Sunday, June 25, 2017

ரமலான் பண்டிகை : நிச்சயம் ஒரு உலக‌ பெருநாள்




Image may contain: one or more people, sky and text


உலகம் கொண்டாடும் சில விழாக்களில் ரமலான் பண்டிகையும் ஒன்று, நிச்சயம் இது உலக‌
பெருநாள்


இந்நாளை கொண்டாடும் எல்லா இஸ்லாமிய நண்பர்களுக்கும் நல்வாழ்த்துக்களை தெரிவிப்போம்





நோன்பு பெருநாள் என்பது இஸ்லாமியர் கொண்டாடும் நாளாக இருந்தாலும் எல்லோரும் அவர்களோடு செர்ந்து கொண்டாடலாம், அவர்களும் அதனை உள்ளன்போடு வரவேற்கின்றார்கள்,

வல்ல இறைவன் எல்லோரையும் ஆசீர்வதிக்கட்டும், இவ்வுலகிற்கு சாந்தமும் அமைதியும் கிடைக்கட்டும்

இந்த விடுமுறை காலத்தில் பாதுகாப்பான பயணமும், ஆரோகியமான உணவும் மகா முக்கியமானது, அதுதான் கொண்டாட்டங்களின் அடிப்படை

நண்பர்கள் அதனை பின்பற்றி மிக உற்சாகமாக மிக மகிழ்வாக தங்கள் உறவுகளுடன் கூடி ரமலானை கொண்டாடட்டும்

எல்லோருக்கும் அய் துல் பித்ரி நல்வாழ்த்துக்கள்

ஆயிரம் நடிகை வந்தாலும் குஷ்பூவிற்கு ஈடாகாது, ஐந்தாயிரம் வகை பிரியாணி இருந்தாலும் இஸ்லாமிய மக்கள் கொடுக்கும் பிரியாணிக்கு ஈடாகாது

அவர்கள் நன்றாக சமைப்பார்கள் என்பதை விட, அவர்களின் வெள்ளந்தியான அன்பு அதற்கு கூடுதல் சுவை கொடுக்கும்.

என்னதான் அரசியல் எதிரிகள் என்றாலும் சிலர் கலவரம் என்று வந்தால் குறி வைப்பது அவர்களின் பிரியாணி அண்டாவினைத்தான்.

அதன் சிறப்பு அப்படி

இந்த முகநூலில் ஏராள இஸ்லாமிய நண்பர்கள் இருந்தாலும், இன்று நமக்கு பிரியாணி கொடுக்க முடியாது

ஒரு நாள் அவர்கள் வீடுகளுக்கே சென்று மணக்க மணக்க , வயிறு கனக்க கனக்க உண்டுவிட வேண்டியதுதான்

மறுபடியும் அனைவருக்கும் நோன்பு பெருநாள் வாழ்த்துக்கள்

தெரியும் பிறை எல்லோர் வாழ்விலும் வளர்பிறையினை மட்டும் கொடுக்கட்டும்













 

Saturday, June 24, 2017

அப்படி என்ன சொல்லிவிட்டார் அந்த ஜோ டி குரூஸ்??,






அப்படி என்ன சொல்லிவிட்டார் அந்த ஜோ டி குரூஸ்??,

முழுமையாக படிக்கவில்லை, மாறாக மோடியினை ஆதரித்ததற்காக வருத்தபடுகின்றேன் என அவர் சொன்னது மட்டும் பார்வைக்கு வந்தது.

அவரின் சொந்த மக்கள் கடந்துவந்த பாதையினை அறியாமல் அல்லது சொல்ல விரும்பாமல் மோடி வாழ்க, ஆர்.எஸ்.எஸ் வாழ்க என சொன்னவர் அவர்தான்.


தன் இனம் பெற்ற பல காரியங்களுக்கானவர்க்ளை மறந்து, அந்த நன்றி கடனை மறந்து, அல்லது மறைத்து அவர் அந்த கும்பலுக்கு ஆதரவாக பேசிய பல கருத்துக்கள் கண்டனத்திற்குரியவை, நன்றி மறந்தவை.

