Wednesday, May 11, 2016

அமைதிப்படை செய்ததுதான் என்ன?




(ஒரு பெரும் ஈழசிந்தனையாளர் தரிசனமான பொழுது)

அமைதிபடை பற்றி தெரியாமல் புலிகளை எப்படி விமர்சிக்கலாம் நீ

போராளிகுழுக்களின் கட்டுகடங்காத தாக்குதலால் , சிங்கள பதிலடியால் பொதுமக்கள் பலியாவதை தடுக்க இந்திய அமைதி ஒப்பந்தபடி போர் நிறுத்தம் செய்ய சென்ற படை அது

இல்லை, அது கற்பழிக்க என்றே அனுப்பபட்டது

யாருக்கெல்லம் சண்டை?

போராளி குழுக்களுக்கும், சிங்களனுக்கும்.

இதில் அடிபட்டது யார்?

ஈழ தமிழர்கள்

காப்பாற்ற சென்ற படை ஏன் கற்பழிக்கும்?

இல்லை இந்திய அரசு கற்பழிக்க சொன்னது, அவர்கள் செய்தார்கள், புலிகள் எதிர்த்தார்கள்

பெண்புலிகள் ஆயுதம் கொண்டு செல்வதை வேறு எப்படி இந்திய ராணுவம் சோதிக்கும், மூதாட்டிகள் கூட புலிகளால் மிரட்டி ஆயுதம் கடத்தவைத்தபொழுது ராணுவம் என்ன செய்யும்? கடந்து செல்லும் பெண்கள் கைகுண்டை வீசி விட்டு சென்றால் மற்ற பெண்களை ராணுவம் சந்தேகபடாதா?

மூடனே, பெண்புலி குண்டுவீசத்தான் செய்வாள், அதற்காக சோதித்தால் நாங்கள் அதனை கற்பழிப்பு என்றுதான் சொல்வோம், அப்படி உயிர்பயம் இருந்தால் இந்திய ராணுவம் தப்பி சென்று ராஜிவினை அடித்திருக்கவேண்டும், எமது மறகுல பெண்களிடம் சோதனை இட்டிருக்க கூடாது.

மொத்தம் எத்தனை போராளிகுழுக்கள் உண்டு?, அவர்கள் எல்லோரும் அமைதி ஒப்பந்தம் ஏற்றுகொள்ள புலிகளுக்கு ஏன் விருப்பமில்லை.

அவர்கள் கோழைகள் அடிவருடிகள், நாங்கள் மானமிக்கவர்கள் வீரமிக்கவர்கள் மோதினோம்,

அப்படி மானமிக்கவர்கள் சிங்கனிடமல்லவா ஆயுதம் வாங்கினீர்கள்?, ஒன்றாகிவிட்டீர்கள். உங்கள் சண்டைக்கு மத்தியஸ்தம் செய்யவந்த இந்தியா பையித்தியக்கார நாடா?

இல்லை, தனிநாடு உருவாக்கி புலிகளிடம் கொடுத்திருக்கவேண்டும் இந்தியா செய்த தவறு அது. புலிகள் அர்பணிப்பு மிக்க போராளிகள். , உதவிய இந்திராவின் மகனையும் கொன்றோம், ஆயுதம் தந்த பிரேமதாசாவினையும் கொன்றோம், இதெல்ல்லாம் புலிகளின் பதுங்கி பாயும் தந்திரம், உனக்கு புரியாது. ராஜபக்சேக்கு மட்டும் புரியும்

அப்படியானல் மற்றகுழுக்கள் எல்லாம் வீணானதா? எவ்வளவு பெரும் வீரர்களை புலிகள் கொன்றார்கள், அவர்கள் ஆள தகுதி இல்லாதவர்களா?

புலிகளை தவிர எந்த போராளி இருக்கமுடியும்?அதான் புலிகள் கொன்றுவிட்டார்கள் . பின் நாங்கள் புலிகள்தான் இருக்கின்றோம் அதனால் நாங்கள் மட்டும் தகுதியானவர்கள்.

அப்படி நாடு அறிவித்திருந்தாலும் யார் ஆள்வார், தேர்தல் நடத்தவேண்டும் அல்லவா? உலகம் அப்பொழுதுதானே அங்கீகரிக்கும்

அதெல்லாம் ஏன்? நாடு உருவாக்கி பிரபாகரனிடம் கொடுத்துவிடவேண்டும், அப்படி செய்யாத புலிகளை தவிர எந்த போராளி இருக்கமுடியும்?படையுடன் நாங்கள் மோதத்தான் செய்வோம், அவதூறுகளை பரப்புவோம். எமக்கும் சிங்களனுக்கும் சண்டை இடையில் நீங்கள் யார்?

