Tuesday, May 2, 2017

குஷ்பு வருகையால் ஸ்பானிய நாட்டில் ஆயிரம் மலர்கள் மலர்ந்தது....




Image may contain: 1 person, selfie, close-up and indoor


குஷ்பூ ஸ்பெயின் சென்றிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன, ஆக ஸ்பெயின் திருவிழா கோலம் பூண்டிருப்பது நிச்சயம்.


பிரபல கால்பந்து வீரர் மெஸ்ஸி விளையாடும் ஸ்பெயினின் பார்சிலோனா அணிக்கு கூடும் கூட்டத்தை விட, குஷ்பூவிற்கு கூட போகும் கூட்டம் நிச்சயம் பெரிது


சும்மாவே ஐரோப்பா பாதுகாப்பு சிக்கலில் இருக்கின்றது, எமது கவலை எல்லாம், இம்மாதிரி திருவிழாவில் ஏதும் தீவிரவாத தாக்குதலை சண்டாளர்கள் நடத்த திட்டமிட்டுவிட கூடாது என்பதுதான்.




எந்த தீவிரவாதி அப்படி தாக்குதல் நடத்திவிடுவான்? குஷ்பூவினை பார்த்துவிட்டால் இந்த உலகம் அழகால் நிரம்பியது என்ற எண்ணம் அவனுக்கு வந்து நிச்சயம் திருந்துவான், அதனால் ஆபத்து அறவே இல்லை


மேலாக‌ நாம் வணங்கும் புனித அந்தோணியார் ஸ்பெயின் நாட்டு பாதுகாவலராக கத்தோலிக்க திருச்சபையால் அறிவிக்கபட்டிருக்கின்றார், அதனால் குஷ்பூவின் ஸ்பெயின் பயணம் மகிழ்வாக அமைய அவரிடம் மன்றாடலாம், அவர் நிச்சயம் பாதுகாப்பார்,


புண்ணியங்கள் பல செய்திருக்கும் ஸ்பெயின் நாடு, இப்பொழுது நடமாடும் அதிசயத்தையும் பார்த்துகொண்டிருக்கின்றது.


தமிழகம் பெற்ற இன்பம், பெறுக வையகம்















திரையுலக துணுக்ஸ்

கீர்த்தி சுரேஷ் நடித்த படம் ஒன்று டிவியில் ஓடிகொண்டிருக்கின்றது, அம்மணி சிரிக்கும்பொழுதெல்லாம் நண்பர்கள் Babu Rao, Chandran Kannan தான் நினைவுக்கு வருகின்றார்கள்.


முன்பொருகாலத்தில் டென்னிஸ் வீராங்கனை ஸ்டெபிகிராபின் ரசிகன் ஒருவன் அவரின் போட்டியாளரான‌ மோனிகா செலஸினை கத்தியால் குத்தினான்


நமது நண்பர்களிடம் கத்தி எல்லாம் இல்லை, ஆனால் முகநூல் கணக்கு சிக்கிவிட்டது அவ்வளவுதான் வித்தியாசம்




எவ்வளவு குதறியிருக்கின்றார்கள் என்பது கீர்த்தி சுரேஷ் சிரிக்கும் பொழுதெல்லாம் நினைவுக்கு வந்து தொலைக்கின்றது


அவர்வேறு அடிக்கடி அதே மாதிரி சிரித்துகொண்டே இருக்கின்றார்..பாவம் அந்த பெண், ஊரில் என்ன நடக்கின்றது என்றே தெரியாது போல..






கொசுறு


"கேப்டனின் உடல்நிலையைப் பற்றி யாராவது கேள்வியெழுப்பினால் கன்னத்திலேயே அறையுங்கள்" - பிரேமலதா


அடுத்து அவர்களிடம் வாக்கு கேட்க செல்லும் பொழுது பிய்ந்த செருப்பால் அவர்கள் திருப்பி அடிப்பார்கள், பரவாயில்லையா அம்மணி?








இந்தியாவில் வெள்ளையர்பாணி கல்விகூடங்கள் ..

இந்தியாவில் முறையான ஆட்சி 1800களுக்கு பின் அமைக்கபட்ட பின்னரே வெள்ளையர்பாணி கல்விகூடங்கள் திறக்கபட்டது, .


