Showing posts with label அடால்ப் ஈச்மென் Vs மொசாத். Show all posts
Showing posts with label அடால்ப் ஈச்மென் Vs மொசாத். Show all posts

Thursday, July 20, 2017

அடால்ப் ஈச்மென் Vs மொசாத் : 05





Image may contain: one or more people and people sittingபெரும் ஆலோசனையில் ஈடுபட்டிருந்தது குழு. பட்சி சிக்கியாயிற்று இனி உயிரோடு இஸ்ரேல் கொண்டுசெல்லவேண்டும்.


பக்கத்து நாடு என்றால் பொதுவாக தொட்டி ஆட்டோவிலே கடத்துவார்கள்.


ஐரோப்பா என்றால் ஏதாவது ஒரு மீன்பாடி வண்டி அல்லது மினிலாரி அல்லது ஆம்புலன்ஸ்லில் கொண்டு சென்று ஆளில்லா கடல்கரை வழியாக படகில் நடுகடலில் நிற்கும் இஸ்ரேல் படகினை அடைவார்கள், நடுக்கடலில் எந்த குடியுரிமை சோதனையையும் கடல்மீன்கள் செய்யாது.


ஐரோப்பா மற்றும் மேற்காசியாவில் இப்படித்தான் செய்வார்கள், குடியுரிமை சோதனை பாஸ்போர்ட் எல்லாம் அவர்களுக்கு தேவையே இல்லை.


ஆனால் அர்ஜெண்டினா மிக மிக தொலைவான நாடு, இவை ஏதும் சாத்தியமில்லை , விமான பயணமே சாத்தியம், ஆக குடியிரிமை சோதனையினை ஈச்மென் கடந்தாக வேண்டும்.


ஆனால் ஈச்மென் விடுவாரா? விமான நிலைய வாசலிலே என்னை கடத்துகின்றார்கள், நான் நாசி என சொல்லிவிடுவார். அதற்காக அவரை வாயினை பொத்தியும் கொண்டு செல்லமுடியாது, இமிகிரேஷனில் சிக்கல்.


சரக்குக்கு விமானத்தில் புகையிலை பெட்டி இடையே போட்டும் அனுப்பமுடியாது.


விஷயம் தெரிந்தால் எந்த நாட்டு எல்லையிலாவது சிக்கிவிடும் அபாயம் உண்டு, அப்படியே கப்பலில் தூக்கிபோட்டாலும் நெடுநாள் பயணம் சரிவராது.


இது மிக மிக அவசரமாக கொண்டுசெல்லபடவெண்டிய விஷயம்.


சனியனை உயிரோடு வேறுகொண்டு செல்லவேண்டும் என பென் குரியன் சொல்லிவிட்டார் அதுதான் மகா முக்கியம், இல்லையென்றால் இப்பொழுதே தீர்த்துவிட்டு செல்லலாம்.Image may contain: one or more people, shoes and indoor


ஆனால் இவன் எல்லா யூதரும் பார்க்க பார்க்கத்தான் சாகவேண்டும்.


ஆக இவர் குடியுரிமை சோதனையினை கடந்து ஆகவேண்டும் ஆனால் பேசகூடாது, இதுதான் பிரச்சினை.


சரி ஒரு மனிதன் சுயநினைவில் இருந்தால்தானே பேசுவான், சுயநினைவு அற்ற நிலை என்றால் எப்படி பேசுவான், சரி பேசாதவனாக்கி விடலாம்.


வசூல்ராஜா படத்தில் வரும் சப்ஜெக்ட் ஆக்கிவிட்டால் சிக்கலே இல்லை. ஆக்கிவிடலாம்.


நாடு இப்பொழுது கொண்டாட்டத்தில் இருக்கின்றது, விமான நிலையம் மூல்ம் செல்லலாம், ஈச்மெனுக்கு உடனடியாக பாஸ்போர்ட் வேண்டும், அர்ஜெண்டினா பாஸ்போர்ட்டா?


இல்லை இஸ்ரேலிய பாஸ்போர்ட் அப்பொழுதுதான் அதிக சோதனை இருக்காது, ஓடுங்கள் யூதர்களே என விரட்டுவார்கள்.


எப்படி இஸ்ரேலிய பாஸ்போர்ட் பெறுவது?


Image may contain: 2 people, people sitting and indoorஅர்ஜெண்டினா சுதந்திர தின கொண்டாடத்திற்கு ஒரு இஸ்ரேல் குழு அவர்கள் விமானத்தில் வந்திருந்தது.


அவர்களில் ஒரு விமான சிப்பந்தியின் பாஸ்போர்ட் ஈச்மெனுக்காக மாற்றபட்டது, அந்த ஒரிஜினல் நபர் வேறு பாஸ்போர்ட்டில் பறந்துவிட்டார்.


எல்லா நாட்டு பாஸ்போர்ட்டுகளை தயாரிப்பதில் அவர்கள் பாணியே வேறு


இன்றும் பாருங்கள், மொசாத் நடத்தும் ஆப்பரஷேன்களில் ஐரோப்பிய நாடு, ஆஸ்திரேலியா மற்றும் நியுசிலாந்து என பலநாட்டு பாஸ்போர்ட்டுகள் கைபற்றபடும்.


ஆனால் பாஸ்போர்ட் சம்பந்தபட்ட‌ நபர் அந்நாட்டில் வான்கோழி சாப்பிட்டுகொண்டிருப்பார், அவரின் பெயர் பாஸ்போட்டில் மொசாத் விளையாடிருக்கும்.


எல்லா நாட்டு பாஸ்போர்ட்டையும் அச்சு பிசகாமல் தயாரிப்பதில் மொசாத் பிஎச்டி முடித்திருந்தது.


கூடுதல் வசதியாக‌ புண்ணிய பூமி ஜெருசலேமிற்கு செல்லும் நபர்கள் மிக அதிகம்.


'உங்கள் மேல் சந்தேகமாக இருக்கின்றது, இது வேறு ரத்த பூமி கொஞ்சம் ஒத்துழையுங்கள்" என பாஸ்போர்ட்டை கொண்டு சென்று 10 நிமிடத்தில் போலி தயாரித்து விடுவார்கள்.


பின்னர் "நீங்கள் ரொம்ப தூய்மையானவர்" என சொல்லி புன்னகையுடன் கொடுத்துவிடுவார்கள் தேவை படும்பொழுது எடுத்து களமிறங்குவார்கள்.


அப்படி ஈச்மெனுக்கும் பாஸ்போர்ட் தயார் செய்யபட்டு விட்டது, இனி அவர் இஸ்ரேலியர் சிக்கல் இல்லை.


ஆனால் அவர் விமான நிலையத்தில் வாய் பேசகூடாது தன்னை மறந்த நிலையில் இருக்கவேண்டும் அல்லவா?


அடுத்த கட்டமாக ஈச்மென் முன்னால் ஒரு விஸ்கி பாட்டில் வைக்கபட்டது.


தன் முன்னால் இருந்த விஸ்கி பாட்டிலை பார்த்தபடி இருந்தார் ஈச்மென், முழுவதையும் குடிக்குமாறு அன்போடு கேட்டுகொள்ளபட்டார்.


விட்டுத்தான் விஸ்கி கொடுக்கபட்டது, அவர் மல்லாக்கவிழுந்ததும் ஒரு ஊசி போடபட்டது, அது ஒரு வகையான நினைவு மயக்கும் மருந்து.


Image may contain: 2 peopleஒரு காலத்தில் ஹிட்லர் பல வகையான மருந்துகளை தயாரித்து யூதர்மேல் ஊசிகுத்தி பரிசோதித்தார்.


அப்பொழுது உதித்த மருந்தில் ஒரு வகை அது, பரிதாபம் அல்லது பழிவாங்கல் என்னவென்றால் அன்று அந்த கொடுமையை யூதர்மேல் நிகழ்த்திய மேற்பார்வையாளர் சாட்சாத் ஈச்மென், இன்று அவருக்கே குத்தியாகிவிட்டது.


பின்னர் விமான சிப்பந்தி உடை ஈச்மெனுக்கு மாட்டபட்டது.


அவர் இஸ்ரேலிய விமான சிப்பந்தி என்பதுபோல் எல்லாம் தயார் செய்தார்கள், ஒரு காலத்தில் ஹிடலரின் நாசி தொப்பி அணிந்த கம்பீர ஈச்மெனுக்கு.


இஸ்ரேலிய சின்னத்துடன் தொப்பி அண்விக்கபட்டது, சுயநினைவு இல்லையென்றால் ஈச்மென் தற்கொலை செய்திருப்பார், எப்படிபட்ட அவமானம்?


ஈச்மெனின் சட்டை மேலும் விஸ்கி தெளிக்கபட்டது.அப்படியே மயக்கநிலையில் சக்கர நாற்காலிக்கு மாற்றபட்டு, விமான நிலையம் கொண்டு சென்றார்கள்.


மொத்தமாக சென்றால் சிக்கல் வந்துவிடாதா? அதனால் மூவர் மட்டும் சென்றனர், மற்ற 9 பேரும் வேறு வேறு நாடுகளுக்கு செல்லும் கவுண்டர்களில் தனி தனியாக நின்று கண்காணித்தனர்.


அர்ஜெண்டினா குடியுரிமை அதிகாரி முன் சொன்னார்கள் , "இவர் எங்கள் நாட்டுக்காரர் ஆனால் பெரும் குடிகாரர்தான். ஆனால் உங்கள் நாட்டு சரக்கு ம்ம் சும்மா சொல்லகூடாது.


எத்தனையோ நாட்டு சரக்குகளை 10 பாட்டில் குடித்துவிட்டு அசால்டாக நின்றவர் உங்கள்நாட்டு சரக்கில் கால் பாட்டிலிலே சரிந்துவிட்டார், இங்கேயே விட்டு செல்ல முடியுமா?


அங்கே கொண்டு குடும்பத்தாரிடம் போடும் பொறுப்பு எமக்கு இருக்கின்றது, இந்த எருமையினை கொண்டு மதுஅடிமைகள் மறுவாழ்வு நிலையத்தில் சேர்க்க போகின்றோம்" என்றனர்.


அர்ஜெண்டினா இமிகிரேஷன் அதிகாரிகள் அவரை பரிதாபமாக பார்த்தனர், அவர்தான் வசூல்ராஜா ஆனநத்சார் நிலைக்கு சென்றுவிட்டாரே? எங்கு கத்துவது, மொசாத் உறுப்பினர்கள் வேறு அவரை திட்டி முணுமுணுத்தனர்


தங்கள் நாட்டு டாஸ்மாக் சரக்கினை மனதிற்குள் பெருமையாக நினைத்துகொண்டே அவரை பரிதாபமாய் பார்த்தபடி கிளியரன்ஸ் செய்து உள்ளே அனுப்பினார்கள்.


இன்னொன்று அர்ஜெண்டினா விமான நிலையம் மிக மிக பரபரப்பாய் இருந்ததும் ஒரு காரணம். அவரை இஸ்ரேலி விமானத்தில் ஏற்றினார்கள் மொசாத் குழுவினர்.


விமானம் பறந்தது, ஜெருசலேம் பாராளுமன்றத்தில் ஈச்மெனை தாங்கள் கைது செய்திருப்பதாக பிரதமர் பென் குரியன் அறிவித்தார்.


