கிள் அப்படி படம் வந்தால் நிச்சயம் சொல்வார், ஆனால் இனி வரும்.

Stanley Rajan's photo.

அந்த கபாலி பட விமானம் மீது யாரும் கலர் பாமாயில் அடிக்க்காத வரை ரஜினிக்கு அசிங்கமில்லை, அப்படியான சர்ச்சை அது. தவறு

படம் இயக்குநர் விருப்பபடி அமைந்திருக்கின்றது, ரஜினிக்கு வயதாகிவிட்டதால் மெதுவாக நடக்கிறார், மெதுவாக துப்பாக்கி தூக்குகின்றார் எல்லாமே மெதுவாக, அப்படியே நமக்கும் மெதுவாக தூக்கம்

சில விஷயங்களில் எரிச்சல் வருகின்றது, உதாரணம் கிஷோர் ரஜினியினை திடீரென நீ ஆண்ட பரம்பரையா, சொந்தமாக நிலம் உண்டா? சோற்றுக்கு அலைவன் தானேநீ என்கிறார்

கதைபடி இருவருமே இந்திய தமிழக வம்சாவளி, அப்படி இருவருமே அடித்தட்டு, இருவருமே வந்தேறிகள், இருவரின் வம்சமுமே தமிழக்த்தில் புறக்கணிக்கபட்டு மலேசியா வந்து உழைத்துகொடுத்த‌ அடிமை வர்க்கம், இதில் அவர் இவரை ஆண்ட வம்சமா என்கிறார் கொடுமை

மலேசியா ஒரு குடியேற்ற நாடு, ஆண்ட பரம்பரை எனும் தகுதி பிரிட்டன் மகாராணியினை போன்றவர்கள் சொல்லவேண்டியது, அந்த கதையில் ஒரு தமிழன் இன்னொரு தமிழனை சொல்கின்றானாம், கால கொடுமை அய்யா

சம்பந்தமில்லா வசனம் இது, நான் தமிழ்பற்றுள்ளவன் அதற்காக தென்கொரியாவில் போய் தமிழ் வாழ்க, தமிழ்தாய் போற்றுக, தொல்காப்பியம் தெரியுமா? மொழிப்போர் தெரியுமா என்றால் எப்படி?

அப்படித்தான் சம்பந்தமில்லாத தன் அடியாழத்தின் சொற்களை பேசிக்கொண்டிருக்கின்றார் இயக்குநர்

அப்படித்தான் இம்மாதிரியான ஆண்ட பரம்பரை அழிச்சாட்டிய வசன இம்சைகள், மலேசிய தமிழர்களை பல வகைகளாக பிரிக்கலாம், முதல் பணக்காரர் தமிழர், பன்னாட்டு நிறுவணங்களில் பெரும் பொறுப்பு தமிழர், தமிழ் நீதிபதி, தமிழ் காவல்துறை அதிகாரி, தமிழின அமைச்சர்கள் என பெரும் வாய்ப்பு கொடுக்கும் நாடு, உலகில் எந்தநாட்டில் இது சாத்தியம்? ஒரு நாட்டிலும் சாத்தியமே இல்லை.

அந்த பல வகையிலும், அதில் ஒரு பிரிவினை மட்டும் எடுத்து பேசுகின்றாராம், இம்மாதிரியான போதை குழப்பம் எல்லா வசதியான நாடுகளிலும் உண்டு, அமெரிக்காவில் தென் அமெரிக்க வம்சாவழி, ஐரொப்பாவில் சில குடியேறிய வம்சங்களிடமும் இந்த கொடுரம் உண்டு

ரஞ்சித் தலித் புரட்சி,போராளி என பல கொள்கை இருக்கலாம், ஆனால் பட கடைசியில் சில மாணவர்கள் ரஜினியிடம் கேட்கின்றார்கள், நல்ல மதிப்பெண் எடுத்த்தாலும் எதிர்காலமில்லை என மறைமுகமாக சிலவற்றை சொல்கின்றார்கள்,

தமிழகத்தில் என்ன அப்படியா நிலை? தாழ்த்தபட்ட மாணவன் கோட்டா அடிப்படையில் எளிதாக மேலே தாவ முடிகின்றது, வேலையினை பெற முடிகின்றது. இந்திய யதார்த்தம் அப்படி என்றால், உலகம் முழுக்க அப்படித்தான் இருக்கவேண்டுமென்றால் எப்படி?

ஆக ரஞ்சித் சொல்வது படி பார்த்தால் இந்தியாவில் ஒரு பிராமண மாணவ‌ன் தானே அப்படி அழவேண்டும், அப்படியானால் யார் புலம்பவேண்டும்? யார் போர்கொடி தூக்கி புரட்சி, ஒடுக்கபட்டொம், தாழ்த்தபடுகின்றொம் என பரணிபாட வேண்டும்? யாரை அடக்கிகொண்டிகொண்டிருக்கின்றோம்? அந்த பிராமண மாணவர்களுக்கு எந்த சுந்தரேசன் வருவான்?