இந்தியர்கள் படித்து கல்வியில் முன்னேறி பின்னர் உலகை முன்னேற்றவேண்டும் என்ற உயர்ந்தநோக்கம் எல்லாம் இல்லை, வெள்ளையர்களின் ஆட்சிக்கு உதவ பணியாளர்கள் வேண்டும், வெள்ளையர்களின் பராக்கிரமம் குழந்தைகளுக்கு தெரியவேண்டும் அவ்வளவுதான்.


வெள்ளையர்களும், அவர்களால் பயிற்றுவிக்கபட்ட இந்திய‌ உயர்சாதியினரும் பாடம் நடத்துவார்கள், பெரும்பாலும் மொழி மற்றும் அடிப்படை கல்வி பெரிய கல்வி வேண்டுமென்றால் லண்டனுக்கே செல்லவேண்டும், லண்டனே சொர்க்கம். அமெரிக்கா ஆஸ்திரேலியா எல்லாம் அப்பொழுது தத்தி பழகும் தேசங்கள்.


என்னதான் இந்தியாவினை வெள்ளையர் அடக்கி ஆண்டாலும் ஒருவரை மட்டும் அவர்களால் அடக்க இயலவில்லை, அவர்தான் இந்திய வெயில். அவருக்கு பயந்தார்கள் ஓடினார்கள்,


இந்தியாவின் மிஸ்டர் வெயில் பலரை விரட்டியவர், ஆப்கன் மன்னர்களிலே பலர் அவருக்கு பயந்து ஓடியதாக செய்திகள் உண்டு, இன்னும் கொஞ்சம் உக்கிரமான வெயில் என்றால் ரஷ்ய குளிர் போல இந்தியாவிற்கு இயற்கை பாதுக்காப்பு ஆகியிருக்கும், ஆனால் இந்தியாவில் எல்லாமே அரைகுறை..


சிறிய பதவியில் இருப்பவர்கள் ஊட்டி,காஷ்மீர்,டார்ஜிலிங் என ஓடினார்கள், பெரும் பதவியில் இருந்தவர்கள் ஐரோப்பாவிற்கு அலறி அடித்து சென்று சுவிஸ் மலையில் அடைக்கலமானார்கள்.
எல்லோரும் சென்றுவிட்டால் யார்பணியாற்றுவது? அறிவித்தார்கள்


மேமாதம் முழுக்க விடுமுறை, கல்வி,நீதி துறை என முக்கிய துறைகளுக்கெல்லாம் விடுமுறை அளித்துவிட்டு 1 மாத ஓய்வில் குளிர்பிரதேசங்களில் ஒவருக்கு 8 பந்து ஒரு இன்னிங்க்ஸ் 10 நாட்கள் என டெஸ்ட் கிரிக்கெட் வளர்க்க தொடங்கினார்கள்.


பாருங்கள் கிரிக்கெட்டும் இந்தியர்களுக்காவே வளர்த்தார்கள்.


அன்றிலிருந்து இந்திய மாணவர்களுக்கு மேமாதம் என்பது கடும் கொண்டாட்டம், மாதம் முழுக்க விடுமுறை என்பதாலே பள்ளிக்கு சென்றவர்களும் உண்டு. மாணவர் உலகில் அது அவர்களுக்கான மாதம். உற்சாகம், உல்லாசம், கொண்டாட்டம்.


தூரத்து உறவினர்கள் வீட்டிற்கு செல்லுவது, தங்களின் வேர்களை கண்டுகொள்வது, கிராமங்களில் தாத்தா பாட்டி வீட்டுக்கு வரும் குழந்தைகள் புது நட்புக்களை பெறுவது என அக்குழந்தைகளின் உலகம் வித்தியாசமானது.


கிராம மாணவர் நிலை இன்னும் கொண்டாட்டம் தெருப்புழுதி,அழுக்கு உடை, ரத்த காயங்கள் என குழந்தைகள் வேறு அவதாரம் எடுப்பார்கள். ஆடும் மாடும் கூடும் குளத்தில் தான் குடிநீர், எதைஎல்லாமோ சாப்பிடுவது என அவர்கள் சுற்றி திரிந்தாலும் அவர்களை அவை பாதிப்பதில்லை, உயிர்கொல்லி நோய்கள் எல்லாம் தாக்கியதில்லை.