ஈச்மெனுக்கு மறுபடியும் ஒரு ஊசி, "இவ்வளவு நேரம் நான் எங்கிருந்தேன், இது எந்த இடம்" என கேட்டார். இது இஸ்ரேல் என அறிவிக்கபட்டது.


அப்பொழுதுதான் தான் யூதர்களால் கடத்தபட்ட விஷயமே அவருக்கு புரிந்தது.


இஸ்ரேல் எதிர்பார்த்தபடியே அர்ஜெண்டினா பயங்கர ரியாக்ஷன் காட்டியது, சர்வதேச மன்றத்தில் முறையிட்டு அலறியது, அவரை தங்களிடம் ஒப்படைக்கும்படியும் தாங்கள் விசாரணை செய்வோம் எனவும் அடம்பிடித்து பார்த்தது.


ஆனால் கடும் பாதுகாப்பில் குண்டு துளைக்காத கூண்டில் வைத்து ஈச்மெனிடம் விசாரணை நடந்தது. எமபாதக ஈச்மென் எல்லாம் அரசு உத்தரவு நான் பணியாளன் என சாதித்தார்.


ஆனால் அவர் செய்த அநியாயங்களையும் கொலைகளையும் அதன் கொடூர முறையினையும் அவர் சொல்ல சொல்ல உலகம் கண்ணீர் விட்டது.


எப்படி எல்லாம் யூதர்களை கொன்றோம் என அவர் சொல்ல, சொல்ல இஸ்ரேல் அழுதது, அதனை உலகிற்கெல்லாம் சொல்லி யூதரும் அழுதார்கள்


பின்னர் அவரை தூக்கிலேற்றி, எரித்து சாம்பலை கடலில் வீசினார்கள், எவ்வளவு காலம் ஆனாலும் தங்கள் மேல் கைவைத்த யாரும் தப்பமாட்ட்டார்கள் என உலகிற்கு காட்டியது இஸ்ரேல்.


அசந்து நின்றது உலகம், சில நாடுகள் மூச்சுவிட கூட மறந்தன, எப்படிபட்ட வன்மம் இஸ்ரேலின் மனதில் இருக்கின்றது என்பதை உலகம் உணர்ந்தது.


மொசாத் உலகினை அசரவைத்த சம்பங்களில் இதுதான் முதன்மையானது, அந்த குழுவின் தலைவர் ரபி எய்டனிடம் வெற்றிக்கு வாழ்த்து சொன்னார்கள்.


எய்டன் சொன்னார் இது பெரும் தோல்வி, ஈச்மென்னுடன் இன்னும் இருவரை கண்டுபிடித்து கடத்தும் திட்டம் இருந்தது, ஆனால் அது தோல்வியில் முடிந்தது என்றார்.


அந்த இருவர் யாரென்றால் ஹிட்லரும் அவரின் இன்னொரு கூட்டாளியும்.


ஆம் ஹிட்லர் சாவதை யாரும் கண்ணால் பார்க்கவில்லை, சோவியத் படைகள் ஹிட்லர் மாளிகையினுள் நுழையும் பொழுது இரு சடலம் எரிந்துகொண்டிருந்தது. ஒன்று ஈவாபிரவுண் இன்னொன்று ஹிட்லர் என சொல்லி எலும்பு மண்டையோட்டை எடுத்து சென்றார்கள் ரஷ்யர்கள்


ஆக ஹிட்லரை அடையாளம் கண்டு கொன்றவர் யாருமில்லை அதனால் ஹிட்லர் தப்பினான், அவன் அர்ஜெண்டினாவில் இருந்தான் என மனமார நம்பியது இஸ்ரேல்


அதற்காக சிக்கிய ஈச்மெனை விட்டுவிடவும் மனமில்லை, தூக்கிவிட்டார்கள். ஈச்மென்னை பிடித்தபின் ஹிட்லர் எவ்வளவு உஷார் ஆகியிருப்பான் என உணர்ந்தது மொசாத்


அதனைத்தான் பெரும் தோல்வி என சொன்னார் ரபி எய்டன்


Image may contain: 1 personஹிட்லரும் மொசாத்தும் சளைத்தவர்கள் அல்ல, ஆனாலும் இறுதிவரை ஹிட்லரை நெருங்கவே முடியவில்லை மர்மாகவே முடிந்தான் ஹிட்லர், இது அவனின் வெற்றி


ஆனால் தன்னால் ஓட ஓட அடிபட்ட இனம் தனிநாடு அடைந்து பெரும் சாகசங்களை படைத்து கொண்டிருப்பதை பார்த்துகொண்டே, தன்னால் உருவாக்கபட்ட ஜெர்மனி கிழக்கு மேற்கு என பிரிக்கபட்டும்.


தன் ராக்கெட் விஞ்ஞானிகளின் உழைப்பால் அமெரிக்காவும் ரஷ்யாவும் விண்வெளி ஆராய்ச்சியில் உச்சம் தொடுவதை எங்கிருந்தோ பார்த்துகொண்டேதான் செத்தான் ஹிட்லர் என்பது இன்றும் இஸ்ரேலியர் நம்பிக்கை.


அதாவது அவன் பூண்டோடு அழிக்க நினைத்த எம் இனம், அவன் மிக வெறுத்து ரசித்து சித்திரவதை செய்து கொன்ற எம் இனம்.


உலகில் அவன் கண்முன்னாலே வாழ்வாங்கு வாழ்கின்றது, உலக அரங்கில் தலை நிமிர்ந்து நிற்கின்றது.


இதனை பார்த்துகொண்டே அவன் அனுதினமும் சாகட்டும், அதனை விட என்ன பெரும் தண்டனை அவனுக்கு கொடுக்க முடியும்? என சாந்தியடைந்தது இஸ்ரேல்.


இப்படி விமான பயணிகளை கடத்தியது அல்லது மனிதனை கடத்தியது. இது போக ஒரு விமானத்தையே மொசாத் அட்டகாசமாக கடத்திய கதை உண்டு நேரம் கிடைக்கும் பொழுது பார்க்கலாம்.


சிலர் அந்த மியூனிச் சம்பவத்தில் இஸ்ரேல் எப்படி பழிவாங்கிற்று என அறிய ஆவல் என்றார்கள், எழுதலாம்


ஆனால் அதற்கு முன் குஷ்பூ தொடருக்கு நீங்கள் ஆதரவளித்தே தீரவேண்டும்.







 

முற்றும்






 


 


Wednesday, July 19, 2017

அடால்ப் ஈச்மென் Vs மொசாத் : 04



Image may contain: one or more people and people sittingஎமபாதகனும் ஹிட்லரிடம் பயிற்சிபெற்றவருமான ஈச்மெனை கண்காணிப்பது சுலபமான விஷயம் அல்ல.


12 பேர் கொண்ட மொசாத் குழு எப்படி ஈச்மெனை அவருக்கு சந்தேகம் வராத அளவு கண்காணித்தது என்பது இன்றுவரை புரியவில்லை.


12 பேர்தான் சுற்றி சுற்றி வந்திருக்கவேண்டும். அதுவோ புறநகர் பகுதி, அவ்வளவாக மக்கள் நடமாடாத பகுதி.


ஒரு காக்கா பறந்தாலே தனியாக தெரியும், இதில் 8 மாதம் எப்படி கண்காணித்தார்கள்? கடவுளுக்கே வெளிச்சம்.


சரி 70% இவர் ஈச்மென் என தெரிகின்றது தூக்கிவிடலாமா?


அதிலும் ஆயிரம் சிக்கல்கள் முளைத்தன‌.


சிக்கல் என்றால் ஏராளமான சிக்கல்கள். முதலாவது அந்த படுபாதக ஈச்மென் இவர்தானா என 100% தெரியவேண்டும்.


சாதாரண அர்ஜெண்டினா சுடலைகண்ணு அல்லது சவரிமுத்துவை அள்ளிகொண்டு போய் நன்றாக மொத்தி இஸ்ரேலில் கொண்டு விட்டுவிட்டால் உண்மை தெரியும் பட்சத்தில் அது மகா அவமானம் மொத்த இஸ்ரேலுக்கும்.


(நமது நாடு என்றால் அதன்பின் கதைவசனம் எழுத ஒரு துறையே உண்டு, அந்த அப்பாவியை ஹிட்லராக கூட மாற்றிவிடுவார்கள்)


இன்னொன்று தவறான நபரை கைது செய்து இவர்தான் ஈச்மென் என காட்டினால், அதற்குள் உண்மையான ஈச்மென் சுதாரித்து கொள்வார் அதன்பின் அவரை நெருங்கவே முடியாது.


இது மொசாத்திற்கும் தெரியும்.


Image may contain: outdoorஇன்னொன்று அர்ஜெண்டினா நாசி அபிமான நாடு.


ஈச்மென் போன்ற பெரும் திமிங்கலம் அல்ல சாதாரன அயிரைமீன் நாசி வீரனை கொடுக்க கூட சம்மதிக்கமாட்டார்கள்.


ஒருவேளை ஈச்மென் கடத்தபட்டது தெரிந்தால் அர்ஜெண்டினாவின் மொத்த நாசி கும்பலும் பாஷா ரஜினியின் ஜனகராஜ் குழு போல துப்பாக்கி தூக்கி ஓடி வரும்


ஈச்மென் கடத்தல் வெளியே தெரியும் பட்சத்தில் மொசாத்தின் மொத்த குழுவிற்கும் தூக்கு உறுதி.


எங்கள் நாட்டில் எங்களை கேட்காமல் இஸ்ரேல் செய்யும் அநியாயம் பாரீர்.


எங்கள் இறையாண்மை என்ன ஆவது என்று முறையிட்டால் இஸ்ரேல் நிலை மகா மோசம்,


அதனால் தான் சரியான நேரம் வரும்வரை பலவழிகளில் அவர் ஈச்மென் தான் என உறுதிபடுத்தினார்கள்.


இன்னொன்று அர்ஜெண்டினா அரசு அவருக்கு ரகசியபாதுகாப்பு வழங்கியிருக்கின்றதா எனவும் சோதிக்கவேண்டியிருந்தது.


நாசிக்களுக்கும் ஈச்மெனுக்கும் தொடர்பு உண்டா என்ற சோதனையும் நடந்தது


ஒருவழியாக முடிவிற்கு வந்தார்கள், இவர் ஈச்மென் தான், 100% ஈச்மென் என முடிவு செய்தார்கள்.


ஆனால் கடத்தி நீண்ட காலம் வைக்கமுடியாது, கடத்தி கொண்டு போக வேண்டும்


முதலில் ஒரு சேப் ஹவுஸ் எனப்படும் பாதுகாப்பான வீடு பார்த்தார்கள். எப்படி கொண்டுவரவேண்டும் எப்படி சிறைவைக்கபடவேண்டும் என எல்லா திட்டமும் ரெடி.


ஆனால் கடத்திகொண்டுபோகும் காலம் அமைதியான காலமாக இருக்க கூடாது.


ஒருவித கொண்டாட்ட காலமாக இருந்தால் நல்லது. அதுவும் அரசு கொண்டாட்டமாக இருந்து எல்லா நாட்டு மக்களும் வந்து போனால் இன்னும் நல்லது.


கால்பந்து கொண்டாட்டம் போல நாடு மகிழ்ச்சியாக‌ ஜே,ஜே அல்லது சசிகலாவின் பரபரப்பு போல இருக்கும் போது கடத்தினால் எளிது.


