Wednesday, May 25, 2016

பாராளுமன்ற மற்றும் உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டி : சீமான்





பாராளுமன்ற மற்றும் உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டி : சீமான்

இந்திய தேசியம் வேண்டாமாம், இந்தியா எதிரியான யாசின் மாலிக்குடன் உறவாம், இந்திய எதிரியான பிரபாகரன் அண்ணனாம். இந்தியா தமிழரின் எதிரியாம்.

தமிழ்தேசியம் பேசுவார்களாம், தமிழர் இன விடுதலை மகா முக்கியமாம், ஆனால் பாரளுமன்ற தேர்தலில் தனித்துபோட்டி இடுவார்களாம், இந்தியா வேண்டாமென்றால் எதற்கு பாராளுமன்றம் செல்லவேண்டும்? எதற்கு எம்பி தேர்தலில் போட்டி இடவேண்டும்?


ஏதாவது புரிகின்றதா? ஒன்றும் புரியாது. அதுதான் சீமானிசம்.

இயேசுவினை திட்டவேண்டும், சிவலிங்கத்தை திட்டவேண்டும், ராமர் கோயில் இடிப்பேன் என சொல்லவேண்டும், நேரத்திற்கொரு வேடம் வேண்டும்.

தமிழக பிரச்சினைகளை விட்டு விட்டு ஈழகொடி பிடிக்கவேண்டும், வீரப்பன் போன்ற கொள்ளையர்களை பாராட்டவேண்டும், ஆனால் சுட்டுகொன்ற போலீசாரை பற்றி, ஜெயலலிதா அரசை பற்றி ஒன்றும் சொல்ல கூடாது.

பெரியாரை திட்டவேண்டும், வந்தேறிகள் என பலரை வெறுக்கவேண்டும், இப்படி எல்லா அட்டகாசங்களையும் மேடையில் செய்துவிட்டு, நான் தமிழன் எனக்கு வோட்டு போடுங்கள் என கெஞ்ச வேண்டும், பின் எங்கிருந்து வரும் வோட்டு, யாரை பகைக்காமல் இருந்தீர்கள்?

தோல்விக்கான காரணங்களை ஆராய்கின்றார்களாம், எதற்கு வீண் ஆராய்சி? பழைய சீமான் & அடிப்பொடிகளின் வீடியோக்களையும், பதிவுகளையுமே பாருங்கள், ஆதாரம் கொட்டி கிடக்கும்.

உலகத்தை பகைத்து, இந்தியாவின் பெரும் தலைவரை கொன்றுவிட்டு, உதவிக்கு யாருமே இல்லாமல் நாடு அடையலாம், எரித்த்யாவும் எத்தியோப்பியாவும் ஈழத்தை அங்கீகரிக்கும் அது போதும் என நம்பிய பிரபாகரனுக்கு ஆறாவது அறிவு உண்டோ இல்லையோ, உங்களுக்கு நிச்சயமாக அது இல்லை.







No comments:

Post a Comment