Tuesday, May 31, 2016

காங்கிரசை தமிழகத்திலிருந்து அழிப்பேன் - சீமான்




2009ல் அங்கிள் ஒப்பாரி தொடங்கினார், காங்கிரசை தமிழகத்திலிருந்து அழிப்பேன் என்றார்( அது தமிழகத்தில் அழிந்து ரொம்ப காலம் ஆகிவிட்டது இவருக்கு தெரியாது), கடும் பிரச்சாரம், தமிழகத்தில் வழக்கம்போல காங்கிரஸ் பல இடங்களில் தோற்றது, இது தன்னால்தான் என சீமான் சொல்லிகொண்டார்.

ஆனால் காங்கிரஸ்தான் மத்தியில் அமர்ந்தது என்பது வேறு விஷயம்.

அதன்பின் 2011 சட்டமன்ற தேர்தலில் மிக கடுமையாக கலைஞரை சாடினார், இலை மலர்ந்தால் ஈழம் மலரும் என்றார், ஜெயலலிதா முதல்வரார், இது உங்களால்தான் நடந்தது என அடிப்பொடிகள் போதிக்க, அங்கிள் உற்சாகமானார்.


Stanley Rajan's photo.

அடுத்த பாராளுமன்ற தேர்தலில் மிக கடுமையாக காங்கிரசை, கலைஞரை விமர்சித்தார். ஆனால் மோடி பிரதமரானார். தமிழகத்தில் கலைஞரை, காங்கிரஐ விரட்டியது நானே என சொல்லிகொண்டார். அவரின் அடிப்பொடிகளும் நம்பின,

ஆனால் மொத்த இந்தியாவிலும் காங்கிரசை தோற்கடித்தது சீமானா என அவர்கள் யோசிக்கவில்லை, அதற்கெல்லாம் மூளை வேண்டும். சிலர் இன்னும் யோசித்து இலங்கையில் ராஜபக்சேவினை தோற்கடித்ததிலும் அங்கிள் பங்கு இருக்கலாம் என அவரை கொண்டாடினர்.

இந்த இடத்தில் அங்கிளுக்கு யோசனை வந்தது, ஜெயலலிதாவினை முதல்வராக்கியது நான், மோடியினை பிரதமராக்கியதும் நான், மைத்ரிபாலா கூட என்னால்தான் அதிபரனார், இனி நானே நின்றுவெற்றிபெற்றால் என்ன? 2016ல் அங்கிள் களம் கண்டார்.

அதிமுக, திமுக நானே மாற்று என்றார், கம்யூனிஸ்டுகளுக்கு சவால் விட்டார், புலி யாருடனும் கூட்டணி வைக்காது என்றார்? யார் தமிழர்? என உலகிற்கே சொன்னார். மார்க்ஸ்,மாவோ,லெனினுக்கு வராத பொருளாதார சிந்தனைகள் எல்லாம் அங்கிளுக்கு வந்தன, பலர் ஆடுமாடுகளோடு அரசு வேலைக்கு காத்திருந்தனர். சிலர் பனந்தோப்புக்களை கூட வாங்கினார்கள்.

உலகதமிழர்களின் ஒரே நம்பிக்கை நான் என்றார், தமிழ் முதல்வரின் பதவிஏற்பு விழாவிற்காக லண்டனில் மேடை தயாரானது, ஈழம் விடியும் நாள் அறிவிக்கபட்டது, பிரபாகரனால் முடியாததை நான் செய்வேன் என்றார், அங்கிளுக்கு கடும் உற்சாகம்.

தேர்தல் முடிவு வந்தது, ஜெயலலிதா முதல்வர், கலைஞர் வலுவான எதிர்கட்சி என வீற்றிருக்கின்றனர், அங்கிள் கட்சி கணக்கிலே இல்லை.

அதாவது அங்கிளின் காட்டுகத்தலுக்கு எல்லாம் மக்கள் சிரித்திருக்கின்றார்களே ஒழிய, ஒருவரும் இவரை கணக்கில் எடுக்கவே இல்லை. ஆனால் அங்கிளோ ஒவ்வொரு சிரிப்பும் தனது பேச்சின் வெற்றி என நம்பி இருக்கின்றார் அய்யோ பாவம்.

தான் கூவா விட்டால் பொழுது விடியாது என நம்புமாம் சேவல்

அப்படியானால் 2009,2011 ஆட்சிமாற்றத்திற்கு என் பேச்சும், முழக்கமும் காரணமில்லையா? என நம்பமுடியாத சோகத்தோடு அலைகின்றார் அங்கிள். 2021, 2026..என அவர் காலண்டரில் 5 வருடங்களின் வரிசையினை குறித்துகொண்டே இருக்கின்றார்.













No comments:

Post a Comment