Tuesday, May 24, 2016

மறக்க முடியா மாமனிதர் பத்மநாபா, ஈழத்து சேகுவேரா..




பத்மநாபாவினை பற்றி ஏன் சொல்கிறாய், அப்படி என்ன அவன் கிழித்துவிட்டான் என்றெல்லாம் கேட்கின்றார்கள்

அன்றே உலகம் சுற்றியவன் அவன், லெபானன் வரை சென்று போராளிகளின் உலகில் பாடம் கற்றவன் அவன், சொந்தமாக அவன் செய்யாத ஆயுதமில்லை, அவனால் ஒரு தமிழன் கொல்லபட்டதுமில்லை, சிங்கள அரசின் பாதுகாப்பு இலக்கினை மட்டும் தாக்கியவன் அவன், பலமுறை சிங்கள ராணுவத்தை முடக்கிய சாதனை அவனுடையது.

உலகநிலையினை விரல்நுனியினில் வைத்திருந்தான், அவன் கணித்த அந்த கணிப்புமட்டுமே அவனது அறிவாற்றலுக்கு சான்று

"இந்தியா ஏகாதிபத்திய எதிர்ப்புநாடாக இருக்கும் வரை ஈழபோராட்டத்தை அங்கீகரிக்கும்",

அதாவது அன்று இந்தியா சோவியத் யூனியன் முகாமிலிருந்தது, ராஜிவ்காந்தி அமெரிக்க ஏகாதிபத்தியத்தினை கடுமையாக எதிர்த்தவர், பின்னாளில் அதற்காகவே புலிகள் எனும் கூலிபடை மூலம் கொல்லவும் பட்டார், 2009ல் புலிகளை அழிக்க கங்கணம் கட்டிய நாடுகளில் முதலிடம் ஏகாதிபத்திய நாடுகளுக்குத்தான், அதாவது எல்லா குழுக்களையும் புலிகள் ஒழிக்க, புலிகளை ஏகாதிபத்தியமே வீழ்த்திற்று.

இப்படி உலகை துல்லியமாக கணித்த பெரும் அறிவாளி அவன், அதனை விட பாராட்டதக்கது அவனது கல்வி ஆர்வம், இந்தியாவில் அவர் பாதுகாப்பாக வட இந்தியாவில்தான் இருந்தார், எப்பொழுதாவது சென்னை வருவார், புலிகளால் அனுப்பபட்ட உளவாளி ஒன்று அவர்முன் அழுதது, படிக்க வையுங்கள் என கதறியது, அவரும் படிக்கவைத்து, செலவுகளையும் தாங்கினார்.

ஆனால் புலிகளுக்கு ஏது மனசாட்சி?, சென்னை வரும்போது அந்த புலி அவரை காட்டிகொடுத்தது, சிவராசன் சுட்டுகொன்றான். அப்புலிதான் இன்று ராஜிவ் கொலைவழக்கில் தூக்கு கயிறு முன் நிற்கும் சின்ன சாந்தன். இப்படி துரோகம் ஒன்றிலே வளர்ந்த இயக்கம் புலிகள்.

படித்தவன் எவனும் புலிகளுடனோ அல்லது எதிர்முகாமிலோ இருக்க கூடாது என்பது புலிகொள்கை, உடனே கொன்றுவிடுவார்கள், புலிதலைவர் 8ம் வகுப்பு படித்தவர் என்பதால் அப்படி இருக்கலாம், பாலசிங்கம், கேபி போன்ற சிலர் மட்டும் பிரபாகரனை தலைவர் என்றதால் தப்பினர்.

ஆயுத தொழிற்சாலை நடத்திய புலிகள் ஏதும் கல்வி நிலையம் நடத்தினார்களா? இல்லை, அல்லது சிறுவர்களையாவது படிக்கவிட்டார்களா? அதுவும் இல்லை, படிப்பு அவர்களுக்கு ஆகாது. இவ்வளவுதான் புலிகள்

ஈழத்தில் இருந்தபொழுதே பத்மநாபா மீதான தற்கொலை தாக்குதலுக்கு ஆளனுப்பினர் புலிகள், நபர் அகபட்டுகொண்டார், அவரை மன்னித்து உயிரோடு திருப்பி அனுப்பினார் பத்மநாபா, இதே இடத்தில் பிரபாகரன் என்ன செய்தார் தெரியுமா? தன்னை கொல்ல சதிசெய்தான் என மாத்தையாவினை 800 புலிகளோடு கொன்றார்.

