Thursday, November 12, 2015

யாசர் அராபத்




ஒரு மானிட நேயமிக்க, அதே நேரம் தீவிரமான ஒரு போராளியினை நமது தலைமுறையில் கண்டோம் என்றால் சந்தேகமே இல்லாமல் சொல்லலாம், அது யாசர் அராபத். இன்று நினைவுபடுத்தவில்லை. அந்த பெருமகனாரின் நினைவு நாள் இன்று.

Stanley Rajan's photo.

எவ்வளவு பெரும் சக்தியினை எதிர்த்து போராடினார், அதுவும் தொடக்கத்தில் ஈழ போராளிகளுக்கும் (உமா மகேஸ்வரன், பத்மநாபா) போன்றோருக்கு பயிற்சியும் வழங்கி, மானிட போதனைகளையும் வழங்கி போராட வைத்த மாமனிதன்.

இஸ்ரேல் எனும் மனிதநேயமில்லா அரசினை , இரும்பு அரசினை, இண்டிபாதா எனும் மக்கள் போராட்டம் மூலம் உலகினை நோக்க வைத்த பெருமகன்.


முடிந்த வரைக்கும் பார்த்துவிட்டு, இனி மொத்தமாக மக்களை இஸ்ரேல் குதறிவிடும் என்பதால் சமாதான உடன்படிக்கைக்கு வந்து மக்களை காத்தவர்.

நிதானம் தவறி, அமெரிக்க அதிபர் நிக்சனை கொல்வேன், ரீகனை கொல்வேன் அல்லது இஸ்ரேலிய பிரதமர்களுக்கு குண்டு அனுப்புவேன் என்று ஒருக்காலும் இறங்காமல் காயம் தாங்டி போராடியவர்.

அவர் இருக்கும் வரை அலஅக்சா வளாகத்தை தள்ளி இருந்து பார்த்த இஸ்ரேல், அம்மாமனிதனின் மறைவிற்கு பின் நடு மசூதியில் நிற்கின்றது. அப்படி அந்த மண்ணிற்கு காவலாய் நின்ற பெருமகன் அவர்.

தமிழக மீடியாக்களில் வேதாளம், தூங்காவனம் என கனவுலகை விமர்சிக்கும் பத்திரிகைகள் ஒன்று கூட அவரை நினைவுபடுத்தவில்லை.

அவ்வளவு ஏன் சே குவாரேக்கு வீர வணக்கம் நரகாசுரனுக்கு வீரவணக்கம் என கத்துவோர் யாரும் இந்த மாபெரும் போராளிக்கு ஒரு மரியாதை கூட செலுத்தவில்லை. இதுதான் இவர்கள் உலகினை புரிந்துகொண்ட லட்சணம், ஹிட்லரை கொண்டாடுபவர்களுக்கு ஒரு உன்னத போராளி மறந்து போனது ஒன்றும் ஆச்சரியமில்லை. இவர்கள் எந்த போராட்டத்தை உருப்படியாக கற்றார்கள்.

# காரணம் அவர்கள் தலைவன் தமிழகம் தாண்டாதவர், அராபத்தின் பயிற்சிபெற்ற போராளிகளின் அருமை அவருக்கும் தெரியாது, பின் இவர்களுக்கு எப்படி தெரியும்?

# வாழ்க நீ எம்மான்













No comments:

Post a Comment