அவரின் சமூகத்திற்கு இந்த நாட்டின் அதிகார கும்பல்கள் செய்ததை விட, போர்த்துகீசியரும், டச்சுகாரரும், பிரெஞ்சுக்காரரும், பிரிட்டாணியரும் செய்த காரியங்கள் மிக அதிகம், அந்த உதவி கொஞ்சம் அல்ல, ஆனால் அதனையெல்லாம் மறந்தவர் அந்த ஜோ

அந்த மீணவ இனம் கடந்து வந்த பாதையினை அவர் சரியாக படித்திருந்தாலே அந்த கும்பலுக்கு பல்லக்கு தூக்கியிருக்க மாட்டார்

இப்பொழுது அதற்கு வருத்தபடுகின்றாராம், முழு வரலாறையும் முழுதும் படிக்கட்டும் கண்ணீர் விடும் அளவிற்கு வருத்தபடுவார்

அவர் வருத்தபடட்டும்..

சொந்த வரலாறே சரியாக தெரியாத அவருக்காக நாமும் வருத்தபடுவோம்




 

 



 

நீட் நுழைவுத் தேர்வு முடிவுகள் அதிர்ச்சி அளிக்கின்றன: வைகோ


நீட் நுழைவுத் தேர்வு முடிவுகள் அதிர்ச்சி அளிக்கின்றன: வைகோ


அப்படி என்ன முடிவு?? ஒரு வேளை வைகோவினை உயிரோடு மருத்துவ மாணவர்களின் பரிசோதனைக்கு முயல் எலி போல‌ உட்படுத்தலாம் என அறிவித்துவிட்டார்களோ?


அவருக்கு ஐந்தறிவு என்பது மத்திய அரசுக்கும் தெரிந்துவிட்டதோ?





தேர்தல் முடிவுகளும், நீதிமன்றமும், பல செருப்புகளும், சில‌ விமான நிலையங்களும் கொடுக்காத அதிர்ச்சியினையா நீட் தேர்வு கொடுத்துவிட்டது?



 

ராஜிவ் கொலை குற்றவாளிகளை விடுதலை செய் என ஒப்பாரி வைப்பது ஏன்?




தமிழகத்திலிருந்து மத்திய அரசுக்கு சோதனை கொடுக்கும் விஷயங்கள் பல உண்டு, அதில் ஒன்று ராஜிவ் கொலை குற்றவாளிகளை விடுதலை செய் என ஒப்பாரி வைப்பது


இதில் ஒளிந்திருக்கும் அரசியல் வேறுமாதிரியானது


அதாவது ராஜிவ் கொலை தேசிய குற்றம், இந்நாடு அதன் வீரியத்தை அப்படித்தான் பார்க்கின்றது, இவர்களை வெளியே விட்டால் வடக்கே பெரும் சிக்கல் வரும்


கோட்சே முதல் அப்சல் குரு வரை எல்லோர் தண்டனையும் கேள்விகுறியாகும், பெரும் பிரளயம் வரும், 
இதனால்தான் இதனை வைத்து மத்திய அரசோடு அடிக்கடி தமிழகம் விளையாடும், ஜெயலலிதா அந்த தந்திரத்தில் கைதேர்ந்தவர்,


இப்பொழுது யாரோ மத்திய அரசோடு மறைமுக கோரிக்கை வைக்க விரும்புகின்றார்கள், புகை கிளம்புகின்றது. இனி கோரிக்கையின் நிலவரம் பொறுத்து புகை அடங்கும்


உண்மையில் அவர்கள் மீது யாருக்கும் அனுதாபமில்லை, அக்கறையும் இல்லை, அரசியலுக்காக ஆடும் ஆட்டம்.


இப்பொழுது விவகாரம் பேரரிவாளன் விஷயத்தில் வருகின்றது, அவரின் தந்தைக்கு உடல் சரியில்லை பரோலில் விடவேண்டும் என்கின்றார்கள்


சட்டம் விட மறுக்கின்றது


பேரரிவாளன் ஒன்றும் குற்றமற்றவர் அல்ல, யாழ்பாணம் சென்று புலிகளை சந்தித்தது, இந்திய அமைதிபடைக்கு எதிரான புலிகளின் நடவடிக்கைகளுக்கு இந்தியாவில் உதவியது, சிவராசனுக்கு வயர்லெஸ் தொடர்பிற்காக‌ சக்திவாய்ந்த கார் பேட்டரி வாங்கி கொடுத்தது என ஏராள குற்றம் உண்டு


