Sunday, May 29, 2016

இலங்கை வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரனின் வாழ்த்து

இலங்கை வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரனின் வாழ்த்து கடிதத்திற்கு பதில் எழுதினார் ஜெயலலிதா, காலம் வரும்பொழுது சந்திப்பதாகவும் , ஈழதமிழர் நலன் காக்க இந்திய அரசின் மூலம் எல்லா நடவடிக்கையும் எடுப்பதாகவும் அதில் தெரிவித்துள்ளார் தமிழக முதல்வர்.

download

கவனியுங்கள் வெவ்வேறு நாட்டு மாகாணங்களின் முதல்வர்கள் எழுதியுள்ள கடிதபரிமாற்றம் இது, இதில் தனி ஈழம் பெற்று தாருங்கள் என விக்னேஸ்வரன் சொல்லவே இல்லை, 7 தமிழர் விடுதலை பற்றி மூச்சே இல்லை. 13ம் சட்டதிருத்தம் தொடர்பாக இந்தியாவின் மத்திய அரசை வலியுறுத்தம் விக்னேஸ்வரன் அதற்கு ஜெயலலிதாவின் ஆதரவினை முன்பாக கோரி இருந்தார்.

மொத்தத்தில் தனி ஈழம் என்ற பேச்செல்லாம் இல்லை, ஜெயா அழுத்தமாக மத்திய அரசோடு இணைந்து ஈழபிரச்சினை அண்குவேன் என சொல்லியும் விட்டார், விரைவில் விக்னேஸ்வரனை அவர் சந்திக்கவும் செய்யலாம்.

# அங்கிள் & மங்கிஸ், நீங்கள் சொல்லிகொள்வதுபோல‌ நல்ல தமிழ் தகப்பனுக்கும் தாய்க்கும் பிறந்தவன் என்றால், சுத்தமான வீர தமிழ்ரத்தம் ஓடுவதாக இருந்தால் இந்த கடித்தத்திற்காக ஜெயலலிதாவினை கண்டித்து போராட தயாரா? விக்னேஸ்வரனும் ஜெயலலிதாவும் மறந்துவிட்ட ஈழத்தை மீட்க சென்னை கோட்டைமுன் கொடிபிடித்து கத்த தயரா?

# தனி ஈழத்தை கைவிட்ட துரோகி ஜெயலலிதா, 7 தமிழரை பற்றி மறந்துவிட்ட ஜெயலலிதாம், மத்திய அரசோடு நம் ஈழ‌கனவறுத்த களை ஜெயலலிதா என தொண்டை கிழிய மேடைபோட்டு கோட்டைமுன் கத்துங்கள் பார்க்கலாம், அப்படி செய்யுங்கள், நான் உங்களை விமர்சித்து எழுதுவதை நிறுத்தியேவிடுகிறேன்,

செய்யுங்கள் பார்க்கலாம். மானமும், சொரணையும் உள்ளவர்கள் என்றால் செய்யுங்கள்.

ஈழவடக்கு மாகாண முதல்வரே தனிஈழத்தை விட்டுவிட்டாராம், அங்கிளும் அவர் அடிப்பொடிகளும் வாங்கியே தீருமாம்.. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

No comments:

Post a Comment