Tuesday, May 31, 2016

இந்தியாவில் பிரபாகரன்



ஒருவர் வந்தார், புலிகள் எப்படி தெரியுமா? எம்ஜிஆரே அவர்களை ஆதரித்தார், வளர்த்தார். அந்த பொன்மன செம்மலுக்கு தெரியாததெல்லாம் உனக்கு தெரியுமா? எம்ஜிஆர் வாழ்க என சொல்லிவிட்டு ஓடிவிட்டார் சிலர் இப்படியும் கிளம்பி இருக்கின்றார்கள்.

பெரும் கதை இது, சுருக்கமாக எம்ஜிஆர் பக்கம் பற்றி மட்டும் பார்க்கலாம், ஆரம்பத்தில் இருந்தே பிரபாகரன் இந்தியாவினை ஒதுக்கினார், அதன் தலையீடு அவருக்கு எரிச்சலை தந்தது, இன்னொன்று யாரையும் நம்பாதவர் அவர், எல்லா குழுக்களும் இந்தியாவில் பயிற்சி பெற அவர் ஒதுங்கிதான் நின்றார், 1980களின் உலக நிலைப்படி நாங்கள் தேவை என்றால் இந்தியா எங்களிடம் வரட்டும், நாங்களாக செல்லமாட்டோம் என்பது அவரின் கொள்கை, அது அநாளைய சூழலில் சரியாக இருந்தது.

Stanley Rajan's photo.

ஆனால் 2009லும் நாங்கள் தேவை என்றால் இந்தியா எங்களிடம் தானாக வரட்டும் என்ற அவரின் பிடிவாதாம் நகைக்குப்குரியது, சரி நாம் 1983 க்கு வருவோம்.

பிரபாகரன் வர மறுத்தபொழுதுதான், அப்பொழுதுதான் இந்திரா ஆட்சியில் எம்ஜிஆர் பிரபாகரனை அழைத்து உறுதிமொழி கொடுத்தார், புலிகளும் பயிற்சிக்கு வந்தனர்.

எம்ஜிஆர் பணம் கொடுத்தார் உண்மை, ஆனால் மத்திய அரசு ஒப்புதல் இல்லாமல் ஒரு மாநில அரசு 5 பைசா அடுத்தநாட்டு தீவிரவாத இயக்கத்திற்கு கொடுக்கமுடியுமா? அப்படியானால் காஷ்மீர் அரசு பாலஸ்தீனத்திற்கு வழங்காதா? பீகார் அரசு நேபாளிய இயக்கங்களுக்கு வழங்காதா?, இதனை எல்லாம் இவர்கள் சிந்திக்கமாட்டார்கள்.

இப்படி இந்தியாவின் கட்டுபாட்டில் பிரபாகரனை கொண்டுவர இயக்கபட்டவர்தான் எம்ஜிஆர், அது பின்னாளில் விளங்கிற்று. அப்படி சென்னை பாண்டிபஜாரில் பிரபாகரன் கைது செய்யபட்டபொழுது இந்திராதான் எம்ஜிஆர் மூலம் பிரபாகரனை காத்தார்,

இந்திரா சென்றவுடன் காட்சி மாறிற்று, ஈழம் அமைக்க இந்தியாவிற்கு ஒரு நொடி ஆகியிருக்காது, ஆனால் ஆள்வது யார்? அங்கே சும்மாவே 30 போராளிகுழு, அப்படி ஈழம் அன்று அமைந்திருந்தாலும் அது இன்றைய ஆப்கன் நிலைக்கு சென்றிருக்கும், இந்திரா இதனைத்தான் யோசித்தார்.

அப்படியே அவர் காலம் முடிய, ராஜிவ் ஆட்சிக்கு வந்தார். காட்சி மாறிற்று.

சார்க் மாநாட்டுக்கு ஜெயவர்த்தனே வந்தபொழுது, மத்திய அரசு உத்தரவுபடி சென்னையில் இருந்த பிரபாகரனின் ஆயுதம் களைந்து அவரை வீட்டுகாவலில் வைத்தார் எம்ஜிஆர், ஆயுதம் இல்லாமல் ஒருநொடி இருக்கவிரும்பாத பிரபாகரன் அன்றே சந்தேகபட்டார், உண்ணாவிரதம் எல்லாம் இருந்தார்.