சொல்லுங்கள், யாருக்கு இருந்தது மானிட நேயம், யாருக்கு இருந்தது தலமைக்கான தகுதி?

அமைதிபடை தேர்தலில் நாபாதான் வென்றார், ஆனால் பதவியினை வரதனுக்கு விட்டுகொடுத்த பெரும் மனதுக்காரர் அவர், அப்பதவியில் இருந்துகொண்டு பிரபாகரனின் கதை முடிக்க கொஞ்ச நாழிகை ஆகியிருக்காது

ஈழபோராட்டத்தின் பெரும் தவறு ராஜிவ் கொலை மட்டும் அல்ல, அதன் பின் போராட ஒருவரும் இல்லாமல் புலிகள் மொத்தமாய் அழித்து தானும் அழிந்தது, பத்மநாபா கொலை புலிகளின் பெரும் தவறு.

ஈழவரலாற்றில் பங்கரில் பதுங்காமல், வெட்டி அறிக்கை விடாமல், யார் கழுத்திலும் சயனைடு கட்டாமல், குண்டு சட்டை அணிவிக்காமல் ஒரு போராளி மக்களோடு மக்களாக வாழ்ந்தான் என்றால் அது பத்மநாபா மட்டுமே, அவனை புலிகள் அழிக்க ஒரே காரணம் அவனின் பொதுவுடமை கொள்கை, சொல்லிகொடுத்தது ஏகாதிபத்திய உளவுதுறை.

பத்மநாபா கொல்லபட்ட அன்றே ஈழப்போராட்டம் ஓய்ந்தது. மறக்க முடியா மாமனிதர் பத்மநாபா, ஈழத்து சேகுவேரா.

Stanley Rajan's photo.

இவரை பற்றி எல்லாம் தமிழகத்தில் எந்த அரசியல்வாதியும் பேசமாட்டான், காரணம் பேசுவதற்கு யார் பணம் கொடுப்பார்கள்?

ஈழத்தில் இப்படி எத்தனையோ மாவீரர்களும் சிந்தனையாளர்களும் இருந்தார்கள் அவர்களை பற்றியெல்லாம் , அவர்களை கொன்ற புலிகளை பற்றியெல்லாம் ஒருவருக்கும் தெரியாது,

தெரிந்ததெல்லாம் புலிகள் பிரபாகரன், ஈழம் அழித்தது கருணாநிதி, சோனியா அவ்வளவுதான்

இந்தியா மறக்காது: தனது இன்னுயிர் நண்பரை
இந்தியா மன்னிக்காது: எல்லா துரோகிகளையும்.

நான் - ஒரு இந்தியன் அதுவும் தமிழன். இந்தியத் தமிழன்

கோழையான புலிகள் வழக்கமான பாணியில் கொன்றிருந்தாலும், அக்கொலைக்கு தமிழக அரசும் ஒரு காரணம், அது பாதுகாப்பு வழங்காததும் காரணம், வைகோவின் திமுக செல்வாக்கும், அந்த புலி ஆதரவும் காரணம்,

இந்த பத்மநாபாவினை கொல்ல அனுமதித்த விளைவுதான் ராஜிவ் கொலையாக முடிந்தது, அன்றே கலைஞர் அரசு கடும் புலிகள் மீது நடவடிக்கை எடுத்திருந்தால் எடுத்தால் ராஜிவ் கொலை நடந்திருக்காது,

அப்படி விடாமல் தடுத்தது வைகோ, அதன் பின்னும் புலிகளுக்கு ஆதரவளித்து, மறுபடி காலூன்ற போராடியவர் வைகோ, ஒரு தேசதுரோகி அவர்.

அந்த வைகோ, இந்த ஒரு தேசதுரோகி சீமான் போன்றவர்கள் தமிழக அரசியலில் இருந்தே அப்புறபடுத்தவேண்டிய தேசதுரோகி கள், தமிழகம் அதனைத்தான் செய்துகொண்டே இருக்கின்றது












No comments:

Post a Comment