Tuesday, May 31, 2016

முகநூல் அறிவாளிகள்

சில பெரும் அறிவாளிகள் முகநூலெங்கும் பல வேடங்களில் அலைகின்றார்கள், திடீரென வந்து ஆலோசனை சொல்கின்றார்கள் பாருங்கள், அப்படியே தூக்கி வாரி போடும்.

பழிசுமந்தது புலிகள் இயக்கம், அக்கொலை பழியால் அழிந்தது ஈழபோராட்டம்.

ராஜிவ்கொலை வழக்கில் பல சக்திகள் உண்டு, மர்மங்கள் உண்டு என்பது யாருக்கும் தெரியாதது அல்ல, ஆனால் பகிரங்கமாக செய்தது புலிகள் என்பதில் சந்தேகமே இல்லை. விசாரணையும், தமிழகத்தில் தற்கொலை செய்த 24 புலிகளின் மரணமும் அதனைத்தான் சொன்னது


புலிகள் வாய்திறந்து சிலவிஷயங்களை சொல்லி இருந்தால் சில காட்சிகள் மாறி இருக்கும், பேரரிவாளன் நிச்சயம் விடுதலையாகி இருப்பான், பலருக்கு தண்டனையோடு விடுதலை கிடைத்திருக்கும், ஈழபோராட்டம் இப்படி நசுங்கி இருக்காது, சில திருப்பங்கள் நிகழ்ந்திருக்கலாம்.

அதனைத்தான் நாம் குறிப்பிட்டு சொன்னது, ராஜிவ் கொலையில் புலிகளின் கனத்த மவுனமும், பின் துன்பியல் சம்பவம் எனும் பரிகாசமும், அது இந்தியாவிடமிருந்து ஈழமக்களை பிரித்துகொண்டே சென்றதே ஒழிய வேறொன்றும் செய்யவில்லை.

இதில் நமது அறிவாளிகள் என்னிடம் வந்து, உனக்கு தெரிகிறதல்லவா? வா பொதுநல வழக்குபோடு, தூண்டிவிட்ட கொலைகுற்றவாளிகளை விசாரிக்க சொல்லி இந்திய அரசின் கழுத்தை நெறி என்கின்றார்கள்

அறிவு சூரியன்களே, ராஜிவ் கொலை எனும் பழியினை துடைத்து போராட்டத்தை தொடர்ந்திருக்கவேண்டியது நானா? அவர்களா?

கொலைகுற்றவாளி அமைதியாக இருப்பனாம், ஆனால் நான் சென்று நீதிபதியிடம் "இவன் அப்பாவி விட்டுவிடுங்கள், நாம் வேறு வகையில் மூலத்தை கண்டுபிடிக்கலாம்" என சொல்லவேண்டுமாம்.

எம்மீது இதனால்தானே தடை, இதோ உண்மை என சொல்லி இருக்கவேண்டியது நானா? அவர்களா?

இந்தியாவில் நடந்த பத்மநாபா கொலைக்காக எம்மை தண்டிக்காமல் விட்டதற்கு நன்றி என சொல்லவேண்டியது யார்? நானா?

ராஜிவ் கொலை நடந்தபின் 1995ல் சந்திரிகா யாழ்பாணத்தை விட்டு புலிகளை விரட்டி அடித்தபொழுது, இந்தியா துணை சென்று புலிகளை அழிக்கவில்லை அல்லவா? அதற்கு நன்றி சொல்லவேண்டியது நானா? புலிகளா?

வாய் திறந்து பேசவேண்டியவர்கள் மவுனமாக இருந்து, எல்லாவற்றையும் அழித்து செத்தும் போவார்களாம், நான் சென்று இந்திய அரசினை ஏன் ஒழுங்காக விசாரிக்கவில்லை என கேட்கவேண்டுமாம்

என்ன நியாயம் இது? சுய அறிவோடுதான் பேசுகின்றீர்களா?

2 லட்சம் மக்களின் உயிரையும், 10 லட்சம் மக்களுக்கான நாட்டை விடுவிக்கும் பொறுப்பு எனக்கா? அவர்களுக்கா?

ராஜிவ் கொல்லபடும் 10 நாட்களுக்கு முன் அவரை டெல்லியில் சந்தித்து பசப்பு வார்த்தை பேசியவன் கிட்டு, அதன் பின் கொலை நடந்தவுடன் தனக்கு தெரிந்த உளவுதுறை அதிகாரிகளிடம் கொலைக்கும் எங்களுக்கும் தொடர்பில்லை என்றான், பிரபாகரன் தொடக்கத்தில் இதனை சொன்னார்

ஆனால் விசாரணை நடந்து அதன் முடிவு புலிகளை கைகாட்ட, கிட்டுவும் பிரபாகரனும் கனத்த மவுனம் ஏன்?

சரி ஒரு வாதத்திற்கு இந்திய அரசிடம் அப்படி ஒரு கோரிக்கை நான் வைத்தாலும், , அப்படியே சென்று இலங்கை அரசிடம் ஆல்பர்ட் துரையப்பா, பிரேமதசா, நீலன் திருச்செல்வம், அமிர்தலிங்கம் ராஜினி, சபாரத்தினம்.............(கை வலிக்கின்றது) என பெரும் கொலைபட்டியலின் காரணம் யார்? என சிங்கள அரசிடம் கேட்க என்னுடன் வருவீர்களா? தயாரா?

No comments:

Post a Comment