மக்கள் சாவர்கள், அகதிகளாக அலைவார்கள், அகதிகளுக்கெல்லாம் யார் உணவளிப்பார்? அந்த குழந்தைகள் நிலை, எதிர்காலம்?

அவர்கள் சாகட்டும், போராடி சாகாவிட்டால் அகதிகளாக பட்டிணியாக சாகட்டும், அதனை பற்றி எல்லாம் கவலை இல்லை, ஆனால் இது மக்கள் விடுதலைபோராட்டம் என உலகம் நம்பவேண்டும்

சரி, இந்திய அமைதிபடை வராவிட்டால் ஐநா படையோ அல்லது பாகிஸ்தான் படையோ வரவாய்ப்பு இருந்தது அல்லவா?

யார் வந்தாலும் விரட்டி இருப்போம், எமது பலம் அப்படி.

பின்னர் ஏன் 2009ல் இந்தியாவினை அழைத்தீர்கள்,சோனியா கலைஞரை திட்டினீர்கள்

சிங்களனுடன் உலகமே சேர்ந்ததல்லவா? எங்களுக்கு யாருமில்லை, தமிழனுக்கு யாருமில்லை, தமிழனுக்கு நாடில்லை.

இப்படி ஒரு கட்டத்தில்தானே 1987ல் அமைதிபடை வந்தது, 1500 வீரர்களை கொன்றுதானே அவர்களை விரட்டினீர்கள், பின்னர் நீங்கள் அழைக்கும்போதெல்லாம் வர அது என்ன செல்ல நாய்குட்டியா?

இல்லை, உங்களுக்கு இரக்கமில்லை. அன்றே பிரபாகரனிடம் ஈழ ஆட்சியினை கொடுத்தால் இப்படி நடந்திருக்காது

அப்படியானால் அவர் ஆளத்தான் ஈழம் கேட்டாரா? அதுதான் போராட்டம் அப்பத்தானே?

அவர் மாவீரர், இந்த வீரநாட்டை அவர்தான் ஆளவேண்டும் அதுதான் புலிகள் விருப்பம். மக்களே புலிகள், புலிகளே மக்கள்

பார், சிங்களனுக்கும் தமிழருக்கும் சண்டை, கொல்லபட்டது தமிழர்கள், சண்டை நிறுத்த வந்தது இந்தியபடை, ஆனால் மோதிகொண்டது தமிழரும் இந்தியரும், வேடிக்கை பார்த்தது சிங்களம் இந்த நிலையினை உருவாக்கியது யார்?

பேசாதே 2009ல் நீங்கள் வரவில்லை, தடுக்கவில்லை

எமது ராணுவதளம் இங்கிருந்தால், புலிகள் அமைதியாக இருந்தால் சிங்களன் ஒரு தமிழனை தொட்டுபார்த்திருப்பானா?

இல்லை நீங்கள் இருந்திருந்தால் தனிஈழம் கிடைக்காது, அதான் விரட்டினோம்

இன்று மட்டும் தனிஈழத்திலா வாழ்கின்றீர்கள், ஆனால் அப்படிமோதியிருக்காவிட்டால் 8 லட்சம் மக்கள் அங்கு அமைதியான வாழக்கை வாழ்ந்துகொண்டிருப்பார்கள், 2 லட்சம் பேர் செத்திருக்கமாட்டார்கள், இவ்வளவு அழிவு நடந்திருக்காது அல்லவா?

இல்லை எமது வீரமிக்க போராட்டத்தை உலகம் அறிந்திருக்காது. முடிவு எப்படியும் போகட்டும்

பின்னர் ஏன் கலைஞர்,சோனியா,இந்தியா என ஒப்பாரி வைக்கின்றீர்கள்.

அதனை சொல்லாவிட்டால் எப்படி அரசியல் செய்வது? அதுவும் தேர்தல் நேரத்தில் எப்படி கட்சி வளர்ப்பது.

(புலிகளின் கொரில்லா தாக்குதலால் செத்துகிடக்கும் இந்திய வீரர்களும்,
அந்த 1500 வீரர்கள் நினைவாக‌
அமைக்கபட்டிருக்கும் நினைவு அடையாளமும்)







Stanley Rajan's photo.Stanley Rajan's photo.






No comments:

Post a Comment