சைக்கிள்,நீச்சல்,கூட்டாஞ்சோறு என மிக முக்கியமான விஷயங்களை படித்தார்கள், புது அனுபவங்கள் எல்லாம் பெறுவார்கள்


மே மாதம் அவர்களின் சமூக உறவை வளர்த்தது, இயற்கையுடன் அவர்கள் ஆடிய ஆட்டம் நோய் எதிர்ப்பு சக்தியை வளர்த்தது, குழுவாக ஆடிய மரம் ஏறுதல், வேட்டை இன்னபிற ஆட்டங்கள் எல்லாம் தைரியமும், தன்னம்பிக்கையும்,கூட்டு முயற்சியையும், வாழ்விற்கு மிக அடிப்டையான குணங்களை மனதிற்குள் வளரவைத்தது, சுருக்கமாக சொன்னால் உலகினை புரியவைத்தது.


இக்காலத்தின் மே மாத விடுமுறை மிக கொடுமையானது, மெக்காலே திட்டப்படி இன்றும் மேமாதம் விடுமுறைதான்,அதே வெயில்தான் எனினும் குழந்தைகளின் நிலை மகா மோசம்.


ஹைஜீனிக் சமூகம் இது, வெயிலிலோ,தெருவிலோ,அல்லது வேறு எங்குமோ குழந்தைகள் விளையாட விடுவதில்லை, ஷு இல்லாமல் தரையில் நடக்கவிடுவதில்லை, குடிநீர் கூட குளிர்சாதன பெட்டியின் நீர்தான், இல்லையென்றால் நோய் வந்துவிடுமாம்.


தாத்தாவிற்கும் பாட்டிக்கும், தாய்க்கும் தந்தைக்கும் அக்காலத்தில வராத நோய் பிள்ளைகளுக்கு மட்டும் வருமாம்!


விளையாட்டினை விடுங்கள், நீச்சல் வகுப்பு, இந்தி,பிரன்ஞ்,ஜப்பான் மொழி வகுப்பு,கம்பியூட்டர் வகுப்பு,இசை வகுப்பு, கராத்தே வகுப்பு, நாட்டிய வகுப்பு என வகுத்து வைத்து குழந்தைகளை வதைக்கும் கொடுமை ஏராளம்.


ஏரோப்பிளேன் ஓட்டும் வகுப்புகள் மட்டும் இன்னும் தொடங்கபடவில்லை.


இதை எல்லாம் விட பெரும் கொடுமை அடுத்த வருட முழு படிப்பினை மே மாதத்திற்குள் படிக்கவேண்டுமாம், பின்னர் அதனையே அடுத்தவருடம் முழுதும் படிக்கவேண்டுமாம். இதற்கெதற்கு விடுமுறை??


மாணவனின் நிலை டிவிடி டிஸ்கைவிட மோசம, எல்லாம் அவனில் பதியபடவேண்டும்.


பாவம் அவர்கள், உலகம் தெரிவதில்லை, சமூகம் புரிவதில்லை அதாவது சாபம் என விட்டுவிடலாம், தாய்வழி,தந்தைவழி உறவோ தெரிவது இல்லை சுய அடையாளமோ தெரிவதில்லை, தனது படிப்பு, தனது வாழ்க்கை, தனது சாவு இதை நோக்கியே பயிற்றுவிக்கபடுகின்றார்கள் .


விளைவு மிக,மிக சிறிய வயதிலே பெரிய கண்ணாடி அணிவிக்கின்றார்கள், சொந்த மொழி தவிர வேறு மொழிகள் படிக்கின்றார்கள். தொலைகாட்சியின் அனைத்து குப்பை நிகழ்வுக்கும், குப்பை உணவுக்கும் அடிமையாகி 16 வயதிற்குள் சர்க்கரைவியாதி, 20 வயதிற்குள் அல்சர் என உடல்நலம் தொலைக்கின்றார்கள்.


கிட்டதட்ட நாமக்கல் கோழிபணைகளின் பிராய்லர் கோழிகளை போல பள்ளிகளை விட்டு வெளிவருகின்றார்கள், ஏட்டுபடிப்பினை தவிர ஏதும் தெரிவதில்லை. உறவுகள் தெரிவதில்லை, சமூகம் புரிவதே இல்லை.


