Friday, May 27, 2016

ஈழத்திலிருந்து ஒரு புலி முணங்கியது





ஈழத்திலிருந்து ஒரு புலி முணங்கியது, கீபோர்டு உடைய எழுதும் நீ, 2009ல் எம் இனம் அழியும்போது எங்கிருந்தாய், இதனை எல்லாம் பேச உனக்கு என்ன தகுதி என முணங்கியது.

# 1983ல் வந்து காத்த இந்தியநாட்டின் குடிமகன் என்ற முறையிலும், ஓரளவேனும் உரிமை பெற்றுதரவந்து 1500 வீரர்களை இழந்த, ஒரு தலைவனை இழந்த நாட்டின் குடிமகன் என்றமுறையிலும், இன்று வரை ஐரோப்பா செல்லமுடியாத ஏழை ஈழத்தவரை அகதிகளாக பாதுகாக்கும் நாடு எனும் முறையிலும் சொல்ல எனக்கு உரிமை உண்டு.

# அதே நேரம் 1957ல் மலையக தமிழக வம்சாவழி தமிழரை, குடியுரிமை பறித்து, நாடற்றவர்கள் என ஆக்கி, அதாவது இவர்கள் எங்கள் குடிமக்களே அல்ல என அபாண்டமாக சொல்லி, கதற கதற, அன்றைய வளமான இலங்கையினை விட்டு இப்பின் தங்கிய தமிழகத்திற்கு சிங்களன் அனுப்பும்போது, ஒரு யாழ்பாணத்தான் அல்லது ஈழதமிழன் கண்டித்திருப்பானா? அல்லது தொப்புள்கொடி உறவுகளை ஏன் வெட்டுகின்றீர்கள் என சிங்களனை கேட்டானா?


# ஒரு சத்தம், ஒரு எதிர்ப்பு கூட இல்லையே? ஏன்? அன்றெல்லாம் யாழ்பாணத்தார் எங்கிருந்தீர்கள்? கொலையினை விட கொடுமையான விஷயம் அந்த சம்பவம் என்பது உங்கள் மனதில் இருக்குமோ இல்லையோ? எமது மனதில் என்றும் இருக்கும்.

#"அமைதிபடை காலத்தில் இந்திய நாய்களுக்கு இங்கு என்ன வேலை.." என ஈழத்தவர் என கேட்ட கேள்வியினை எப்படி இந்தியனால் மறக்க முடியும்?







No comments:

Post a Comment