மலேசியாவில் ஒரு நியாயம் தமிழகத்தில் ஒருநியாயமா?

மலேசியாவில் சிலை வைக்க அனுமதிக்கபட்ட இந்தியர்கள் காந்தியும், விவேகானந்தரும். ஆனால் படத்தில் அம்பேத்கர் தான் வருகின்றார், அதனையாவது கடக்கலாம், சே குவேரா படமும் வருகின்றது, கம்யூனிஸ்ட்களை ஒரு காலத்தில் விரட்டி ஒடுக்கிய மலேசியாவில் சே குவேரா படமாம், கொஞ்சம் நிதானம் வேண்டாமா?

காந்தி கோட்டினை கழற்றியதும், அம்பேத்கர் கோட் மாட்டியதும் அரசியலாம், இதனை விட என்ன அபத்தம் சொல்லமுடியும்

காந்தி கோட் மாட்டினார், வாதாடினார். இனி வெள்ளையன் கோட்டுக்கு போகமாட்டேன் எனும்பொழுது கழற்றினார், மதுரை மக்களை கண்டதும் மேலாடை அணியமாட்டேன் என்றார், இது ஒரு சுதந்திர மனப்பான்மையே அன்றி என்ன அரசியல்?

அம்பேத்கர் லண்டனுக்கு படிக்க சென்றவர், சட்டம் படித்தால் கோட் மாட்டித்தான் ஆகவேண்டும் அதிலென்ன அரசியல்? அப்படியானால் இன்று லட்சகணக்கான வக்கீல்கள் இருக்கின்றார்கள் எல்லாம் அரசியலா?

அப்படியானால் நேதாஜி கலெக்டர் கோட்டை கழற்றி ராணுவ யூனிபார்ம் மாட்டியது என்ன அரசியலா? வஉசி செக்கிழுத்தது என்ன வருமான வரிதுறையினை ஏமாற்றிய அரசியலா? அர்த்தம் வேண்டாமா?

கங்கை கரையிலே சாமியார் வளர்க்கும் தாடியும் , பெரியார் வளர்த்த தாடியும் பக்தி என்றால் விட்டுவிட முடியுமா? அப்படி ஏதொ புலம்பி இருக்கின்றார். குதிரைக்கு கடிவாளம் போல ஒரே பார்வை, என்ன கெட்டுவிட்ட்து தானு வீட்டு காசுதானே, அவருக்கென்ன? உலகெல்லாம் புரட்சி செய்யமுயன்றிருக்கின்றார்

அபத்தமான காட்சி உண்டென்றால் சீனனிடம் ரஜினி நான்கொட் போட்டால் உனக்கு பிடிக்கல இல்ல, போடுவேண்டா என கத்துவது

அடிப்படையில் தமிழரும் சீனரும் உழைக்க வந்தவர்கள், இருவருக்குமே கோட் சூட் தெரியாது, அதுவும் தமிழர்கள் செய்ய தயங்கிய அடிமட்ட தொழிலாலான் மலம் அள்ளும் தொழில் கூட அக்காலத்தில் செய்த இனம் அது, சுரங்க தொழில் முழுக்க அவர்கள்தான்

இன்று அந்த தலைமுறை உழைப்பில் உயர்ந்திருக்கலாம், கடும் உழைப்பாளிகள், உழைக்கின்றார்கள் வாழ்கின்றார்கள், ஆனால் ஆதிகாலத்தில் அவர்கள் நிலை மகா மோசம், தமிழரை விட மோசம்

அவர்களிடம்தான் சென்று நான் கோட் போட்டது உனக்கு பிடிக்கலல்ல என்றால் எப்படி இருக்கும்?

உதாரணத்திற்கு நமது ஊரில் மீசை முறுக்கும் ஒருவன் நரிகுறவன் முன்சென்று "நான் மீசை முறுக்குவது பொறுக்கல இல்ல, முறுக்குவேண்டா பொறுக்கலண்ணா சாவுடா..." என்றால் எப்படி இருக்கும்?

அதே காட்சிதான், விவரம் புரிந்தால் அதே காமெடிதான், இது போதாதா? பிறகு ஏன் வீணாக காமெடி காட்சிகள்

படத்தின் பெரும் கொடுமை பிண்ணணி இசைதான், இந்திய பெருந்தலைவர்கள் இறந்தால் ஆகாசவாணியில் ஒலிபரப்பாகும் அமரர் இசை போலவே பெரும் அழுகை ராகம்

அந்த இடத்தில் நாயகனை தூக்கி நிறுத்திய இளையராஜா நினைவுக்கு வந்தார், என்ன அந்த‌ பஞ்ச் படமோ, அந்த‌ அரசியல் படமோ ஆனாலும் அவர் ஏன் தவிர்க்கபட்டார் என சிந்தனை செல்லத்தான் செய்தது,