படிப்பினை தவிர ஏதாவது, உலக விஷயங்களை விடுங்கள், சொந்த குடும்பத்தினை பற்றிகேட்டாலே மிரண்டு முழிப்பார்கள்.
சிறிய பிரச்சினைகளுக்கும் உயிரை மாய்த்து கொள்ளும் மனசிக்கலுக்கு ஆளாகின்றார்கள், 40 வயதிற்குள் அனைத்து மருந்துகளின் பெயர்களும் அத்துப்படியாகின்றது, 60 வயதில் பிழைத்திருந்தால் தானக முதியோர் இல்லம் செல்வார்கள்


முடிந்தது வாழ்க்கை.


நாளை வேலைக்கு சென்று சம்பளம் வாங்க மட்டும் தெரியும் அவர்களுக்கு வாழ்க்கை என்றால் என்ன என்று வாழ தெரிவதில்லை, அந்தோ பரிதாபம்.


அன்று டி.வி இல்லை, சிமெண்ட சாலைகள் இல்லை, பெரும் பள்ளிகூடம் இல்லை, வீடியோ ஆட்டங்கள் இல்லை ஏகபட்ட இல்லை,


ஆனால் அக்கால குழந்தைகள் அனுபவித்ததில் 1000ல் ஒன்று கூட இக்கால குழந்தைகளுக்கு இல்லை. அவ்வகையில் நாமெல்லாம் கொடுத்துவைத்தவர்கள் மிக நிச்சயமாக சொல்லலாம்


படிப்பு மட்டும் வாழ்க்கை அல்ல, வாழ்க்கை எப்பொழுது மாறும், யாருக்கு என்ன வேலை என்பது ஆண்டவனுக்கே தெரிந்த ரகசியம். படிப்பும் தேவையே தவிர உலக அனுபவமும்,சமூக உறவும்,உற்சாகமான மனநிலையும் குழந்தைகளுக்கு மிக மிக அவசியம், அவைதான் அவர்களை வாழவைக்கும்.


1980 வரை மேமாதம் அனுபவித்த மாணவர்கள் கொடுத்து வைத்தவர்கள், இக்கால குழந்தைகள் வாத்து கூட்டமாய் மேமாதத்திலும் அடைத்துவைக்கபடுவதை கண்டால் பெருமூச்சே வருகின்றது.


மேமாதத்தில் இன்னொரு விசித்திரமும் உண்டு, அக்காலத்தில் நீதிபதிகள் வெள்ளையர்கள் மே விடுமுறையில் லண்டன் சென்றார்கள் அதனால் கோர்ட் விடுமுறை சரி ஏற்றுக்கொள்ளலாம், இன்று உள்ளூர் இந்திய நீதிபதிகளையும், உள்ளூர் வழக்கறிஞர் பெருமக்களையும் கொண்ட கோர்ட்டிற்கு ஏன்?


சும்மாவே ஒரு வழக்கு 3 தலைமுறை நடக்கிறது, விடுமுறை அவசியமா என நாம் கேட்டகூடாது , அது இந்திய நீதிதுறையின் முடிவு, அது தனித்துவம் மிக்கது, மேமாத வெயிலில் மக்களை அலைய வைக்ககூடாது என்ற உயர்ந்த எண்ணம் தவிர வேறு காரணம் இருக்க முடியாது, முடியவே முடியாது.


(உஷ்ஷ்ஷ் எப்படியெல்லாம் சமாளிக்கவேண்டி இருக்கிறது.)