அதன் பின் மதுரையிலிருந்து சொல்லிக்காமல் ஈழம் ஓடிய பிரபாகரன் அதன்பின் தமிழகம் வர மிகவும் யோசித்தார், ராஜிவினை சந்திக்கும்பொழுது மட்டும் வந்தார், அதுவும் எம்ஜிஆர் மீது திருப்தி இல்லாமல்தான் டெல்லி சென்றார்.

 

டெல்லி அசோகோ ஹோட்டல் விவகாரத்தில் பிரபாகரன் கோபபட்டு எம்ஜிஆரிடம் உதவி கேட்க, எம்ஜிஆரின் நிலை இந்த விவகாரத்தில் என்னை விட்டுவிடுங்கள் என்றே இருந்தது.

அமைதிபடையுடன் முறுகல் ஏற்பட்ட காலத்தில், ராஜிவிற்கு புலிகள் கடிதம் எழுதிய காலத்தில், மத்தியஸ்தம் செய்ய எம்ஜிஆருக்கு விடபட்ட கோரிக்கைகளையும், அவர் ஒதுங்கிய விஷயம் பற்றி எல்லாம் யாரும் பேசமாட்டார்கள்.

அமைதிபடை காலத்தில் எம்ஜிஆர் ராஜிவுடனான உறவைத்தான் விரும்பினார், புலிகள் அங்கே மோதிகொண்டிருக்கும் பொழுது இவர் ராஜிவுடன் போட்டோவிற்கு போஸ் கொடுத்தார். ராஜினாமா, எதிர்ப்பு, ஈழதமிழர் நலம் என அவர் பொங்கவுமில்லை, அவரை "துரோகி" , "இனபடுகொலைக்கு துணைபோன கயவன்"என ஒருவரும் சொல்லவுமில்லை.

இப்படித்தான் எம்ஜிஆரின் புலிகள் ஆதரவு இந்திய அரசின் எல்லைக்குள்தான் இருந்தது, மத்திய அரசினை மீறி அவர் ஒரு துரும்பினை கூட மிஞ்சியதில்லை, அதுவும் 1991க்கு மேலும் அவர் உயிரோடு இருந்திருந்தால் காட்சிகள் கடுமையாக மாறி இருக்கும்

ஆக ஈழ பிரச்சினையில் எம்ஜிஆரின் நிலைப்பாட்டை விட, டெசோ என அகில இந்திய அளவில் கலைஞர் எடுத்த நிலைப்பாடு பெரும் ராஜதந்திரமிக்கது, பாராட்டதக்கது, அது புலிகளை விட ஈழமக்களின் நலனையே காத்து நின்றது,

அந்த சபாரத்தினம் படுகொலையோடு அதுவும் போயிற்று, எம்ஜிஆர் அதனை பற்றி கண்டிக்கவே இல்லை என்பதும் வினோதம், அதாவது ஈழவிவாகரத்தில் அவருக்கு டெல்லியால் கொடுக்கபட்ட அசைன்மெண்ட் புலிகளை கவனித்துகொள்வது, அதனை மட்டும் சரியாக செய்தவர் எம்ஜிஆர்,

ஈழத்தில் மக்களிடம் புலிகளின் பிரச்சார பிம்பத்தில் அவர் பெரிய ஈழபோராளியாக காட்டபட்டார், அவ்வளவுதான் விஷயம்.

அதன்பின் தமிழகத்தில் எம்ஜிஆர் ஆதரித்த இயக்கம் நாங்கள் என புலிகள் அனுதாபம் தேட, ஒரு ஆதரவு எழும்ப‌, அதனை எம்ஜிஆர் காலத்திற்கு பின், திமுக வோட்டாக மாற்றி தருகிறேன் என கிளம்பி, இன்று அரசியல் பிளாட்பாரத்தில் பாய்விரித்து படுத்திருப்பவர் வைகோ.

மொத்தத்தில் மத்திய அரசிற்காக தலையிட்டு, அது ஒதுங்க சொன்னவுடன் ஒதுங்கியவர்தான் எம்ஜிஆர், அவரின் செயல்பாடுகள் அதனைத்தான் சொன்னது,

ஆனால் இதனை சொன்னால் நானும் துரோகி, கலைஞர் ஆதரவாளன், திராவிட வெறியன், வடுக வந்தேறி.










No comments:

Post a Comment