Sunday, May 29, 2016

ஓமந்தூரார் தோட்ட சட்ட மன்ற கட்டிடம்




நேற்று ஒரு மலாய் நண்பர்சொன்னார், இது 10 ஆண்டுகளுக்கு முன்பாக பெரும் காடு என்றார், அவர் காட்டிய இடத்தில் வானுயர் கட்டடமும் பளிங்கு சாலைகளும் இருந்தன.

Stanley Rajan's photo.

தமிழக நிலையினை நோக்கினால்தமிழகத்திலோ 10 வருடம் முன் அமைக்கபட்ட மிக நவீன சட்டமன்ற கட்டிடம் தூர ஒதுக்கபட்டு அப்படியே கிடக்கின்றது, விரைவில் அது அழிக்கபட்டு பழையபடி ஓமந்தூரார் தோட்டத்தின் ஒரு பகுதி ஆனாலும் கேள்விகேட்க யாருமில்லை.

அதனை கட்டியவர் யார்? என்பதனை விட, யாருக்காக கட்டபட்டது என்பதுதான் முக்கியம், அவர் காலத்திற்குள் அவர் ஒரு எம்எல்ஏ என்ற முறையிலாவது அதில் கலந்துகொள்ளட்டும், அந்த நிம்மதியிலாவது அவர் முதுமை மகிழட்டும்,


வாழ்த்து தெரிவிப்பதும், இவர் தெரியாமல் அவர் பின் வரிசைகு சென்றார் என்பதும், இவர் அவர்தான் மூத்த சகோதரி என்பதெல்லாமும் தாண்டி, அந்த கட்டதத்திற்கு சட்டசபையினை மாற்றினால் என்ன நடந்துவிடும்? வங்க கடல் உள்புகுந்துவிடுமா?

‪#‎ தமிழகத்தில்‬ மன்னர்கள் கட்டிய ஆலயங்களில் வாழ்வது யார்? , மக்கள் சென்று வணங்குவதும் அம்மன்னர்களையா? அல்லது தெய்வங்களையா?

# இத்திட்டம் செயலானால் யாருக்கு வெற்றி, யாருக்கு தோல்வி? ஒருவருக்குமல்ல, ஆனால் அரசு காரியங்களுக்கு நலம். நாம் சொல்லி ஆகபோவது ஒன்றுமில்லை, ஆனால் இப்படி நடந்தால் அதுதான் உச்சகட்ட அரசியல் நாகரீகம்.நாகரீகம் என்பதையும் தாண்டி மகா அதியவாசியம்.













No comments:

Post a Comment