எப்படியோ அக்கால இந்திய அடிமைகளின் குழந்தைகளுக்கு வெள்ளையன் கொடுத்த மேமாத சுதந்திரத்தினைகூட சுதந்திர இந்திய குழந்தைகள் பெறுவதில்லை என்பதே சோகம்

ராஜிவ் கொலை வழக்கு விசாரணை சி.பி.ஐ.,க்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு




Image may contain: 3 people, people smiling


ராஜிவ் கொலை வழக்கு விசாரணை சி.பி.ஐ.,க்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு


விசாரியுங்கள், நன்றாக விசாரியுங்கள்


ராஜிவ் கொலையின் மூலம் எது? அமைதிபடையினை இலங்கைக்கு அனுப்பிய விவகாரம்





அங்கு இந்தியபடைகள் புலிகளால் இறந்துகொண்டிருக்கும் பொழுது, காயம் பட்ட புலிகள் சிகிச்சைபெற்ற இடம் தமிழகம், அதாவது ஒரு இந்திய மாநிலம்

ஆக இந்திய ராணுவத்தோடு மோதிய புலிகளுக்கு, கிகிச்சை அளிக்கபட்ட இடம் இந்தியாவில் ஒரு மாநிலம்

எப்படிபட்ட விசித்திரமான கொடுமை இது?, இப்படிபட்ட நிலை உலகில் எங்காவது நடக்குமா?

தன் சொந்த நாட்டு படைகளை கொன்று குவிக்கும் அன்னிய நாட்டு இயக்கத்திற்கு இயக்கத்திற்கு ஒரு மாநிலம் ஆதரவு கொடுத்ததென்றால் அது தேசதுரோகம் அன்றி வேறேன்ன?

யாழ்பாண மருத்துவமனையில் புலிகளை இந்தியபடை தேடிகொண்டிருந்தபொழுது அவர்களோ இந்தியாவின் தமிழக நகரமான மதுரையில் சிகிச்சை பெற்றுகொண்டிருந்தனர்

அப்புலிகளுக்கு அடைக்கலம் கொடுத்தோம் என பழ.நெடுமாறன் முதல் வைகோ வரை பகிரங்கமாக இன்றுவரை சொல்லிகொண்டிருக்கின்றார்கள்

அப்படிபட்ட நிலைக்கு காரணம் யார்? சாட்சாத் அன்றைய தமிழக முதல்வர் ராமசந்திரன், இந்திய ராணுவத்தை எதிர்த்த காலங்களில் புலிகளுக்கு தமிழகத்தில் அடைக்கலம் கொடுத்தவர் அவர்தான்

அந்த பின்னணியில்தான் புலிகளால் போராட முடிந்தது பின் வெற்றிபெறவும் முடிந்தது, பின் வந்த தமிழக அரசுகளும் புலிகளை கண்டுகொள்ளவில்லை, விளைவு ராஜிவினை தமிழகத்தில் கொல்லும் முடிவினை புலிகள் எடுக்க துணிந்தனர்

இந்திய சட்டத்திற்கு உட்பட்டு பதவிபிரமாணம் எடுத்த முதல்வர் எப்படி அந்நிய நாட்டு தீவிரவாதிகளுக்கு அதுவும் இந்தியாவினை எதிர்த்த தீவிரவாதிகளுக்கு துணைபோனார், அவர் மீது ஏன் ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது இன்றுவரை சந்தேகமே

கலைஞர் ஆட்சியில் புலிநடமாட்டம் இருந்ததென்று ஆட்சிகலைப்பு வரை சென்ற டெல்லி , எம்ஜிஆர் ஆட்சியினை விட்டு வைத்திருந்தது ஏன்?

ஆக இந்திய ராணுவத்திற்கு துரோகம் செய்து, அவர்களை கொன்ற புலிகளுக்கு துணைபோனவருக்குத்தான் "பாரத ரத்னா" கொடுத்து வங்க கடல் அருகில் தூங்க வைத்திருக்கின்றது இத்தேசம்.

அதனால் சொல்கின்றோம், நன்றாக ராஜிவ் வழக்கினை மறுபடி விசாரியுங்கள் எல்லா "துரோகிகளும்" சிக்கட்டும், சிறையில் தேசதுரோகியாக இருக்கும் நபரும் அப்படியே நிரந்தரமாக இருக்கட்டும்..