காத்திருந்தார்கள், அட்டகாசமான வாய்ப்பு வந்தது.


அர்ஜெண்டினா ஸ்பெயினிடமிருந்து விடுதலை பெற்ற 150ம் வருட கொண்டாட்டம் தொடங்கியது.


நாடெல்லாம் விழாக்கோலம், உலக நாடுகளுக்கெல்லாம் அழைப்பு விடுத்து வெகு விமரிசையாக கொண்டாட தொடங்கினர்.


அவர்கள் சுதந்திரநாள் ஜூன் 9.


அதற்கு ஒரு மாதம் முன்பே கொண்டாட்டம் தொடங்கிற்று. தலைநகர் எல்லாம் உற்சாகம் ஏகபட்ட வெளிநாட்டுதலைகள்.


இது தான் வாய்ப்பு, அன்று 1960 மே மாதம் 11 . முகூர்த்த நேரம் குறித்தார்கள் இரவு 7.30, இடம் வழக்கமாக ஈச்மென் அவர் வந்து இறங்கும் பஸ்நிலைய பக்கம்.


அந்த பஸ் வந்தது ஈச்மெனும் இறங்கி பாவம்போல‌ நடந்து சென்றார். அங்கு ஒரு கார் பழுதாகி நின்றது ஒருவர் சரிசெய்துகொண்டிருந்தார்.  


ஒருவர் கதவு அருகில் ஒருவர் நின்றார். ஒருவர் கார்பக்கம் ஈச்மென் வரவும் தடுத்து கேட்டார், நன்றாக உடை அணிந்திருந்தவர்தான்.


"சாரி பார் த டிஸ்டபர்ன்ஸ், எக்ஸ்கியூஸ் மீ பாஸ், இந்த அட்ரஸ் எங்கிருக்குணு சொல்லமுடியுமா?"


ஈச்மென் அட்ரசை பார்த்து கொண்டிருக்கும் போதே இருவர் அவர்மேல் பாய்ந்தனர்.


அட்ரஸ் கேட்டவர் ஈச்மென் வாயில் பிளாஸ்திரி ஒட்டினார்.


பின் கை கால்கள் கட்டபட்டு 10 வினாடியில் காரின் பின்சீட் அடியில் கிடத்தபட்டார் ஈச்மென்.


ஈச்மெனின் ராணுவ பயிற்சிகள் எல்லாம் அவர்கள் முன் எடுபடவில்லை


மறைவிடத்திற்கு பறந்தது கார்.


அவரை பலத்த காவல் உள்ள வீட்டில் வைத்து உயரம் எடை மற்றும் இன்னபிற விவரங்களை குறித்துவிட்டு கேட்டார்கள் உங்கள் பெயர் என்ன?


அவர் சொன்னார் "ரிக்கார்டோ கிளமெண்ட்", அமைதியாக. அவர் முன்னால் இரு கடித உறை வைத்தார்கள்.


"நீங்கள் அலுவல் நிமித்தமாக 10 நாள் வேறு நகருக்கு செல்வதாக உங்கள் மனைவிக்கு கடிதம் எழுதுங்கள்.


இது ரகசியம் என்ற வாக்கியம் முக்கியம், அப்படியே இருவாரம் விடுமுறை கேட்டு அலுவலகத்திற்கும் ஒன்று எழுதுங்கள் என்றார்கள்.


அவரும் கண்மனி அன்போடு காதலன் என தொடங்கி அருமையாக எழுதிவிட்டார், அது ஈச்மென் மனைவிக்கு கிடைத்தது, கணவரின் கடந்தகாலம் தெரிந்தவரல்லவா?  அவரும் ரகசியம் காத்தார்.


அலுவலகமும் ஈச்மெனின் விடுமுறையினை ஏற்றுகொண்டது. நல்ல மனுஷன் அல்லவா? பாவம் ஏதும் அவசரம் போல என அவர்கள் போக்கில் இருந்தார்கள்.


8 நாள் வரை ரபி எய்டன் குழு ஈச்மெனிடம் ஏதும் கேட்கவில்லை.


அவருக்கு கடத்தியவர்கள் யார்? ஜெர்மானியரா? அமெரிக்கரா? ரஷ்யரா? கொள்ளையரா?


இல்லை ஹிட்லரின் நாசிக்களா? அல்லது பென்ஸ்கம்பெனி யூனியன் தகறாரா? என‌ ஏகபட்ட குழப்பம்.


அவராக கேட்டால் ஒருமுறை மட்டும் சொன்னார்கள் "ஒன்றுமில்லை ரிக்கார்டோ, நன்றாக சாப்பிட்டு ஓய்வெடுங்கள், விரைவில் விட்டுவிடுவோம்"


ஈச்மென் மனரீதியாக பாதிக்கபட்டிருந்தார், யாரோ கடத்தி எங்கோ வைத்திருக்கின்றார்கள்.


என்ன செய்யபோகின்றார்களோ? கடும் பதட்டம், மனரீதியான டார்ச்சர் இது.


தனி அறை ஒவ்வொரு நிமிடமும் செத்து செத்து பிழைத்தார் ஈச்மென்.


8 நாள் மொசாத் சும்மா இருந்தது , ஏன் என்றால் ஒருவேளை அர்ஜெண்டினா அரசு ஈச்மெனுக்கு பாதுகாப்பு வழங்கி இருந்தால் அடித்தெழுந்து தேடும்.


ஆர்பாட்டம் பண்ணும், எல்லா சடலங்களையும் கூட சோதிக்கும். விமான நிலையம், துறைமுகம் என சகல இடங்களும் அலசபடும், நிலமை எப்படி என கணிக்க செய்த உத்தி அது.


ஏற்கனவே ஈச்மென் மனைவி அமைதியாகிவிட்டார்.


கடிதம் எழுதாவிட்டால் மனைவி தலையை விரித்து அர்ஜெண்டினா கோர்ட்டில் "மன்னவனும் நீயோ, வளநாடும் உனதோ" என்றால் கிழிந்தது விஷயம்.


உடனே அர்ஜெண்டினா அரசாங்கம் அவரிடம் விளக்கம் கேட்கும்.


"ஏய் ஈச்மென் பாரு, ஈச்மென்பாரு,


ஹிட்லர் அரசின் வைரம் பாரு,


யூதவம்சம் ஒழிச்செடுத்த, ஆர்யனின் அழக பாரு,


நாசி படை உலகை வெல்ல,நாளை இவன் மன்னன் தானடா..


இவன் பெயருக்குள்ள நாஜி உண்டு உண்மைதானடா.."


ஓஓஓஓஓ என பிண்ணனி பாடலில் அரசுக்கு சகலமும் விளங்கும், பின்னர் மொசாத் குழுவினர் 11 பேருக்கும் இஸ்ரேலில் அஞ்சலி கூட்டம்தான்


மனைவியும் அமைதி, அலுவலகமும் அமைதி, இப்பொழுது அர்ஜெண்டினா அரசும் பரபரப்படையவில்லை.


மொசாத் புன்னகைத்தது, இனி கடத்தலாம், அதற்கு முன்பு மறுபடியும் ஈச்மெனின்டம் கேட்டார்கள்.


"உங்கள் பெயர் என்ன சொன்னீர்கள்?"


அந்த 8 நாட்களாக குழம்பி தவித்த ஈச்மென், ஒரு வார்த்தை கூட காதில் கேட்காத ஈச்மென், அலறி அடித்து சொன்னார் "சொன்னேனே ரிக்கார்டோ கிளமெண்ட்"


ரபி எய்ட்டன் சொன்னார் "இது உங்கள் அர்ஜெண்டினா பெயர், ஜெர்மனில் உங்கள் பெயர் என்ன?"



வியர்த்துகொட்டியது . அவருக்கு பதில் சொன்னார் "அடால்ப் ஈச்மென்".


அவருக்கு கொஞ்சம் புரிந்தது, தன் கடந்தகாலம் அறிந்தயாரோ தான் இதனை செய்திருக்கின்றார்கள்.


மொசாத் மெம்பர்கள் யாரும் ஒருவார்த்தையும் சொல்லவில்லை, அவரவர் வேலையை பார்க்க சென்றுவிட்டார்கள்.


இது தான் மொசாத்.


தன் இனத்தை கொன்றொழித்த படும் பாதகன் முன்னிருந்தாலும் உணர்ச்சிகளை வெளிகாட்டவில்லை, பயிற்சி அப்படி.


இதே வேறு யார் என்றாலும் ரபி எய்டன் இடத்தில் என்ன சொல்லியிருப்பார்கள்.


"டேய் ஈச்மென், அப்டியே 20 வருசம் பின்னால போ,


ஒரு யூத குடும்பம் உன் கால பிடிச்சி அழுதுதே,


ஞாபகம் இருக்காஆஆஆஆஆஆஆஆஆஆஆஅ"


என பேசியே சாகடிப்பார்கள்.


"டேய் ஈச்மென்..


உன்ன போட போறேன்டா அயர்ண்,


நீ கொன்னது யூதனை,


உன்ன தூக்கிறது தான் எங்க சாதனை"


என்றெல்லாம் முழக்கம் கேட்டிருக்கும்.


ஆனால் ஒரு தூசு கூட அவர் மேல் விழவில்லை, ஒரு தவறான வார்த்தை காதில் விழவில்லை.


ஈச்மெனை பிடித்தாகிவிட்டது, இனி இஸ்ரேலுக்கு கடத்தவேண்டும்.


இதுதான் மிக உச்சகட்ட டென்சன் நீர் ,நிலம், ஆகாயம் இம்மூன்று வழிகளில் அர்ஜெண்டினா நாட்டின் கான்ஸ்டபிளுக்கு கூட சந்தேகம் வராமல் கடத்தவேண்டும்.


குழு தீவிரமாக யோசிக்க தொடங்கியது.


எப்படியும் அர்ஜெண்டினா குடி நுழைவினை கடந்தாக வேண்டும்.


கடல் வழியாக எல்லாம் கடத்தமுடியாது, என்ன செய்யலாம்?


 

தொடரும்...





 


 

Tuesday, July 18, 2017

ஈச்மென் மொசாத் :03



No automatic alt text available.சில்வியாவின் தந்தை லோதர் ஹெர்மன்.


அவரும் ஒரு ஐரோப்பிய யூதர். ஹிட்லர் சோம்பல் முறித்து எழும்பி யூதர்களை பார்த்து கண்களை உருட்டும்பொழுதே ஐரோப்பாவை விட்டு வெளியேறியவர்.


அதாவது ஒரு நாசி கும்பலால் தாக்கபட்டு பிழைத்தவர். மொத்த ஐரோப்பவும் ஹிட்லருக்கு என பலர் அஞ்சி வேறு கண்டக்களுக்கே தப்பிய காலம், பெரும்பான்மையனவர்கள் யூதர்கள்.


பொறுமையாக மகளிடம் விசாரித்தார், அவன் பெயர் என்ன? அவள் சொன்னாள் "குளோஸ் ஈச்மென்".


சரி அந்த சனியனை பெற்ற பெரிய சனியன் பெயர் என்ன?


என்றதற்கு சில்வியாவின் பதில் "அவர் பெயர் ரிக்கார்டோ கிளமெண்ட்".


