Wednesday, September 27, 2017

தீபா மீண்டும் திருமணமா?

ஜோதிடர் அறிவுரையால் முதல்வர் கனவு: மாதவனுடன் தீபா மீண்டும் திருமணமா? : செய்தி
அதாவது தமிழகத்திற்கு கிட்டதட்ட 50 ஆண்டுகாலம் உழைத்துவிட்டு, பல தியாகங்கள் செய்த தீபா என்பவர் நான் ஏன் இன்னும் முதலமைச்சராக முடியவில்லை என்ற விரக்தியில் ஜோதிடரை அணுகினாராம்
அந்த ஜோதிடரோ, உங்கள் மக்கட் பணியில் ஒரு குறைவுமில்லை, மணாளனை பிரிந்த ஜாதக தோஷமே காரணம். அதனால் ஜெயா சமாதி முன் திருமணம் மட்டும் செய்தால் தோஷம் தீரும். நீர் நிச்ச்சயம் முதல்வராவாய் என சொல்லிவிட்டாராம்.
அப்படியே ஜெயா சமாதி முன் இருவரும் திருமணம் செய்ததாக செய்திகள் வருகின்றன.
( சாந்தி முகூர்த்தமும் அந்த சமாதி முன் நடந்ததா என்பது பற்றி ஒரு செய்தியுமில்லை..)
இன்னும் என்னென்ன கூத்துக்களை இந்த தியாக தம்பதிகள் செய்யுமோ தெரியாது.
இந்த‌ தீபா, அந்த சசிகலா குடும்பத்தில் யாரையாவது வேலைக்காரியாக அமர்த்தினால் கூட பிரயோசனம் உண்டு, அத்தை கண்ட வித்தை அதுதான்.
ஏம்மா தீபா, ஜெயா எப்படி செத்தார் என எல்லோரும் விசாரித்துகொண்டிருக்க, ஜெயா போல எப்படி ஆட்சியினை பிடிப்பது நீங்கள் ஜோசியம் பார்த்துகொண்டிருக்கின்றீரா?
இதுதான் அத்தை எப்பொழுது சாவாள், சாவிகொத்து எப்பொழுது கைக்கு வரும் என்பதோ?

பணமதிப்பு இழப்பு

பணமதிப்பு இழப்பு நடவடிக்கை மற்றும் ஜி.எஸ்.டியால் தான் இந்திய பொருளாதாரத்தில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது : யஷ்வந்த் சின்கா
சொல்லியிருப்பவர் யார்? பாஜகவின் மூத்த தலைவர்.
ஒரு பக்கம் புதிய "இந்தியா பிறந்திருக்கின்றது" என மோடி சொல்ல, இன்னொரு பக்கம் இவரோ, நன்றாக‌ இருந்த "இந்தியா செத்து கொண்டிருக்கின்றது" என சொல்லிகொண்டிருக்கின்றார்.
பாஜகவின் மூத்த தலைவரே தங்கள் ஆட்சியில் இந்திய பொருளாதாரம் வீழ்ச்சியடைந்திருப்பதை ஒப்புகொள்கின்றார்.
எல்லா அரசும் தேர்தல் நெருங்கும்
நேரத்தில், "இது எங்கள் சாதனை எங்களுக்கு இன்னொரு வாய்ப்பு தாருங்கள்" என கேட்பார்கள்,
யஷ்வந்த் சின்ஹாவோ "இது எங்கள் வேதனை, இனி எங்களுக்கு வாக்கு அளிக்காதீர்கள்.." என்பதனை சொல்லிகொண்டிருக்கின்றார், நல்ல மனிதர்.

தரம் இழந்துவிட்டார் ஸ்டாலின்

அறிவாலயத்தில் ஸ்டாலினை சந்தித்தார் பேரரிவாளனின் தாயார் அற்புதம்மாள்.
ராஜிவ் கொலையினையொட்டி திமுக தடை செய்யபடும் அளவிற்கு சென்றதும் , எப்படியோ தப்பி பிழைத்ததும் வரலாறு.
திமுகவின் மறுபிறப்பு அது. அன்று திமுக சுமந்த பழியும் , அந்த கலவரத்தில் திமுகவினரின் சொத்துக்கள் கொழுத்தபட்டதெல்லாம் கண்ணீர் நினைவுகள்.
ராஜிவ் கொலைநடந்த காலங்களில் திமுக நெருப்பாற்றினை கடந்துகொண்டிருந்தது.
அப்பொழுது ஒன்றுமே தெரியாத கன்னிபோல சென்னையில் சுற்றிகொண்டிருந்தவர் அந்த பேரரிவாளன்.
வாக்கு அரசியலுக்காக எவ்வளவு தரம் இழந்துவிட்டார் ஸ்டாலின்?
அப்படியே இனி பாஜகவினை மகிழ்விக்க அவர் கோட்சே குடும்பத்தையும் சந்திக்கும் வாய்ப்பு நெருங்கிகொண்டிருக்கின்றது.

3 மாதத்தில் விசாரணை அறிக்கை

ஜெ., மரணம்: 3 மாதத்தில் விசாரணை அறிக்கை சமர்பிக்க தமிழக அரசு உத்தரவு!
பாஸ்தீனம் மீதான படுகொலைகளை இஸ்ரேலே விசாரிக்கும் , முள்ளிவாய்க்கால் சர்ச்சைகளை சிங்கள அரசே விசாரிக்கும் என்பது போன்ற வரிசையில்
ஜெயலலிதா மரணத்தை தமிழக அரசே விசாரிக்கும் எனபதும் ஒன்று.