 


 

திருமாவளவனுக்கு திருமணம் செய்துவிக்க முயற்சி




Image may contain: 1 person, text and close-up


திருமாவளவனுக்கு திருமணம் செய்துவிக்க அவரது பெரியம்மா கடும் முயற்சி, கண்ணீர் பேட்டி : செய்தி


ஆனானபட்ட பெரும் போராளிகளான நெல்சன் மண்டேலா, யாசர் அராபத் போன்றோர் எல்லாம் முதிர்ந்தவயதிலும் திருமணம் செய்துகொண்டார்கள்


ஒரு போராளிக்கு திருமணம் என்பதும் அவசியம், அவனை புரிந்துகொண்ட பெண் அவனுக்கு துணையானால் அவனின் போராட்ட வாழ்வு இன்னும் தீவிரமாகும் என்பது உலகறிந்தது





மார்க்ஸ் முதல் மாவோ வரை, அராபத் முதல் பிரபாகரன் வரை அதனைத்தான் உலகம் சொல்கின்றது

நிச்சயமாக திருமாவின் வாழ்வு போராட்டமிக்கது, ஒடுக்கபட்ட இனத்தில் பிறந்து , அரசியலில் இறங்கி ஒரு தலைவராக அவர் உருவெடுத்திருப்பது வாழ்த்துகுரியது

சில இடங்களில் ராமதாஸோடான மோதலில், பெரும் கலவரங்கள் ஏற்படாமல் சமாளித்து சென்றதில் நமக்கு மட்டுமல்ல‌,
எல்லோருக்குமே அவர் மீது மரியாதை உண்டு. எந்த இடத்திலும் அவர் தன் கட்சியினருக்கு வன்முறை போதிக்கவில்லை

மிக மெச்சதக்க பண்பு அது, அவர் இடத்தில் இன்னொருவர் இருந்திருந்தால் பல இடங்களில் ரத்த ஆறு ஓடியிருக்கும்,

பெரும் போராளிகளே திருமணம் செய்திருக்கும் உலகில் திருமாவும் திருமணம் செய்யலாம், அவரது அரசியல் வாழ்வு ஏற்றம் பெறத்தான் செய்யும்

கலைஞருக்கு என்றுமே திருமா மீது ஒரு அனுதாபம் உண்டு, திருமாவினை அவர் அடிக்கடி திருமணம் செய்துகொள்ள வற்புறுத்திகொண்டிருந்த காலம் எல்லாம் உண்டு

ஒரு அரசியல் போராளிக்கு திருமணம் நிச்சயம் அவசியம். அவனை கவனித்துகொள்ள ஒரு பெண் அவசியம், இது ஆனானபட்ட பெரியாருக்கே முதிர்ந்தவயதில் தேவைபட்டது, பெரியார் நீண்டநாள் வாழ்ந்ததில் மணியம்மையின் பங்கும் மகத்தானது

இந்த ஆண்டிற்குள் திருமா திருமண வாழ்வில் நுழையட்டும், அந்த தாயோடு நாமும் வற்புறுத்தலாம்

அவரின் தொண்டர்களுக்கும், கட்சியினருக்கும் அவர் மீது அக்கறையும், உண்மை பாசமும் இருந்தால் அவர்களும் வலியுறுத்தட்டும்..










கொசுறு







லோக் ஆயுக்தா கொண்டு வந்தால் திமுகவினர் சிறைக்கு செல்வார்கள் : விஜயகாந்த்


அப்படியே அதிமுகவினர் எல்லாம் தூக்குமேடைக்கே செல்வார்கள் என்பதை சொல்ல மறந்துவிட்டார் அல்லது சொல்ல விருப்பமில்லை.


கலைஞர் சொன்னதை கேட்காமல்தான் அன்னாரின் நிலமை இப்படி இருக்கின்றது, இன்னும் திருந்தமாட்டேன் என அடம்பிடித்தால் யார் என்ன செய்யமுடியும்?









 


 

தீவிரவாதத்திற்கு எதிராக‌ மோடி...

தீவிரவாதத்திற்கு எதிராக‌ மோடி ‍ துருக்கி அதிபர் எர்டோகன் கூட்டுப்பேட்டி, இந்தியாவுடன் இணைந்து செயல்படுவதாக அறிவிப்பு


எர்டோகன் மேற்காசியாவில் பெரும் தலைவராக உருவாகிகொண்டிருக்கின்றார், அவரின் பல அதிரடிகள் உலகில் சலசலப்பினை ஏற்படுத்துகின்றது, தனக்கு எதிரான சதிகளை முறியடித்து அவர் இரும்பு மனிதராக உருவெடுக்கின்றார்


அவர் மோடியுடன் சேர்ந்து பேட்டியளித்திருப்பது வாழ்த்துகுரியது, மிக வலுவான கைகள், இணைந்த கைகளாக‌ இருப்பது நல்லது




வாழ்த்துக்கள் மிஸ்டர் மோடி



Monday, May 1, 2017

திமுகவிற்கு ஸ்டாலினை விட துரைமுருகன் பொருத்தமான தலைவர் ....

