Friday, May 27, 2016

அரசியல் உலகினை கவனித்து பாருங்கள்...

அரசியல் உலகினை கவனித்து பாருங்கள், கொள்கை என்பது அறவே இல்லாதவர்கள் மக்களாட்சியினை பிடிக்க‌ ஒரு தந்திரம் வைத்திருப்பார்கள்.

அதாவது சிறுபான்மை இனம் என ஒன்று இருக்கும், அதனை குறி வைத்து அடிப்பார்கள், இவர்கள்தான் பிரச்சினைக்கு மூலம் என்பார்கள், இவர்களால் நாடு பாழாயிற்று என்பார்கள், இவர்கள் அழிந்தால் எல்லாம் சரி என்பார்கள், அதன் பின் ஆட்சிக்கு வந்து முன்னை விட நாட்டை கடுமையாக சீரழிப்பார்கள்.

இந்த நுட்பத்தை முதலில் சொல்லிகொடுத்தவன் அனாரிக தர்மபால, தமிழர்களையும், இஸ்லாமியரையும் கைகாட்டி அவன் கொடுத்த சிங்கள எழுச்சிதான் அத்தீவு இன்று நாசகாம இரண்டாம் காரணம், முதற்காரணம் யாழ்பாணத்தான்.


ஐரோப்பாவில் இப்படி யூத சிறுபான்மையினரை காட்டியே ஆட்சிபிடித்து ஐரோப்பிய மற்றும் உலக அபாயமாக மாறி அழிந்தான் ஹிட்லர். பர்மாவில் தமிழரை காட்டியே ஆட்சிகு வந்து அந்தநாட்டை நாசமாக்கியது அந்த இனவாதம்.

தமிழகத்தில் இப்படி பிராமணரை கைகாட்டியே வளர்ந்தது திராவிட இயக்கம், இன்று தமிழ்நாடு சீரழிந்தது அப்படித்தான்,

இப்படி மொத்த அழிவு சரித்திரங்களையும் பார்த்தால் சிறுபான்மை இனங்களை குறைசொல்லி, குற்றம்சாட்டி ஆட்சியினை பிடித்தவர்களுக்கு ஒரு கொள்கையும் இருக்காது, நாடும் சுடுகாடாகத்தான் ஆகி இருக்கும், உலக வரலாறு அதனைத்தான் சொல்கின்றது.

எல்லாவற்றையும் நெடுநாள் கழித்தே புரிந்துகொள்ளும் டியூப்லைட்டான சீமானுக்கு இந்த ஞானம் 50 வயதில் வந்திருக்கின்றது, ஹிட்லர் படத்தை வைத்துவிட்டு அவர் கள்ள சிரிப்பு சிரித்ததெல்லாம் இப்படித்தான், ஹிட்லரை போலவே அவர் மேடைகளில் உறுதிமொழி எடுப்பதும், ஹிட்லரை போலவே பேசுவதும் அதனைத்தான் சொல்கின்றன.

ஹிட்லருக்கு யூதர்கள் என்றால் இவருக்கு தமிழக தெலுங்கு மக்கள் அதனை குறிவைத்தே ஆட்சிபிடிக்கலாம் என இவருக்கு இருக்கும் 5 அறிவு சொல்லிகொண்டிருக்கலாம் எனினும் தமிழக மக்கள் இவரிடம் விழிப்பாய் இருக்கவேண்டியது அவசியம்.

இந்தியா எனும் பெரும் தேசம் இருக்கும் வரை இவரால் ஆபத்து எல்லாம் இல்லை, அப்படி இவர் ஹிட்லராக தன்னை கருதி ஏதும் செய்ய நினைப்பாரா என்பது தெரியவில்லை, எப்படியும் போகட்டும்.

ஹிட்லருக்கு கால் எலும்புகள் மட்டும் மிஞ்சின என்பது சரித்திரம், சோவியத் ராணுவ குறிப்பு .

ஆம் ஹிட்லருக்கு கால் எலும்புகளாவது மிஞ்சின

No comments:

Post a Comment