ஹெர்மன் மூளையில் ஒரு கணம் மின்னல் வெட்டியது.


அப்பன் பெயர் "ரிக்கார்டோ கிளமெண்ட்" மகன் பெயர் "குளோஸ் ஈச்மென்".


எங்கோ இடித்தது அவருக்கு, குடும்பபெயர் இப்படி இருக்காதே, ஒருவேளை தத்துபிள்ளையோ? என்றெல்லாம் யோசித்து சொன்னார்.


"சரி வீட்டுக்கு அழைத்து வா, விசாரிப்போம்".


Image may contain: 1 personஇதுதான் ஈச்மென் செய்த பெரும் தவறு, மகன்களின் அடையாளத்தை மாற்ற தவறிவிட்டார்.


இங்குதான் அவர் தலைவிதி பல்லைகாட்டியது அல்லது செய்த மொத்தபாவத்தில் பாதி மகனாகவும் மீதி சில்வியாகவும் பிறந்திருந்தது.


பள்ளிக்கு சென்றுவிட்டு வந்துகொண்டிருந்த சில்வியா பின்னால் வழக்கம்போல மவுனராகம் கார்த்திக்காய் "ஏய்..என்னோடு கா..பி ஷாப்..ட வா..ரியா" என பின்னால் வந்த குளோசிடம் புன்னகை சிந்தினாள் சில்வியா.


அவ்வளவுதான் இருவருக்கும் முன்னால் காப்பி இருந்தது, அது யாருக்கு வேண்டும்?


உன்னை பற்றி சொல் என்றாள். காதலிக்கும் பெண் கேட்டால் டிராக்டர் ஓட்டுபவன் பென்ஸ்கார் என்பான், விமான நிலைய ஊழியர் பைலட் என்பான் அல்லவா? குளோசும் அள்ளிவிட்டான்


நாங்கள் ஜெர்மானியர், எனக்கு 2 வயதாக இருக்கும்பொழுது ஹிட்லர் எனக்கு நெற்றியில் ஸ்வாஸ்திக் அடையாளமிட்டு ஆசீர்வதித்தார்.


எங்கப்பா ஜெரிமனியை ஆட்டுவித்தார், நாங்கள் எல்லாம் பிரபு குடும்பம். ஏதோ யுத்த தோல்வியால் இப்படி ஆகிவிட்டோம் என அள்ளி வீசினான்.


உண்மையில் அவனுக்கு ஒரு புண்ணாக்கும் தெரியாது, கண்ணின் கடைவிழி காதலியர் காட்டிவிட்டால் பொங்கி வரும் ஆனந்தத்தில் அப்படி சொல்லிகொண்டிருந்தான்.Image may contain: 1 person, sitting and child


ஆனால் அந்த காதல்பேய் பிடித்து அவன் சொன்னதெல்லாம் உண்மை என்பது அவனுக்கும் தெரியாது, சில்வியாவிற்கும் தெரியாது.


பொறுமையாக கேட்ட சில்வியா ஒரு ரதி புன்னகையோடு சொன்னாள், நாளை என் வீட்டுக்கு வா, என் தந்தை உன்னை பார்க்கவேண்டுமாம்.


குளோஸ் அதோடு கனவில் விழுந்தான்.


"சில்வியா.சில்வியா..ஐ லவ் யூ சொல்வியா" என உலகம் சுற்றி அவளோடு டூயட்பாடினான்.


விடிந்தது .. பக்கா அலங்காரம் செய்து கொண்டு சில்வியா வீட்டை அடைந்தான்.


ஏற்கனவே காப்பிகோப்பையின் அளவு, விலை, குளோசின் உளரல் என சகலத்தையும் ஒப்பித்திருந்தாள் சில்வியா.


குளோசை வரவேற்ற ஹெர்மன் விசாரித்தார், தனக்கு மூன்று தம்பிகள் அவர்கள் எக்ஸ் ஈச்மென், ஒய் ஈச்மென், இசட் ஈச்மென் என ஒப்பித்தான் குளோஸ்.


ஹெர்மனின் சந்தேகம் வலுத்தது.


சரி நீ போ, நான் உன் தந்தை வீட்டுக்கு வந்து அவரிடம் பேசுகிறேன் என சொல்லி அனுப்பிவிட்டு, ஈச்மென் சம்பந்தபட்ட சகல பத்திரிகை செய்திகளையும் மறுபடியும் படித்தார்.


மறுநாள் ஈச்மென் வீட்டிற்கு சென்றார்.


சம்பந்தம் பேச வந்திருக்கிறார் என குளோஸ் மகிழ்வோடு கதவை திறந்தான்.


50 வயது ஈச்மெனும் லோதரை வரவேற்றார்,


வந்திருப்பது தன் தூக்கு கயிறு என அப்போதைக்கு ஈச்மெனுக்கு தெரியவில்லை


தான் ஒரு யூதன் என்பதை காட்டிகொள்ளாத ஹெர்மன் சகஜமாக பேசிவிட்டு, திடீரென கேட்டார்,


"உங்கள் பையன் சொன்னார், மிஸ்டர் ரிக்கார்டோ நீங்கள் நாஜிபடை வீரரா? சம்பந்தம் செய்யும் அளவிற்கு வந்துவிட்டோம், குடும்பரகசியம் இனி நமக்குள்தானே, சொல்லுங்கள் ரிக்கார்டோ".


ஈச்மெனின் முகத்தில் ஒரு மின்னல் தோன்றி மறைந்தது (பிண்ணணி இசை போட தேவா இல்லை).


ஆனால் சட்டென மறைத்து சொன்னார்.


"அன்று ஹிட்லருக்கு பின்னால் செல்லவில்லை என்றால் உயிர்போகும், ஜெர்மனியில் வசிக்க முடியாது, அவர் பின்னால் சென்றவர் எல்லாம் நாசிக்கள் அவ்வளவுதான் என்ன செய்ய விதி. நான் யுத்தம் தொடங்கியவுடன் அதிலிருந்தெல்லாம் விலகிவிட்டேன்.


இன்று அமைதியாக இங்கு வசிக்கின்றேன், சர்வம் கிறிஸ்துவுக்கு அர்ப்பணம். கிறிஸ்துவின் சமாதானம் உங்களோடும் என்னோடும் அர்ஜெண்டினாவோடும் இருப்பதாக.  அது இருக்கட்டும் இப்பொழுது நானும் நீரும் அர்ஜெண்டிக்காரர்கள் அவ்வளவுதான்" என்றார்  உருக்கமாக.


அன்று அர்ஜெண்டினா முழுக்க பல நாசிக்கள் இருந்தார்கள் இது ஒரு பிரச்சினையே அல்ல என்பது ஈச்மெனுக்கு தெரியும். அதனால்தான் தைரியமாக சொன்னார்.



இருவரும் 30 நிமிடம் பேசினார்கள், ஈச்மெனின் உருவ அமைப்பை நன்கு ஆராய்ந்த லோதர் சொன்னார்.


நான் சர்ச்சிக்கு செல்லவேண்டும், இவர்கள் பழகட்டும் 3 வருடம் கழித்து திருமணம் வைக்கலாம் எனக்கு சம்மதம் என சொல்லிவிட்டு குளோசின் கையை குலுக்கிவிட்டு சென்றார்.


கைகுலுக்கி சென்றவர் சர்ச்சிக்கா சென்றார் இல்லவே இல்லை, எல்லா நாட்டு தூதரகங்களிலும் குறைந்தது 3 உளவு அதிகாரிகளாவது இருப்பர்.


இது தான் உலக நடைமுறை. அவர் இஸ்ரேலுக்கு நெருக்கமான நாட்டின் தூதரகத்தில் போட்டு கொடுத்துவிட்டார்.


" இந்த முகவரியில் ஒருவர் இருக்கின்றார், அவர் மேல் சந்தேகமாக இருக்கின்றது இஸ்ரேலுக்கு சொல்லிவிடுங்கள்",


சொல்லிவிட்டு மனதிற்குள் சொல்லிகொண்டார், "நான் தனியாள் அல்ல, 60 லட்சம் யூதரின் ஆன்மா"


தகவல் கிடைத்ததும் மொசாத் அவசர கூட்டம் கூட்டபட்டு விவாதிக்கபட்டது,"அவன் எனக்கு வேணும் உயிரோட வேணும்" என்றார் பிரதமர் பென்குரியன்.


சுட்டுகொல்வது மொசாத்திற்கு டீ குடிப்பது போல, ஆனால் உயிரோடு கடத்தவேண்டும், என்பதால் யோசித்தார்கள்.


அப்படியானால் ஒரு அதிரடியான "கேப்டன்" வேண்டும் என தேடினார்கள்.


ஷின்பெட் (இஸ்ரேல் உள்நாட்டு பாதுகாப்புதுறை) ஹீரோ ஒருவர் கண்டுபிடிக்கபட்டார்.


அவரது ஸ்பெஷாலிட்டி தேடபடுவது யாராக இருந்தாலும் லெபனான், சிரியா, எகிப்து என எங்கிருந்தாலும் பிடித்து, வாயினை பொத்தி, நாட்டாமை பொன்னம்பலம் போல தூக்கி வந்துவிடுவார்.


கேப்டன் விஜயகாந்த் சில சினிமாக்களில் டெல்லியிலும், காஷ்மீரிலும் எவ்வளவு சாகசங்கள் செய்வார் அப்படி நிஜமாக செய்த சாகசவீரன்.


இவ்வளவிற்கும் மொசாத் வேறு. ஷின்பெட் வேறு. ஹாய் கூட சொல்லியிருக்க மாட்டார்கள்.


பேருந்தில் ஒரே இருக்கையில் இருந்தால் கூட ஒருவர் மொசாத், ஒருவர் ஷின்பெட்டாக இருக்கலாம்.


ஆனால் இருவருக்கும் தெரியாது.


அவர் ரபி எய்டன், அசகசாய சூரன். ஆயிரத்தில் ஒருவன் எம்ஜிஆர் போல பொறுப்பும், கில்லி விஜய் போல வேகமும் சாதுரியமும் கொண்டவர்.


அவரிடம் பொறுப்பும், ஈச்மெனின் குறிப்பு அடங்கிய கோப்பும் கொடுக்கபட்டது.


அழும் சுவர் சென்று செபித்துவிட்டு 12 பேர் அடங்கிய குழுவினர் பயிற்சி முடித்து கிளம்பினர்.


எப்படி கிளம்பினர்?, கிரிக்கெட் அணிபோல மொத்தமாக இறங்கினால் ஏர்போர்ட்டிலே மாட்டிகொள்வர்.


உலகம் முழுக்க பிரிந்தனர்.


பின்னர் லண்டன், பாரீஸ் , பிராங்கபர்ட், லாஸ் ஏஞ்சல்ஸ்,கெய்ரோ என பல நாடுகளிலிருந்து ஒவ்வொருவராய் வந்து அர்ஜெண்டினாவில் இறங்கி களத்தில் இறங்கினர்.


அவர்கள் வருவது ஆண்டவனுக்கே தெரியுமா என்பது சந்தேகம்.


ஆனால் லோதர் வந்து நீங்கள் ஜெர்மானியரா என கேட்டதில் ஈச்மெனின் ராணுவ மனது விழித்துகொண்டது. வீட்டை மாற்றியிருந்தார்.


