Thursday, May 26, 2016

தமிழக அரசியல் மாற்றம் 1952-67




கூட்டம் சேர்ந்தது, ஆனால் வோட்டு விழவில்லை, ஆகவே இது நியாயமான தேர்தல் அல்ல என அங்கிளின் அடிமைகள் ஒப்பாரி வைக்கின்றன. அப்படி என்ன கூட்டம் சேர்ந்தது என்றும் நமக்கும் தெரியவில்லை, 5 ஆயிரம் உறுப்பினர்களை கொண்ட பிரபாகரனின் இயக்கம் பெரும் உலக வல்லரசு ராணுவம் என சொல்பவர்களுக்கு இது பெரும் கூட்டமாக தெரிந்திருக்கலாம்.

இவர்களுக்கு ஒரு மண்ணாங்கட்டியும் தெரியவில்லை, வோட்டு எப்படி விழும் என தெரியவில்லை, கூட்டத்திற்கும் வோட்டிற்கும் தமிழகத்தில் சம்பந்தமே இருக்காது என்பதும் தெரியவில்லை, இவர்கள் எல்லாம் கட்சி நடத்துகின்றார்களாம், பரிதாபம்.

ஒரு காலமும் புரிந்துகொள்ள முடியாதது தமிழகம், எதுவுமே கணிக்கமுடியாது. பணம், கள்ளவோட்டு, முறைகேடுகள் என ஆயிரம் சொன்னாலும் அதனை தாண்டி நிற்பது மக்கள் அபிமானம், அதனை புரிந்துகொள்வது மகா சிரமம்.

திமுக கட்சி தொடங்கிய போது அது ஆட்சி பிடிக்கும் என அண்ணாவே நம்பவில்லை, திராவிட நாடு அவர்களின் முழக்கம், நடக்காது என தெரிந்தும் மக்களை மயக்கிபார்த்தார்கள், தமிழகம் கண்டுகொள்ளவே இல்லை.

நேரு தும்மினாலும் கொடிபிடித்தார்கள், ராஜாஜியினை எதிர்பார்கள், தண்டவாளத்தில் படுத்தார்கள், ஒன்றும் வோட்டாக வில்லை, 1956ல் அதுபெற்ற இடம் வெறும் 15.
அதன் பின் சிந்தித்தார்கள்.

தனியாக நின்று ஒன்றும் ஆகபோவதில்லை கூட்டணி அமைக்கலாம் என்று, பார்பணிய ராஜாஜி, இஸ்லாமியர் என சகலைரையும் இணைத்து திராவிடநாடு பேசிபார்த்தார்கள் அப்பொழுதும் 1962ல் 50 இடம்தான் வந்தது, பிரிவினை வாத தடைசட்டம் வந்தது, அதனை வணங்கி திராவிடநாட்டை கை கழுவினார்கள்.அதன் பின் மொழிப்போர் தொடங்கினார்கள், அதுவும் பெரும் வாக்குவங்கி கொடுக்கவில்லை

தமிழகம் இப்படித்தான் அதனை மாற்ற பிரிவினை சக்திகளால் ஒருபோதும் முடியாது என்பது அவர்களுக்கு புரிந்தது

அதன்பின் எம்ஜிஆர் இறக்கபட்டார், தமிழ்தேசிய தலைவர் மேதகு எம்.ஆர் ராதா அவர்களால் அவர் சுடபட்ட பிரச்சினைதான் திமுகவினை அரியணையில் அமர்த்திற்று, அதன் பின் எம்ஜிஆர் தமிழக அரசர் ஆனார், அதன் பின் ஜெயலலிதா அரசி ஆகி இருக்கின்றார், அரசி ஓய்வெடுத்த கொஞ்ச காலம் ராஜகுரு கலைஞர் ஆண்டார்

இப்படியாக அண்ணாவோ, கலைஞரோ, சில சமயங்களில் அரசர் எம்ஜிஆர் கூட கூட்டணி இல்லாமல் தேர்தலை சந்திக்காதபொழுது, உங்களை நினைத்தால் சிரிப்புதான் வரும். அவர்களிட்ம் இல்லாத பேச்சாளர்களா? திறமைசாலிகளா உங்களிடம் உண்டு, ஹிஹிஹிஹிஹ்

சிவாஜி கணேசனுக்கு வராத கூட்டமா சீமானுக்கு வந்தது, ஹிஹிஹீஹ், அவருக்கு திரண்ட கூட்டம் யாருக்கு வரும்? ஆனால் வோட்டு?

அந்த மாபெரும் நடிகனை, மக்கள் விரும்பி கொண்டாடிய ஒரு கலைஞனையே, வளர்ப்புமகன் திருமணத்தில் ஒரு மூலையில் பரிதாபமாக நிறுத்திய கொடுமையானது தமிழக அரசியல், உங்களை விடுமா?

ராஜிவிற்கும், இந்திரா காந்திக்கும் திரளாத கூட்டமா? ஆனால் காங்கிரஸ் 30 சீட்டினை தாண்டமுடியவில்லை.