திமுகவிற்கு ஸ்டாலினை விட துரைமுருகன் பொருத்தமான தலைவர் என சொல்லிவிடும் காலம் தொலைவில் இல்லை போலிருக்கின்றது


கலைஞரின் போராட்ட குணத்தில்தான் திமுக இதுகாறும் தாக்குபிடித்து நிற்கின்றது, அடித்து சத்தியம் செய்து சொல்லலாம் போராட்டம் இல்லாமல் திமுக இல்லை


அக்காலங்களில் காமரஜருக்கு எதிராக கலைஞர் கால்படாத மண் தமிழகத்தில் இல்லை, மக்களிடம் நெருங்கி சென்றார், திரட்டினார், ஆட்சியினை மாற்றினார்,


இந்திராவிற்கு எதிராக மொத்த இந்தியாவும் அஞ்சி நிற்க, நெஞ்சை நிமிர்த்தி மல்லுக்கு நின்ற கலைஞர் அன்று உலகிற்கே ஆச்சரியமாக தெரிந்தார், சில உலகநாடுகள் கூட அவரை பிரமிப்பாய் பார்த்தன‌


அவ்வளவு ஏன்? , பத்திரிகை தணிக்கை இருந்த காலத்தில் அண்ணா சமாதியில் முரசொலி செய்திகளை அஞ்சலியாய் வாசித்து, எந்த திமுக உறுப்பினரெல்லாம் சிறையில் இருக்கின்றார் என அவர் தந்திரமாய் காட்டியபொழுது இந்திராவே புன்னகைத்தார்


பாகிஸ்தானையும், இலங்கையினையும், அமெரிக்காவினையும், சீனாவினையும் அலறவிட்ட இந்திரா கலைஞரின் தைரியத்தையும், மதிநுட்பத்தையும் கண்டு புன்னகைத்தார், ஒரு மாதிரியான வியப்பு புன்னகை அது


அப்படி இந்தியாவிற்கே வழிகாட்டினார் கலைஞர்


எம்ஜிஆர் ஆட்சியிலும் கலைஞர் சோர்ந்துவிடவில்லை, வாய்ப்பு கிடைத்த இடங்களில் எல்லாம் எம்ஜிஆரை அலறவிட்டார், கூட கொஞ்சகாலம் ராமசந்திரன் ஆட்சியில் இருந்ந்திருந்தால் நிச்சயம் கலைஞரிடம் அவர் தோற்றிருப்பார்


பாஜகவிற்கு முந்தைய டெல்லி ஜெயாவிற்கு ஆதரவாய் இருந்தது, பின்னும் மோடி ஜெயாவின் நட்பு உலகறிந்தது, ஜெயா இருக்கும் வரை டெல்லியில் தீர்ப்பு வரவில்லை என்பதும் கவனிக்கதக்கது


அந்த பலமிக்க ஜெயலலிதாவினை எதிர்த்தும் கலைஞர் போராடிகொண்டுதான் இருந்தார், அதில் பல இடங்களில் வெற்றியும் பெற்றிருக்கின்றார்


இன்று போராட எத்தனையோ களங்கள் திமுகவிற்கு இருக்கின்றன, ஆட்சி முதல் கொடநாடு கொலை வரை களம் எத்தனையோ வாய்ப்பு கொடுத்திருக்க்கின்றது, ஆனால் அவர் செய்வதென்ன?


