Thursday, May 26, 2016

இலங்கை தமிழர் சாதீயம்...




ஈழ போராட்டத்தினை மிக சுருக்கமாக சொல்லவேண்டுமென்றால், தமிழகத்தில் இருக்கும் எல்லா சாதி முறையும் அங்கும் இருந்தது.

போராளி குழுக்கள் தோன்றும்பொழுது கூட அது சாதி வாரியான இயக்கங்களாகத்தான் அறியபட்டன, இதில் மலையக தமிழர்கள் எனப்படும் இந்திய வம்சாவளி தமிழர் பற்றி யாருக்கும் கவலை இல்லை, கொஞ்சமேனும் கவலைபட்டவர் பத்மநாபா மட்டுமே.

போராளி குழுக்களுக்குள்ளான மோதல் இதில்தான் முதலில் தொடங்கியது, பின் அது இளைஞர்களை பங்கிட்டு சேர்த்துகொள்ளுதல், வரி வசூலித்தல் என பல பிரச்சினைகளில் சிக்கி மொத்தமாக புலிகளால் எல்லா இயக்கமும் தடை செய்யபட்டும் அழிக்கவும் பட்டன.

இதில் யாழ்ப்பாண உயர்சாதி வர்க்கம் கொஞ்சம் பணபலம் வாய்ந்ந்தது, அதன் ஆசீர்வாதம் புலிகளுக்கு இருந்தது, கண்ட சாதிகளுக்கும் எதற்கு இயக்கம் என்றே அவர்கள் தூண்டலும் இருந்தது.

13307274_10206425056920354_590005679561788817_n

தந்தை பெரியாருடன் திரு செல்வரத்தினம்


இந்த தூண்டல் டெலோ சபாரத்தினம் கொலையில் மிக பகிரங்கமாக தெரிந்தது, சுமார் 2000 போராளிகளை புலிகள் கொன்று நடுரோட்டில் போட்டு எரித்தபொழுது,  புலிகளுக்கு உயர்சாதி மக்கள் சோடா கொடுத்து, டீ கொடுத்து உற்சாகபடுத்திய நிகழ்வுகள் எல்லாம் நடந்தது.

பின்னாளில் கம்யூனிசம் பேசி சாதி ஒழிக்க கிளம்பிய பத்மநாபாவிற்கும் அதுதான் நடந்தது.

தாழ்த்தபட்ட மக்கள் கொஞ்சம் அறிவுபூர்வமாக பேசினாலோ அல்லது சிந்தித்தாலோ அவர்கள் கொடூரமாக கொல்லபட்டதற்கு சாதிய அமைப்பும் காரணம், புலிகள் நிலைத்து நிற்க சாதிய கூறுகளும் காரணம்.

இந்திய அமைதிபடைக்கு எல்லோரும் சமமாக தெரிந்தாலும், உயர் வர்க்கம் தனக்கு தனி இடம் எதிர்பார்த்தது, தனக்கு நிகராக தாழ்த்தபட்ட மக்களை போராளிகள் என பார்பது அவர்களுக்கு அவமானமாக பட்டது, இப்படி ஆயிரம் காரணம் உண்டு.

புலிகள் சாதியினை ஒழித்ததாக சொன்னாலும், யாழ்பாண இளைஞர்கள் லண்டன் கனடா என பறந்தனர், கிழக்கு மாகாண அடிதட்டு இளைஞர்கள் பலிகடா ஆயினர், இதனை கண்டித்துதான் கருணா பின்னாளில் வெளிவந்தார்.

அந்த மேல்சாதியின் அடியாட்களாக மறைமுகமாக செயல்பட்ட புலிகளும் பின்னாளில் அழிந்துபோயினர், மொத்தத்தில் சொல்லபோனால் சாதிக்காக அந்த இனம் நாடு அடையும் வாய்பினையே பறிகொடுத்தது.

இனபிரச்சினைக்கு முன்பே இலங்கையினை சுற்றிபார்த்தவர் பெரியார், தமிழக மக்களின் வம்சமான மலையக தமிழரின் புறக்கணிப்பு பற்றி, அவர்களை கீழ்நிலையல் ஈழமக்கள் அடிமைபோல வைத்திருப்பதை அறிந்தவர், அதனைத்தான் தன்னிடம் ஆதரவு கேட்டு வந்த செல்வரத்தினத்திடம் நயமாக சொன்னார்.

"ஒரு அடிமை இன்னொரு அடிமைக்கு உதவ முடியுமா", அதாவது மலையக தமிழர்களை குறித்துத்தான் அப்படி சொன்னார், ஈழத்தில் சாதி ஒழிக்காமல் விடுதலை இல்லை என்பது அதன் கருத்து, ஈழத்தின் எல்லா சாதிய கூறுகளும் அறிந்தவர் அவர்

ஈழ விடுதலை கேட்கின்றீர்களே? மலையக தாழ்த்தபட்ட ம்க்களின் நிலை என்ன? எதிர்காலம் என்ன? நிச்சயம் ஈழத்தில் சேர்க்கமாட்டீர்கள் அல்லவா?, 1957ல் 5 லட்சம் தமிழக மக்களை பண்டார நாயக அரசு அனுப்பும்போது தமிழனாக நீங்கள் தடுக்காதது ஏன்? என்ற பெரியார் கேள்விக்கும் செல்வாவிடம் பதில் இல்லை

காரணம் அந்த தாழ்த்தபட்ட மக்கள் ஈழத்தில் பெருகுவதை யாழ்பாண தமிழரும் விரும்பவில்லை என்பதுதான் உண்மை.

இதனலிருந்துதான் யாழ்பாண தமிழருக்கு தந்தை பெரியாரை பிடிக்காமல் போனது, இன்று அவர்களிடம் காசு வாங்கி கொண்டு பெரியார் தமிழருக்கான தலைவர் அல்ல என அங்கிள் சைமன் சொல்லும் ரகசியமும் இதுதான், இது சைமனுக்கு தெரியும்

இன்று விஷ வித்தாக பெரியாரை பற்றி கிளம்பி இருக்கும் கருத்துக்களின் மூலம் இதுதான், நிச்சயமாக இது இங்கிருந்து வந்ததல்ல, கடல் கடந்து அங்கிள் சைமன் கும்பலுக்குள் ஊடுருவியிருப்பது.

பாவம் அவரின் அடிப்பொடிகளுக்கு தெரியாது, அவரை தெலுங்கர், வந்தேறி என தூற்றிகொண்டிருக்கின்றனர். இதில் தலித் மக்கள் உரிமை பேசும் இளைஞர்களும் பெரியாரை தூற்றுவதுதான் சோகம்

சாதிவெறியர்களை தவிர பெரியாரை யாரால் தூற்றமுடியும்? நீங்களே சொல்லுங்கள்.

ஒரு வேளை ஈழம் அமைந்திருந்தாலும் நிச்சயம் அது இரண்டாக உடைய இன்னொரு யுத்தம் உள்நாட்டில் தொடங்கி இருக்கும், அல்லது நிச்சயம் பெரியார், அம்பேத்கர் படங்களோடு பலர் கிளம்பி இருப்பார்கள்.

ஈழ சாதிநிலையும் அதன் கொடுமையும் இவர்களுக்கு தெரியவருமானால் அன்று பெரியாரை நிச்சயம் நன்றியோடு நினைப்பார்கள். சாதி அவ்வளவு கொடுமையானது, நமது ஊரிலாவது கவுரவ கொலை, ஈழத்திலோ கவுரவ இனஅழிப்பு.












No comments:

Post a Comment