Tuesday, May 31, 2016

யாழ்பாணத்தில் அந்த நூலகம்

 




35 ஆண்டுகளுக்கு முன்பாக இந்நேரம் யாழ்பாணத்தில் அந்த நூலகம் எரிய ஆரம்பித்தது, தரப்படுத்துதல் எனும் இடஒதுக்கீட்டினை எதிர்த்து ஈழமாணவர்கள் போராடிகொண்டிருந்த நேரம் அது,

தனிஈழம் மட்டுமே தீர்வு என சொல்லி அரசியல்வாதிகளும் தூண்டிவிட்ட காலம் அது, தேர்தல் கால பிரச்சார கூட்டத்தில் சில போலிசார் கொல்லபட அது கலவரமாக வெடித்தது.

ஆசியாவின் குறிப்பிடதக்க நூலகமாக விளங்கிய யாழ்பாண நூலகம், யாழ்பாண தமிழர்களின் அறிவின் அடையாளமாக விளங்கியதால், இந்த கல்விக்காக தானே போராடுகின்றீர்கள் என்றுதான் சிங்களன் அதனை கொளுத்தினான், அது அன்று யாழ்பாண தமிழரின் அறிவிற்கு சான்றாக விளங்கியது.


கிட்டதட்ட 1 லட்சம் நூல்களும், அரிய சுவடிகளும் சாம்பலாயின. அவற்றில் பல நூறு நூல்கள் இன்று உலகிலே இல்லை, இனி கிடைக்கவும் கிடைக்காத பொக்கிஷங்கள்.

Stanley Rajan's photo.

Stanley Rajan's photo.

 

ஆயிரகணக்கான மாணவர்கள் அதன் பின் போராட கிளம்பினர், இந்த சம்பவமும் அதன் பின் நடந்த கொழும்பு கலவரமே எல்லா போராளிகுழுக்களிலும் மக்கள் எழுச்சியுடன் இணைய வழிவகுத்தது.

அதன் பின் அவர்களுக்குள் மோதியதும், புலிகள் ஏதேச்சதிகாரமாக தான் மட்டும் போராட்டத்தை கையிலெடுத்ததும் பின் மொத்தமாக போராட்டத்தை அழித்தது இன்னொருபக்கம்.

1995ல் புலிகளை யாழ்பாணத்திலிருந்து விரட்டிய சந்திரிகா , அந்நாளைய தவறுக்கு பிராயசித்தமாக பின் 2001ல் அந்த நூலகத்தை அமைத்தார். 1985 முதல் 1995 வரை அந்த நூலகம் சிதலமடைந்து புத்தகம் இல்லாமல் புலிகள் கட்டுபாட்டில்தான் இருந்தது,புத்தகம் இல்லா நூலகம், தெய்வம் இல்லா ஆலயம்

புலிகளுக்கு நூலகம் எல்லாம் பிடிக்காது, யாழ்பாண கல்லூரியினையே ஆயுத சாலையாக வைத்திருந்தவர்கள் அவர்கள்.

இயேசு, காந்தி, லிங்கன், மார்ட்டில் லுத்தர் கிங் போன்றோரின் படுகொலை வரிசையில் வரலாறு கண்ட பெரும் கொடுமைதான் இந்நூலக எரிப்பு.

உலகில் எந்த நாடும், இம்மாதிரியான சகிக்க முடியாத கொடுமைகளை, இம்மாதிரியான அட்டூழியங்களை கண்டிக்கவில்லை, யாரும் இலங்கையினை சீண்ட கூட இல்லை, இந்தியா மட்டுமே ஈழ மக்களுக்காக‌ களம் இறங்கியது, அவர்கள் வாழ்வில் அமைதி ஏற்பட முடிந்த அளவு போராடி பார்த்தது, தன் 1500 வீரர்களை இழந்தும் பார்த்தது.

ஆனால் விதி இந்தியாவினை வலுகட்டாயமாக புலி வடிவில் வெளியே தள்ளிற்று

அதன் பின் நடந்ததவை எல்லாம் பெரும் அழிவுகள் மட்டுமே, அதில் இறுதியாக நடந்ததுதான் முள்ளிவாய்க்கால்,நிச்சயம் அதன் மூலகாரணம் இந்தியா அல்ல‌






No comments:

Post a Comment