லோதர் குறிப்பிட்ட வீட்டு முகவரிக்கு சென்று கூரியர் பாய் வேடத்தில் கதவை தட்டினால் ஏற்கனவே அந்த வீட்டை காலிசெய்து வேறு அடையாளம் தெரியாத இடத்திற்கு குடும்பத்தோடு சென்றிருந்தார் ஈச்மென்.


என்ன இருந்தாலும் ஹிட்லரின் வளர்ப்பு அல்லவா? ரஷ்யர்களிடமே தப்பியர் அவர்.


கையை பிசைந்து நின்றது ரபி எய்டனின் குழு.


ஆனாலும் லோதரிடமோ அல்லது சில்வியாவிடமோ செல்லவே இல்லை.


ஏன் அர்ஜெண்டினாவின் இஸ்ரேலிய உளவாளிகளுக்கே வந்தது தெரியாது.


வீட்டை மாற்றினால் என்ன? கம்பெனி இருக்கிறதல்லவா?


ரகசியமாக பென்ஸ் கார் கம்பெனி பணியாளர் லிஸ்டில் ஊடுருவி ரிக்கார்டோ கிளமென்ட்டின் தகவல்களை தேடினார்கள் கண்டுபிடித்து பின் தொடர்ந்தார்கள்.


8 மாதம் இது நடைபெற்றது, தாங்கள் பார்க்கும் நபரின் உருவத்தையும் கோப்பில் காணப்படும் அடையாளங்களை வைத்து ஒப்பிட்டு பார்ப்பதை தவிர வேறு என்ன செய்யமுடியும்?


இது சந்தேகம் தான், இவர்தான் ஈச்மென் என உறுதிபடுத்தபடவில்லை.


அவரிடம் என்று நீர்தான் ஈச்மென் என்பவரோ என கேட்டுவிடவும் முடியாது


சந்தேகத்தின் பேரில் கொல்லலாம், கடத்தினால் விவகாரம் பெரிதாகும்,


இவர் போலி ஈச்மென் என்றால் ஒரிஜினர் ஈச்மென் தற்கொலை செய்தாலும் செய்வார், சிக்கவே மாட்டார்


அதனால் இவரை கண்காணிக்கும் திருப்பணியினை மட்டும் அப்பொழுது சரியாக செய்தார்கள்.


ஈச்மெனும் ஒழுங்காக வேலைக்கு சென்றார், பேருந்தில் திரும்பினார், சமத்து அகதியாக தானுண்டு தன் வேலையுண்டு என்றிருந்தார், அவர்தான் ஈச்மெனா என்பதில் மொசாத்திற்கே குழப்பம்.


இந்நிலையில் ஒருநாள் பெரிய கேக் வாங்கினார் ஈச்மென், அதோடு பூங்கொத்தும் வாங்கினார், வீட்டிற்கு சென்றார்.


கொஞ்சநேரத்தில் குடும்பத்தார் அலங்கார உடையுடன் விருந்து சாப்பாட்டுகு கிளம்பினர்.


இதை கவனித்த ரபி எய்டன் குழு அவசரமாக பைலை புரட்டியது.


அது அன்று ஈச்மெனின் திருமண நாள் என பைல் சொல்லிற்று.


இதைபோல அன்னாரின் பிறந்த நாளை அவர் கொண்டாடியதையும் உறுதிபடுத்தியிருந்தார்கள்.


வேட்டையாடும் புலி மொசாத், இரையை கண்டுவிட்டது ஆனாலும் உலாவ விட்டது


காரணம் கிட்டதட்ட 100 சிக்கல்கள் இருந்தன. கொஞ்சம் பிசகினாலும் சாரி ஹிஹிஹி என சமாளிக்கும் முருங்கக்காய் சாம்பாரில் உப்பு பிரச்சினை அல்ல.


மொசாத்தையே மூட வைக்கும் அல்லது இஸ்ரேலையே சிக்கலாக்கும் மகா பிரச்சினைகள் அவை.


நாசிகளுக்கு ஆதரவளித்த நாட்டில் ஜெர்மானியனை கொலை செய்தாலே தப்பமுடியாது.


இதில் உயிரோடு கடத்த வேறு வேண்டும், இப்போதைக்கு திருமண நாள் மட்டும் உறுதி செய்யபட்டிருக்கின்றது . இன்னும் சில காரியங்களை உறுதிபடுத்துவோம்.


சொல்லிவிட்டு கடத்தினால் எப்படி இஸ்ரேலுக்கு அர்ஜெண்டினா கண்ணில் மண்ணை தூவிவிட்டு கொண்டு செல்லலாம். அதில் எழும் சிக்கல் என்ன என்பதை பட்டியலிட்டார்கள்.


ஈச்மெனை கண்காணித்தபடியே ஹிட்லர் அங்கு எங்காவது இருப்பானா? இவர் கார் மெக்கானிக் என்றால் அவன் டயருக்கு பஞ்சர் போட்டுகொண்டிருக்கமாட்டானா என தேடவும் மொசாத் தவறவில்லை.


குறிப்பு:


முதல்படம் : மொசாத்தின் சின்னம், சகல கிறிஸ்தவருக்கும் தெரிந்தது கடவுள் மோசஸிடம் சொன்னபடி அவர் செய்த 7 விளக்குதண்டுகள் தான், (பார்த்தவுடன் கத்தோலிக்கர் பிதா,சுதன்,தூய ஆவி அடையாளமிடுவார்கள், சில‌ சபையினர் "அல்லேலூயா" என்பார்கள், இன்னும் சிலர் காளகேயனாக அந்நிய பாஷை பேசுவார்கள், ஆனால் இவற்றை எல்லாம் யூதர்கள் கண்டுகொள்வதே இல்லை :)என்பது தான் "தமாஷ்" )


இரண்டாம் படம் : "கேப்டன்" ரபி எய்டன்


மூன்றாம் படம் :  சில்வியா , இந்த வெள்ளை தக்காளியினை எப்படி குஷ்பூ போல‌ என சொல்லமுடியும்? இந்த அழகிற்கெல்லாம் அந்த குளோஸ் மயங்கியிருக்கமுடியாது, விதி விளையாடியிருக்கலாம்










தொடரும் ...





 


 

Monday, July 17, 2017

அடால்ப் ஈச்மென் Vs மொசாத் : 02




[caption id="" align="alignright" width="403"]Image may contain: 1 person ரிக்கார்டோ கிளமெண்ட் எனும் பெயரில் ஈச்மெனின் பாஸ்போர்ட்[/caption]

நிச்சயமாக உலகத்தையே நாம் தான் ஆளப்போகின்றோம், அதில் யூதர்களை எந்த நாட்டிற்கு அனுப்புவது?


எல்லாமே நம்நாடு அதனால் அவர்களை உலகத்திலிருந்தே அப்புறபடுத்துவதுதான் சரி என்ற நம்பிக்கையில் கொலைவெறியாட்டம் ஆடிய ஈச்மென் இப்பொழுது அடங்கி கிடந்தார்.


இது அவர் எதிர்பார்க்காத தோல்வி, அதனைவிட எதிர்பாராதது இஸ்ரேல் அமைந்ததும் மொசாத் அமைக்கபட்டதும்


இனி இத்தாலியில் இருப்பது சரியானதல்ல என உணர்ந்த ஈச்மென் தப்பி செல்ல திட்டமிட்டார்.


ஜெனிவாவில் கூடிய நாடுகள்வேறு ஜெர்மன் அகதிகளுக்கு சில சலுகைகளை அறிவித்திருந்தன.


அடையாள ஆவணம் ஒன்றுமில்லாத மக்களுக்கு சம்பத்தபட்ட நாடுகள் அகதி அடையாள பாஸ்போர்ட் வழங்கலாம் என்பதும் ஒன்று.


உலகில் ஹிட்லருக்கு எதிரிகள் அதிகம், நண்பர்களான‌ ஜப்பானும் அணுகுண்டு வாங்கி மல்லாக்க படுத்துவிட்டது.


நேதாஜியின் மர்ம மரணம் உலகிற்கு சொன்னது ஒன்றுதான்.


நேதாஜி விமான விபத்தில் சாகவில்லை, அவரை ஏற்க ஜப்பான் மறுத்திருக்கலாம், நேதாஜி தற்கொலை செய்திருக்கலாம், அன்றைய உலகின் வலுவான வாதம் அது.


இதனால் ஜப்பான் செல்லும் திட்டம் சரி வராது என உணர்ந்தர் ஈச்மென், ஹிட்லரின் கூட்டாளியான முசோலினியும் தெருகம்பத்தில் பிணமாக தொங்கிவிட்டார்.


ஏதோ அகதி அடைக்கலத்தில் இவ்வளவு நாளும் இருந்ததே பெரும் அதிர்ஷ்டம், செல்ல வேண்டும் எங்காவது செல்லவேண்டும்.


அப்பொழுது அவர் மனதில் உதித்த நாடு அர்ஜெண்டினா.


பொதுவாக தென் அமெரிக்க லத்தீன் கிறிஸ்தவ அல்லது கத்தோலிக்க கிறிஸ்துவநாடுகளுக்கும் ஐரோப்பிய மேன்நிலை நாடுகளுக்கும் அதிகம் ஒத்துவராது.


இவை பெரும்பாலும் ஸ்பெயின் காலணிகள்,


பிரிவினை கிறிஸ்தவம், ஆண்டான் அடிமை , ஸ்பெயின் மற்றும் பிரிட்டன் மோதல் என பல பிரச்சினைகள் உண்டு.


அப்படியான நாடுகளில் ஒன்றான அர்ஜெண்டினாவிற்கு பிரிட்டன், அமெரிக்கா நண்பர்கள் இல்லை.


இன்று வரை அர்ஜெண்டினா அருகிலிருக்கும் தீவிற்கு பிரிட்டன் உரிமை கொண்டாடி சண்டை எல்லாம் போட்டிருக்கின்றது. இன்றும் கூட பிரிட்டன் விட்டுகொடுக்காத தீவு அது.


வாய்ப்பு கிடைக்கும்பொழுதெல்லாம் தெனஅமெரிக்கர்கள் ஐரோப்பாவை பழிவாங்குவார்கள், கால்பந்தில் அது அதிகம் தெரியும். இன்னும் போதைபொருளை விளைவித்து ஐரோப்பாவிற்கு அனுப்பி கடுமையாக பழிவாங்கும் முறையும் உண்டு.


Image may contain: 1 personஎளிதாக சொல்லவேண்டுமென்றால் பிரிட்டனை அடிக்கும் யாரும் அர்ஜெண்டினாவின் நண்பர்கள்.


ஹிட்லர் மீது அவர்களுக்கு அனுதாபம் இருந்தது.


பல நாசி படைவீரர்கள் அங்கு தப்பி சென்றனர் என்பது உண்மை.


ஹிட்லரே அங்கு நீர்மூழ்கியில் தப்பி சென்றார் என்றெல்லாம் கதைகள் உண்டு.


அந்த நாட்டை குறிவைத்தார் ஈச்மென். பரதேசி கோலத்தில் இத்தாலி குடியுரிமை இலாக்காவில் அகதி பாஸ்போர்ட் விண்ணப்பித்தார்.


நாசமாய் போன ஹிட்லரின் இறுதிபோரில் ரஷ்யபடைகள் வீட்டை கொளுத்தியதாகவும் தன்னையும், மனைவி மற்றும் 4 வயது மற்றும் 2 வயது மகன் தவிர சகலமும் எரிந்து விட்டதாக அழுது ஆர்பரித்தார்.