கூட்டம் சேர்பது என்றால் சீமானால் அல்ல, அதிகமான கூட்டாத்தை கூட்ட நயந்தாராவால் கூட முடியும், ஐஸ்வர்யா ராயால் முடியும் அவ்வளவு ஏன் ஷகீலாவால் கூட முடியும். நித்தி ரஞ்சிதா ஜோடி நெல்லை வருகிறது என சொல்லுங்கள், 3 நாள் அந்நகரம் நிரம்பி வழியும். அட சன்னி லியோன் மெரினாவில் ஒரு கூட்டம் நடத்தட்டும், கடலே நிரம்பிவிடும்.

Stanley Rajan's photo.

ஆனால் அதெல்லாம் தமிழகத்தில் வோட்டாக முடியுமா? மாறாது. காரணம் பாட்டாளி வர்க்கத்தின் வாக்குதான் அவர்களுக்கு அடிப்படை.

திமுக என்றொரு இயக்கம் இல்லை என்றால் அதனை கம்யூனிஸ்டுதான் கேரளாபோல பிடித்திருக்கும், இதற்காக வளர அனுமதிக்கபட்ட இயக்கம்தான் திமுக அது பின்பு சினிமா சாயலில் தன்னை இறுத்திகொண்டது. முதலில் தன்னையும் வாழவைக்கும் கட்சி அது என ஏழைபாழைகள் எல்லாம் நம்பினர், லெனினின் பொதுவுடமை நாடு போல தமிழகத்தை ஆக்குவோம், இங்கர்சாலின் கொள்கைகளை பரப்புவோம் என்றுதான் மக்களை மயக்கினார்கள்.

அதற்கு சான்றாக காங்கிரசிலிருந்த பெரும் பணக்காரர்களை சாடியே வளர்ந்த கட்சி திமுக, அப்படித்தான் உழைப்பாளிகளை பணக்கார காங்கிரசாருக்கு எதிராக திரட்டி காங்கிரசை விரட்டியது திமுக, அதுவன்றி திராவிடத்தாலோ, தமிழாலோ, ஈழ படுகொலையாலோ அல்ல.

அப்படி நல்ல சோவியத் யூனியனின் உலகத்தை உதாரணம் காட்டிய திமுகவிற்கும், படுபயங்கர கொலைகார இயக்கமான புலிகளை நீங்கள் காட்டுவதற்கும் எவ்வளவு வித்தியாசம்? அறிவுள்ளவன் இதனை செய்வானா?

காலம் கடந்தாலும் ராஜிவ்கொலை ஒன்றுபோதாதா? மக்கள் ஓடிவிடமாட்டார்களா? அதுவும் எல்லோரையும் சயனைடு கடிக்க சொன்ன, சிங்களனிடம் சாக சொன்ன எந்த புலிதலைவானாவது இறுதியில் சயனைடு கடித்தானா? சொல்லுங்கள், பிரபாகரனின் சயனைடை வைகோ வாங்கி வந்துவிட்டார், அதனால் அவரும் கடிக்கவில்லை

திராவிட இயக்கங்களை வீழ்த்தவேண்டுமானால் இன்னும் பல அடிப்படை மக்கள் போராட்டம் தீவிரமாக‌ நடத்தவேண்டுமே தவிர, பிரபாகரன், வீரப்பன், இன விடுதலை , வந்தேறி, தமிழராட்சி எல்லாம் வெத்துவேலை, அப்படி தமிழகம் பிரிவினை சக்திக்கு ஆதரவளிக்கும் மாநிலம் என்றால் அண்ணா என்றோ முதல்வராகி திராவிடநாடு வாங்கி இருப்பார்.

இது உங்களுக்கு புரியாது, புரிந்தாலும் கல்தோன்றி கபாடபுரம் தோன்றி, ஆரியன் தோன்றி என தான் தோன்றிகதைகளைத்தான் சொல்லிகொண்டிருப்பீர்கள், அப்படியே செட் ஆகிவிட்டீர்கள் பாவம்.

பிரபாகரன் படத்தையும், புலிகொடியினையும், வந்தேறி எனும் கடும் வார்த்தையும் சொல்லிகொண்டிருக்கும் வரை நிலை இப்படி டெப்பாசிட் இழந்துதான் இருக்கும், உள்ளாட்சி தேர்தலில் வார்டு கவுன்சிலர் ஆகிவேண்டுமானால் தமிழர் வார்டு அமைக்கலாம்.

அதுவும் விளையும் பயிர் முளையிலே தெரியும், திமுக முதல் தேர்தலிலே 15 இடம் பெற்றது, எம்ஜிஆர் முதல் தேர்தலிலே எம்பி சீட் பெற்றார். விஜயகாந்த் முதல் தேர்தலிலே 10% வாக்கு பெற்றார் இன்று அவரையும் காணவில்லை.

வைகோ முதல் தனித்து நின்ற தேர்தலிலே தேராது என முடிவு செய்யபட்டவர், அது இன்று உண்மையும் ஆகிவிட்டது, அடுத்து நிச்சயம் நீங்கள்தான்.

காரணம் தமிழகம் என்றும் பிரிவினைவாதமும், தீவிரவாதமும், இனதூய்மை வாதமும் பேசும் மாநிலம் அல்லவே அல்ல. பிரபாகரன் படம் பிடித்தால் விரைவில் உங்களுக்கு மக்களின் அடி ஓங்கி உங்கள் முதுகில் விழப்போவது நிச்சயம்,

அப்பொழுது டெப்பாசிட் மட்டும் போகாது, கூடவே அபராதமும் விதிக்கபடும்.























No comments:

Post a Comment