Monday, May 30, 2016

இது நம்ம ஆளு




டி.ராஜேந்தரின் குடும்ப படமான "இது நம்ம ஆளு" என்றொரு படம் வந்திருக்கின்றது, "பீப்" பாடலுக்கு அடுத்து வந்திருக்கும் படமென்பதால் சிம்பு நிறைய அடக்கி நடித்திருக்கலாம், ஆனாலும் ஆங்காங்கே பலபேரை சீண்டுகிறார், சில இடங்களில் தன்னைதானே விமர்சிக்கின்றார், தமிழ் திரையுலகம் உள்ள காலம் வரை அவர் திருந்தமாட்டார்.

Stanley Rajan's photo.அதிலும் பல காதல்களை கண்ட சிம்புவும், ஏராளமான காதல்களை உசேன் போல்ட் வேகத்தில் அசால்ட்டாக தாண்டிவந்த நயனும் இந்த கதையில் கடந்த கால காதல்கதைகளை பற்றி பேசும்பொழுது எரிச்சல்தான் வருகின்றது, இவர்களை பற்றி யாருக்கு தெரியாது?,


பாரதிராஜா படங்களில் வரும் ராஜா போல எல்லா படங்களிலும் அதே ஒரு தலை அல்லது அறுந்த தலை பாத்திரம் ஆண்டிரியாவிற்கு, பல படங்களில் வந்த அதே ரோல், ஆனாலும் கவுவர வேடம் ஜெய்க்கு பதிலாக அனிருத் வந்திருந்தால் நன்றாக இருந்திருக்கலாம். :)

நாயகி நயனுக்கும் பட குழுவினருக்கும் பல இடங்களில் சம்பள மோதல், இன்னபிற சிம்பு மோதல் நடந்திருக்கலாம் என்பதை படம் சொல்லுகின்றது, அதனால் நயன் நாயகனுடன் படம் முழுக்க போனில் பேசும்படியே காட்சி அமைத்திருக்கின்றார் இயக்குனர், அவரின் Risk Management யுக்தியினை நிச்சயம் பாராட்டலாம், படம் தொடங்கபட்ட பின் எப்படிபட்ட ரிஸ்க், எப்படிபட்ட சமாளிப்பு..:)

ஆனால் நம்மால் தாங்க முடியவில்லை, படம் பார்த்தபின் நமது போனில் மீதே வெறுப்பு வருகின்றது.

மற்றபடி "பார்த்தீர்களா இவ்வளவு நாள் தொடர்ந்து பேசியும் பில் குறைவாகத்தான் வந்திருக்கின்றது.." என பிரபல செல்போன் கம்பெனியும், "சார்ஜ் போடாமலே எங்கள் போனில் 6 மாதம் பேசமுடியும் .."என கொரியன் கம்பெனியும் விளம்பரம் செய்து முடித்திருக்க‌ வேண்டிய படம் இது.













No comments:

Post a Comment