Saturday, May 7, 2016

24




நடிகர் சூர்யாவின் 24 எனும் சொத்தை திரைகாவியத்தை காணும் துர்பாக்கிய நிலைக்கு தள்ளபட்டேன், கதை என்னவோ கால எந்திரம் எனும் டைம் மெஷின் பற்றியது, என்ன மெஷினோ? படம்பார்க்கும்பொழுது அப்படி ஒரு வாட்ச் கிடைத்திருந்தால் 2 மணிநேரம் முன்சென்று கொடுத்த காசை காப்பாற்றி இருக்கலாம்.

ஆனால் படம்பார்க்கும் பொழுது வந்த சிந்தனை இப்படியானது, இப்படி மட்டும் நமக்கு ஒரு வாட்ச் கிடைத்திருந்தால் 90 வருடத்திற்கு முன் திருகுவளைக்கு சென்று அந்த குழந்தையினை கடத்தி கட்டுமரத்திலோ அல்லது கப்பலிலோ நாடு கடத்தி இருக்கலாம், இன்னொரு நாடு அழிந்திருக்கும். காமராஜர் நிம்மதியாக கூட 10 வருடம் ஆண்டிருப்பார்.


Stanley Rajan's photo.

இல்லாவிட்டால் 67 வருடம் முன்பு சென்று மைசூரில் ஒரு பெண்குழந்தையினை கடத்தி அன்னை தெரசா ஆசிரமத்தில் விட்டிருந்தாலும் தமிழகம் நன்றாக இருந்திருக்கும்.

45 வருடம் முன் சென்று ராமநாதபுரம் அருகேய்யான‌ கிராமத்தில் ஒரு சிறுவனுக்கு பாட்டிகளின் குழாயடி சண்டை, கோழி களவு சண்டையினை பார்க்காதே, பின்னாளில் மேடைகளில் அதே பாணி தெரு சண்டையினை போடுவாய் அசிங்கமாக இருக்கும் என அறிவுரை சொல்லி இருக்கலாம்.

அட 10 வருடம் முன்பு சென்று கூட பிரபாகரனிடம் சொல்லி, நீரும் இருக்கமாட்டீர், ஒருவன் தமிழகத்தில் உமது பெயரை சுத்தமாக கெடுத்துவிடுவான், கடைசி கொலையாக அவனை மட்டும் தட்டிவிடும், அது தமிழீழம் அடைவதை விட மகா முக்கியமான பணி என கெஞ்சி இருக்கலாம்.

என்ன செய்ய கிடைக்காமல் போய்விட்டது.

>> நட்சத்திர கிரிக்கெட்டில் சூர்யா இருமுறை 0 ரன்னில் வரும்போதே தெரிந்தது அன்னாருக்கு நேரம் சரியில்லை என்று, அது எல்லாம் 24 மணி நேரத்தில் சரியாகும் விஷயமில்லை.













No comments:

Post a Comment