அதாவது இவர் ஒரு புலி, 100% விடுதலை புலி, அதில் சந்தேகமே இல்லை, அதுதான் சிக்கல்


ராஜிவ் கொலையில் செத்துபோன ஹரிபாபு , ஈழபுலிகளுடன் நேரடி தொடர்பு கொண்டவர் என்பதும், அவர் ராஜிவ் கொலைக்கு பின் ஈழத்தில் குடியேற இருந்ததும் அவரின் காதலி எழுதிய கடிதத்தில் தெரிகின்றது


அவரின் பங்களிப்பு போன்றதுதான் பேரரிவாளனின் பங்களிப்பும், குற்றத்திற்கு துணை சென்றவர் என்பதில் சந்தேகமில்லை


அவர் பரோலில் வரலாம், தந்தையினை சந்திக்கலாம், அல்லது அக்காலம் முழுவதும் வீட்டு காவலில் வைக்கபடலாம், சட்டத்தில் இடமிருந்தால் செய்யலாம்


அவர் குற்றவாளி இல்லை என்பதெல்லாம் பெரும் பொய், வறட்டு வாதம். ஆனால் தந்தையின் உடல்நிலை மோசமான நிலையில் தந்தையினை அவர் வந்து பார்த்து செல்ல அனுமதி கொடுக்கலாம்


இந்த பிரச்சினை ஒடி கொண்டிருக்க, அங்கிள் சைமன் தன் டிரேட் மாரக் காமெடியினை தொடங்கிவிட்டார்


7 தமிழர்களையும் பரோலில் விடவேண்டுமாம், பேரரிவாளன் தந்தையினை பார்க்க வரவேண்டும், மீதி 6 பேர் எதற்காக பரோலில் வரவேண்டும்?


கேட்டால் என்னை பார்க்க என சிரிக்காமல் சொல்வார்


7 தமிழர் என்பதே மோசடி, 3 இந்தியர் 4 இலங்கையர் என்பதுதான் சரி, 3 இந்தியர்களை பரோலில் விட சொல்லி கேட்கலாம், ஓரளவு நியாயம்


4 அந்நிய நாட்டவர்களை பரோலில் விடு என்பது எப்படி சரியாகும்? கேட்க வேண்டிய நாடு இலங்கை, அது சத்தமே இல்லை


பேரரிவாளனின் பரோல் வேறு விஷயம், அதற்காக மீதி 6 பேருக்கும் பரோல் என்பது முதுகில் சாத்தவேண்டிய விஷயம்


ஒரு விஷயம் கவனித்தீர்களா?


முன்பெல்லாம் 7 பேர் விடுதலை என காங்கிரஸ் ஆட்சியில் ஒப்பாரி வைத்தார்கள், இப்பொழுது பாஜக ஆட்சியில் 7 பேருக்கும் பரோல் என குரலை மாற்றிவிட்டார்கள்


ஏன் என்றால் அப்படித்தான், இந்த பெரும் பிரச்சினையில் காங்கிரஸ், பாஜக என இரு கட்சிகளின் நிலைப்பாடு ஒன்றுதான்


ஆனால் இவர்களுக்கு காங்கிரஸ் என்றால் பெரும் கசப்பு, பாஜக என்றால் கொஞ்சம் இனிப்பு


அதனால் விடுதலைக்கு பதிலாக பரோல் கேட்கின்றார்கள்


அங்கிள் சைமன் , பேரரிவாளனை தவிர வேறு 6 பேருக்கும் எதற்கு பரோல், யாரை வந்து சந்திப்பார்கள் உங்களை தவிர?


6 பேர் வெளிவருவதற்கு பதிலாக நீங்கள் உள்ளே சென்றால் என்ன?


பேரரிவாளனுக்கு பழ.நெடுமாறன் உட்பட பலர் பரோல் கோரிக்கை வைக்கின்றார்கள், ஒன்று செய்யலாம்


பேரரிவாளன் பரோலில் இருக்கும் வரை பிணையாக பழ.நெடுமாறனையும் அவரோடு ஒப்பாரி வைப்பவர்களையும் சிறையில் வைக்கலாம், பேரரிவாளன் திரும்பி வந்த பின் விடுவிக்கலாம்


இந்த தியாகத்தை செய்கின்றீர்களா என கேட்டால், அதன் பின் பழ.நெடுமாறன் போன்ற கும்பல் வாய் திறக்கும்??