ஜெயலலிதா எப்படி இறந்தார்

இந்த ஜெயலலிதா எப்படி இறந்தார் என்ற சர்ச்சை மறுபடியும் பெரிதாக வெடிக்கின்றது.
ஆளாளுக்கு ஒன்றை சொல்லிகொண்டிருக்கின்றார்கள். ஒருவர் பார்த்தேன் என்கின்றார், இன்னொருவர் பார்த்தவனை பார்த்தேன் என்கின்றார்
ஜெயாவின் காலை காணவில்லை, இன்னும் எதனை எல்லாமோ காணவில்லை என்றொரு கும்பல் சொல்லிகொண்டிருக்கின்றது.
ஜெயா உடல்நிலை ஒன்றும் அதற்கு முன்பு அவ்வளவு நன்றாக இல்லை
2015களிலே அவர் நடக்கும்பொழுதே தடுமாறினார். பல கூட்டங்களை வீடியோ கான்பெரன்ஸ் முறையில்தான் நடத்தினார்
அவர் நெடுநாள்கள் காணாமல் போக, கலைஞரே ஜெயாவிற்கு என்ன ஆயிற்று என கேட்ட காட்சிகளும் உண்டு.
அந்த அளவிற்கு அவர் உடல்நிலை அன்றே கெட்டுபோய் இருந்திருக்கலாம்.
அவருக்கு சர்க்கரை நோய், உடல்பருமன் உட்பட ஏராளமான நோய்கள் இருந்திருக்கின்றன, மூட்டு பிரச்சினையிலும் சிக்கியிருக்கின்றார் , அவரின் BMI அளவு ஆபத்தானது என அன்றே எச்சரித்தார்கள்.
75 வயதிற்கு மேல் வரவேண்டிய நோய்கள் எல்லாம் 60 வயதிலே வந்திருக்கின்றன.
ஒன்று உறுதியாக சொல்லலாம்
சசிகலாவினை மீறி அவரால் ஒரு முடிவினையும் எடுக்க முடியாதபடி சிக்கியிருந்தார். சசிகலா அனுமதியின்றி அவர் செய்யகூடிய ஒரே விஷயம் சாப்பாடு
ஆக இனிப்புகளை அள்ளி அள்ளி விழுங்கியிருக்கலாம், ஜெயா இனிப்பு விருப்பமுள்ளவர் என்பது முன்பே வந்த செய்தி.
சசிகலா ஒப்புதலின்றி அவர் வாழ்வில் அவருக்கு இருந்த ஒரே சந்தோஷம் அதுவாக இருந்திருக்கலாம்
கட்சி, அரசு என எல்லாவற்றிலும் ஜெயாவிற்கு கடிவாளமிட்ட சசி, அவரின் உணவிலும் மருந்திலும் கட்டுபாடை விதித்திருந்தால் இன்று இப்பிரச்சினை வந்திருக்காது.
கட்சிமேலும், ஆட்சி மேலும் காட்டிய அதீத அக்கறையினை அவர் ஜெயலலிதா உடல்நலம் மேல் காட்டவில்லை.
தனக்கு இருந்த ஒரே சுதந்திரமான சந்தோஷத்தை ஜெயா தவறவிடவுமில்லை. அதுவே அவருக்கு வினையாயிற்று.

எச்.ராஜா மணி விழா

எச்.ராஜா மணி விழா, எடப்பாடி பழனிசாமி, ஓ.பி.எஸ் மு.க.ஸ்டாலின் நேரில் வாழ்த்து
டெங்கு உட்பட பல பிரச்சினைகளில் தமிழகம் சிக்கி தவிக்கும்பொழுது பொறுப்பான பதவியிலிருக்கும் முதல்வர், துணை முதல்வர், எதிர்கட்சி தலைவர் எல்லாம் எங்கு அணிவகுத்திருக்கின்றார்கள்?
ஸ்டாலினை பார்த்து பன்னீர் சிரித்தார் என்பதையே தாங்க முடியாத சசிகலா, இவர்கள் மூன்றுபேரும் சேர்ந்து சிரிப்பதை கண்டால் எப்படி மயங்கிவிழுவாரோ?
ஆக எச்.ராசா மணிவிழாவிற்கு வந்தாயிற்று, அடுத்து எங்கே?
அது சங்கராச்சாரி விழாவாக இருந்தால் கூட இனி ஆச்சரியம் ஏதுமில்லை.
பெரியாரை தாறுமாறாக விமர்சிக்கும், திராவிட வெறுப்பு ராசாவின் வாசலுக்கே திராவிட கட்சிகளின் தலைவர்கள் சென்றபின் சொல்வதற்கு ஒன்றுமேயில்லை.

ஜெ., சிகிச்சை பெற்ற போது

ஜெ., சிகிச்சை பெற்ற போது உடன் இருந்தவர்கள் யார் என்பதை தெளிபடுத்த வேண்டும்: தமிழிசை
வெங்கையா நாயுடுவும் ஆளுநரும்தான் அடிக்கடி சென்று பார்த்தார்கள் மேடம். இரண்டுமே உங்கள் கட்சிதான்.
அவர்கள்தான் விளக்க வேண்டும், அதனைத்தானே கேட்கின்றீர்கள், நல்லது.
என்ன இருதாலும் துணை ஜனாதிபதி, ஆளுநர் மீதே நெற்றிகண்ணை திறக்கும் தமிழிசையின் துணிச்சல் யாருக்கு வரும்?
என்ன இருந்தாலும் தமிழச்சி அல்லவா? அந்த வீரம் இருக்குமல்லவா?