Wednesday, May 25, 2016

மெழுகுவர்த்தி கலாசாரம்...





அதேதான் அந்த சந்தேகம் தான், மெழுகுவர்த்தி தமிழக கலாச்சாரமே இல்லையே, வெள்ளையன் அடையாளம் அல்லவா அது, அதனை ஜெபவழிபாட்டின் பொழுது சர்ச்சில் தானே இன்றுவரை கொளுத்துவார்கள்.

தமிழன் அடையாளம் குத்துவிளக்கு, அகல் விளக்கு அல்லவா? அதனை ஏன் தமிழர் வரலாற்றை 10 ஆயிரம் அடி ஆழத்தில் தோண்டி எடுக்கும் அங்கிள் கோஷ்டி சிந்திக்கவில்லை?

Stanley Rajan's photo.

# அதுவும் இரட்டை மெழுகு என்பது, கத்தோலிக்க ஆலயங்களில் திருப்பலியின் பொழுது ஏற்றபடுவது,


( அன்றே ஒருவன் உளறிகொண்டிருந்தான், ஈழத்தில் இந்துமக்கள் என்பதால் மேற்குலகம் கண்டுகொள்ளவில்லை, அதுவே கிறிஸ்தவ ஈழம் என்றால் ஐரோப்பா கொதித்திருக்கும், இனி ஈழம் பெற ஒரே வழி கிறிஸ்தவ ஈழம் காண்பது என்று, அதற்கும் இந்த கத்தோலிக்க இரட்டை மெழுகுவர்த்திக்கும் தொடர்பில்லாமல் இருக்கும் வரை நல்லது :

முப்பாட்டன் எல்லாம் கொஞ்சகாலம்தான் போலும், இயேசு சேலத்தில் பிறந்தார் என வேறு குழப்பதொடங்கினார்கள்)

அங்கிளின் கிறிஸ்தவ அடையாளம் சின்னத்திலும் எதிரொலிக்கின்றதோ (?) , ஆனாலும் இதற்கும் அங்கிளின் அடிப்பொடிகள் அபார விளக்கம் வைத்திருக்கும், இப்பொழுது பின்னூட்டத்தில் இடுவார்கள் பாருங்கள்

கூட்டி கழித்து பார்த்ததில், ஏதோ கொஞ்சம் புரிகின்றது, கச்சதீவினை ஜெபமாலையால் மீட்கலாம், ஈழத்தை பைபிளால் அடையலாம்.

# நாம் ஈழகிறிஸ்தவர்கள்
















No comments:

Post a Comment