 

 



 

டயானா தேவசேனைதான்.. ஆனால் ராணி எலிசபெத் சிவகாமி தேவி




Image may contain: 1 person, smiling


இங்கிலாந்து இளவரசி டயானவினை நாங்கள் தான் கொன்றோம், நாட்டுக்காகவும் அரச குடும்பத்திற்காகவும் கொன்றோம் ; பிரிட்டன் உளவுதுறை தலைவர்


டயானா இறந்து கிட்டதட்ட 20 வருடம் ஆகின்றது, உலக மக்களிடம் பெரும் அபிமானம் பெற்றிருந்த டயானா, இங்கிலாந்து மக்களாலும் நிரம்ப நேசிக்கபட்டார்


அவரது விபத்து ஆரம்பம் முதலே சர்ச்சை, இப்பொழுது உளவுதுறை தலைவரே அரச குடும்பத்திற்காக கொன்றதாக‌ ஒப்புகொண்டிருக்கின்றார், ஆக டயானா கொல்லபட்டிருக்கின்றார்





எவ்வளவு பெரும் அபிமானம் பெற்றவர் டயானா? ஆனால் எங்காவது இந்த விஷயம் சர்ச்சை ஏற்படுத்தியிருக்கின்றதா என்றால் இல்லை

பிரிட்டனிலும் அறவே இல்லை, ஏன்?

பிரிட்டானியருக்கு டயானா பிடிக்கும், ஆனால் அரச குடும்பத்தின் மீதான மரியாதை அதனை விட அதிகம்.

இந்த உளவுதுறை கட்டப்பா கூட இப்பொழுது மரண படுக்கையில்தான் உண்மையினை சொல்லியிருக்கின்றார், அதுவும் தன் கடமையினை செய்ததாகவே சொல்லியிருக்கின்றார்

டயானா தேவசேனைதான், ஆனால் ராணி எலிசபெத் சிவகாமி தேவி, அந்த ராஜ குடும்பத்தின் மீதான மக்கள் அபிமானம் அப்படி

எப்படியோ பிரிட்டனின் இளவரசி ஒரு எகிப்து இஸ்லாமியனை திருமணம் செய்வதை விட செத்துபோகலாம் என கொல்லபட்டிருக்கின்றார்

கவுரவ கொலை உலகில் எல்லா இடங்களிலும் நடக்கின்றது













 

அன்பானவன் அசராதவன் அடங்காதவன் (AAA) : திரை விமர்சனம்





19399467_10209468521405064_680837827157213560_n.jpg

சிம்புவின் படம் மிக மோசமான‌ இரட்டை அர்த்ததுடன் அத்து மீறி இருக்கின்றது என விமர்சனங்கள் வருகின்றன

சிம்பு படம் அப்படி இல்லாவிட்டால்தான் ஆச்சரியம், படத்தில் 4 சிம்பு வேறு

3 வேடங்களில் சிம்பு திரையிலும், டைரக்டர் ஆதிக் ரவிச்சந்திரன் எனும் இன்னொரு சிம்பு திரைக்கு பின்னாலும் உண்டு, பின் எப்படி இருக்கும், ஒரு சிம்புவே சமாளிக்க முடியாது, இதில் 3 என்றால் எப்படி?


வழக்கமான சிம்பு படம் என சொல்லிவிட்டு செல்ல வேண்டிய விஷயத்திற்கு பலர் கண்டனமும், விமர்சனமும் தெரிவித்துகொண்டிருக்கின்றார்கள்





அத்தப்பூ கோலம் போட்டு, ஊஞ்சலாட தமிழிசை ரெடி


பாஜகவின் ஜனாதிபதி வேட்பாளருக்கு எடப்பாடி, பன்னீரை தொடர்ந்து தினகரனும் ஆதரவு


இதுதான் நவீன வாமண அவதாரம், இரண்டு இலைக்காக இந்த அதிமுக 3 அடி நிலம் கொடுப்பதாக வாக்களித்தது, உடனே விஸ்வரூபமெடுத்த பாஜக ஒரு காலால் பன்னீர் தலையினையும், இன்னொரு காலால் எடப்பாடியினையும் அழுத்தியது


மூன்றாம் அடியினை எங்கே வைப்பது என பாஜக கேட்டபொழுது ஓடிவந்து தலைகொடுத்திருக்கின்றார் தினகரன்.





இனி என்ன? அப்படியே அதிமுகவினை பாதாளத்திற்கு அனுப்பிவிட்டு வோணம் கொண்டாட ஆரம்பிப்பார்கள்

அத்தப்பூ கோலம் போட்டு, ஊஞ்சலாட தமிழிசை ரெடி