இத்தாலி அப்பொழுது சர்வ சிக்கலில் இருந்தது. முரடன் முசோலினி நாசமாக்கி வைத்திருந்தான்.


அகதிகளில் படித்தவர்கள் அறிவாளிகளை அமெரிக்கா அள்ளிகொண்டு சென்றது. ஆனால் பாமரர்களை இத்தாலியால் சமாளிக்கமுடியவில்லை.


அகதிக்கான பாஸ்போர்ட்டுகளை அள்ளிவிட்டார்கள். இக்காலம் போல தீவிரவாதிகள் அபாயம் இல்லை. எனவே சிக்கல் இல்லை.


ஈச்மெனை அழைத்தார்கள். உங்கள் பெயர் என்ன என கேட்டார்கள், தான் ஒரு இத்தாலி வம்சாவளி ஜெர்மானியன் என சொன்ன ஈச்மென் அட்டகாசமான லத்தீன் பெயரை தனக்கு சூட்டிகொண்டார்.


ஞானஸ்நானம் கொடுக்க அருட்தந்தை இல்லை அவ்வளவுதான். பாஸ்போர்ட் கொடுக்க இத்தாலி இருக்கின்றது போதும்.


அந்த பெயர் "ரிக்கார்டோ கிளமெண்ட்".


அப்படியே தென் அமெரிக்க கால்பந்து ஆட்டக்காரர் பெயராக இருக்கின்றது அல்லவா?


அவ்வளவு தூரம் செல்லாவிட்டால் குளச்சல் டூ திருச்செந்தூர் கடற்கரை சுற்றி வாருங்கள்.


கத்தோலிக்க மீணவ கிராமங்களில் இந்த ஸ்டைல் பெயர் அத்துப்படி. எல்லாம் லத்தீன் செய்த மாயம்.


தாவரவியலும்,விலங்கியலும் படித்தவர்கள் மனதிற்குள் சபித்து சபித்து படித்த அந்த புரியாத பெயர்கள் எல்லாம் லத்தீன் மூலமே.


ஒரு காலத்தில் கிறிஸ்தவர்களின் சமஸ்கிருதம்.


"ஹிட்லர் ஒழிக இத்தாலி வாழ்க" என கோஷமிட்டு ஒரு வழியாக ரிக்கார்டோ கிளமெண்ட் எனும் பெயரில் பாஸ்போர்ட் எடுத்துவிட்டு அர்ஜெண்டினா தூதரகம் சென்றார்.


அங்கு ராகத்தை மாற்றிபாடினார். தான் ஜெர்மன் ராணுவத்தின் கடைநிலை ஊழியர் எனவும், ஹிட்லரை இருமுறை தூரத்தில் இருந்து பார்த்ததாகவும், தான் ஒரு ஜெர்மானியன் என்பதால் ஐரோப்பா தன்னை புறக்கணிப்பதாக அழுதார்.


"இதோ பார்த்தீர்களா வேலைதேடி இத்தாலியில் அலைந்தேன், பாஸ்போர்ட் கொடுத்து எங்காவது போய் தொலை என்கிறார்கள், நான் என்ன செய்வேன் மதர் மேரி சித்தம் இதுவானால் இனி சாவதை தவிர வழி இல்லை. இப்பொழுது கூட புனித பீட்டர் கல்லறையில் செபித்துவிட்டு சாக சென்றேன், வழியில் உங்கள் தூதரகம் தெரிந்தது, உதவுவீர்கள் என நம்புகிறேன்"


ஜெர்மானியன், அதுவும் படைவீரன் எல்லாவற்றிற்கும் மேல் கத்தோலிக்கன், இவருக்கு உதவாமல் நாம் சர்ச் சென்றால், பாவமன்னிப்பு கூட கொடுக்கமாட்டார்கள்.


அவ்வளவுதான் அகதி விசா கிடைத்தது,"ரிக்கார்டோ கிளமெண்ட்" எனும் ஈச்மென் அர்ஜெண்டினா தப்பினார்.


வடக்கு அர்ஜெண்டினாவில் டுகுமென் நகரின் ரோடு போடும் கூலியாக வேலை செய்து, பின்னர் ஒப்பந்தக்காரர் ஆனார்.


கொஞ்சம் பணம் சேர்ந்ததும் குடும்பத்தாரையும் அழைத்து குடும்பம் குட்டிகளோடு வாழ்ந்தார்.


அந்த ஊரின் நிலமை சரியில்லை, போதை, குடி,வம்பு வழக்குகள் அதிகான ஊர் அது.


சில இடங்களில் அவர் தாக்கவும் பட்டார், எப்படி இருந்திருக்கும் அந்த முன்னாள் ஜெனரலுக்கு?


ஆனால் பாஷா படத்தில் ஆனந்தராஜிடம் அடிவாங்கும் ரஜினி போல ரத்தத்தை துடைத்துகொண்டே சிரித்தார்.


"வன்முறை தவறு, சண்டை தப்பு நாமெல்லாம் கிறிஸ்தவர்கள்" என சகலருக்கும் போதித்துவிட்டு அர்ஜெண்டினா தலைநகர் "பியூனஸ் அர்ஸ்" வந்தார்.


ஒரு கார் கம்பெனிக்கு சென்று தொழிலாளியாக இணைந்தார்.


அது உலகின் புகழ்பெற்ற "பென்ஸ்" கார் தொழிற்சாலை, ஜெர்மனின் உலக அடையாளங்களின் ஒன்று. இன்று வரை நம்பர் 1.


ஹிட்லரின் ஆட்சியில் ஈச்மென் கைதட்டினால் ஆயிரம் பென்ஸ்கார்கள் ஓடி வந்து நின்றன.


ஏன் நாளுக்கொரு பென்ஸ் ஈச்மெனுக்கு கிடைத்த காலமும் இருந்தது. கம்பெனி அதிபர்களே ஈச்மென் முன்னால் கைகட்டி நின்றனர்.


அந்த கம்பெனியில்தான் சாதாரண தொழிலாளியாக ஸ்பேனரும் அழுக்கு உடையுமாக , தனது பெரும் பிண்ணனியை மறைத்தபடி வேலை செய்தார் ஈச்மென்.


பேருந்தில்தான் வேலைக்கு செல்வார், நடந்துதான் பஸ்நிலையம் வருவார், அப்படியே அகதி வாழ்க்கையை அற்புதமாக நடித்துகொண்டிருந்தார்கூ. ட இரு பிள்ளைகளும் பிறந்தனர்.


அர்ஜெண்டினா பாஷா பாயாக மிக சமத்தாக தன் அடையாளங்களை மாற்றி ஒரு அகதி தொழிலாளி எப்படி இருப்பானோ அப்படியே மாறிப்போனார் ஈச்மென்.


10 வருடத்தில் உலகம் மாறிற்று. இங்கிலாந்து தன் வல்லரசு முடியினை துறந்தது, அமெரிக்காவும் ரஷ்யாவும் கடும் மோதலில் இருந்தன.  இஸ்ரேல் பெரும் ரவுடியாக உருவெடுத்திருந்தது


இதனை எல்லாம் செய்திதாள்களில் படித்தபடி எல்லாம் மனதினால் சுமந்துகொண்டு வேலைக்கு சென்றுகொண்டிருந்தார் ஈச்மென்.


உலகையே மிரட்டிய ஒரு படையின் இரண்டாம் கட்ட தலைவன் இப்படி மாற முடியுமா?


கட்டளையிட்டே பழகியவன் பிரட்டுக்கும், உருளைகிழங்கிற்கும் பொழுதெல்லாம் உழைக்க முடியுமா?


ஈச்மெனும் எனும் பாஷாபாயினால் முடிந்தது, உலகம் அவனை மறந்தே போனது.


இந்த பரதேசி கோல ரொட்ரிகோதான் அந்த படுபயங்கர ஈச்மென் என அவனையும் அவன் மனைவியினையும் தவிர யாருக்கும் தெரியாது.


இங்கோ மொசாத் 10 வருடமாக ஈச்மென்னை உறங்காமல் தேடியது, பெரும் பணத்தோடு சுவிஸ், பாரீஸ் என தப்பியிருக்கலாம் என அங்கெல்லாம் புது பணக்காரர்களை உளவுபார்த்தது. ஒன்றும் பலனில்லை.


அடி அவர்களுக்கு புதிதல்ல எகிப்தியர், பாரசீகர், நெபுகாத்நேச்சர், அலெக்ஸாண்டர், ரோமர் பின்பு ஐரோப்பாவின் எல்லா நாடுகள் என எல்லா இடத்திலும் அடிபட்ட இனம் தான் யூத இனம்.


எல்லா வல்லரசுகளும் அவர்களை அப்படி போட்டு அடித்திருக்கின்றன, அலறி அடித்து ஓடியிருக்கின்றார்கள் யூதர்கள்


ஆனால் இம்முறை அவர்கள் வைராக்கியம் கூடியிருந்தது. உலகில் எங்கு அடித்தாலும் எருசலேம் நோக்கி ஓடுவோம்.


ஆனால் எருசலேம் வந்தபின் திருப்பி அடிப்போம் என்பதை உலகிற்கு காட்டவேண்டும் என்ற வெறியோடு அலைந்தார்கள்.


அந்த வெறிதான் பெரும் எரிமலைகளை சமாளித்து இன்றும் இஸ்ரேலை அங்கு நிலை நிறுத்தி வைத்திருக்கின்றது.


ஈச்மென் சம்பந்தப்ட்ட பைல் அவர்களிடம் உண்டு. மற்றபடி ஏதும் தெரியாத நிலை.


ஆனால் அவ்வப்போது அவர்களின் உலகாளாவிய ஹீப்ரு மொழி பத்திரிகையிலும், இன்னும் யூதபிண்ணனி கொண்ட பத்திரிகையிலும் ஈச்மென் படத்தை போட்டு "மர்மம்" எனும் செய்தியை வெளிச்சம்போட்டுகொண்டே இருந்தார்கள்.


இது ஓரளவு வேலை செய்தது. உலகின் எல்லா யூதர்களுக்கும் ஈச்மென்னை இஸ்ரேல் தேடுகிறது என்பது புரிந்தது. மற்றவர்களுக்கு அது ஒரு செய்தி அவ்வளவுதான்.


ஈச்மென்னும் மறக்காமல் அதனை படித்துவிட்டு, பேப்பரை மடித்து வைத்துவிட்டு வேலைக்கு செல்வார்.


பாவம் பிள்ளைகுட்டிக்காரர் என சமூகம் சொல்லிகொண்டிருந்தது.


கிட்டதட்ட 10 வருடம் கடந்தது, யாருக்கும் துளியும் சந்தேகமில்லை, மூத்தமகன் 16 வயதை கடந்தான் அவனுக்கு "குளாஸ்" என பெயரிட்டிருந்தார். நல்லபெயர், பொருத்தமான பெயர்.


16 வயதினிலே என்றால் கண்டிப்பாக காதலும் வரவேண்டும், அவனுக்கும் வந்தது, யார்மேல் தெரியுமா? "சில்வியா" எனும் பெண்மேல்.