அது வேறு சினிமா அரசியலாக இருக்கலாம்

ஆனால் ஒன்று மட்டும் உண்மை, இயக்குநர் ரஜினிக்கு கொடுத்திருப்பது மிக சிறிய சுதந்திரம், அந்த சைக்கிள் கேப்பில் ஸ்டைலாக விஸ்வரூபமாக நிற்கிறார் ரஜினி
காந்த், படத்தின் எல்லா இம்சைகளும் அவர் ஸ்டைலிலே மறைந்துவிடுகின்றது, வியாபித்து நிற்கிறார் அவர்

அதுதான் ரஜினிகாந்த், நாள் என்ன ஆனாலும் தங்கம் ஜொலித்துகொண்டேதான் இருக்கும், ரஜினி அப்படித்தான்










Friday, July 22, 2016

ராணுவம் இல்லா ஈழத்தில் மொத்தமும் சாதி சண்டை போட்டு அழிவதற்கா?





யாழ்பாணத்தில் ஆடிமாத திருவிழாக்கள் பிரசித்திபெற்றவை, என்ன இருந்தாலும் தமிழர் அல்லவா? கூடவே படித்த தமிழர்கள் வேறு அதனால் தமிழகத்தை விட சாதிகொடுமை அதிகம்..

ஒரு கோயிலில் தமிழக கண்ட தேவி போல சர்ச்சை, தேரிழுப்பதில் கலவரம் ஈழத்து டாக்டர் கிருஷ்ணசாமி என‌ யாரும் உண்டா இல்லையா என தெரியாது , ஆனால் வருட கணக்கில் நிறுத்தவில்லை, உடனே இழுத்தாக வேண்டுமாம், ஆனால் யார் இழுக்கவேண்டும் என்பதில் அடிதடி. காரணம் சாதி

சிங்கள அரசு நடவடிக்கை ஏதும் எடுத்தால் என்ன ஆகும்? ஐயகோ தமிழரை கொல்கிறார் பாரீர், என சைமனும் தி.முருகனும் பொங்குவார்கள் அல்லவா, அதனால் சிங்கள அரசு இப்படி யோசித்து, நாங்களே தேர் இழுப்போம் என்றது


சிங்கள ராணுவத்தார் ஆகம விதிப்படி சட்டை இல்லாமல் தேர் இழுத்திருக்கின்றனர், திருவிழா அமைதியாக நடந்திருக்கின்றது

முன்னமே நல்லூர் கந்தசாமி ஆலய திருவிழாவில் வானிலிருந்து ராணுவ ஹெலிகாப்டர்கள் மலர் தூவிய நிகழ்வும் நடந்தது, இதெல்லாம் இங்கு பேசமாட்டார்கள், அவர்கள் அமைதியானால் மகிழ்வானால் ஒற்றுமையானால் இவர்களுக்கு பிடிக்காது.

இந்த சாதி பிரச்சினைதான் ஈழபோராளிகுழுக்கள் தங்களுக்குள் மோதி அழிய பெரும் காரணம் என்பார்கள் அனுபவஸ்தர்கள்.

ஈழம் அமைய வேண்டுமானால் போராளி வேண்டாம், அமைதிபடையினை அனுப்பாதீர்கள், துப்பாக்கிகள் தேவையில்லை

Stanley Rajan's photo.

 

மாறாக பெரியார் கொள்கைகளை அனுப்புங்கள், அவர் போதனையினை பரப்புங்கள் என்ற ஒரு சிந்தனையாளனின் குரல் மறுபடியும் காதோரம் ஒலிக்கின்றது

அங்கிள் சைமன், திருமுருகன் காந்தி எல்லாம் தாங்களாக மன்னிப்பு கேட்டு ஓடிவிடுவது நல்லது, இல்லை என்றால் உங்கள் சாதியினை தெரிந்துகொண்டு அவர்களாகவே உங்களை ஓட அடிப்பார்கள்

அதனால் இருவரும் உங்கள் பரிவார அமைப்புகளுடன் கொழும்பு சென்று அங்கு இருக்கும் அமைதிபடை வீரர்களுக்கான நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திவிட்டு ஓடிவிடுவது நல்லது, இல்லையேல் இன்னும் கிழிக்கபடுவீர்கள்

இதுதான் ஈழத்தில் சிங்களபடை நடத்தும் அட்டூழியமா, இதற்குத்தான் சிங்கள ராணுவத்தை யாழ்பாணத்தில் இருந்து வெளியேற சொல்கின்றீர்களா? எதற்கு

ராணுவம் இல்லா ஈழத்தில் மொத்தமும் சாதி சண்டை போட்டு அழிவதற்கா?????

ஈழம் பாய்ஸ், பெரியாரையா தமிழனில்லை என சாடினீர்கள்? பாருங்கள் அவர்தான் இன்றும் என்றும் ஈழத்தின் முதல் தேவை