அந்த எம்ஜிஆர் காலங்களை நினைத்துபார்க்கின்றேன்


திருச்செந்தூர் கோவில் வைரவேல் காணாமல் போகின்றது, கோவில் மேலாளர் மர்மமாக சாகின்றார், ஒரு பிரச்சினை வெடிக்கின்றது, எம்ஜிஆர் ஆட்சியில் வெடிக்கின்றது


அறிக்கை விட்டு அமைதியாகவில்லை கலைஞர், கிளம்பினார்


நீண்ட நெடிய பயணம், தமிழக தெருக்கள் வழியே நீதிகேட்டு சென்றார், கால்களில் ரத்தம் வழிய வழிய நடந்தார், கலைஞரின் கால்களை கண்டு மக்கள் அழுதபொழுது, "இதனை விட பெரும் காயம் நெஞ்சில் இருகின்றது, அதற்கு மருந்திட என் பின் வாருங்கள்" என அழைக்க்கவும் அவர் மறக்கவில்லை


திருசெந்தூர் வரை நடந்து வந்து, போராடி பெரும் போராட்டம் நடத்தினார் கலைஞர், சட்டசபையில் அவர் அப்பிரச்சினையினை எழுப்ப "இவர் திருச்செந்தூருக்கு சென்றால் முருகன் வெளியே போயிருப்பானே" என்று கலாய்த்தார் ராமசந்திரன்


"என்னது? வேலை திருடியது போல முருகன் சிலையினையும் திருடிவிட்டீர்களா" என கலைஞர் பதிலுக்கு கேட்டபொழுது எம்ஜிஆர் முகம் சோபன்பாபுவினை கண்டது போல இருண்டுவிட்டது


நிச்சயம் வைரவேல் விவகாரம் ஆட்சி கலைப்பு அளவிற்கு செல்லாது, ஆனாலும் கிடைத்த ஒவ்வொரு வாய்ப்பினையும் அப்படி பயன்படுத்தினார் கலைஞர்


ஆனால் இன்றைய திமுக தலமை என்ன செய்கின்றது?


எல்லா பிரச்சினைக்கும் அறிக்கைவிட்டுவிட்டு அமைதியாகின்றது, காந்திக்கும் முந்தைய போராட்டத்தில் ஒன்றை நடத்திவிட்டு அமைதியாகின்றது


கலைஞரின் ஸ்பெஷாலிட்டி அறிக்கையில் மட்டும் அல்ல, போராட்டத்தின் வடிவத்திலும் துடிப்பிலும் இருந்தது. அதனை செய்யாமல் அறிக்கை மட்டும் விட்டுகொண்டிருந்தால் விரைவில் குமரி அனந்தன் நிலைதான்வரும்


இன்று கலைஞர் நலமோடு இருந்தால் கொடநாட்டுக்கே நடந்திருப்பார், பன்னீரையும், எடப்பாடியினையும் ஓட அடித்திருப்ப்பார்


தலைவன் இருந்தபொழுதே மந்தைகளை கதறவைத்த சிங்கத்திற்கு, இன்று மேய்பன் இல்லா ஆடுகளை அலறவைக்க நொடி ஆயிருக்காது


பாஜக அதிமுகவினை விழுங்க நினைத்தால், அஞ்சாதீர்கள் எங்களோடு வாருங்கள் இணைந்து எதிர்ப்போம் என துணிந்திருப்பார், இணைந்து என்பதில் எல்லாமே அடங்கியிருக்கின்றது


அந்த போராட்டமும், துணிவும், நுட்பமும் இல்லாமல் திமுகவிற்கு எதிர்காலம் இல்லை, வெறும் அறிக்கைகள் கட்சியினை காப்பாற்றாது..


ஸ்டாலின் அதனை உணர்வது நல்லது, இல்லையாகில் துரைமுருகன் கூட பராயில்லை என வரலாறு சொல்லும்


திமுக என்பது தமிழரின் உணர்ச்சியின் அடையாளம், அதனை காக்கும் பொறுப்பு ஸ்டாலினுக்கு உண்டு, அவர் அதனை நினைவில் வைத்துகொள்வது கட்சிக்கு நல்லது


தமிழகத்திற்கு இன்னும் நல்லது






கொசுறு


நீதிபதிகளுக்குள் யார் பைத்தியம் என சண்டையா? அல்லது பைத்தியங்களுக்குள் யார் நீதிபதி என சண்டையா?


ஒரு மண்ணும் புரியவில்லை..


விரைவில் தண்டனை பெற்ற குற்றவாளிகள் எல்லாம் ஜட்ஜ் மனநிலை சரியில்லாமல் எனக்கு தீர்ப்பளித்தார் என நியாயம் கோரும் நிலை விரைவில் வரலாம்..