சில்வியா குறிப்பிடதகுந்த அழகி, சின்னதம்பி குஷ்பூ அளவிற்கு வரமுடியாவிட்டாலும் நல்ல அழகி என்றுதான் குறிப்புகள் சொல்கின்றது


காரணம் அந்த இனமே கொஞ்சம் அழகான இனம் என்பது உலகம் ஒத்துகொண்ட உண்மை.


(என்ன செய்ய தமிழ்படத்தில் எல்லாம் நடிக்கவரமாட்டார்கள், குஷ்பூ இருக்கும்பொழுது அவர்கள் எதற்கு? வந்தால் அவர்கள் அழகு குறைவு என்றாகிவிடும்)


அவளிடம் மனதை மொத்தமாக பறிகொடுத்து ஆர்பாட்டம் செய்ய ஆரம்பித்தான் குளோஸ்.


கிட்டதட்ட "இதற்குத்தான் ஆசைபட்டாய் பாலகுமாரா" விஜய் சேதுபதி போல, சகலமும் சில்வியா.


யாராவது எடுத்து சொன்னால் "சிலிவியா ஹாப்பி அண்ணாச்சி" என்பதை "லத்தீன் ஸ்பானிஷ்" மொழியில் அடிக்கடி சொல்லிகொண்டான்,


சிலிவியா அற்புதமான‌ அழகி, ஆனால் அந்த தாழம்பூவில் ஒரு பூநாகம் ஒளிந்திருந்தது.


அவள் தந்தை ஒரு யூதர். ஒருநாள் குளோசின் தொல்லை தாங்காமல் தந்தையிடம் கண்ணை கசக்கினாள் சில்வியா.


ஆம் யூதர்கள் எல்லா தேசத்திலும் உண்டு, எந்த வேடத்தில் எப்படி இருப்பார்கள் என்பது அவர்களுக்கு மட்டும்தான் தெரியும். ஆனால் இருப்பார்கள்


அதுவும் கிட்டதட்ட 3 ஆயிரம் நாசிக்கள் அர்ஜெண்டினாவிற்கு தப்பினார்கள்.


அதில் ஹிட்லரும் இருக்கலாம் எனும் செய்திகள் அவர்களை உறங்கவிடவில்லை


அதனால் அர்ஜெண்டினா மீது கூடுதலாக ஒரு கண் வைத்த்தார்கள்.


இந்நிலையில்தான் ஒருவன் என்னை விடாமல் துரத்துகின்றான் என்றொரு யூதரிடம் வந்து நிற்கின்றாள் அவரின் மகளான சில்வியா.


"யாரடா அவன் என் மகளை விடாமல் துரத்துவது? யூதப்பெண்ணை யூதனுக்குத்தான் கொடுப்போம். உங்களுக்கும் எங்களுக்கும் பொருந்தாது.


இஸ்ரேல் வேறு அமைந்தாயிற்று, நாங்கள் அங்கு சென்றாலும் சென்றுவிடுவோம்


நீ வேறு அர்ஜெண்டினா அழகியினை தேடிகொள் என அவனுக்கு போதித்துவிட்டு வரலாம் என சிந்தித்தார் சில்வியாவின் தந்தை.


 

தொடரும்...






 


 

Sunday, July 16, 2017

அடால்ப் ஈச்மென் Vs மொசாத் : 01



20032076_10209705692014181_5952488605801486002_n.jpg


கடந்த 500 வருடத்தில் உலகம் கண்ட பெரும் கொடூரன் என்பது ஹிட்லருக்கு இடபட்ட முத்திரை அடையாளம். இன்னும் 500 வருடத்திற்கு அவர்தான் உலக அயோக்கியன் எனும் அளவிற்கு அவன் யூத அழிப்பு வரலாறு ஆயிற்று


செங்கிஸ்கான், தைமூருக்கு பின் மிக பெரும் கொடூர மனிதனாக உலகம் அவனைத்தான் சொல்கின்றது


ஒரு சிறந்த ஓவியன் ஹிட்லர், உணவில் கூட சுத்த சைவம். ஆனால் மகா திறமைசாலி அதற்குமேல் நாட்டுபற்றாளன். முதல் உகலப்போரில் சாதாரண சிப்பாய், அதன் பின் நாட்டிற்கு நடக்கும் அநீதிகளை பார்க்கிறார் அதில் சில உண்மையும் இருந்தது.


ஆசியா,ஆபிரிக்கா,லத்தீன் அமெரிக்கா,ஆஸ்திரேலியா, நியூசிலாந்து வரை பாருங்கள் ஜெர்மனியின் காலணி என ஒன்று காட்டமுடியுமா? நிச்சயம் முடியாது தானுண்டு தன் தேசமுண்டு என இருந்தநாடு.


ஆனால் அவர்களும் சில காலணிகளை அமைக்க முயற்சிக்கும் பொழுது மொத்த ஐரோப்பாவும் ஜெர்மனை கொத்தி எடுத்து, காலணி என்பது ஒன்றுமல்ல வியாபாரம் எனும் பெயரில் சுரண்டுவது


ஜெர்மனிக்கும் வியாபார ஆசை வந்தது, எந்திரம் முதல் சகலமும் விற்கலாம் என எண்ணினார்கள் , அன்றைய துருக்கியினை ஐரோப்பியரால் வீழ்த்தமுடியவில்லை, மிக பரந்த வலுவான சாம்ராஜ்யம் அது


ஜெர்மன் அவர்களோடு உறவாடி பெர்லின் பாக்தான் ரயில் விட முயற்சித்தது, அது வெற்றியாகியிருந்தால் ஜெர்மன் அன்றே வளர்ந்திருக்கும், துருக்கிக்கும் நல்ல பலன். விடுமா பிரிட்டனும் பிரான்சும்?, ஒரே சிக்கல் ரயில் சில நாடுகள் வழியே செல்லவேண்டும்


இந்த திட்டத்தை குழப்பத்தான் ஜெர்மன் கூட்டாளியான ஆஸ்திரிய இளவரசனை எவனோ சுட்டு கொன்ற்ய் சண்டை வெடித்து முதல் உலகப்போரானது


பிரிட்டனும், பிரான்சும் ஜெர்மனை தோற்கடித்தன , துருக்கிய சாம்ராஜ்யமே அழிக்கபட்டது, ஜெர்மனை குறிவைத்து அடித்தார்கள், இனி எழும்பவே கூடாது என திட்டமிட்டு அடித்தார்கள்.


இன்றைய சிரியா,ஆப்கன் அளவிற்கு ஜெர்மனை சீரழித்தன, அதன் வளமான பகுதிகளை மற்றநாடுகள் பறித்தன, அவ்வளவு ஏன் அதற்கு மேலும் ஏராளமான வட்டிபணம் ஜெர்மன் கட்டவேண்டி இருந்தது. (உலகை நாங்கள் ஆளலாம் ஜெர்மன் எப்படி ஆளலாம் என்பது அவர்கள் எண்ணம்)


உண்மையான குடிமகனுக்கு வரும் கோபம் ஹிட்லருக்கும் வந்தது, உற்று கவனித்தான் அந்நாட்டு யூதர்களுக்கு எந்த கவலையும் இல்லை. பணக்காரர்களாய் இருந்தனர் ஆனால் இஸ்ரேல் மற்றும் ஜெருசலேம் கனவிலேதான் உழைத்தனர், அவர்கள் அப்படித்தான்.


அதற்கு முன் எல்லா தேசத்திலும் அடிபட்ட இனம்தான் யூத இனம், மிக சரியாக 50 வருடத்திற்கொருமுறை எங்காவது வாங்கிகட்டுவார்கள், அல்லது கொல்லபடுவார்கள், அப்பொழுதுதான் ரஷ்யா அடித்து முடித்திருந்தது.


காரணம் அவர்கள் ஜீன்கள் அப்படி, தொழில்செய்வது அப்படி, சாதாரணமாக தொடங்குவார்கள் ஆனால் கடுமையாக சம்பாதிப்பார்கள், பின்னர் வட்டி, பின்னர் அடமானம் கொஞ்சநாளில் ஏரியாவை வளைப்பார்கள், ஆனால் கனவெல்லாம் ஜெருசல்மில்தான் இருக்கும், சம்பாதிக்கும் நாடு கண்ணுக்கு தெரியாது, அதோடு ஒட்டவும் மாட்டார்கள்.


இதோ கேரளாவில் கூட 2000 வருடமாக வாழ்ந்தார்கள், இஸ்ரேல் உருவாக்கபட்டவுடன் ஓடியே போய்விட்டார்கள், வளர்ந்த நன்றி, சோறுபோட்ட நன்றி எதுவுமே அவர்கள் இனத்திற்கு வராது, சொர்க்கத்தில் இருந்தாலும் எருசலேம் என சொன்னால் உடனே கிளம்புவார்கள்


புரியும்படி சொன்னால் முன்பு பர்மாவில் செட்டியார்கள் செய்ததை அவர்கள் ஐரோப்பாவில் செய்தார்கள், பின்னாளில் செட்டியார்கள் பர்மாவில் பட்டதை இவர்கள் அங்கு அடிக்கடி பட்டார்கள்.


நாடு நாசமாகிறது என ஹிட்லர் கவலையுற, யூதர்கள் பல வங்கிகளை நடத்தினார்கள் அனைத்து பணமும் எங்கு சென்றது என நினைக்கின்றீர்கள். நிலவங்கி என்றொரு புதிய வங்கி தொடங்கி பாலஸ்தீனை கொஞ்சம் கொஞ்சம் வாங்கிகொண்டிருந்தார்கள்.


ஆட்டோமன் துருக்கியர் வீழ்ந்த குழப்பமான பாலஸ்தீனம் அதற்கு வாய்ப்பளித்திருந்தது, ஓஹோ யூதர்கள் குறி இங்கிருக்கின்றதா? இந்த அரசு வீழத்தான் ஐரோப்பாவில் குழப்பமா? என அவனுக்கு பலத்த சிந்தனை வந்தது, அவன் யூதவெறுப்பு இங்குதான் தொடங்கிற்று


அவர்கள் ஜெர்மானியராக வாழ்ந்திருந்தால் ஹிட்லருக்குள் சாத்தான் வந்திருக்க வாய்ப்பே இல்லை, அவர்கள் யூதராகவே இருந்ததுதான் அவனுக்கு அவ்வளவு கோபம்


எங்கள் நாட்டில் சம்பாதித்துவிட்டு எங்கோ போய் கொட்டுகின்றார்கள் என்பது தான் ஹிட்லரின் கோபம், அது வெறுப்பாயிற்று. அதனையே மேடையில் முழங்கினான், மக்கள் அவனை தலைவனாக ஏற்றனர், ஹிட்லர் நாட்டின் தலைவருமானார்.


நிச்சயமாக அவனுக்கு அப்பொழுது யூதரை கொல்லும் திட்டமில்லை, நாடு முக்கியம் நாட்டை பாதுகாக்க ராணுவம் முக்கியம், அதற்கு யூதர்களின் சொத்துக்களை பிடுங்கினால் அது தேசிய சேவை என நினைத்தான்.


