Friday, May 27, 2016

அரசியல் உலகை விட்டுப் போகிறேன்':தமிழருவி மணியன் உருக்கம்!




# மூதறிஞர் ராஜாஜி, ஈவிகே சம்பத், காமராஜர் போன்ற பெரும் யானைகளையே ஓடவிட்ட தமிழகம் இது, தமிழருவி மணியன் எல்லாம் எம்மாத்திரம், மனிதர் ஆட்சிமாற்றம் வேண்டும் என சொன்னது தவறல்ல, ஆனால் செய்த முயற்சிதான் தவறு.

# நல்ல தலமை இல்லாத கட்சி எப்படி சீரழியும் என்பதற்கு தமிழக காங்கிரஸ் பெரும் உதாரணம், பண்பாளர்களுக்கு குறைவில்லா கட்சி அது. ஒரு நல்ல தலமையோ, அல்லது அதிமுக போல கோஷ்டி பூசலுக்கு அறவே வாய்ப்புகொடுக்காத தலமையாக இருந்திருந்தால் அதுவே மாற்றாக வந்திருக்கும் வாய்ப்பு உண்டு.


Stanley Rajan's photo.

# அந்த முயற்சியினை எடுக்காமல், குமரி அனந்தன், நெடுமாறன், வாசன் என எல்லாம் கண்டுகொண்ட பின்னும் இவர் தனி இயக்கம் தொடங்கியதுதா விசித்திரம். வெளிவந்து வைகோ, விஜயகாந்த், திருமா, கம்யூனிஸ்ட் என இணைக்காமல் கட்சிக்குள்ளே இளங்கோவன், தங்கபாலு,சிதம்பரம், விஜயதாரணி என இருக்கும் முப்பது முக்கோடி கோஷ்டிகளை இணைத்திருந்தாலே மாற்றம் வந்திருக்கும், ஒருவேளை அது மகா சிரமம் என உணர்ந்திருக்கலாம்.

# மாற்றத்தை வைகோவுடன் சேர்ந்து செய்ததுதான் தவறு. மக்களின் அபிமானத்தை முற்றிலும் இழந்துவிட்ட வைகோவினை கூட சேர்த்ததுதான் இவறின் துறவறத்திற்கு காரணம். ஒரு துளி விஷம் ஒரு குடம் பாலினை வீணாக்கி விடும் அல்லவா? அப்படி

# தமிழன் பொதுவாக வாசிக்கமாட்டான், ஆனால் பேச்சாளர்களை ரசிப்பான், நம்புவான். அதுவும் பேச்சாளர்கள் காலத்திற்கு ஏற்றமாதிரி பேசினால்தான் தமிழனை கவரமுடியும், அதனை விட்டுவிட்டு கிரேக்க கதையும். ஆபிரகாம் லிங்கன் கதையும், ஈழ அழுகையும் சொன்னால் அவன் எழுந்து சென்றுவிடுவான், தமிழருவி மணியன் போன்ற அற்புதமான பேச்சாளர்கள் இந்த வகைதான், தமிழருவி என்பது மிக பொருத்தமான பெயர், சும்மா சொல்லகூடாது கேட்பதற்கு அழகான பேச்சு அது, ஆனால் தந்திரம் இல்லையே

# இந்த தந்திரத்தில் கை தேர்ந்தவர்கள் கலைஞரும், ஜெயலலிதாவும், ஜெயா அரசியல் வேறு, ஆனால் கலைஞர் விசித்திரமானவர், இந்த 70 வருடமாக அவர் தனித்து நிற்கின்றார் என்றால், மக்களின் நாடிதுடிப்பு அவருக்கு தெரியும், மிக சரியாக மக்களோடு பயணிப்பார். அதனால்தான் இன்றளவும் அரசியலில் அவரால் முடிகின்றது

# ஆனாலும் வைகோ, நெடுமாறன், சீமான் போன்ற புரட்டர்களெல்லாம் அரசியலில் இருக்க, நீங்கள் ஏன் செல்லவேண்டும் அய்யா? ஒருவேளை வைகோவுடனான அனுபவம் உங்களுக்கு அப்படி ஒரு மறக்கமுடியா அனுபவம் கொடுத்திருக்கலாம். அதனை சொல்லிவிட்டு சென்றால் மற்ற மநகூ தலைவர்கள் நிச்சயம் வைகோவை கயிறால் கட்டியாவது வெளியே அனுப்பிவிடுவார்கள்













No comments:

Post a Comment