ஹிட்லர் எனும் பூதம் இன்றைய சிரியா நிலையிலிருந்த ஜெர்மனியை 7 ஆண்டுகளில் உலக வல்லரசாக்கிற்று. இனி எந்த அதிபரும் எந்த உலகிலும் செய்யமுடியாத சாதனை அது. மாபெரும் ராணுவம், தொழில்நுட்பம், பொருளாதாரம் என உலகின் நம்பர்1 நாடாக ஜெர்மனை மாற்றி காட்டினார் ஹிட்லர், ராட்சத சக்தியாக ஜெர்மனியை மாற்றி காட்டினார், ஏற்றுகொள்ளத்தான் வேண்டும்.


அதற்கு அவனின் பொருளாதார அமைச்சர் Horace Greeley பெரும் காரணம், அவர்தான் ஜெர்மனியினை தூக்கி நிறுத்தினான் ஹிட்லரின் தேர்வு அப்படி மிக சரியாக இருந்தது


வல்லரசானதும் தன் ஆட்டம் தொடங்கினார் ஹிட்லர். அதன் பின் இழந்த பகுதிகளை மீட்டார், திடீரென பலம்பெரும் இந்தியா (ஒருவேளை பெற்றால்) காஷ்மீர், கச்சதீவு, கயிலாயமலை என மீட்டால் எப்படி இருக்கும், பாகிஸ்தானை முடக்கி, சீனாவை ஓடவிட்டு, ராஜபக்ஸேயையும் அந்த புத்ததுறவிகளையும் புழல் சிறையில் போட்டால் எப்படி இருக்கும் நமக்கு?, அப்படித்தான் ஜெர்மானியரும் ஹிட்லரை கொண்டாடி கடவுளாக்கினர்.


அப்படியே ஹிட்லர் ஒரு கொசுகடியிலோ அல்லது விபத்திலோ அல்லது உணவு செரிக்கமலோ, பாத்ரூமில் தவறிவிழுந்தோ, ஈவாபிரானோடு காதல் தகறாறில் தற்கொலையோ செய்து செத்திருந்தால் இன்றுவரை அவன் தான் மாபெரும் உலக ஹீரோ, ஆனால் அவன் உள்ளே இருந்த ஜெர்மானிய உணர்வு அவனை ஆட்டுவித்தது.


பிரிட்டனும், பிரான்சும், ஸ்பெயினும், போர்ச்சுகல்லும் ஆளும் உலகை ஜெர்மனும் ஆண்டால் என்ன?


பிரிட்டனை பிடித்தால் இலவசமாக இந்தியா உள்பட 70 நாடுகள்,பிரான்சை பிடித்தால் கூட 40 நாடு இவ்வளவுதான் உலகம், அமெரிக்கா ஒரு கொசு என்று திட்டமிட்டு போலந்திலிருந்து கணக்கை தொடங்கினான்.


ஐரோப்பா உனக்கு, ஆப்ரிக்கா இத்தாலிக்கு , கிழக்காசியா மற்றும் அமெரிக்கா எனக்கு என கூட்டணி சேர்ந்தது ஜப்பான், போர் வெடித்தது


ஆடாமல் ஜெயித்தான் ஹிட்லர், மிரட்டலிலே நாடுகளை பிடித்தான், அவன் பலம் அப்படி இருந்தது


அவன் பிடிக்கும் நாடுகளில் எல்லாம் யூதர்கள் இருந்தனர், விரட்டினால் அடுத்த நாட்டிற்கு ஓடினர், அங்கும் பிடித்து அவர்களை விரட்டும் கடினவேலை ஹிட்லருக்கு. அவர்களின் முகத்தை அல்ல நிழலை கூட பார்க்க அவன் விரும்பவில்லை, அவர்கள் ஜெர்மானிய துரோகிகள்.


இந்த கடும் பிரச்சினையை பற்றி தளபதி ஹிம்லர் மற்றும் இன்னொரு அதிகாரியுடன் ஆலோசித்தான், அதாவது அவ்வப்போது ஐரோப்பியர் யூதர்கள் மேல் தீபாவளி கொண்டாடுவது வாடிக்கைதான், சகலரும் அடித்துவிட்டு ஆட்டோவில் போட்டு யூத இனத்தை ஹிட்லரிடன் அனுப்பியிருக்கின்றார்கள், பீரியாகத்தான் இருக்கிறார் ஹிட்லர் விடுவாரா? எப்படி அடிக்கலாம் என்றுதான் திட்டமிட்டார்


அவர்களை மொத்தமாக கொன்றுவிடலாம் என்றான் அந்த அதிகாரி, ஹிட்லரும் அந்த அளவு மக்களை வெறியேற்றி வைத்திருந்தார், தலையாடிய ஹிட்லர் உத்தரவிட்டார், பொறுப்பு உடனே அந்த இளம் அதிகாரிக்கு கொடுக்கபட்டது, உலகம் இனி நமது, அது யூதரில்லாத உலகமாக உங்கள் காலடியில் வைக்கிறேன் என்று சபதமும் செய்தார் அதிகாரி.


சிறந்த நிர்வாகியான ஹிட்லர் ஒரு லட்சம் யூதரை கொன்றால் உனக்கொரு மெடல் என அறிவித்துவிட்டு அதிகாரமும் கொடுத்தான்.


ஹிட்லர் வாழ்க எனும் மங்கள கீதத்துடன் ஜெர்மனியின் "யூத ஒழிப்புதுறை" செயல்பட ஆரம்பித்தது, சி.இ.ஓ நிச்சயமாக அந்த 35 வயது அதிகாரி.


செங்கிஸ்கான், தைமூர், செவ்விந்திரை அழித்தல் இம்மூன்றிற்கு பின் வரலாறு காணாத படுகொலையை நிகழ்த்தி காட்டினான் அந்த அதிகாரி, அவன் பெற்ற மெடல்களின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா?


40 மெடல்கள், அதாவது 40 லட்சம் யூதர்களை கொன்றதற்காக. உண்மை எண்ணிக்கை இன்னும் இருக்கலாம்.


எப்படி எல்லாம் கொல்லமுடியும் என அவன் மிக கொடூரமாக சிந்தித்தான், அந்த விஷயாவு கொட்டகை எல்லாம் இவன் சிந்தனையிலே உதித்ததுதான்.


அவன்தான் அடால்ப் ஈச்மென்.


ஒருவழியாக யுத்தம் முடிந்து ரஷ்யபடைகள் (இதுதான் ரஷ்யா என்றும் நேருக்கு நேர், அமெரிக்கா தொழில்நுட்பம் பின்னால் ஒளிந்துகொள்ளும் ) ஹிட்லரின் முக்கால்வாசி எரிந்த உடலையும்,ஹிம்லரின் முழு உடலையும் கைபற்றியபொழுது ஈச்மென்னை காணவில்லை, யுத்தத்தில் கொல்லபட்டிருக்கலாம் என விட்டுவிட்டார்கள்.


ஹிட்லரை விட ஈச்மேன் தான் பிரதான குற்றவாளி என்பதை ஐரொப்பா உணர்ந்திருந்தது


1948ல் இஸ்ரேல் உருவாக்கபட்டு, மொசாத்தும் தொடங்கபட்டது, முதல்வேலையாக ஈச்மெனை ரகசியமாக‌ தேடினார்கள், அவர்களுக்கு வலுத்த சந்தேகம் இருந்தது. ஹிட்லரும் தப்பித்தான் என்பதும் அவர்கள் வாதம்.


இஸ்ரேல் அறிவிக்கபட்ட மறுநாள் யுத்தம், ஓயாத யுத்தம் அந்த யுத்தம் நடுவிலும் அவர்கள் வெறி ஈச்மென் மேலேயே இருந்தது, குறி வைத்து தேடினார்கள் அவ்வளவு வன்மம்


உலகம் ஈச்மென் செத்துவிட்டதாக நம்பினாலும் யூத இனம் ஹிட்லரும், ஈச்மெனும் சாகவில்லை என்றே சொல்லிகொண்டிருந்தது, அவர்களுக்கு எங்கள் கையால்தான் சாவு என உறுமிகொண்டிருந்தது


உலகம் ஈச்மென் செத்துவிட்டதாக நம்பிகொண்டிருந்தபொழுது ஈச்மென் வளர்ந்த தாடியுடனும் குடும்பத்தாருடனும் இத்தாலி அகதிகள் முகாமில் தங்கி இருந்தான், யுத்த கைதியும் அல்ல அகதி.


அவனுக்கும் அவன் மனைவிக்கும் மட்டுமே அவன் ஈச்மென் என தெரியும், மற்றவர்களுக்கு ஒரு பிச்சைக்கார அகதி, கூலி வேலைக்காரன், இத்தாலியரின் தின கூலியில் வாழ்ந்துகொண்டிருந்தான்.


ஆனால் மொசாத அமைக்கபட்டவுடன் அவனது ராணுவ மூளை உஷாரானது, என்ன இருந்தாலும் ஜெர்மானியன் அல்லவா? யூத மூளை என்னவென்று நன்றாக உணர்ந்தவன், முடிவெடித்தான்


இனி ஐரோப்பா தனக்கு பாதுகாப்பான இடம் அல்ல, தப்ப வேண்டும்


தொடரும்...




 


Friday, July 14, 2017

யாருக்கெல்லாம் இந்த ஈச்மென் கதை வேண்டும்





Image may contain: 1 person, text

மொசாத்தின் மிக அட்டகாசமான சாதனைகளில் ஒன்று அர்ஜெண்டினாவிலிருந்து ஹிட்லரின் கூட்டாளியான ஈச்மென் என்பவரை கோழி போல அமுக்கி இஸ்ரேலுக்கு கொண்டுவந்தது


ஜெர்மனியில் தொலைந்த ஒருவனை, எங்கெல்லாமோ தேடி அதுவும் அர்ஜெண்டினாவின் கிராமத்தில் மிக சரியாக அடையாளம் கண்டு, ஹிட்லரின் மறைமுக நட்புநாடான அர்ஜெண்டினாவிலிருந்து குடிநுழைவு துறையினை ஏமாற்றி கொண்டுவருவது மிக பெரும் விஷயம்


ஏன் 100% முடியவே முடியாத விஷயம். ஒரே வாய்ப்பு அவரை அர்ஜெண்டினாவிலே சோலியினை முடிப்பதுதான். ஆனாலும் நாங்கள் யார்? என உலகிற்கு காட்ட அந்த சாகசத்தை செய்தது மொசாத்.





யூத இனத்தை கொன்றவனை எங்கிருந்தாலும் தூக்கி வந்து யூத பூமியிலே கொன்று பழிதீர்ப்போம் என சபதமிட்டு, அதனை வென்றும் காட்டிய சாகசமது.

தேடுதல் , உளவு, இரையினை கண்டும் பதுங்கிய நுட்பம், ராஜ தந்திரம் , துணிவு இன்னபிற விஷயங்களுக்கெல்லாம் மொசாத் எப்படி பெயர்பெற்றது என்பது அதில்தான் உலகிற்கே விளங்கியது

அதனை பற்றி எழுதலாம் என்றிருக்கின்றோம், அதற்கு முன்னால் இந்த குஷ்பூ தொடரை முடித்துவிடலாம் என்றால் ஒரு தகவலுமில்லை. அப்படியே விட்டுவிடவும் முடியவில்லை,

அது பிறவபெருங்கடலை நீந்தி கடக்கும் பெரும் பொறுப்பான விஷயம், அது இருக்கட்டும்

இப்பொழுது யாருக்கெல்லாம் இந்த ஈச்மென் கதை வேண்டும், சொல்லுங்கள்..